For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மில்க்மெய்டு இனிமே கடையில வாங்காதீங்க... பால்ல இந்த பவுடர போடுங்க... உடனே திக்காயிடும்...

கண்டென்ஸ்ட் மில்க்குக்கு பதிலா வேற என்னல்லாம் சேர்த்து ஸ்வீட் பண்ணலாம் என்பது பற்றிய சில பொருள்களைப் பற்றித் தான் இந்த கட்டுரையில் விளக்கமாகப் பார்க்கலாம். அதிலும் குறிப்பாக வீட்டிலேயே எப்படி கண்டண்ஸ்

|

கண்டென்ஸ்ட் மில்க் என்னும் சுவையூட்டப்பட்ட, அடர்பால் அனைவரும் விரும்பி பருகும் ஒன்று. அதன் சுவை மறக்க இயலாததும் கூட. சரி, கண்டென்ஸ்ட் மில்க் கிடைக்கவில்லை.

Condensed Milk Substitutes

ஆனால், அருந்தியே ஆக வேண்டும் என்ற விரும்பினால் என்ன செய்யலாம்? கண்டென்ஸ்ட் மில்க் போன்ற அதே சுவையல்ல, ஆனால் ஏறக்குறைய அது போன்ற தரும் சில பானங்களை வீட்டிலேயே தயாரிக்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பசும்பால்

பசும்பால்

வீட்டில் கிடைக்கும் பசும்பாலை பயன்படுத்தி கண்டென்ஸ்ட் மில்க் செய்யலாம். ஒரு கப்பில் பசும்பால் எடுத்துக்கொண்டு, அதற்கு பாதியளவு சர்க்கரை சேர்க்கவும். இதை பாத்திரத்தில் எடுத்து ஸ்டவ்வில் குறைந்த ஜூவாலையில் சர்க்கரை கரையும்வரையில் சூடாக்கவும். ஆனால், பால் கொதிக்கக்கூடாது.

சர்க்கரை முற்றிலும் கரைந்ததும் இயன்ற அளவு குறைந்த ஜூவாலையில் வைக்கவும். பாத்திரத்தில் இருக்கும் பால் பாதியளவாக வற்றியதும் இறக்கிக்கொள்ளுங்கள். சுவைக்காக இரண்டு தேக்கரண்டி அளவு வெண்ணெய், சில துளிகள் வெனிலா எஸன்ஸ் சேர்த்து கலக்கவும். கண்டென்ஸ்ட் மில்க் ரெடி.

MOST READ: கற்றாழைய கசக்காம எப்படி சாப்பிடறது? யாரெல்லாம் தெரியாம கூட சாப்பிட கூடாது?

பால் பவுடர்

பால் பவுடர்

பால் பவுடரை பயன்படுத்தியும் கண்டென்ஸ்ட் மில்க்கை வீட்டில் தயாரிக்கலாம். தேவையான அளவு பால் பவுடர் எடுத்து அதனுடன் நீர் சேர்க்கவும். எந்த அளவுக்கு அடர்த்தி வேண்டுமோ அவ்வளவு மட்டும் நீர் சேர்த்திடுங்கள். பிறகு கரைக்கப்பட்ட பால் பவுடருடன் சர்க்கரை சேர்த்து, மேலே கூறப்பட்ட விதத்தில் ஸ்டவ்வில் சூடாக்கவும். இறக்கிய பின்னர், வெண்ணெய் மற்றும் வெனிலா எஸன்ஸ் சேர்த்து பருகவும்.

தாவர பால்

தாவர பால்

பசும்பால், பால் பவுடர் எதுவும் இல்லாமல் கண்டன்ஸ்ட் மில்க் தயாரிக்க இயலாதா? வாதுமைகொட்டை, சோயாபீன்ஸ், ஓட்ஸ், தேங்காய் இவற்றிலிருந்து எடுக்கப்படும் பாலை பயன்படுத்தியும் கண்டென்ஸ்ட் மில்க் தயாரிக்கலாம். இவற்றில் எது வேண்டுமோ அந்தப் பாலை எடுத்துக் கொள்ளுங்கள். பால் ஒரு கப் என்றால், அதே அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளுங்கள்.

இதை மற்ற இரண்டையும் சூடாக்கியது போல், ஸ்டவ்வில் சூடுபடுத்த வேண்டும். ஒரு தேக்கரண்டி சோளமாவு எடுத்து சிறிது தண்ணீர் சேர்த்து பசைபோல கலக்கவும். வற்றிய பாலுடன், பசைபோன்ற சோளமாவை சேர்த்து, பால் அடர்த்தியாகும் வரைக்கும் நன்றாக கலக்கி பரிமாறவும்.

MOST READ: இன்று தட்சிணாமூர்த்திக்கு சுண்டல் மாலை போட வேண்டிய ராசிக்காரர்கள் யார்?

தேங்காய் கிரீம்

தேங்காய் கிரீம்

கண்டென்ஸ்ட் மில்க்குக்கு பதிலாக கோகோநெட் கிரீம் எனப்படும் தேங்காய் கிரீமை பயன்படுத்தலாம். தேங்காய் கிரீம், தேங்காய் பாலுடன் அடர்த்தியானது. நான்கு பங்கு தேங்காய் துருவல்களை ஒரு பங்கு நீர் சேர்த்து தேங்காய் கிரீம் தயாரிக்கப்படுகிறது. இதனுடன் ருசிக்கு சர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்.

இதில் ஏதாவது ஒருமுறையில் பானம் தயாரித்து கண்டென்ஸ்ட் மில்க் போன்ற சுவையை என்ஜாய் பண்ணுங்க!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Condensed Milk Substitutes

Condensed milk substitutes may not possess the exact same flavor as the original, but they can do in a pinch! Sweet and creamy condensed milk is often the ingredient that makes a dessert stand out.
Story first published: Thursday, May 16, 2019, 17:26 [IST]
Desktop Bottom Promotion