For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாதங்களில் துர்நுாற்றம் வீசுதா? இந்த 4 பொருளை மட்டும் சாப்பிடுங்க... துர்நாற்றமே வீசாது...

கால் பாதங்களில் வீசும் துர்நாற்றம் பற்றியும் அதை போக்க சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றியும் இங்கு பார்க்கலாம். அதற்கு சாப்பிட வேண்டிய பொருள்கள் பற்றி இந்த தொகுப்பில் பட்டியலிடப்பட்டுள்ளது.

|

சிலருடைய பாதங்களில் வியர்வையுடன் கூடிய துர்நாற்றம் வீசுவதை நாம் உணர்ந்திருக்கலாம். துர்நாற்றத்துடன் கூடிய வியர்வை வழிதல் கிருமிகளால் உண்டாகும் ஒரு வித பாதிப்பாகும். இந்த பாதிப்பைக் கொண்டவர்கள் மற்றவர்கள் முன்னிலையில் ஒரு வித அசௌகரியத்தை உணர்வார்கள்.

அவர்கள் அருகில் உள்ள மற்றவர்களுக்கு இந்த நிலை ஒரு வித அசௌகரியத்தை உண்டாக்கும். இவற்றை எளிதில் போக்க முடியும். ஆம், நாம் தினசரி குறிப்பிட்ட நான்கு உணவுகளை எடுத்துக் கொள்வதால், இந்த பாத துர்நாற்றத்தைப் போக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாத துர்நாற்றம்

பாத துர்நாற்றம்

ஒவ்வொருவரின் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திலும் அவரவர் சாப்பிடும் உணவு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மையாகும். பல வித உடல் உபாதைகள் மற்றும் ஆரோக்கிய சீர்கேடுகள் நாம் எடுத்துக் கொள்ளும் பானம் மற்றும் உணவின் வழியாக உண்டாகிறது. அதே நேரத்தில் நாம் எடுத்துக் கொள்ளும் சில வகை உணவுகள் மற்றும் பானங்கள் பலவித நோய்களுக்கான எளிய சிகிச்சையாகவும் உள்ளது. ப்ரோமொடோசிஸ் என்று மருத்துவ மொழியில் கூறப்படும் இந்த பாத துர்நாற்றத்தைப் போக்க உதவும் சரியான உணவுகள் என்ன என்பதைப் பற்றி நாம் இந்த பதிவில் காணலாம்.

MOST READ: குதிகால் வீக்கத்தை ரெண்டே நாளில் குறைக்கும் வெல்லம்... எப்படி பயன்படுத்தணும்?

சிட்ரஸ் பழங்கள்

சிட்ரஸ் பழங்கள்

எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற புளிப்பு சுவை கொண்ட பழங்களை தினசரி எடுத்துக் கொள்வதால் உடலில் ஏற்படும் பலவித துர்நாற்றம் மறைய உதவுகிறது. புளிப்பு சுவை கொண்ட பழங்களில் உள்ள அமிலங்கள் உடலில் உள்ள அதிக நீரை வெளியேற்ற உதவுகிறது. மேலும் புளிப்பு சுவை கொண்ட பழங்களில் நார்ச்சத்து அதிக இருப்பதால்,அவை உங்கள் உடல் முழுவதும் மெதுவாக பயணித்து உடல் துர்நாற்றத்தை ஏற்படுத்தும் நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது, என்று நியூயார்க் நகரத்தில் உள்ள ஒரு தோல் மருத்துவரும் மருத்துவ நிபுணருமான டேவிட் கோல்பெர்ட், மகளிர் தினத்தில் தெரிவித்தார். ஆகவே எலுமிச்சை, நாரத்தம் பழம் போன்ற பழங்களை தினசரி எடுத்துக் கொள்ளலாம். மேலும் மற்ற புளிப்பு சுவை கொண்ட பழங்களை தினமும் எடுத்துக் கொள்வதால் உடல் துர்நாற்றத்தில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ள முடியும்.

