Just In
- 1 hr ago
நீங்கள் செய்யும் இந்த செயல்கள் சனிபகவானின் கோபத்தை அதிகரிக்கும் தெரியுமா?
- 4 hrs ago
ஆண்குறி வடிவில் பீச்சில் கரை ஒதுங்கிய அரிய வகை மீன்கள்… எங்கு தெரியுமா?
- 4 hrs ago
போரடிக்கிற செக்ஸ் வாழ்க்கையை மீண்டும் சூப்பராக மாத்துறது எப்படினு தெரியுமா?
- 4 hrs ago
2020-இல் இந்த ராசிக்காரங்க தான் அதிக பணப்பிரச்சனையை சந்திப்பாங்களாம்... தெரியுமா?
Don't Miss
- News
நாங்க கல்யாணம் பண்ணி வைக்கிறோம் டீச்சர்.. நம்பி சென்ற ஆசிரியை.. பணம் பறித்த மோசடி கும்பல்
- Automobiles
ஆரஞ்ச் நிறத்தில் ராயல் எண்ட்பீல்டு 350எக்ஸ் பிஎஸ்6 மாடல்... அடுத்த ஆண்டு அறிமுகம்
- Movies
பாக்ஸர் அங்கிள்.. என்னை பெரிய ஆளாக்க வேணாம்.. உங்க வேலைய பாருங்க போதும்.. அமைச்சரிடம் எகிறிய நடிகர்!
- Finance
கம்பெனி காசில் பலான க்ளப்களில் களியாட்டம் போட்ட CEO..! கம்பெனி என்ன செய்தது..?
- Technology
ஜியோ நிறுவனம் அறிவித்துள்ள கேஷ்பேக் சலுகை: பெறுவது எப்படி?
- Education
DRDO: மத்திய அரசில் காத்திருக்கும் 1800 வேலைகள்! ஊதியம் ரூ.56 ஆயிரம்!
- Sports
என்னாது? டயாப்பர் மாட்டிக் கொண்டு.. வெளுத்து வாங்கிய குட்டிப் பையன்.. மிரண்டு போன கோலி!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உடலுறவுக்கு முன் இந்த 10 உணவுகளையும் சாப்பிட கூடாது! மீறினால் உறவில் சிக்கல் தான்!
இனப்பெருக்கம் என்பது ஒவ்வொரு உயிரினத்திற்கும் பொதுவான ஒரு விஷயம். இயற்கை நம்மை படைத்தது போன்றே நாமும் இயற்கைக்கு மறு கடமையாக செய்ய வேண்டிய கடமை தான் இது. புதிதாக ஒரு உயிரை உயிர்ப்பிக்கும் போது முழு மனிதனாக நம்மை நாம் உணர்வோம். குறிப்பாக இந்த நிகழ்வில் காதலும் அன்பும் அதிக அளவில் இருந்தால் மட்டுமே இப்படிப்பட்ட உணர்வு உங்களுக்கு கிடைக்கும்.
தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்க சில உணவுகளை உறவு வைத்து கொள்வதற்கு முன் சாப்பிடவே கூடாதாம். இவை உறவில் ஈடுபடும் போது சிலபல சங்கடமான சூழலை உண்டாகி விடும். மேலும், தாம்பத்தியத்தில் ஈடுபடும் விருப்பத்தையும் குறைத்து விடும்.
சில உணவுகள் ஆண்களின் டெஸ்டோஸ்டெரோன் ஹார்மோனின் அளவை குறைத்து விடும். எப்படி இருந்தாலும் இந்த உணவுகள் முழுவதுமாக உங்கள் தாம்பத்தியத்திற்கு பெரும் பாதிப்பை உண்டாக்கும். எனவே, உடலுறவின் போது இந்த 10 உணவுகளை எக்காரணத்திற்கும் சாப்பிட்டு விடாதீர்கள்.

பீன்ஸ்
உங்கள் இணையுடன் இணையும் போது பீன்ஸ் சாப்பிடுவதை முழுவதுமாக தவிர்த்து விடுங்கள். ஏனெனில், தாம்பத்தியத்திற்கு முன் பீன்ஸ் சாப்பிட்டால் வயிற்றில் வலியை ஏற்படுத்தலாம். அல்லது அதிகப்படியான வாயுக்களை வயிற்று பகுதியில் உருவாக்கும். இதனால் உறவில் இடையூறு ஏற்படும்.

