For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த பைனாப்பிள் கொய்யாவ இப்படி சாப்பிடுங்க... ஒரே வாரத்துல 5 கிலோ குறைஞ்சிடும்...

பைன்ஆப்பிள் கொய்யாவின் அற்புதமான நன்மைகளைப் பற்றி இந்த கட்டுரையில் விளக்கப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள். அது பற்றிய முழுமையான தொகுப்பு தான் இது.

|

பைன்ஆப்பிள் கோவா பார்ப்பதற்கு கொய்யா வடிவில் காணப்படுகிறது. இது உடல் எடை இழப்பு, சீரண சக்தியை அதிகரித்தல், கொலஸ்ட்ராலை குறைத்தல், நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், எலும்புகளின் வலிமை அதிகரித்தல், இரத்த அழுத்தத்தை குறைத்தல், ஊட்டச்சத்துகள், மெட்டா பாலிசத்தை சமநிலையில் வைத்தல், இரத்த ஓட்டத்தை அதிகரித்தல், மூளை செயல்திறனை அதிகரித்தல், இரத்த சர்க்கரை அளவை குறைத்தல் போன்ற ஏராளமான நன்மைகளை தருகிறது.

Feijoa

எனவே இதை உணவில் சேர்த்து வருவது நல்லது. இதில் ஒரு சில பக்க விளைவுகள் மட்டுமே ஏற்படுகின்றன. வயிறு பிரச்சினைகள், இரத்த சர்க்கரை அளவு குறைந்து போகுதல் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே இந்த பழத்தை சரியான அளவில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன்களை பெறலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பைன்ஆப்பிள் கோவா என்றால் என்ன?

பைன்ஆப்பிள் கோவா என்றால் என்ன?

இந்த பைன் ஆப்பிள் கோவா பிஜியா என்று அழைக்கப்படுகிறது. இதன் அறிவியல் பெயர் ஆக்லா சல்லியனா என்றழைக்கப்படுகிறது. அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் கொலம்பியா போன்ற நாடுகளில் அதிகமாக காணப்படுகிறது.

இது இனிப்பு பழம் என்பதால் சமையலில் அலங்கார நோக்கங்களுக்காக பயன்படுகிறது. இதை பார்ப்பதற்கு சிறிய அவகேடா பழம் போன்று காணப்படும். இதனால் ஸ்மூத்தி, கோக்டைல், டிசர்ட், சட்னி மற்றும் பழ டிஷ்களில் பயன்படுகிறது.

MOST READ: தேனை இப்படி சாப்பிட்டிருக்கீங்களா? சாப்பிடுங்க இத்தனை நோயும் பறந்துடுமாம்...

சுவை

சுவை

இதன் சுவை தனித்துவம் வாய்ந்தது. இனிப்பு, புளிப்பு மற்றும் கசப்பு சுவை கொண்டது. லேசான ஸ்ட்ராபெர்ரி சுவை கொண்டும் காணப்படும். நன்றாக பழுத்த பிறகு புதினா சுவை அடிக்கும் என்கின்றனர். மரத்தில் இருந்து இந்த பழத்தை பறிக்கும் போதே ஒரளவு பழுத்த வகையில் பறியுங்கள். ரொம்ப காயாக இருந்தால் கசக்கும். ரொம்ப பழமாக இருந்தாலும் சாப்பிட முடியாது. மீடியமான தன்மை இனிப்பு சுவையை தரும்.

ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

100 கிராம் பழத்தில் 55 கலோரிகள் உள்ளன

விட்டமின் சி - 50% (தினசரி அளவு)

விட்டமின்கள் பி, ஈ, கே மற்றும் ஏ

தாதுக்கள்

காப்பர்

மாங்கனீஸ்

மக்னீசியம்

பொட்டாசியம்

இரும்புச் சத்து

கால்சியம்

நார்ச்சத்து - 15%(தினசரி தேவை)

பைட்டோ கெமிக்கல்கள்

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

பினால்கள் போன்ற ஏகப்பட்ட ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளன.

