Latest Updates
-
தென்னிந்தியாவின் சுல்தான் என்று அழைக்கப்பட்ட வலிமையான அரசர் யார் தெரியுமா? -
மட்டன் வாங்குனா.. இப்படி ஒருவாட்டி கிராமத்து ஸ்டைலில் செஞ்சு சாப்பிடுங்க.. தாறுமாறா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 21 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப சந்தோஷமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (21 June 2026-27 June 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்கு அதிர்ஷ்டமா இருக்கப்போகுது..! -
உங்க ஸ்கின் டைப் சொல்லுங்க.. அரிசி மாவு வெச்சு எப்படி ஃபேஸ் பேக் போடுறது-ன்னு சொல்றோம்.. -
சர்க்கரைவள்ளிக் கிழங்கு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இப்படி ஸ்நாக்ஸ் செய்யுங்க.. ருசியானதும், சத்தானதும் கூட.. -
Father's Day 2026:இந்த 4 ராசிக்காரங்க சிறந்த தந்தையாக இருப்பதோடு, பிள்ளைகளுக்கு ரோல்மாடலாகவும் இருப்பாங்களாம்! -
முட்டைக்கோஸை இப்படி ஒருடைம் கூட்டு செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட விரும்பி சாப்பிடுவாங்க... -
International Yoga Day 2026: தினமும் யோகா செய்வதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் தெரியுமா? -
புதன் பெயர்ச்சியால் ஜூன் 22 முதல் இந்த 4 ராசிக்காரங்க பண மழையில் நனையப்போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா?
வெள்ளை, பிரௌன், பச்சை முட்டைகளில் உள்ள வித்தியாசம் என்ன? எது உடம்புக்கு நல்லது?
வெள்ளை, பிரௌன், க்ரீன் நிற முட்டைகளுக்குள் இருக்கின்ற வேறுபாடுகள் பற்றி இங்கே விளக்கமாகக் காணலாம்.
டிபார்ட்மெண்ட் ஸ்டோர் எனப்படும் பல்பொருள் அங்காடிகள் அல்லது உழவர் சந்தைகளில் உள்ள முட்டை பிரிவை நன்கு கவனித்துப் பார்த்தீர்கள் என்றால், முட்டைகள் வெள்ளை மற்றும் பழுப்பு சில நேரங்களில் பச்சை அல்லது நீல நிற முட்டைகள் என பிரித்து வைக்கப்பட்டிருக்கும்.
ஆனால் தக்காளி, வெண்ணை என சேர்த்து விதவிதமாக சமைத்து அல்லது கேக் போன்ற உணவு பொருட்களாக நமது தட்டிற்கு வரும் போது எந்தவொரு வேறுபாட்டையும் நம்மால் கூறிவிட முடியாது. அப்படியெனில் உண்மையிலேயே விதவிதமாக பல்வேறு நிறங்களில் ஓடுகள் உள்ள முட்டைகளில் என்ன வேறுபாடுகள் உள்ளன?

கலர் முட்டைகள்
இது ஒன்றும் அரிசி அல்லது மாவு போன்றதல்ல. பழுப்பு நிற முட்டைகள் ஒன்றும் அதிக இயற்கையானது அல்ல. வெள்ளை முட்டைகள் பிளீச்சிங் பவுடர் போட்டு வெண்மையாக்கப்படுவதில்லை. நீல-பச்சை நிற முட்டைகளை போல இவையும் முழுவதுமாக இயற்கையானவையே. ஆனால் உண்மையில் அனைத்து கோழி முட்டைகளும் உட்புறம் ஒரே மாதிரி தான் உள்ளன. எனவே ஒரே விதமான பறவைகளின் முட்டைகள் வெவ்வேறு நிறங்களில் இருப்பதற்கு காரணம் என்ன?

ஆய்வுகள்
ஜார்ஜியா பல்கலைகழகத்தின் வளர்ப்புபறவை அறிவியல் பிரிவின் பேராசிரியராக இருக்கும் டாக்டர் . ஜஸ்டின் ப்ளவர் கூறுகையில் , " முட்டையின் வெவ்வேறு நிறங்கள் அல்லது அதன் மீது இருக்கும் புள்ளிகள், அந்த பறவையின் மரபணுவில் இருந்து வருபவை" என்கிறார்.
"அமெரிக்க முட்டை சந்தை வர்த்தகத்தை பெருமளவில் ஈடு செய்யும் லெக்ஹார்ன் கோழிகள் வெள்ளை முட்டைகள் இடும் நிலையில், ஆர்பிண்ட்டன்ஸ் அல்லது ப்ளைமவுத் ராக்ஸ் வகை கோழிகள் பழுப்பு நிற முட்டைகளை இடுகின்றன. அமெரவ்கனா வகை கோழியில் உள்ள நிறமி முட்டையில் ஊடுருவி ஓட்டின் உள்ளும் புறமும் நீல நிறத்தில் உள்ள முட்டைகளை இடச் செய்கின்றன" என்கிறார் ப்ளவர்.