வெள்ளை மீன்

வெள்ளை மீன்

மீன் சாப்பிடுவதால் உடல் துர்நாற்றம் விலகும் என்பது சற்று வித்தியாசமான செய்தியாக இருக்கலாம். அனால் இது உண்மை. போதா மீன், பண்ணா மீன், நெய் மீன் போன்ற வகை மீன்கள் உடல் முழுவதும் தலை முதல் கால் வரை உண்டாகும் துர்நாற்றத்தைப் போக்க உதவுகின்றன. கன ரக புரதம் உள்ள இறைச்சிகளான மாட்டிறைச்சி மற்றும் இதர வகை சிவப்பு இறைச்சி போன்றவற்றை இரைப்பை குடல் உடைக்கும் விதத்தில் இருந்து இந்த வகை மீன்களை உடைக்கும் விதம் வேறுபடுவதால், இந்த நன்மை நிகழ்கிறது. மேலும் இத்தகைய மாட்டிறைச்சி மற்றும் சிவப்பு இறைச்சி போன்றவை உடல் துர்நாற்றத்தை அதிகரிக்கும் தன்மை உள்ளவையாக உள்ளன.

MOST READ: எவ்வளவு சோதனை வந்தாலும் இந்த ராசிக்காரர் அசால்டா சமாளிப்பாராம்

மூலிகை

மூலிகை

பல மசாலா மற்றும் மூலிகைகள் பச்சையம் என்னும் குளோரோஃபில் கொண்டிருக்கும், இது வியர்வை, தோல் மூலம் உமிழப்படுவதற்கு முன்னர் இயற்கையாகவே நாற்றங்களை சீர்குலைக்கும். பார்ஸ்லி, ஆளி, புதினா, ரோஸ்மேரி, ஜாதிபத்திரி போன்ற மூலிகைகளில் பச்சையம் மற்றும் இதர துர்நாற்றம் அழிக்கும் கூறுகள் அடங்கியுள்ளன. மேலும் அடர் பச்சை நிறமுடைய இலைகள் கொண்ட காய்கறிகளில் பச்சையம் அதிகம் இருப்பதால் அவற்றை அதிகம் உட்கொள்வதால் உங்கள் உடல் முழுவதும் வாசனையுடன் விளங்கும்.

MOST READ: இந்த ஊர்ல திரும்பின பக்கமெல்லாம் ஆணுறுப்பை வரைஞ்சு வெச்சிருக்காங்களே அது எதுக்குனு தெரியுமா?

கடற்சிப்பிகள்

கடற்சிப்பிகள்

மேலும் ஒரு வித்தியாசமான உணவுப் பொருள் கடல் சிப்பி. உப்பு நிறைந்த கடல் உயிரினமாகிய கடற்சிப்பியை உட்கொள்வதால் உடல் துர்நாற்றம் விலகும் என்பதை நம்ப முடியவில்லையா? ஆம், இதுவும் உண்மைதான். கடற்சிப்பியில் ஜின்க் அதிகம் உள்ளது. இந்த ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக, பாதத்தில் துர்நாற்றம் உண்டாகிறது. கடற்சிப்பியில் இயற்கையாகவே ஜிங்க் சத்து அதிகம் உள்ளது. அதாவது ஒரு 100 கிராம் கடற்சிப்பியில் 78.6மிகி அளவு (தினசரி பரிந்துரைப்படும் அளவில் 524%) ஜிங்க் சத்து உள்ளது. நண்டு, கடல் நண்டு, கோதுமை முளை, டார்க் சாக்லேட் போன்ற உணவுகளில் கூட ஜிங்க் சத்து அதிகம் உள்ளது.

ஒருவேளை மேலே கூறிய உணவுப் பட்டியல் பாத துர்நாற்றத்தைப் போக்குமா என்பது குறித்த சந்தேகம் உணகளுக்கு இருந்தால், இயற்கை முறையில் உங்கள் பாதங்களை நீரில் ஊற வைத்து அடிக்கடி கழுவி வரலாம். தினமும் உங்கள் காலணி மற்றும் காலுறைகளை மாற்றுவதால், தொடர்ந்து உங்கள் கால்களை அடிக்கடி சுத்தம் செய்வதால் இந்த பாதிப்பில் இருந்து விடுபட முடியும். முக்கியமாக ஒரு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தை மேற்கொள்வதால் விரைவில் இந்த பாதிப்பில் இருந்து வெளிவர முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

4 Foods That Fight Foot Odor

many diseases and health conditions can be treated by ingesting the right kinds of food and beverages. But just what are the proper foods to eat in order to help banish stinky feet
Story first published: Saturday, February 23, 2019, 13:29 [IST]
Desktop Bottom Promotion