For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

துரியனும் பலாப்பழமும் ஒன்றா வேறுவேறா? ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?

துரியன் பழமும் பலாப்பழமும் ஒன்றுதானா என்ற சந்தேகத்தை தெளிய வைக்க இந்த கட்டுரை முற்படுகிறது. படித்து தெரிந்து கொள்ளலாம். அது பற்றி தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

|

துரியோ என்னும் மரபணு வகையைச் சேர்ந்த ஒரு பழம் துரியன் பழம். இந்த பழத்தின் வாசனை பலருக்கும் பிடிக்காது என்றாலும் சாப்பிடுவதற்கு நல்ல சுவையாக இருக்கும்.

Jackfruit

இந்த துரியன் பழத்தின் ஆரோக்கிய நன்மைகளைப் பற்றி நாம் இந்தப் பதிவில் காணவிருக்கிறோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமான மண்டலம்

செரிமான மண்டலம்

செரிமான மண்டலத்திற்கு உதவும் துரியன் பழம். துரியன் பழத்தில் குறிப்பிடத்தகுந்த அளவு நார்ச்சத்து உள்ளது. நார்சத்து குடல் அலைகளை ஊக்குவித்து இரைப்பை நீர் சுரப்பை அதிகரிக்கிறது. இதன் காரணமாக செரிமானம் எளிதாக நடைபெறுகிறது. இதனால் மலச்சிக்கல் தடுக்கப்படுகிறது. இதனால் பெருங்குடல் புற்றுநோய் போன்ற அபாய நிலைகள் வராமல் உடல் பாதுகாக்கப்படுகிறது. ஒரு கப் துரியன் பழத்தில் 9 கிராம் அளவு உணவு நார்ச்சத்து உள்ளது.

MOST READ: ஒயிட் ஒயின் - ரெட் ஒயின் ரெண்டுல எது ஆரோக்கியம்? தெரிஞ்சிக்கங்க...

க்ளைகமிக் குறியீடு

க்ளைகமிக் குறியீடு

மற்ற உணவுகளைக் காட்டிலும் க்ளைகமிக் குறியீடு குறைவாக இருக்கும் ஒரு பழம். ஒரு உணவு மற்றும் பானம் இரத்த சர்க்கரையை அதிகரிக்கும் வலிமையைப் பொறுத்து அதன் க்ளைகமிக் குறியீடு எண் மதிப்பிடப்படுகிறது. க்ளைகமிக் குறியீட்டு எண் அதிகமாக இருக்கும் வெள்ளை அரிசி, வெள்ளை பிரட் போன்றவை எளிதாக உடைக்கப்பட்டு , சாப்பிட்டபின், இரத்த சர்க்கரை மற்றும் இன்சுலின் அளவு அதிகரிக்கும் நிலை உண்டாகிறது , பின்பு உடனடியாக இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. அதே நேரம், துரியன் பழம், உடலுக்குள் மெதுவாக உறிஞ்சப்பட்டு இரத்த ஓட்டத்தில் கலப்பதால் , இனிப்புத் தேடல் மற்றும் பசியுணர்வு தடுக்கப்படுகிறது.

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

ஆரோக்கியமான நிலையில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த துரியன் பழம் உதவுகிறது. துரியன் பழத்தில் பொட்டாசியம் மிக அதிக அளவு உள்ளது . மற்றும் சோடியம் மிகக் குறைந்த அளவு உள்ளது. இதனால் ஹைப்பர் டென்ஷன் அபாயம் குறைக்கப்படுகிறது. ஒரு துரியன் பழத்தில் 1060 மிகி அளவு பொட்டாசியம் உள்ளது. ஆனால் இதில் உள்ள சோடியம் அளவு வெறும் 4.9 மிகி அளவு மட்டுமே. இரத்தக் குழாய் தளர்ச்சி பெற உதவி , இதன்மூலம் இரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்க முடிகிறது.

