For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பார்க்கதான் சின்ன பழம்... இதுக்குள்ள இருக்கிற விஷயம் தெரிஞ்சா தினம் சாப்பிட ஆரம்பிச்சிடுவீங்க...

|

கும்குவாட் பழங்கள் மிகச் சிறிய வடிவத்தில் ஆரஞ்சு நிறத்தில் பளபளவென காணப்படும். அதனாலயே இதை தங்க ஆரஞ்சு என்று அழைக்கின்றனர். ஆலிவ் விதை அளவிலேயான கும்குவாட் பழம் அள்ளிக் கொடுக்கும் நன்மைகள் ஏராளம்.

Kumquats

சீரண சக்திக்கு, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, சருமழகிற்கு, பற்களுக்கு மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு என்று நிறைய வழிகளில் பயன்படுகிறது. டயாபெட்டீஸ், கொலஸ்ட்ராலை குறைத்தல், எலும்புகளின் வலிமைக்கு மற்றும் நரம்பு ஆரோக்கியத்திற்கு என்று ஏகப்பட்ட பலன்களை தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கும்குவாட் என்றால் என்ன?

கும்குவாட் என்றால் என்ன?

குமுவேட்ஸ் (சிட்ரஸ் ஜபோனிகா) ருடேசே குடும்பத்தில் ஒரு சிறிய மரத்தின் பழங்கள். இந்த சிட்ரஸ் வகை பழங்கள் பார்ப்பதற்கு உள்ளேயும் வெளியேயும் ஆரஞ்சு போன்ற தோற்றமளிக்கிறது. இந்த மரங்கள் ஆசிய பசிபிக் பகுதிகளில் அதிகளவு காணப்படுகிறது. 1000 வருடங்களாக இந்த மரம் இருக்கிறது.

நிறைய கும்குவாட் பழங்கள் இருந்தாலும் வட்ட வடிவில் சிறிய ஆரஞ்சு பழங்கள் புகழ் பெற்றது. இதன் இனிப்பு சுவை காரணமாக அலங்கரிக்க, காக்டெய்ல், ஜாம், ஜெல்லி, பதப்படுத்தப்பட்ட உணவு, மிட்டாய்கள், இனிப்பு வகைகள் போன்றவற்றில பயன்படுகிறது.

MOST READ: இந்த ரெண்டு ராசியும் பணம், பதவி எல்லாத்துலயுமே டாப் தான்ப்பா... அப்ப உங்க ராசி?

மதுபானம்

மதுபானம்

இந்த பழங்களில் இருந்து பலவகையான மது பானங்கள் தயாரிக்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் பல ஆண்டுகளாக தொண்டை புண், சுவாச பிரச்சினை போன்றவற்றிற்கும் பயன்படுகிறது. இதன் ஊட்டச்சத்துக்கள் தன்மையால் உலகளவில் மருத்துவ துறைகளிலும் பயன்படுகிறது.

சீரண சக்தியை அதிகரித்தல்

சீரண சக்தியை அதிகரித்தல்

இந்த பழம் சீரண சக்தியை மேம்படுத்துகிறது. 8 கும்குவாட் பழங்களில் 10 கிராம் நார்ச்சத்து உள்ளது. இதனால் இதை ஒரு கையளவு கூட நீங்கள் தாராளமாக சாப்பிடலாம். இது நமது குடலிறக்கத்தை சரி செய்து சீரண சக்தியை சரி செய்கிறது. இதனால் மலச்சிக்கல், வாயுத் தொல்லை, வயிறு வீக்கம், வலி போன்ற தொல்லைகள் இனி வராது. மேலும் ஊட்டச்சத்து பற்றாக்குறையை போக்கவும் உதவுகிறது. இதனால் குடல் அழற்சி ஏற்படாமல் தடுக்கலாம்.

டயாபெட்டீஸ்

டயாபெட்டீஸ்

இந்த பழத்தில் உள்ள ப்ளோனாய்டுகள் இரத்தத்தில் உள்ள லிப்பிட் அளவை குறைக்கும் என்று ஆராய்ச்சி தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை சீனாவில் ஷேங்ஷா என்ற பல்கலைக்கழகம் எலிகளின் மீது நடத்தி வெளியிட்டது. அதுமட்டுமல்லாமல் மிச்சிகன் மாநில யுனிவர்சிட்டி கருத்துப் படி குளிர்கால உணவில் இந்த பழங்களையும் சேர்த்துக் கொள்ளுங்கள். குறைந்த சர்க்கரை அளவு, குறைந்த சோடியம், 0 கொலஸ்ட்ரால், 0.1கிராம் கொழுப்பு இதனுடன் நார்ச்சத்தும் இருப்பதால் டைப் 1&2 டயாபெட்டீஸ்க்கு மிகவும் சிறந்தது.