எப்படி கலர் முட்டை இடுகிறது?
குறிப்பிட்ட வகை கோழி வெள்ளை அல்லது வேறு எந்த நிறத்திலான முட்டைகளை இடும் என தெரிந்து கொள்ள வேண்டுமா? அந்த கோழியின் செவிப்பறையை ஆராய்ந்து பாருங்கள். " வெள்ளை நிற செவிப்பறையை கொண்டுள்ள கோழிகள் முட்டை இடுவதற்கு முன்பு முட்டை ஓட்டின் மீது கூடுதல் நிறமிகளை சேர்க்காது. பெரும்பாலும் நிறமில்லாத செவிப்பறையை கொண்ட கோழிகளின் இறகுகளும், முட்டைகளும் வெள்ளை நிறத்தில் இருக்கும். அதே நேரம் வேறு நிற இறகுகள் மற்றும் செவிப்பறையை கொண்ட கோழிகள், அந்தந்த நிற முட்டைகள் இடும்.

காரணங்கள் என்ன?
நிறங்கள் எங்கு இருந்து வருகின்றன? இங்கு தான் எப்படி முட்டைகள் இடப்படுகின்றன என்பதை புரிந்துகொள்வது முக்கியமாகிறது. முட்டையின் கரு என்பதுகோழியின் கருப்பையில் உருவாகிறது. முழுவதும் உருவான கரு, கருப்பையில் இருந்து வெளியேறி, முட்டைத்தூம்பில் சேகரமாகும். கோழியின் இனப்பெருக்க செயல்முறையின் இந்ந பகுதியானது 5 தனித்துவமான தொடர் பிரிவுகளாக பிரிக்கப்பட்டிருக்கும். இவற்றின் வழியே முட்டையின் கரு பயணித்து கடைசியாக வெளி உலகத்திற்கு வரும். இதில் நான்காவதாக இருக்கும் முட்டை ஓட்டு சுரப்பி தான் அதன் நிறத்தை நிர்ணயிக்கிறது. இங்கு தான் கருவை சுற்றி ஓடு உருவாகிறது.

உடைத்து பாருங்கள்
"அனைத்து வித கோழிகளின் ஓடுகளும் வெள்ளை நிற படிகமான கால்சியம் கார்போனேட்-ஆல் ஆனவை. எனவே அனைத்து முட்டைகளும் துவக்கத்தில் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும். முட்டைத் தூம்பில் முட்டைகள் பயணித்து சேகரமாகும் போது தான் மற்ற நிறங்களின் நிறமிகள் சேர்க்கப்படுகின்றன. நீங்கள் பழுப்பு நிற முட்டையை உடைத்து உள்ளே பார்த்தால் அது வெள்ளை நிறத்தில் இருப்பது இதன் காரணமாகத் தான்" என்கிறார் ப்ளவர்.

நிறமிகள்
முட்டைகளின் வெவ்வேறான நிறங்களுக்கு இருவித நிறமிகள் பொறுப்பாகின்றன. பிலிவெர்டின் எனும் நிறமி பச்சை மற்றும் நீல நிறங்களுக்கும், போர்டோபோர்பைரின் எனும் நிறமி சிவப்பு-பழுப்பு நிறங்களுக்கும் காரணமாக உள்ளன.
இதே நிறமி செயல்பாட்டின் காரணமாக அனைத்துவித பறவைகளும் பல்வேறு நிறங்களில் முட்டைகளை இடுகின்றன. அமெரிக்கன் ராபினின் முட்டைகள் பிரபல நீல நிறத்திலும், காமன்மூர்ரே-ன் முத்து போன்ற வடிவமுடைய முட்டைகள் நீல நிறத்தில் பழுப்பு நிற கோடுகளுடனும் காணப்படுகின்றன.

நாட்டுக்கோழி மஞ்சள் முட்டை
நாம் இங்கு நிறம் மற்றும் மரபு பற்றி பேசுவோமேயானால், லெக்ஹார்ன் கோழிகளின் மஞ்சள் நிற முட்டைகள் பற்றி தெரிந்துகொள்ள நிச்சயம் ஆர்வமாக இருப்போம். வீட்டில் உள்ள வளர்ப்பு கோழிகள், சிவப்பு காட்டுக் கோழிகளின் உட்பிரிவு தான் சார்லஸ் டார்வின் கண்டறிந்த பின்னர், 2008ல் நடைப்பெற்ற ஆய்வில் சுவீடன் ஆராய்ச்சியாளர்கள் சாம்பல் நிற காட்டுக் கோழியின் கலப்பினம் தான் மஞ்சள் முட்டை இடும் தற்போதைய கோழிகளின் மரபணுக்களுக்கு அடிப்படை என்பதை கண்டறிந்தனர்.

முட்டைக்குள் முட்டை
ஓ! ஆனால் முட்டைக்குள் முட்டை என்பது தானே இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இது முற்றிலும் மாறுபட்டது. முட்டைத்தூம்பிற்கு வரும் முட்டை எதிர்பாராத விதமாக மீண்டும் பின்னோக்கி சென்று வருவதால் முட்டைக்குள் முட்டை என்பது நிகழ்கிறது.



Click it and Unblock the Notifications
