For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இந்த ஒரு பழம் உங்களை சர்க்கரை நோய் முதல் சிறுநீரக செயலிழப்பு வரை அனைத்திலிருந்தும் பாதுகாக்கும்...!

வில்வ பழம் அல்லது மர ஆப்பிள் என்று அழைக்கப்படும் இது உலகம் முழுவதும் அதன் மருத்துவ பலன்களுக்காக உபயோகப்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய பழமாகும்.

|

ஒருவழியாக மழைக்காலம் வந்துவிட்டது. மழையில் நனைவது அனைவருக்கும் பிடித்த ஒன்றாகும், ஆனால் இந்த மழைக்காலம் பல்வேறு பாக்டீரியாக்களையும், வைரஸ்களையும் சேர்த்தே கொண்டுவருகிறது. சொல்லப்போனால் மழைக்காலத்தில் இவற்றை தடுக்க முடியாது.

Health benefits of Bel fruit

மழைக்காலத்தில் ஏற்படும் நோய்களை சமாளிக்க வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகும். நமது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பழங்களையும், காய்கறிகளையும் மழைக்காலத்தில் அதிகம் சேர்த்து கொள்ள வேண்டியது அவசியமாகும். வில்வ மரத்தின் பழம் உங்களை எப்படி பாதுகாக்கிறது என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வில்வ பழம்

வில்வ பழம்

வில்வ பழம் அல்லது மர ஆப்பிள் என்று அழைக்கப்படும் இது உலகம் முழுவதும் அதன் மருத்துவ பலன்களுக்காக உபயோகப்படுத்தப்படும் ஒரு அத்தியாவசிய பழமாகும். இதில் இயற்கையாகவே இருக்கும் மருத்துவ குணங்கள் பல நோய்க்ளைல் இருந்து உடனடி நிவாரணம் அளிக்க பயன்படுகிறது.

உங்கள் குடலுக்கு நல்லது

உங்கள் குடலுக்கு நல்லது

மலச்சிக்கல், குடல்புண், வயிற்றுப்போக்கு, அஜீரணம் போன்ற வயிறு தொடர்பான பல நோய்களை குணப்படுத்த இந்த பழம் பயன்படுத்தப்படுகிறது. வில்வ பழத்தின் சாறை குடிப்பது உங்களின் செரிமானத்தை உடனடியாக ஊக்குவிக்கும்.

 சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது

சர்க்கரை நோயாளிகளுக்கு சிறந்தது

வில்வ மரத்தின் இலைகள் மற்றும் பழங்களில் இருக்கும் ஃபெரோனியா கம் இரத்தத்தில் இருக்கும் குளூகோஸின் அளவை கட்டுப்படுத்துகிறது. பல நூற்றாண்டுகளாக ஆயுர்வேதத்தில் சர்க்கரை நோயை குறைப்பதற்கு இது பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் இது சர்க்கரை நோயின் தீவிரத்தையும் குறைக்கும்.

MOST READ:எவ்வளவு தண்ணி குடிச்சாலும் தாகம் அடங்கலையா? அப்ப உங்களுக்கு இந்த வியாதி இருக்க வாய்ப்பிருக்கு...!

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

இதில் மற்ற அனைத்து பழங்களை காட்டிலும் வைட்டமின் சி அதிகம் உள்ளது. மிகவும் சக்திவாய்ந்த ஆன்டிஆக்சிடன்ட் ஆன இது உங்கள் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதுடன் சளி, தலைவலி, கண் மற்றும் காது வலி போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது. மேலும் நாள்பட்ட நோய்களை குணப்படுத்துவதிலும், உயர் இரத்த அழுத்தத்தை குறைப்பதிலும் இது முக்கியப்பங்கு வகிக்கிறது. மேலும் இதன் மருத்துவ குணங்கள் இதயத்தை பாதுகாக்கிறது.

ஆற்றல்

ஆற்றல்

வில்வ பழம் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், சிறப்பாக்கவும் பயன்படுகிறது. அதிகளவு புரோட்டின் இருக்கும் இது சேதமடைந்த திசு மற்றும் தசைகளை சரிசெய்ய உதவுகிறது. உடனடி ஆற்றல் வழங்கக்கூடிய இது உங்கள் உடலில் இருக்கும் நீரின் அளவை தக்கவைத்து கொள்ள உதவும்.

MOST READ:மகாபாரதத்தை வீட்டில் வைத்திருப்பது குடும்பத்திற்கு நல்லதல்ல என்று கூறப்படுவது எந்த அளவிற்கு உண்மை?

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

இரத்தத்தை சுத்தப்படுத்தும்

இது இரத்தத்தை சுத்தப்படுத்தி உடலில் இருக்கும் நச்சுப்பொருட்களை வெளியேற்ற உதவும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இயற்கை கிருமிநாசினியான இது கல்லீரல் மற்றும் சிறுநீரகம் செயல்படாமல் போவதை தடுக்கிறது. மேலும் இது மழைக்காலத்தில் பொதுவாக ஏற்படும் சரும நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Health benefits of Bel fruit

Read on to know the health benefits of bel fruit.
Story first published: Monday, July 8, 2019, 17:10 [IST]
Desktop Bottom Promotion