நன்மைகள்

நன்மைகள்

நீங்கள் இந்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், உடல் பருமன், நோயெதிர்ப்பு சக்தி, ஆக்ஸிடேட்டிவ் அழுத்தம், மெட்டா பாலிசம், ஆஸ்டியோபோரோசிஸ், சீரணமின்மை, டயாபெட்டீஸ், இரத்த ஓட்டம், மூளை செயல்கள், ஊட்டச்சத்து பற்றாக்குறை போன்ற ஏகப்பட்ட பிரச்சினைகளை களைகிறது.

MOST READ: ஒயிட் ஒயின் - ரெட் ஒயின் ரெண்டுல எது ஆரோக்கியம்? தெரிஞ்சிக்கங்க...

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

இதிலுள்ள விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. விட்டமின் சி இரத்த வெள்ளையணுக்கள் உற்பத்திக்கும், ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் செல்களின் பெருக்கத்தை தடுக்கவும் உதவுகிறது. இதிலுள்ள விட்டமின் சி அளவு நமது தினசரி விட்டமின் சி தேவையில் 50% பூர்த்தி செய்கிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துதல்

பொட்டாசியம் அதிகமான உணவு என்பதால் உயர் இரத்த அழுத்தத்தை குறைத்து இதய நோய்கள், ஆந்த்ரோஸ்கிலாரிஸ் மற்றும் பக்கவாதம் போன்ற நோய்கள் வராமல் தடுக்கிறது. பொட்டாசியம் ஒரு வாசோடைலேட்டர் மாதிரி செயல்பட்டு இரத்த குழாய்களில் உண்டாகும் அழுத்தம் போன்றவற்றை குறைக்கிறது.

சீரண சக்தியை அதிகரித்தல்

சீரண சக்தியை அதிகரித்தல்

இதன் அதிகளவு நார்ச்சத்து 17% தினசரி நார்ச்சத்து அளவை பூர்த்தி செய்கிறது. ஊட்டச்சத்து அளவை மேம்படுத்தி சீரண சக்தியை அதிகரிக்கிறது. சீரணமின்மை, மலச்சிக்கல், வயிறு மந்தம், வயிற்று வீக்கம் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

கொலஸ்ட்ராலை குறைத்தல்

கொலஸ்ட்ராலை குறைத்தல்

இதிலுள்ள நார்ச்சத்துகள் சீரண சக்தியை அதிகரித்தல், கொலஸ்ட்ராலை குறைத்தல் போன்ற வேலைகளை செய்கிறது. கெட்ட கொழுப்புகள் அதிகமாகும் போது இதய நோய்கள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளது. இரத்த குழாய்களில் படிந்து உள்ள கொழுப்புகளை கரைக்கிறது. இரத்தம் கட்டுதல், இதய செயலிழப்பு, பக்கவாதம் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

அறிவாற்றலை அதிகரித்தல்

அறிவாற்றலை அதிகரித்தல்

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நினைவாற்றல் மற்றும் அறிவாற்றலை அதிகரிக்க பயன்படுகிறது. கவனத்தை அதிகரித்து நியூரோடிஜெனரேட்டுவ் பிரச்சினைகளை குறைத்து டிமென்ஷியா போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது. மூளை நரம்புகளில் ஏற்படும் தடையை சரி செய்கிறது.

MOST READ: உயிர எடுக்கிற குழி முதல்தடவ ஒரு உயிரை காப்பாத்திருக்கு... என்ன நடந்தது தெரியுமா?

மெட்டபாலிசத்தை அதிகரித்தல்

மெட்டபாலிசத்தை அதிகரித்தல்

விட்டமின் பி நமது உடலின் மெட்டா பாலிக் செயல்களான புரோட்டீன் வினை, சிவப்பு இரத்த அணுக்கள் உற்பத்தி , ஹார்மோன் உற்பத்தி, நரம்பு மண்டல செயலை தூண்டுதல், ஆற்றலை உற்பத்தி செய்தல் போன்ற வேலைகளுக்கு துணை புரிகிறது.

