For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இனிமேல் உப்பு வாங்கும்போது இந்த செலடிக் கடல் உப்பானு பார்த்து வாங்குங்க... ஏன்னு தெரியுமா?

செலடிக் உப்பு பிரான்ஸ் நாட்டின் கடற்கரையில் இருந்து பெறப்படுகிறது. இதில் அயோடின் மட்டும் இருப்பதோடு மக்னீசியம், இரும்புச் சத்து, மாங்கனீஸ், ஜிங்க், அயோடின் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளன.

|

இந்த செலடிக் கடல் உப்பு பற்றி நீங்கள் கேள்வி பட்டிருக்கீங்களா? இதை கொஞ்சமா உணவில் சேர்த்துக் கொண்டாலே போதும் உணவிற்கு சுவையை அளிப்பதோடு ஏராளமான உடல் நல நன்மைகளையும் தருகிறது.

Top 5 Health Benefits Of Celtic Sea Salt

இந்த செலடிக் உப்பு பாதிக்கப்பட்ட சருமத்தை சரி செய்கிறது. ஆரோக்கியமான சரும செல் வளர்ச்சிக்கும், மூட்டு வலி பிரச்சினைகளை களையவும் பயன்படுகிறது. இது இயற்கையாகவே கிடைக்கும் உப்பாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செலடிக் கடல் உப்பு

செலடிக் கடல் உப்பு

இந்த செலடிக் உப்பு பிரான்ஸ் நாட்டின் கடற்கரையில் இருந்து பெறப்படுகிறது. இந்த கடல் நீரை கட்டி வைத்து அதை சூரிய ஒளியில் ஆவியாகும் போது இந்த உப்பு படிகிறது. இது மற்ற உப்பை காட்டிலும் கூடுதல் ஈரப்பதம் பெற்று இருக்கும். இது பார்ப்பதற்கு சாம்பல் நிறத்தில் காணப்படும். இதில் அதிகளவு மினரல்கள் காணப்படுகின்றன. இதில் அயோடின் மட்டும் இருப்பதோடு மக்னீசியம், இரும்புச் சத்து, மாங்கனீஸ், ஜிங்க், அயோடின் மற்றும் பொட்டாசியம் போன்றவை உள்ளன.

MOST READ: அரிசி டயட் பத்தி தெரியுமா?... மூனுவேளை அரிசி சாப்பிட்டாலும் வெயிட் போடாது...

பயன்கள்

பயன்கள்

இதன் தனித்தன்மை அங்கே இருக்கும் புவியியல் மாற்றங்களை பொருத்து ஏற்படுகிறது. இது பார்ப்பதற்கு கடினமாக இருப்பதோடு உப்புச் சுவையும் கொண்டு இருக்கும்.

சரும பாதிப்பு

சரும பாதிப்பு

சரும பாதிப்பை சரி செய்ய இதைக் கொண்டு கழுவுவது சிறந்தது. இது சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க ஸ்க்ரப் மாதிரி பயன்படுகிறது. சரும அழற்சியை போக்க இந்த உப்பில் உள்ள தாதுக்கள் பயன்படுகிறது. சரும வடுக்கள், பருக்கள் மற்றும் ரோஸாஸ போன்ற சரும பிரச்சினைகளை களைகிறது. எனினும் சென்ஸ்டிவ் சருமம் உடையவர்கள் சருமம் வறண்டு போகாமல் இருக்க மாய்ஸ்சரைசர் உடன் சேர்த்து பயன்படுத்தலாம்.

சரும செல் வளர்ச்சி

சரும செல் வளர்ச்சி

செலடிக் கடல் உப்பில் 92 மினரல்கள் உள்ளன. இதில் 24 மினரல்கள் உடல் சார்ந்த செயல்பாடுகளுக்கு உதவுகிறது. விட்டமின் பற்றாக்குறையால் ஏற்படும் தசைகள் பலவீனம், நரம்பு மண்டல பிரச்சினைகள், மூளை பாதிப்பு போன்றவற்றை சரி செய்கிறது. அதே நேரத்தில் அதிகமான உப்பு எடுத்துக் கொள்வது மூட்டுகளில் நீர்த்தேக்கம், எடிமா மற்றும் சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

சளியை குறைக்க

சளியை குறைக்க

செலடிக் கடல் உப்பு சிறந்த டிஹைரேட்டர் மாதிரி செயல்படுகிறது. மூக்கில் ஏற்படும் வீக்கம், சைனஸ், நுரையீரலில் இருக்கும் சளி போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது. நீர்த்தேக்கம், மூட்டுகளில் நீர் தேங்குதல் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

MOST READ: இந்த 8 பொருள சாப்பிட்டா போதும்... 80 வயசானாலும் கண்பார்வைல பிரச்சினையே வராது...

