For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வால்நட்டா? பாதாமா? உண்மையாவே ரெண்டுல எது பெஸ்ட்?

வால்நட்ஸ் மற்றும் பாதாமின் ஆரோக்கிய நன்மைகளை உணர்ந்து எல்லாரும் இப்பொழுது தினசரி கூட தங்கள் டயட்டில் எடுத்துக் கொள்கிறார்கள். ஏன் குழந்தைகளுக்கு கூட ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆக இதைத் தொடர்ந்து தொடக்க தொட

By Suganthi Rajalingam
|

உங்களுக்கு வால்நட், பாதாம் இந்த இரண்டுமே பிடிக்குமா? இதுல்ல எது சிறந்தது எனத் தெரியுமா? நட்ஸ் வகைகளில் மிகவும் சிறந்தது என்றால் அது இந்த வால்நட்ஸ் மற்றும் பாதாம் பருப்பு தான். கொஞ்சம் காலத்திற்கு முன்பு வரை நாம் அதிகமாக பயன்படுத்தியது நிலக்கடலை தான்.

walnut vs almond

ஆனால் இப்பொழுது இந்த பாதாம், வால்நட்ஸ் பயன்படுத்தும் எண்ணிக்கை 10 மடங்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வால்நட்ஸின் நன்மைகளை மக்கள் தற்போது தான் அறிந்து வருகிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
நட்ஸ்

நட்ஸ்

நட்ஸ் வகைகளில் மிகவும் சிறந்தது என்றால் அது இந்த வால்நட்ஸ் மற்றும் பாதாம் பருப்பு தான். கொஞ்சம் காலத்திற்கு முன்பு வரை நாம் அதிகமாக பயன்படுத்தியது நிலக்கடலை தான். ஆனால் இப்பொழுது இந்த பாதாம், வால்நட்ஸ் பயன்படுத்தும் எண்ணிக்கை 10 மடங்கு உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வால்நட்ஸின் நன்மைகளை மக்கள் தற்போது தான் அறிந்து வருகிறார்கள்.

இதன் ஆரோக்கிய நன்மைகளை உணர்ந்து எல்லாரும் இப்பொழுது தினசரி கூட தங்கள் டயட்டில் எடுத்துக் கொள்கிறார்கள். ஏன் குழந்தைகளுக்கு கூட ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் ஆக இதைத் தொடர்ந்து தொடக்க தொடங்கியிருக்கிறார்கள். அந்தளவிற்கு இதன் ஊட்டச்சத்துக்கள் நமது உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. இருப்பினும் இந்த இரண்டில் எது மிகச் சிறந்தது என்று பார்ப்போம்.

உடல் எடை குறைதல்

உடல் எடை குறைதல்

நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் முதலில் தவிர்க்கும் பொருள் இந்த நட்ஸ் வகைகள் தான் இருக்கும். காரணம் இது அதிகமான கொழுப்பு மற்றும் கலோரிகளை கொண்டுள்ளது. ஆனால் ஆராய்ச்சி தகவல்கள் என்ன கூறுகிறது என்றால் உங்கள் உடல் எடையை வெகுவாக குறைக்க நட்ஸ் சாப்பிடுங்கள் என்கின்றனர். காரணம் இது நமது உடலின் மெட்டா பாலிசத்தை அதிகரித்து தேவையற்ற கெட்ட கொழுப்புகளை கரைத்து நமது உடலை கச்சிதமாக வைத்து இருக்க உதவுகிறது.

வால்நட் vs பாதாம்

வால்நட் vs பாதாம்

உடல் எடை குறைப்பு குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டன. இதில் பாதாம் உடல் எடை குறைப்பதற்கு பெரிதும் உதவுகிறது. அதே மாதிரி வால்நட்ஸ் உடல் எடையை அதிகரிப்பதில்லை ஆனால் உடலெங்கும் எடையை குறைக்குமா? என்பதற்கு எந்த ஒரு ஆராய்ச்சி சான்றிதழ்களும் இல்லை எனலாம். எனவே நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால் ஒரு கைப்பிடியளவு பாதாம் கையில் இருந்தாலே போதும் இனி உங்கள் எடை உங்கள் கையில்.

ஆரோக்கியமான மூளை

ஆரோக்கியமான மூளை

எல்லா நட்ஸ் வகைகளும் மூளை ஆரோக்கியத்திற்கு பெரிதும் பயன்படுகிறது. அதிலும் வால்நட்ஸ் மூளை செயல்பாட்டிற்கென்றே பிறந்த ஒன்று எனலாம். காரணம் இதிலுள்ள அதிக ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் மூளை செயல்பாட்டிற்கு பெரிதும் உதவுகிறது.

நிறைய ஆராய்ச்சி தகவல்கள் என்ன சொல்கிறது என்றால் வால்நட்ஸ் சாப்பிட்டவர்களின் மூளை செயல்பாடுகள் ஆரோக்கியமாக உள்ளன என்கின்றனர். எனவே குழந்தைகளுக்கு கூட இதை நீங்கள் கொடுக்கலாம். அவர்களின் மூளை வளர்ச்சிக்கு இது மிகவும் சிறந்தது. எனவே பாதாமை விட மூளை செயல்பாட்டிற்கு வால்நட்ஸ் சிறந்தது.

ஊட்டச்சத்து அளவுகள்

ஊட்டச்சத்து அளவுகள்

வால்நட்ஸ் மற்றும் பாதாம் பருப்பிற்கு இடையே உள்ள ஊட்டச்சத்து அளவுகள்

நார்ச்சத்து.