MOST READ: ஜோடின்னா இப்படிதான் இருக்கணும்... கல்யாணத்துல இவங்க செஞ்ச காரியத்த பாத்திங்களா?

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல்

ஸ்விட்சர்லாந்தில் நடத்திய ஆராய்ச்சி படி இந்த பழத்தில் அதிகளவு விட்டமின் சி உள்ளது. இந்த விட்டமின் சி ஒன்னே போதும் நம் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்து விடலாம். இது ஒரு பயோசிந்தடிக் என்சைம் மாதிரி செயல்படுகிறது. அதே மாதிரி புதிய நோயெதிர்ப்பு செல்களை உருவாக்கி பாக்டீரியா, பூஞ்சை, வைரல் தொற்று களிலிருந்து உடலை காக்கிறது. விட்டமின் சி பற்றாக்குறை இருந்தால் நம் உடலை பாதுகாப்பாக வைக்க முடியாது. எனவே இந்த பழங்களை உணவில் சேர்ப்பது நல்லது.

சரும ஆரோக்கியம்

சரும ஆரோக்கியம்

இதிலுள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் மற்றும் விட்டமின் சி சூரிய ஒளியால் உண்டாகும் சரும புற்று நோய், சுருக்கங்கள், ஏஜ் ஸ்பாட்ஸ், கடினமான சருமம் போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது. எனவே இதை சாப்பிட்டு வந்தால் நீண்ட காலம் இளமையை தக்கவைக்க முடியும்.

கண் பராமரிப்பு

கண் பராமரிப்பு

இதில் அதிகளவு விட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டீன் உள்ளது. இந்த இரண்டுமே கண்களுக்கு நல்லது. மாக்குலார் டிஜெனரேசன், கண்புரை போன்றவற்றை குறைக்கிறது.

MOST READ: உங்க ஆணுறுப்பு நார்மலா இருக்கானு தெரிஞ்சிக்கணுமா? இப்படி செஞ்சு பாருங்க...

வலிமையான எலும்புகளுக்கு

வலிமையான எலும்புகளுக்கு

இதன் கால்சியம் சத்து எலும்புகளுக்கு வலிமையை தருகிறது. எனவே வயசான காலத்திலும் உங்கள் எலும்புகள் வலிமையாக இருக்கும்.

உடல் ஆற்றல்

உடல் ஆற்றல்

இதிலுள்ள ரிபோப்ளவின் ஒரு எனர்ஜி கூடம் என்றே கூறலாம். இந்த விட்டமின் நமது உடலுக்கு அதிகப்படியான ஆற்றலை கொடுத்து நம்மை சுறுசுறுப்பாக வைக்கிறது.

உடல் எடை குறைப்பு

உடல் எடை குறைப்பு

கும்குவாட் பழத்தில் நார்ச்சத்து, தண்ணி சத்து மற்றும் கார்போஹைட்ரேட் மற்றும் குறைந்த கலோரிகளைக் கொண்டுள்ளது. எனவே எடை குறைக்க நினைக்கும் மக்களுக்கு இந்த சிறிய பழமே போதும்.

கூந்தல் ஆரோக்கியம்

கூந்தல் ஆரோக்கியம்

இதிலுள்ள விட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், மினரல்கள் போன்றவை கூந்தலுக்கு இயற்கையாகவே போஷாக்கு அளித்து மென்மையான, அடர்த்தியான அழகான கூந்தலை கொடுக்கும்.

MOST READ: வெறும் கிவி பழத்த வெச்சு எப்படி எடையை வேகமாக குறைக்கலாம்? ட்ரை பண்ணுங்க...

பல் ஆரோக்கியம்

பல் ஆரோக்கியம்

கும்குவாட் பழங்களில் கால்சியம், பொட்டாசியம் மற்றும் விட்டமின் சி உள்ளது. இதனால் பற்கள் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது. பற்சொத்தை போன்றவற்றை போக்கி வெண்மையான பற்களை பெறலாம்.

இந்த பழம் அளவில் சிறுத்தாலும் பயனில் மிகப் பெரியது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Amazing Health Benefits Of Kumquats

Kumquats or cumquats are a group of small fruit-bearing trees in the flowering plant family Rutaceae, either forming the genus Fortunella. The edible fruit of the tree resembles an orange (Citrus sinensis) but is much smaller and more oval.
Story first published: Thursday, May 2, 2019, 17:30 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more