எலும்புகளின் வலிமை

எலும்புகளின் வலிமை

இந்த பழத்தில் உள்ள தாதுக்களான மாங்கனீஸ், இரும்புச் சத்து, கால்சியம் மற்றும் பொட்டாசியம் போன்ற மினரல்கள் எலும்புகளின் வலிமைக்கு பயன்படுகிறது. வயதான காலத்தில் ஏற்படும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க உதவுகிறது. இதனால் வயதான காலத்திலும் ஆற்றலுடன் செயல்பட முடியும்.

டயாபெட்டீஸ் கட்டுப்பாடு

டயாபெட்டீஸ் கட்டுப்பாடு

இந்த பைன் ஆப்பிள் கோவா பழத்தை சாப்பிட்டு வந்தால் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க முடியும். குறைந்த கலோரி, கார்போஹைட்ரேட் போன்றவை இன்சுலின் சுரப்பு உற்பத்தியை கட்டுப்பாட்டில் வைக்கிறது.

இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்

இரத்த ஓட்டத்தை அதிகரித்தல்

இதிலுள்ள இரும்புச் சத்து புதிய சிவப்பணுக்கள் உற்பத்திக்கும் இரத்த ஓட்டம் சீராக இருக்கவும் உதவுகிறது. விட்டமின் பி மெட்டா பாலிசத்தை அதிகரித்து இரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. அதாவது உடலில் ஆக்ஸினேற்றத்தை அதிகரித்து எனர்ஜியை தருகிறது.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு

100 கிராம் பழத்தில் 55 கலோரிகள் மட்டுமே இருப்பதால் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இதை எடுத்துக் கொள்ளலாம். அதிகளவில் நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துகள் வேற உள்ளது. இந்த பழத்தை எடுத்துக் கொண்டாலே போதும் தினசரி ஊட்டச்சத்துக்களின் தேவை அடங்கி விடும். எனவே தேவையில்லாமல் சுகர், நொறுக்கு தீனிகள் தேவையில்லை. எனவே ஈஸியாக எடையை குறைத்து விடலாம்.

MOST READ: பார்க்கதான் சின்ன பழம்... இதுக்குள்ள இருக்கிற விஷயம் தெரிஞ்சா தினம் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க...

பைன்ஆப்பிள் கோவாவை எப்படி சாப்பிடலாம்?

பைன்ஆப்பிள் கோவாவை எப்படி சாப்பிடலாம்?

இதன் சதைப்பகுதி சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும் மக்கள் இதை பாதியாக வெட்டி அதனில் உள்ள விதைகளை ரீமூவ் செய்து விட்டு ஜூஸி பகுதியை மட்டும் சாப்பிடுகின்றனர். அதன் மேற்புற தோலில் கூடுதல் நார்ச்சத்து இருப்பதால் அதையும் ரீமூவ் செய்யாமல் சாப்பிடுவது நல்லது. அதன் மேற்புற தோல் கசப்பாகவும் உள்ளே இனிப்பாகவும் இருக்கும். கொய்யாப் பழத்தை போன்று இருக்கும்.

இந்த பழம் சீக்கிரமாக பழுக்க ஆரம்பித்து விடும். பழுக்க ஆரம்பித்த உடன் ப்ரவுன் கலரில் நிறம் மாறும். பாதி பகுதி முழுவதும் ப்ரவுன் ஆக மாற ஆரம்பித்து விட்டால் அழுகி விட்டது என்று அர்த்தம். எனவே அதை சாப்பிடுவதை தவிருங்கள்.

இப்படி ஏராளமான நன்மைகளை தரும் பைன்ஆப்பிள் கோவாவை உங்கள் உணவிலும் சேர்த்து வரலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health Benefits Of Feijoa

Pineapple guava can have a wide range of health effects, including aiding weight-loss goals, improving digestion, lowering cholesterol levels, boosting the immune system, increasing bone strength, decreasing blood pressure, optimizing nutrient uptake, balancing the metabolism, increasing circulation, stimulating cognitive function and regulating blood sugar levels, among others.
Story first published: Friday, May 3, 2019, 17:46 [IST]
Desktop Bottom Promotion