For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மஸ்கட் திராட்சை சாப்பிடலாமா? அதுக்குள்ள என்னென்ன இருக்குனு தெரியுமா?

மஸ்கட் திராட்சை சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதோடு நமது உடல் நலத்திற்கும் நல்லது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன. அதனால் தான் இதன் உடல் நல நன்மைகளும் ஏராளம்.

|

மஸ்கட் திராட்சை சாப்பிடுவதால் நமக்கு என்ன பலன், வாங்க தெரிஞ்சுக்கலாம்
மஸ்கட் திராட்சை சாப்பிடுவதற்கு சுவையாக இருப்பதோடு நமது உடல் நலத்திற்கும் நல்லது. இதில் ஏராளமான ஊட்டச்சத்துகள் அடங்கியுள்ளன.

Muscadine Grapes

மஸ்கட் திராட்சை அதிகளவில் வட அமெரிக்காவில் விளைகிறது. அட்லாண்டிக் கரையோர நாடுகளில் இது அதிகளவு பயிரிடப்படுகிறது. அமெரிக்காவில் வசிப்பவர்கள் இதை பயிரிட்டு உலர வைத்து பயன்படுத்தினர். அதே மாதிரி ஆரம்பகால ஐரோப்பிய குடியேறியவர்கள் மிசிசிப்பி மாநில பல்கலைக்கழகத்திடம் சி. பாட்ரிக் ஹெக்வூட் எழுதிய ஒரு காகிதத்தின் படி, பெரிய, தடித்த தோல்களால் செய்யப்பட்ட திராட்சை பழங்கள் வொயின் தயாரிக்க பயன்படுத்தப்பட்டது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
மஸ்கட் திராட்சை

மஸ்கட் திராட்சை

அமெரிக்காவில் உள்ள பெரிய நகரங்களில் இந்த மஸ்கட் திராட்சை பிராந்தி தயாரிக்க பயிரிடப்படுகிறது. மேலும் திராட்சை ஜாம், ஜெல்லி தயாரிக்கவும் உதவுகிறது. இதில் பச்சை மற்றும் பிரான்ஸ் நிற பழங்கள் வகைகளும் காணப்படுகிறது.

புளோரிடா பல்கலைக் கழகம், கெய்ன்ஸ்வில்லி, ஃப்ளோரிடாவில் இருந்து லீவி குய்வின் ஆய்வின் படி, மஸ்கட் திராட்சையின் தடினமான தோலில் நிறைய பாலிபினோல்கள் உள்ளன.

இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட்களாக செயல்படுகிறது. இதனால் உடல் மெட்டா பாலிச மேம்பாட்டிற்கு, இதய நோய்களுக்கு, நாள்பட்ட நோய்கள் மற்றும் ஒட்டுமொத்த உடல் நல ஆரோக்கியத்திற்கு என்று பயன்படுகிறது.

MOST READ: இந்த ஷூவோட கலர் என்னன்னு கரெக்டா கண்டுபிடிங்க பார்ப்போம்... உங்களால முடியுமா?

ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

4 அவுன்ஸ் மஸ்கட் திராட்சையில் 4.5 கிராம் நார்ச்சத்து

65 கலோரிகள்

15 கிராம் கார்போஹைட்ரேட்

1 கிராம் புரோட்டீன்

2.3 மில்லி கிராம் மாங்கனீஸ் (பெரியவர்களுக்கு தேவையான அளவு)

23% தினசரி விட்டமின் சி அளவு

உள்ளது என்று அமெரிக்க ஊட்டச்சத்து விவரங்கள் கூறுகின்றன.

