Just In
- 7 hrs ago
இந்த வாரம் இந்த 3 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்ட தேவதையோட ஆசி கிடைக்கும்..
- 11 hrs ago
இந்த ராசிக்காரங்க இன்னிக்கு ரொம்ப எச்சரிக்கையா இருக்கணும்...
- 23 hrs ago
திருமணத்திற்கு முன்பு பெண்கள் தெரிந்துகொள்ள வேண்டிய பாலியல் தகவல்கள் என்ன தெரியுமா?
- 23 hrs ago
வாஸ்துவின் படி சமையலறையில் நீங்கள் செய்யும் இந்த செயல்கள் உங்கள் வாழ்க்கையில் வறுமையை ஏற்படுத்துமாம்
Don't Miss
- Sports
இவ்ளோ மோசமான பிட்ச்சா? போட்டியே வேண்டாம்.. புகழ்பெற்ற மைதானத்தில் நடந்த பரபர சம்பவம்!
- Movies
கமல் போஸ்டர் மீது சாணியடித்த விவகாரம்.. தவறாக பேசவில்லை.. திசை திருப்புகின்றனர்.. லாரன்ஸ் விளக்கம்!
- Finance
இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்த கூடுதல் நடவடிக்கை.. நிர்மலா சீதாராமன் அதிரடி பேச்சு..!
- News
மண்டைக்கு ஏறிய கோபம்.. கொதிக்கும் எண்ணெய்யை கணவன் மீது ஊற்றி கொன்ற மனைவி.. கைது!
- Technology
நோக்கியா 9 பியூர் வியூ ஸ்மார்ட்போனுக்கு கிடைத்துள்ள புதிய வசதி.!
- Automobiles
எடப்பாடியின் கையொப்பத்திற்காக நீண்ட நாளாக காத்திருக்கும் கோப்பு... இது போதும் தமிழர்களை குஷிப்படுத்த
- Education
திருவள்ளுவர் பல்கலையில் பேராசிரியர் வேலை! விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சாப்பிட்ட உடனே எந்த பிரச்னையும் இல்லாம ஜீரணமாகணுமா? அப்போ நீங்க இததான் சாப்பிடணும்...
அடிவயிற்றில் வலி, வயிற்றுப்போக்கு, வயிறு உப்புதல், வயிற்றில் தசைப்பிடிப்பு, வாயு தொல்லை மற்றும் மலச்சிக்கல் ஆகியவை குடல் பிரச்னைகளாக கருதப்படுகின்றன.
இவை ஏற்படுவதற்கு சரியான காரணமாக எதையும் கூற இயலவில்லை. முழுமையான தீர்வும் இவற்றுக்கு இல்லை. ஆனால், இதைக் கட்டுப்படுத்துவதில் உணவு முக்கிய பங்கு வகிக்கிறது.

நார்ச்சத்து மிக்க உணவு பொருள்கள்
நார்ச்சத்து அதிகமாக இருக்கும் உணவு பொருள்களை சாப்பிட்டால் மலச்சிக்கல் அகலும். வயிறு பிரச்னை உள்ளவர்கள் பழங்கள், காய்கறிகள் மற்றும் தோல், தவிடு நீக்கப்படாத முழு தானியங்களை உண்ணலாம்.
வாயு தொல்லை இருந்தால் ஆப்பிள், திராட்சை ஜூஸ், வாழைப்பழம், பாதாம், முந்திரி, பிஸ்தா, வால்நட், கஸ்கொட்டை போன்ற கொட்டை வகைகள், உலர்ந்த திராட்சை, பிரெக்கோலி, காலிஃபிளவர் வகை காய்கறிகளை தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து குறைவாக இருக்கும் வெள்ளை பிரட், பாஸ்தா மற்றும் சர்க்கரையை குறைத்துக் கொள்ள வேண்டும்.
MOST READ: பிரியங்கா சோப்ரா பெட்ரூம்ல எப்படி இருக்கணும்னு அவர் கணவர் போட்ட ரூல்ஸ் என்ன தெரியுமா?

கொழுப்புச்சத்து குறைவான உணவு பொருள்கள்
ஆட்டு இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி போன்ற கொழுப்புச் சத்து அதிகமான இறைச்சிகளை குறைவாக உண்ணவேண்டும். புரதச் சத்துக்காக தோல் நீக்கப்பட்ட கோழி இறைச்சி, வான்கோழி இறைச்சி ஆகியவற்றையும் குளிர்நீர் மீன்களான கோளா, கெண்டை மற்றும் கலவா ஆகியவற்றையும், பயிறு வகைகளையும் சாப்பிடலாம்.
அதிக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் நொறுக்குத் தீனிகள் செரிக்க சிரமப்படுவதுடன், பெருங்குடலுக்கும் தொல்லை தரும். பால் சார்ந்த தயாரிப்புகளிலும் கொழுப்பு குறைவானவற்றை உண்ணலாம்.

மிருதுவான உணவு பொருள்கள்
சுவையூட்டுவதற்காக தாளிக்கப்படும் உணவு வகைகள் குடல் பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்றது அல்ல. பெருஞ்சீரகம், புதினா போன்றவை சேர்ந்த உணவு நல்லது. மணமூட்டிகள் பயன்படுத்தப்பட்ட எல்லா உணவுகளையும் தவிர்க்கவேண்டும் என்ற அவசியம் இல்லை.
எந்த உணவு வயிற்றுக்கு ஒத்துக்கொள்ளவில்லை என்று அடையாளம் கண்டு அவற்றை தவிர்க்க வேண்டும். சாஸ், மிளகாய் தூள், மிளகாய் வற்றல், பூண்டு, இஞ்சி ஆகியவை வயிற்று உபாதையை ஏற்படுத்தக்கூடியவையாதலால் அவற்றை தவிர்க்க அல்லது குறைத்துக்கொள்ள வேண்டும்.

தவிர்க்க வேண்டியவை
வயிற்று உபாதை உள்ளவர்கள் அனைவரும் தவிர்க்கக்கூடியவை என்று உணவு பொருள்களை வகைப்படுத்த இயலாது. சிலருக்கு ஒத்துக்கொள்ளும் உணவு பொருள்கள் வேறு சிலருக்கு வயிற்றுக் கோளாறை கொண்டு வரும். ஆகவே, உங்களுக்கு எந்த உணவு ஒத்துக்கொள்ளும், எவை ஒத்துக்கொள்ளாது என்ற பட்டியலை தயாரித்து அதன்படி சாப்பிடுங்கள்.
பொதுவாக, பால் சார்ந்த உணவு, ஆல்கஹால் மற்றும் காஃபைன் கலந்த பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவு, செயற்கை இனிப்பு பானங்கள் ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.