For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இப்படிப்பட்ட முளைக்கட்டிய தானியங்களை சாப்பிடுவது உங்கள் உடலில் பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் தெரியுமா

தானியங்களை இரவு முழுவதும் ஊறவைப்பதன் மூலம் அதனை முளைக்கட்டிய பயிராக மாற்றலாம். இந்த தானியங்கள் கொஞ்சம் இனிப்பு மற்றும் சத்தான சுவை கொண்டவை.

|

நமது ஆரோக்கிய வாழ்விற்கு மிகவும் முக்கியமானது ஆரோக்கிய உணவுகள்தான். வேகமாக நகர்ந்து வரும் இந்த வாழ்க்கை முறையில் ஆரோக்கியமாக இருப்பதே பெரும் சவாலாக மாறிவிட்டது. கடினமான பணிகளுக்கிடையில் ஓய்வு எடுப்பதே மிகவும் அரிதான ஒன்றாக மாறிவிட்டது.

Are sprouted grains healthy?

போதுமான உடற்பயிற்சியும், சீரான உணவுமுறையும் நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் அவசியமானதாகும். நமக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நாம் சாப்பிடும் உணவுகளில் இருந்துதான் கிடைக்கிறது. முளைகட்டிய பயிர்கள் நமக்கு ஆரோக்கியம் வழங்குவதில் முக்கியப்பங்கு வகிக்கிறது. இந்த பதிவில் முளைகட்டிய தானியங்கள் நமது ஆரோக்கியத்திற்கு எப்படி உதவுகிறது என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முளைகட்டிய தானியங்கள் என்றால் என்ன?

முளைகட்டிய தானியங்கள் என்றால் என்ன?

நமது அன்றாட உணவுகளில் பருப்புகள், பயிறுகள் போன்றவற்றை சுவைக்காகவும், ஆரோக்கியத்திற்காகவும் சேர்த்து கொண்டுதான் இருக்கிறோம். தானியங்களை இரவு முழுவதும் ஊறவைப்பதன் மூலம் அதனை முளைக்கட்டிய பயிராக மாற்றலாம். இந்த தானியங்கள் கொஞ்சம் இனிப்பு மற்றும் சத்தான சுவை கொண்டவை. உங்கள் தினசரி உணவில் முளைக்கட்டிய தானியங்களை ஏன் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

 ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

இயற்கையின் நன்மையால் செறிவூட்டப்பட்ட, முளைக்கட்டிய தானியங்களில் புரோட்டீன்கள், நார்ச்சத்துக்கள், ஆன்டி ஆக்சிடின்ட்கள், வைட்டமின் பி, வைட்டமின் சி மற்றும் போலேட்கள் உள்ளது. இதன் முக்கியமான நன்மைகளில் ஒன்று இதனை பல்வேறு வடிவங்களில் நாம் சேர்த்துக்கொள்ளலாம். எடையை குறைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு இது மிகச்சிறந்த உணவாகும்.

MOST READ:மாலை நேரத்தில் நகம் வெட்டக்கூடாது என்று நம் முன்னோர்கள் கூறியதற்கான உண்மையான காரணம் என்ன தெரியுமா?

 குறைவான கார்போஹைட்ரேட்டுகள்

குறைவான கார்போஹைட்ரேட்டுகள்

முளைக்கட்டிய தானியங்களில் கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக இருப்பதோடு மாவுச்சத்துக்களும் குறைவாக உள்ளது. இதனால் இது உயர் இரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கு சிறந்த உணவாக உள்ளது. மேலும் இதில் புரதச்சத்துக்கள் மற்ற உணவுகளை விட அதிகமாக உள்ளது.

செரிமானம்

செரிமானம்

முளைக்கட்டிய பயிர்கள் எளிதில் செரிமானம் அடையக்கூடும். இதற்கு காரணம் இதில் இருக்கும் என்சைம்கள் ஸ்டார்ச் கார்போஹைட்ரேட்டுகளை சிறிய மூலக்கூறுகளாக உடைக்கிறது. இதனால் இவை எளிதில் ஜீரணமடைகிறது.

 மலச்சிக்கல்

மலச்சிக்கல்

முளைக்கட்டிய பயிர்களில் அதிகளவு நார்ச்சத்துக்கள் உள்ளது இதனால் இது இயற்கை மலமிலக்கியாக செயல்படுகிறது. சொல்லப்போனால் இதில் இருக்கும் நார்ச்சத்துக்கள் மலச்சிக்கலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறந்த உணவாக இதனை மாற்றுகிறது.

MOST READ:இந்த ராசிக்காரங்க உங்க ரகசியங்களை வைச்சே உங்களுக்கு ஆப்பு வைப்பாங்களாம்... ஜாக்கிரதையா இருங்க...

பக்க விளைவுகள்

பக்க விளைவுகள்

தரமற்ற முளைக்கட்டிய பயிர்கள் நமது உடலில் சில பாக்டீரியா மற்றும் வைரஸ் தாக்குதல்களை ஏற்படுத்தலாம். இது போன்ற முளைக்கட்டிய எடுத்துக்கொள்ளும் போது அது காய்ச்சல், வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தலாம். அதேபோல தவறான இடத்தில் வளர்ந்த தானியங்களை பயன்படுத்தும்போது அது பல மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Are sprouted grains healthy?

Are sprouted grains, healthy or not?.
Story first published: Saturday, June 29, 2019, 17:55 [IST]
Desktop Bottom Promotion