Latest Updates
-
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்..
மொச்சைக்கொட்டை சாப்பிடுவது உங்களை எத்தனை ஆபத்தான நோய்களில் இருந்து காப்பாத்தும் தெரியுமா?
இந்தியாவில் பல காலமாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் முக்கியமான உணவு பொருட்களில் ஒன்று மொச்சைக்கொட்டையாகும்.
இந்தியாவில் பல காலமாக உபயோகப்படுத்தப்பட்டு வரும் முக்கியமான உணவு பொருட்களில் ஒன்று மொச்சைக்கொட்டையாகும். பல ஆரோக்கிய நன்மைகளை வழங்கக்கூடிய இதை பற்றி நாம் இன்னும் முழுமையாக தெரிந்து கொள்ளவில்லை என்றுதான் கூறவேண்டும்.

சோயா வகையை சேர்ந்த ஒன்றாக கருதப்படும் இது ஜப்பானில் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது. புரோட்டின், நார்ச்சத்துக்கள், கார்போஹைட்ரேட், அமினோ அமிலங்கள், மக்னீசயம், இரும்புசத்து, பொட்டாசியம், ஜிங்க் மற்றும் குறைவான சர்க்கரை என்று இதில் இருக்கும் ஊட்டச்சத்துக்களின் எண்ணிக்கை ஏராளமாகும். இந்த பதிவில் எந்தெந்த நோய்களில் இருந்து மொச்சைக்கொட்டை உங்களை பாதுகாக்கிறது என்று பார்க்கலாம்.

சரும ஆரோக்கியம்
சருமமும் நமது உடல் உறுப்புகளில் முக்கியமான ஒன்றுதான். வெளிப்புற காரணங்கள், சுற்றுசூழல் கோளாறுகள் மருந்துகள் என்று சருமம் சிதைவுற பல காரணங்கள் உள்ளது. இந்த சூழ்நிலையில் மொச்சைக்கொட்டையில் இருக்கும் ஆன்டிஆக்சிடண்ட்கள் உங்கள் சருமத்தை பாதுகாக்கவும், சிதைந்த சருமத்தை சரி செய்யவும் உதவுகிறது.

நோயெதிர்ப்பு சக்தி
இதிலிருக்கும் ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆன்டிஆஸிடண்ட்கள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்தை பலப்படுத்தும். பல்வேறு ஆரோக்கிய கோளாறுகளை உண்டாக்கும் நுண்ணுயிர்களுக்கு எதிராக போராட வலிமையான நோயெதிர்ப்பு மண்டலம் மிகவும் அவசியமானதாகும்.

வலிமையான எலும்புகள்
எலும்புகளை வலிமையாக்கும் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் ஈ என அனைத்தும் இதில் உள்ளது. இதனை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்வது உங்கள் எலும்புகளை வலிமைப்படுத்தவும், எலும்புகளின் அடர்த்தியை ஊக்குவிக்கவும் பயன்படுகிறது. குறிப்பாக 40 வயதை கடந்த பெண்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியமாகும்.

நுரையீரல் ஆரோக்கியம்
இலினாய்ஸ் பல்கலைக்கழத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் ஆஸ்துமா மற்றும் கடுமையான மூச்சு பிரச்சினை உள்ளவர்களுக்கு இது மிகசிறந்த மருந்தாக இருக்கிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. இதில் ஜெனிஸ்டீன் என்னும் ஒரு பொருள் உள்ளது. இது நுரையீரலை நன்கு செயல்பட வைப்பதுடன் நாள்பட்ட மூச்சு கோளாறுகளையும் சரிசெய்கிறது.

எடை பராமரிப்பு
155 கிராம் மொச்சைக்கொட்டையில் 18.5 கிராம் புரோட்டின் இருப்பதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் கூறுகிறார்கள். இது உங்களின் எடையை சீராக பராமரிக்க உதவுகிறது. எடையை பராமரிப்பதில் ஆரோக்கிய உணவுகள் முக்கியமான இடத்தை வகிக்கிறது. அதிக புரோட்டின்களும், குறைந்தளவு கலோரிகளும் இருக்கும் உணவுகள் எடையை சீராக பராமரிக்க உதவும். அதற்கு இது சிறந்த உதாரணமாகும்.

செரிமானம்
இது செரிமான மண்டலத்தை சீராக வைத்து கொள்வதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. மலச்சிக்கலும், வீக்கமும் ஏற்பட முக்கிய காரணம் இதனை குறைவாக எடுத்துக்கொள்வதாக கூட இருக்கலாம். செரிமானம் மட்டுமின்றி இதிலிருக்கும் நார்ச்சத்துக்கள் உங்கள் உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை சீராக பராமரிக்கவும் உதவுகிறது. இது நெஞ்செரிச்சல், மாரடைப்பு போன்ற பிரச்சினைகளில் இருந்து உங்களை பாதுகாக்கும்.

புற்றுநோய் தடுப்பு
ஆய்வுகளின் படி சோயா பொருட்கள் குறிப்பாக மொச்சைக்கொட்டையில் இருக்கும் ஊட்டச்சத்துக்கள் மார்பக புற்றுநோயை தடுக்கும் என்று கூறப்படுகிறது. சோயாபீன் பொருட்களில் இருக்கும் ஐசோபிளேவனான் நம்மை புற்றுநோயில் இருந்து தடுக்கும் என்று கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications
