For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சமைக்கும்போது உணவில் கரம் மசாலா சேர்ப்பவரா நீங்கள்? உங்களுக்கான பதிவுதான் இது...!

கரம் மசாலா இந்திய உணவுகளில் பழங்காலம் முதலே சேர்க்கப்படும் தவிர்க்க முடியாத ஒரு பொருளாகும். பழங்காலத்தில் 32 வகையான மசாலா பொருட்களை சேர்த்து கரம் மசாலா தயாரிக்கப்பட்டது.

|

உலகின் சுவையான உணவுகள் என்றால் அதில் இந்திய உணவுகளை ஒருபோதும் தவிர்க்க இயலாது. இந்திய உணவுகள் அதில் சேர்க்கப்படும் மசாலா பொருள்களுக்காகவே புகழ் பெற்றவையாகும். நாம் சேர்க்கும் மசாலா பொருட்கள் உணவின் சுவையை அதிகரிப்பதுடன், உணவின் வாசனையையும் அதிகரிக்க உதவும்.அப்படி உணவின் சுவைக்காக நாம் சேர்க்கும் பொருட்களில் முக்கியமானது கரம் மசாலா ஆகும்.

does garam masala is bad for health?

கரம் மசாலா இந்திய உணவுகளில் பழங்காலம் முதலே சேர்க்கப்படும் தவிர்க்க முடியாத ஒரு பொருளாகும். பழங்காலத்தில் 32 வகையான மசாலா பொருட்களை சேர்த்து கரம் மசாலா தயாரிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதனை பொருட்கள் சேர்க்கப்படுவதில்லை. மிளகு,சீரகம்,பட்டை,ஏலக்காய்,கிராம்பு என பல பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்படும் இந்த கரம் மசாலா உணவில் சேர்க்கப்படும்போது அதிலுள்ள ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகரிக்கும். இந்த பதிவில் கரம் மசாலா உணவில் சேர்க்கப்படுவதால் ஏற்படும் விளைவுகள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செரிமானத்தை ஊக்குவிக்கும்

செரிமானத்தை ஊக்குவிக்கும்

உங்கள் உணவில் கரம் மசாலா சேர்ப்பது உங்கள் உடலின் வெப்பநிலையை கணிசமாக உயர்த்தும், மேலும் இது உங்கள் வளர்ச்சிதை மாற்றத்தையும் ஊக்குவிக்கும். மேலும் இது உடலில் நச்சு பொருட்கள் சேர்வதை தடுப்பதுடன் செரிமானத்தையும் ஊக்குவிக்கும். கரம் மசாலாவில் உள்ள சீரகம் செரிமானத்தை ஊக்குவிக்கும், கிராம்பு அமிலத்தன்மையை குறைக்கும்.

கொழுப்பை குறைக்கும்

கொழுப்பை குறைக்கும்

கரம் மசாலா உணவில் சேர்க்கப்படும் போது அது உணவில் உள்ள கெட்ட கொழுப்புகளை குறைக்கும். கரம் மசாலாவில் இருக்கும் மிளகு, கிராம்பு, ஏலக்காய் போன்ற பொருட்கள் உங்கள் உடலில் கொழுப்புகள் அதிகமாவதை தடுக்கிறது.

சர்க்கரை நோயை சமாளிக்கும்

சர்க்கரை நோயை சமாளிக்கும்

கரம் மசாலாவில் சேர்க்கப்படும் இலவங்கப்பட்டை பல ஆரோக்கிய பலன்களை கொண்டுள்ளது. குறிப்பாக இது சர்க்கரை நோய் வராமல் தடுப்பதோடு இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கவும் உதவும். மேலும் இது உடலில் உள்ள இன்சுலினின் அளவை அதிகரிக்கும்.

வீக்கத்தை குறைக்கும்

வீக்கத்தை குறைக்கும்

கரம் மசாலாவில் உள்ள சீரகம், மிளகு மற்றும் இலவங்கப்பட்டையில் அதிகளவு ஆன்டி ஆக்சிடண்ட்களும், அதிகளவு எதிர் அழற்சி பண்புகளும் உள்ளது. இது குடல்களில் வீக்கத்தை ஏற்படாமல் தடுப்பதுடன் செரிமானத்தை ஊக்குவித்து இதய துடிப்பை சீரான நிலையில் வைத்திருக்கும். இது உங்களின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் பாதுகாக்கும்.

MOST READ:உலகத்தின் அழிவு இந்த 5 இடங்களில் இருந்துதான் தொடங்கும் என்று பிரம்மா கூறியுள்ளார்...

வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றம்

இதில் உள்ள கிராம்பும், இலவங்கப்பட்டையும் வாய் துர்நாற்றத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடும். கிராம்பில் இருக்கும் ஆன்டி ஆக்சிடண்ட்களும், வைட்டமின்களும் வாய் துர்நாற்றத்தை தடுப்பதுடன் பல்வேறு விதமான பல் பிரச்சினைகளையும் குணமாக்கும்.

வயதாவதை தடுக்கும்

வயதாவதை தடுக்கும்

கரம் மசாலாவில் இருக்கும் மிளகு,கிராம்பு போன்றவற்றில் உள்ள மருத்துவ குணங்கள் உங்களுக்கு வேகமாக வயதாவதை தடுக்கக்கூடும். குறிப்பாக மிளகில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட், ஆன்டி பாக்டீரியல் பண்புகள் இயற்கையாகவே வயதாவதை தடுக்கும் பண்புகள் கொண்டுள்ளது.

கரம் மசாலா

கரம் மசாலா

பொதுவாக கரம் மசாலா வீட்டில் தயாரித்து சாப்பிடுவதே நல்லது. கடைகளில் கிடைக்கும் கரம் மசாலாக்களில் மசாலா பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் அதில் சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள் சில பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும். மிளகு, சீரகம், கருப்பு ஏலக்காய், பச்சை ஏலக்காய், பே இலைகள், கொத்தமல்லி, கிராம்பு,இலவங்கப்பட்டை போன்ற பொருட்களை போதுமான அளவில் எடுத்துக்கொண்டு வறுத்து அரைத்து கரம் மசாலா தயாரித்து கொள்ளளவும்.

MOST READ:இந்த வயதில் தாம்பத்தியம் வைத்து கொண்டால் உங்கள் உயிருக்கே ஆபத்தாம்..! #அதிர்ச்சி தகவல்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Read more about: health health food
English summary

does garam masala is bad for health?

Garam masala is an important spice of Indian cuisine that is used in a number of dishes. It has numerous health benefits.
Story first published: Saturday, January 19, 2019, 14:46 [IST]
Desktop Bottom Promotion