For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பண்டைய கால மருத்துவ நூலான சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் அற்புத பலன்கள் என்ன தெரியுமா?

ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட நோய் தீர்க்கும் ஆய்வறிக்கைதான் சரகா சம்ஹிதா.

|

அனைத்து ஆராய்ச்சியாளர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விஷயம் வெங்காயம் 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகிறது என்பதாகும். வெங்காயம் வெவ்வேறு பிராந்தியங்களில் வெவ்வேறு பெயர்களில் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பயிரிடப்பட்டு வருகிறது. இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தும் ஒரு பொருளாக வெங்காயம் மாறிவிட்டது.

Ancient health secrets of Onion as mentioned in Charaka Samhita

ஆறாம் நூற்றாண்டில் இந்தியாவில் பயன்படுத்தப்பட்ட நோய் தீர்க்கும் ஆய்வறிக்கைதான் சரகா சம்ஹிதா. அதின்படி வெங்காயம் ஒரு டையூரிடிக் என்றும், செரிமானத்திற்கு சிறந்தது என்றும், இதயம், கண்கள் மற்றும் மூட்டுகளுக்கு சிறந்தது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த பதிவில் சரகா சம்ஹிதாவில் கூறியுள்ள வெங்காயத்தின் பலன்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெங்காயம்

வெங்காயம்

வெங்காயம் பொதுவாக வெவ்வேறு உணவு தயாரிப்புகளில் பயன்படுத்தப்படுகிறது. இந்த உலகத்தில் இருக்கும் அனைத்து வீடுகளின் சமையலறையிலும் வெங்காயம் கண்டிப்பாக இருக்கும். வெங்காயம் உணவின் சுவைக்காக மட்டும் பயன்படுத்துவதல்ல, அதில் பல ஆரோக்கிய நன்மைகளும் நிறைந்துள்ளது.

உடல் பகுப்பாய்வு

உடல் பகுப்பாய்வு

குறைந்த கலோரி கொண்ட இந்த பொருளில் வெவ்வேறு ஊட்டச்சத்துக்கள், தாதுக்கள், வைட்டமின்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் நிறைந்துள்ளன. அதனால் இது பல உடல்நல பிரச்சினைகளுக்கு தீர்வாக அமைகிறது. வெங்காயம் உங்கள் உடலின் பல்வேறு பிரச்சினைகளை எப்படி தீர்க்கிறது என்று மேற்கொண்டு பார்க்கலாம்.

காது அடைப்பு

காது அடைப்பு

முதலில், வெங்காயத்தின் மென்மையான மையத்தை ஒரு துணியால் அகற்றவும். பின்னர் காது மடலின் ஆரம்பத்தில் இதனை வைக்கவும். அதன்பின் வெங்காயத்தை இரவு முழுவதும் காதில் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். இது காதில் இருக்கும் அடைப்புகளை வெளியேற்றும் எளிய வழியாகும்.

MOST READ: உங்க வீட்ல நீங்க எத்தனையாவது குழந்தைனு சொல்லுங்க... உங்கள பத்தின ரகசியங்கள நாங்க சொல்றோம்...!

தீக்காயங்கள்

தீக்காயங்கள்

உங்கள் உடலில் தீக்காயங்கள் உள்ளதா? வெங்காயத்தை இரண்டாக வெட்டி அதனை பாதிக்கப்பட்ட இடத்தில் வைக்கவும். இது விரைவில் உங்களின் வலியை குறைக்கும். மேலும் எரிச்சலை குணப்படுத்தும்.

பூச்சிக் கடிகள்

பூச்சிக் கடிகள்

பூச்சிக் கடிகள் பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். குளவி அல்லது தேனீ கடித்து விட்டால் சருமத்தில் இருக்கும் கொடுக்கை முதலில் எடுத்துவிடுங்கள். அதனை எடுத்தவுடன் வெங்கயாத்தை நசுக்கி அந்த இடத்தில் வைக்கவும். சில நிமிடங்கள் அதனை அப்படியே வைக்கவும். வலி விரைவில் குறையும்.

அதிக உடல் வெப்பநிலை

அதிக உடல் வெப்பநிலை

ஒருவருக்கு காய்ச்சல் இருந்தால், அவர்களின் உடல் வழக்கத்திற்கு மாறாக அதிக வெப்பநிலையுடன் இருக்கும். இதனை குறைப்பதற்காக சாக்ஸில் வெங்காயத் துண்டுகளை போட்டு காலில் வைப்பது பல நூற்றாண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் முறையாகும். இது உங்கள் வெப்பநிலையை விரைவில் சகஜ நிலைக்கு கொண்டுவரும்.

MOST READ: சாஸ்திரங்கள் கூறும் ஒன்பது வகையான பெண்கள் இவர்கள்தான்... எந்த வகை பொண்ணுங்க நல்லவங்க தெரியுமா?

நச்சுக்களை நீக்கும்

நச்சுக்களை நீக்கும்

வெங்காயத்தில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுக்களை அகற்றுவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிறந்த ஆரோக்கியத்திற்கு இந்த ஊட்டச்சத்து அதிகமுள்ள உணவை உட்கொள்வது அவசியமாகும்.

சிறுநீர் பாதை தோற்று

சிறுநீர் பாதை தோற்று

தண்ணீர் நிரம்பிய ஒரு பாத்திரத்தில் வெங்காயத்தை போட்டு கொதிக்க வைக்கவும், பின்னர் நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும். பின்னர் இதனை வடிகட்டி ஆறியபின் குடிக்கவும். இதில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் சிறுநீர் கழிப்பதில் ஏற்படும் எரிச்சல் உணர்வை கட்டுப்படுத்தும்.

சுவாசப் பிரச்சினைகள்

சுவாசப் பிரச்சினைகள்

வெங்காயச்சாறு மற்றும் தேனை சரியான அளவில் கலந்து கொண்டு அதனை தினமும் மூன்று அல்லது நான்கு ஸ்பூன் குடிக்கவும். இது சளியை குணப்படுத்துவதோடு மேலும் அது உருவாவதையும் தடுக்கிறது. இது பொதுவாக ஜலதோஷத்திற்கு எதிரான சிறந்த சிகிச்சைகளில் ஒன்றாகும்.

பாலியல் ஆற்றல்

பாலியல் ஆற்றல்

ஆற்றலை அதிகரிப்பதிலும், படுக்கையில் சிறப்பாக செய்லபட உதவுவதிலும் பூண்டுக்கு அடுத்த இடத்தில் வெங்காயம் உள்ளது. இதற்கு மற்ற வெங்காயங்களை காட்டிலும் வெள்ளை வெங்காயம் சிறப்பான பலன்களை வழங்கும்.

MOST READ: உங்களை சுற்றியிருப்பவர்களை உங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள இந்த உளவியல் தந்திரங்களே போதும்...!

இரத்த அழுத்தம்

இரத்த அழுத்தம்

சமைத்த அல்லது சமைக்காத வெங்காயத்தை சாப்பிடுவது உங்களின் இரத்த அழுத்தத்தை தன்னிச்சையாக குறைக்க உதவும். மேலும் இரத்தம் உறைவதை தடுக்கிறது, இரத்தத்தில் இருக்கும் பலவீனமான கொழுப்புகளை அழிக்கிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Ancient health secrets of Onion as mentioned in Charaka Samhita

Here are the health benefits of onion as mentioned in Charaka Samhita.
Story first published: Tuesday, July 16, 2019, 17:42 [IST]
Desktop Bottom Promotion