சீரண சக்தியை அதிகரித்தல்

சீரண சக்தியை அதிகரித்தல்

நார்ச்சத்துகள் அதிகமாக உள்ள பழம் என்றால் அது இது தான். நீரில் கரையாத நார்ச்சத்துகள் அதன் தோலிலும் விதைகளிலும் காணப்படுகிறது. மலம் கழித்தலை இலகுவாக்குகிறது, மலச்சிக்கல் மற்றும் சீரண சக்தியை அதிகரித்தல் போன்ற செயல்களை செய்கிறது. மஸ்கட் திராட்சையின் தோல் சாப்பிடுவதற்கு தடினமாக இருந்தாலும் தோலுடன் சாப்பிடுவது நல்லது.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு

இதில் அதிகளவு நார்ச்சத்து மற்றும் தண்ணீர் சத்து இருப்பதால் உடல் எடை குறைக்க சிறந்தது. மேலும் இதில் சர்க்கரை, கொழுப்பு போன்ற பொருட்கள் இல்லை என்பதால் இதை நீங்கள் ஸ்நாக்ஸ் மாதிரி கூட சாப்பிட்டு வரலாம்.

MOST READ: தெரியாம கீழே விழுந்த பையன் கண்ணுல பென்சில் குத்தி கண்பார்வையே போன பரிதாபத்த பாருங்க...

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

இதில் உள்ள முக்கியமான ஆன்டி ஆக்ஸிடன்ட் ரெஸ்வரட்டோல் இது நிறைய நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. புற்றுநோய், அல்சீமர் நோய், இதய நோய்கள், உயர் ரத்த அழுத்தம், க்ரோன் நோய், பர்கின்சர் நோய் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. 2006 ல் நடத்தப்பட்ட மெர்டென்ஸ்-டல்காட் எஸ்.யு. புளோரிடா பல்கலைக்கழகத்தின் மூலம், பெருங்குடல் புற்று நோய் வளர்ச்சியை தடுக்கிறது.

இதய நோய்கள் பராமரிப்பு

இதய நோய்கள் பராமரிப்பு

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்னான ரெஸ்வரட்டோல் கெட்ட கொழுப்புகளை (எல்டிஎல்) கரைக்கிறது. செல்களில் ஏற்படும் அழுத்தம், டயாபெட்டிக் அறிகுறிகள், இதய நோய்கள், பக்கவாதம் போன்றவற்றை சரி செய்கிறது.

MOST READ: பெண்ணுக்கு பேய் ஓட்டுவதாக சொல்லி 7 மாதமாக பாலியல் சீண்டல் செய்த துறவி...

மஸ்கட் வொயின் தயாரிப்பது எப்படி?

மஸ்கட் வொயின் தயாரிப்பது எப்படி?

முதலில் ஒரு கண்ணாடி ஜாரை எடுத்து நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்

அந்த சுத்தமான ஜாரில் 6 கப் சர்க்கரை, 3 பங்கு சுத்தமான தண்ணீர் சேர்த்து கொள்ளுங்கள்.

4 கப் மஸ்கட் திராட்சை சாறு எடுத்து அதில் சர்க்கரை நீரை சேர்த்து கொள்ளுங்கள்.

அதன் மேல் உலர்ந்த ஈஸ்ட்டை தூவி மட்டும் விடுங்கள். கலக்க வேண்டாம்

அடுத்த நாள் அதை நன்றாக கலக்கி விடுங்கள். இப்படியே ஒரு வாரத்திற்கு செய்து வாருங்கள்.

அடுத்து இந்த தண்ணீரை வடிகட்டி மற்றொரு காற்று புகாத ஜாரில் அடைத்து கொள்ளுங்கள். அந்த ஜாரின் மேல் பகுதியில் தண்ணீர் ஊற்றி கொள்ளுங்கள். 6 வாரங்கள் வரை அப்படியே வைத்துக் இருங்கள்.

பிறகு அதை மறுபடியும் மற்றொரு காற்று புகாத ஜாரில் வடிகட்டி வைத்து பயன்படுத்துங்கள். குடிப்பதற்கு 3 நாட்களுக்கு முன்னாடி சூரிய ஒளி படாத இடத்தில் வைத்து குளிர வைத்து பயன்படுத்துங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits of Muscadine Grapes

muscadines grapes have Polyphenols are compounds that are assumed in natural and traditional medicines to have powerful antioxidant effects. Several studies have found muscadine grapes to have particular metabolic and cardiovascular benefits, as well as antioxidant effects that can prevent chronic diseases and boost overall wellness.
Story first published: Wednesday, May 15, 2019, 16:13 [IST]
Desktop Bottom Promotion