1 அவுன்ஸ் பாதாம் - 16%

1 அவுன்ஸ் வால்நட் - 8%

புரோட்டீன்

1 அவுன்ஸ் பாதாம் - 13%

1 அவுன்ஸ் வால்நட்ஸ் - 9%

ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள்

1 அவுன்ஸ் பாதாம் - ஒமேகா 3 இல்லை

1 அவுன்ஸ் வால்நட்ஸ் - 2.5 கிராம்

எலக்ரோலைட்

எலக்ரோலைட்

ஒவ்வொரு பாதாம் பருப்பிலும் 4% பொட்டாசியம், 16% மக்னீசியம், 8% கால்சியம் உள்ளது. வால்நட்ஸில் இந்த சத்துக்கள் சற்று குறைவாக காணப்படுகிறது.

விட்டமின் ஈ

விட்டமின் ஈ

பாதாம் பருப்பில் 40% (ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்) விட்டமின் ஈ உள்ளது. அதாவது ஒரு நாளைக்கு தேவையான அளவு உள்ளது. வால்நட்ஸில் 2% மட்டுமே உள்ளது.

ஒப்பீடு

ஒப்பீடு

எனவே மேலே கூறப்பட்டுள்ள ஊட்டச்சத்து அளவுகளை வைத்து பார்க்கும் போது ஒமேகா 3 அளவை கூட மற்ற எல்லா ஊட்டச்சத்து அளவுகளிலும் பாதாம் பருப்பு முன்னிலை வகிக்கிறது.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

நீங்கள் தினமும் நட்ஸ் எடுத்து வந்தால் உங்கள் இதயமும் ஆரோக்கியமாக இருக்கும் எனத் தெரியுமா. இது 40% இதய நோய்களை தடுக்கிறது. வால்நட் மற்றும் பாதாம் பருப்பில் கெட்ட கொழுப்புச் சத்து குறைவாகவும், ட்ரைக்ளிசரைட்ஸ், இரத்த சர்க்கரை, இரத்த அழுத்தம் மற்றும் அழற்சி பொருள் போன்றவை உள்ளன. வால்நட்ஸில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் அர்த்மியாஸ் போன்ற நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. அதே மாதிரி பாதாம் பருப்பில் உள்ள மக்னீசியமும் இதற்கு பயன்படுகிறது. பாதாமில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. வால்நட்ஸில் ஒமேகா 3 உள்ளது. எனவே இந்த ஒப்பீடை பொருத்ொ வரை இரண்டும் சமநிலையை பெறுகிறது.

டயாபெட்டீஸ்

டயாபெட்டீஸ்

அதிக கொலஸ்ட்ரால், அதிக இரத்த அழுத்தம் மற்றும் டயாபெட்டீஸ் போன்ற சீரற்ற உணவுப் பழக்கத்தால் ஏற்படும் நோய்களை தடுக்க இது பயன்படுகிறது. எனவே நீங்கள் நட்ஸ்யை எடுத்து வந்தால் இந்த மாதிரியான நோய்கள் வராமல் தடுக்க இயலும். இந்த இரண்டு நட்ஸிலும் உள்ள நைட்ரிக் அமிலம் இரத்த குழாய்களை ரிலாக்ஸ் செய்து அதிக இரத்த அழுத்தத்தை குறைக்கிறது. மேலும் உடம்பில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொழுப்புகளை அதிகரிக்கிறது. ஏன் நீரிழிவு நோய்களை கூட தடுக்க உதவுகிறது. இரண்டும் நமக்கு சமமான பலன்களை அள்ளித் தருகிறது.

ஆர்த்ரிட்டீஸ்

ஆர்த்ரிட்டீஸ்

வால்நட்ஸ்யில் அதிகளவு அழற்சி எதிர்ப்பு பொருளான ஒமேகா 3 உள்ளது. இவை அழற்சியால் ஏற்படும் ஆர்த்ரிட்டீஸ் நோயை குணப்படுத்துகிறது. இந்த ஒமேகா 3 ஆர்த்ரிட்டீஸ் நோய்க்கு காரணமான அழற்சி மூலக்கூறுகளை சரி செய்து அதை பழைய நிலைக்கு மாற்றுகிறது. எனவே ஆர்த்ரிட்டீஸ் பொருத்த வரை வால்நட்ஸ் மிகவும் சிறந்தது.

சருமம் மற்றும் கண்

சருமம் மற்றும் கண்

பாதாம் பருப்பில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட்களான விட்டமின் ஈ சருமம் மற்றும் கண் ஆரோக்கியத்திற்கு பெரிதும் உதவுகிறது. பாதாம் பருப்பில் 48% ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளன. இது வால்நட்ஸில் வெறும் 2% மட்டுமே உள்ளது. எனவே உங்கள் அழகான சருமத்திற்கும் கவர்ந்திழுக்கும் கண்களுக்கும் பாதாமே சிறந்தது.

முடிவு

முடிவு

கண்டிப்பாக இரண்டும் நம் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. பாதாம் ஊட்டச்சத்து அளவுகளில் முன்னிலையில் இருந்தாலும் வால்நட்ஸ் சில நோய்களை குணப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே உங்கள் பலனிற்கேற்ப இதை பயன்படுத்தி பயன்பெறுங்கள். வால்நட் மற்றும் பாதாம் இரண்டையும் உங்கள் உணவுப் பழக்கத்தில் சேர்த்து நலமாக வாழுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

walnut vs almonds, which is better?

Which is your favourite nut, walnut or almond? Both of these nutritious nuts have several health benefits. Almonds are always recommended for weight loss, though walnuts have not been proven to increase weight. Walnuts have been associated with brain health. This is because of the high omega 3 content in walnuts, which gives it a better edge in brain performance.
Story first published: Tuesday, June 5, 2018, 16:57 [IST]
Desktop Bottom Promotion