மூட்டுவலியை சரி செய்ய

மூட்டுவலியை சரி செய்ய

25% உப்பு கலந்த உப்பு நீர் குளியலை மேற்கொள்ளும் போது மூட்டுகளில் ஏற்படும் அழற்சி ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற பிரச்சினைகளை களைகிறது. குறைந்த உப்பு தண்ணீர் அழற்சியை மட்டும் போக்கும். அதிகமான உப்பு தண்ணீர் மூட்டுகளில் உள்ள வீக்கத்தை குறைக்கும்.

அயோடின் தேவை

அயோடின் தேவை

அயோடின் சத்து இயற்கையாகவே நமக்கு கிடைப்பதில்லை. ஆனால் நமது உடலின் தைராய்டு சுரப்பி கட்டுப்பாட்டிற்கு அயோடின் சத்து அவசியம். அயோடின் பற்றாக்குறை ஏற்படும் போது முன் கழுத்துக் கழலை என்ற நோய் ஏற்படுகிறது. டாக்டர். ஹை. இ. ஆப்ரகாம் படி விட்டமின் சி அயோடின் சத்தை உறிஞ்சிக் கொள்ள உதவுகிறது. செலடிக் கடல் உப்பு அயோடின் பற்றாக்குறை யை போக்குகிறது. அயோடின் பற்றாக்குறை ஏற்பட்டால் குழந்தையின்மை, புற்றுநோய் போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.

செலடிக் கடல் உப்பு Vs ஹிமாலயன் கடல் உப்பு

செலடிக் கடல் உப்பு Vs ஹிமாலயன் கடல் உப்பு

கடல் உப்பை நீராவியாக்குவதன் மூலம் செலடிக் கடல் உப்பை பெறலாம். இதில் நிறைய தாதுக்கள் இருப்பதால் கருப்பாகாத்தான் இருக்கும். ஹிமாலயன் உப்பு பிங்க் நிறத்தில் அயர்ன் ஆக்ஸைடு கொண்டு காணப்படும்.

ஹிமாலயன் உப்பில் பொட்டாசியம் அதிகளவில் உள்ளது. செலடிக் உப்பில் குறைந்த சோடியம், அதிகளவில் கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை உள்ளன. ஹிமாலயன் உப்பு பவுடராக இருக்கும், செலடிக் உப்பு பெரிய அளவில் ஈரப்பதத்துடன் காணப்படும்.

MOST READ: நிறைய பால் குடிப்பீங்களா? உடம்புல கால்சியம் அளவு அதிகமானா என்னாகும் தெரியுமா?

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

இந்த உப்பில் அதிகளவு சோடியம் இருப்பதால் உய் இரத்த அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. இதய ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கக் கூடியது. எனவே குறைந்த மற்றும் மிதமான சோடியம் உப்பு பாதுகாப்பானது.

பெரியவர்களுக்கான சோடியம் 2,300 மில்லி கிராம் ஆகும். இதய பிரச்சினை இருப்பவர்கள் ஒரு நாளைக்கு 1500 மில்லி கிராம் அளவு எடுத்தால் போதும். மெர்குரி, காரீயம் போன்ற தீங்கு விளைவிக்கக் கூடிய தாதுக்கள் இல்லாமல் உப்பை தயாரிக்க வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 5 Health Benefits Of Celtic Sea Salt

Celtic sea salt is a type of salt harvested from the Celtic Sea off the coast of France.Celtic sea salt can help heal skin damage, promote healthy cell growth, and relieve joint pain
Story first published: Tuesday, May 21, 2019, 17:25 [IST]
Desktop Bottom Promotion