உப்பு
உடலுறவில் இணைவதற்கு முன்னர் ஒரு போதும் உப்பு அதிகம் சேர்த்த உணவுகளை சாப்பிட்டு விடாதீர்கள்.
காரணம், இவை வயிற்றில் உப்பசத்தை உண்டாக்கி தாம்பத்தியத்தின் போது இடையூறு தரும். இதனால் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் அந்த நேரத்தில் திருப்தியை தராது.

சோளம்
விளையாட்டு தனமாக கூட சோளத்தை தாம்பத்தியத்திற்கு முன் சாப்பிட்டாதீர்கள். இது பாலுணர்வை குறைக்கும் தன்மை கொண்ட உணவு பொருளாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் பாப்கார்ன், கார்ன் பிளெக்ஸ் போன்ற உணவுகளையும் கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

வெங்காயம்
உணவில் அதிகம் வெங்காயம் சேர்த்திருந்தால் அதை உறவில் ஈடுபடுவதற்கு முன்னர் தவிர்த்து விடுவது நல்லது. இவற்றை சாப்பிட்ட பிறகு உறவில் ஈடுபட்டால் உடலில் இருந்து ஒரு வித துர்நாற்றம் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. ஆதலால் இவை மிக பெரிய இடையூறை உங்களுக்கு ஏற்படுத்தும்.

அதிமதுரம்
எப்போதுமே உடலுறவுக்கு முன் அதிமதுரத்தை தேனிலோ அல்லது பாலிலோ கலந்து சாப்பிடாதீர்கள். காரணம் இவை ஆண்களின் முக்கிய ஹார்மோனான டெஸ்டோஸ்டெரோனின் அளவை குறைத்து விடும். எனவே, ஆண்களால் சிறப்பான முறையில் உறவில் ஈடுபட இயலாது.

காபி
தாம்பத்தியத்திற்கு முன் காபி குடித்தால் பலவித பாதிப்புகள் உடலில் உண்டாகும். குறிப்பாக இதனால் கார்டிசோல் ஹார்மோன் மாற்றம் பெற்று மன அழுத்தத்தை உண்டாக்கும்.
கூடவே ஹார்மோனில் சமநிலை மாற்றம் ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளது. ஆதலால், உடலுறவிற்கு முன் ஒரு போதும் காபி குடிக்காதீர்கள்.

புதினா
காதலிக்கு முத்தம் கொடுக்கும்போது மிகவும் வாசனையாக இருக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் புதினா அல்லது புதினா பிளேவர் சுவிங்க் கம்மை சாப்பிடுவோம்.
இதுவும் தாம்பத்திய வாழ்வில் பிரச்சினையை உண்டாக்குமாம். உறவில் உள்ள ஆர்வத்தை புதினாவின் உள்ள மென்தால் மூல பொருள் குறைத்து விடுமாம்.

காலி பிளவர்
உறவின் போது வாயு வெளிப்பட்டால் அது மிகவும் சங்கடமான பாதிப்பை நமக்கு உண்டாகி விடும். குறிப்பாக காலி பிளவர், முட்டைகோஸ், ப்ரோக்கோலி போன்ற உணவுகள் இதில் அடங்கும்.
இவை அதிக படியான வாயு பிரச்சினையை உடலுறவின் போது உண்டாக்கி விடுமாம். எனவே இதை தவிர்த்து விடுங்கள்.
MOST READ: ஒரே வாரத்தில், வறட்சியான உங்க முடியை மென்மையாக்க இந்த 8 பொருட்கள் போதும்..!

சீஸ்
பெரும்பாலும் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட உணவுகள் ஹார்மோன் சமநிலையை பாதிக்க கூடும். கட்டாயம் உறவில் ஈடுபடுவதற்கு முன் இந்த வகை உணவுகளை சாப்பிடாதீர்கள். மீறி சாப்பிட்டால் தாம்பத்தியத்தில் திருப்தி இருக்காது.

சோயா பால்
சோயா பாலில் அதிக ஊட்டச்சத்துக்கள் இருந்தாலும் இவற்றை சாப்பிடுவதால் ஆணின் பாலுணர்வு குறைவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.
காரணம் இதிலுள்ள பைட்டோ ஈஸ்ட்ரோஜென்கள் தான். இவை ஆண்களின் உடலில் ஹோர்மோன் மாற்றத்தை பெரிய அளவில் உண்டாக்கி விடும்.
மேற்சொன்ன உணவுகளை உறவில் இணையும் போது தவிர்த்து வந்தால் சிறப்பான தாம்பத்திய உணர்வை நீங்கள் பெறுவீர்கள் நண்பர்கள்!