நோய்த்தொற்றுக்கள்

நோய்த்தொற்றுக்கள்

ஒவ்வொரு தனி நபரும் தொற்று பாதிப்பை எதிர்த்து போராட உதவுகிறது

வைட்டமின் சி யின் தினசரி உட்கொள்ளல் அளவில் 80 % ஒரு கப் துரியன் உட்கொள்வதால் பூர்த்தி அடைகிறது. வைட்டமின் சி என்பது இயற்கையான முறையில் தண்ணீரில் கரையக் கூடிய வலிமையான அன்டி ஆக்சிடென்ட் ஆகும். இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரித்து தொற்று பாதிப்பை உண்டாக்கும் கிருமிகள் மற்றும் புற்று நோய் உண்டாகக் காரணமாக விளங்கும் ப்ரீ ரேடிகல் போன்றவற்றை எதிர்த்து போராட உடலுக்கு வலிமை அளிக்கிறது.

MOST READ: உயிர எடுக்கிற குழி முதல்தடவ ஒரு உயிரை காப்பாத்திருக்கு... என்ன நடந்தது தெரியுமா?

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் துரியன் பழம். ஒரு நாளுக்குத் தேவையான அளவு பொட்டாசியம் உட்கொள்ளல் அளவான 4700மிகி அளவு பெறப்படவில்லை என்றாலும், ஓரளவிற்கு பொட்டாசியம் சத்தால் ஏற்படும் நன்மைகள் அதிகரிக்கப்படுவதாக தேசிய சுகாதாரம் மற்றும் ஊட்டச்சத்து தேர்வு முடிவுகள் கூறுகின்றன.

அன்டி ஆக்சிடென்ட்

அன்டி ஆக்சிடென்ட்

அன்டி ஆக்சிடென்ட் பாதுகாப்பிற்கு உதவி புரியும் துரியன் பழம். ஒரு கப் துரியன் பழத்தில் 39% மங்கனீஸ் உள்ளது. இந்த கனிமம் அன்டி ஆக்சிடென்ட் பாதுகாப்பில் முக்கியமாகக் கருதப்படும் சில என்சைம்களின் அத்தியாவசிய இணைப்பாகும். ஊன்குருத்துகளுக்குள் உற்பத்தியாகும் ப்ரீ ரேடிகல்களை அழிக்கும் சில என்சைம்களுக்கு மாங்கனீஸ் தேவைப்படுகிறது.

அறிவாற்றல் வீழ்ச்சி

அறிவாற்றல் வீழ்ச்சி

துரியன் பழத்தில் உள்ள பொட்டாசியம், போலேட் போன்ற கூறுகள் மற்றும் இதர பல்வேறு அன்டி ஆக்சிடென்ட் போன்றவை நரம்பியல் தொடர்பான நன்மைகள் தருவதாக அறியப்படுகிறது. அல்சைமர் நோய் மற்றும் அறிவாற்றல் வீழ்ச்சி உண்டாவதைத் தடுக்கும் ஆற்றல் போலேட் சத்துக்கு உண்டு என்பது அனைவரும் அறிந்தது. மூளைக்கு அதிக இரத்த ஓட்டத்தைத் தருவது பொட்டாசியம். இதனால் அறிவாற்றல் அதிகரித்து, கவனம் அதிகரித்து, நரம்பு செயல்பாடுகள் ஊக்குவிக்கபப்டுகின்றன.

MOST READ: பார்க்கதான் சின்ன பழம்... இதுக்குள்ள இருக்கிற விஷயம் தெரிஞ்சா தினம் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க...

எவ்வளவு சாப்பிடலாம்?

எவ்வளவு சாப்பிடலாம்?

கூடுதலாக, துரியன் பழத்தில் வைடமின் பி 6 குறிப்பிட்ட அளவு உள்ளது. வைட்டமின் பி 6 குறைபாடு காரணமாக மனச்சோர்வு மற்றும் குமட்டல் போன்றவை ஏற்படலாம். ஆனால் இதனை அதிகமாக உட்கொள்ளக் கூடாது. வைட்டமின் பி 6 ஒரு நாளில் 100 மிகி அளவு மட்டுமே பெரியவர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதற்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கிறவர்கள், மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்வது நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Jackfruit vs Durian: 7 Ways They Are NOT The Same

At first sight or a quick glance, may make a Jackfruit look similar to a durian but to a seasoned fruit lover they are rather different. The thick, pimply outer skin of the Jackfruit is pale green when ripe and they are rather big and heavy. The durian ranges between hunter green and the somewhat ochre in color with sharp shiny spikes and each can weigh between 1-5 kg.
Desktop Bottom Promotion