For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முகலாய மன்னர்களின் வெற்றிக்கு காரணம் அவர்களின் இந்த வித்தியாசமான உணவு பழக்கவழக்கங்கள்தான்

முகலாயர்களின் கட்டிடக்கலை, போர்க்கலை பற்றி நாம் அறிந்திருந்தாலும் அவர்களின் உணவுமுறை பற்றி நமக்கு எதுவும் தெரியாது என்பதே உண்மை. அவர்களின் வலிமைக்கும், பலத்திற்கும் காரணமாக இருந்தது அவர்களின் ஆரோக்கிய

|

இந்தியாவை பல வம்சத்தினர் ஆண்டனர் அதில் முக்கியமான ஒரு வம்சம் முகலாயர்கள். முகலாயர்கள் பற்றி நாம் அனைவருமே பள்ளி காலங்களில் படித்திருப்போம். இந்தியா முழுவதையும் ஆண்ட முகலாயர்களால் இறுதிவரை தென்னிந்தியாவிற்குள் நுழைய முடியாமல் போனதற்கு காரணம் அவர்களை விட நம் முன்னோர்கள் பலமடங்கு பலம் பொருந்தியவர்களாய் இருந்ததே.

unique food habits of Mughal emperors

தென்னிந்தியாவை தவிர்த்து ஏனைய இந்தியா முழுவதையும் முகலாயர்கள் ஆண்டனர். வடஇந்தியாவில் இருக்கும் மிகப்பெரிய கட்டிடங்களில் பல கட்டிடங்கள் முகலாயர்களால் கட்டப்பட்டதுதான். உலககாதலர்களின் அடையாளமாக கருதப்படும் தாஜ்மஹால் முகலாயர்களின் கட்டிடக்கலையை உலகம் உள்ள வரை தாங்கி நிற்கும். முகலாயர்களின் கட்டிடக்கலை, போர்க்கலை பற்றி நாம் அறிந்திருந்தாலும் அவர்களின் உணவுமுறை பற்றி நமக்கு எதுவும் தெரியாது என்பதே உண்மை. அவர்களின் வலிமைக்கும், பலத்திற்கும் காரணமாக இருந்தது அவர்களின் ஆரோக்கியமான உணவுமுறைதான். அந்த உணவுமுறை பற்றி இங்கு பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முகலாயர் உணவுமுறை

முகலாயர் உணவுமுறை

அவர்கள் நம்பிக்கைக்குரியவர்கள் சாப்பிட்டு உணவு பாதுகாப்பு என்பதை உறுதிசெய்யாத வரை முகலாய மன்னர்கள் சாப்பிடமாட்டார்கள். உணவானது சமைக்கப்பட்டு மன்னருக்கான சமையலறையில் சமைக்கப்பட்டு அடைக்கப்படும். பின்னர் வீரர்களின் பாதுகாப்புடன் உணவு உண்ணும் அறைக்கு எடுத்துவரப்படும். ஒவ்வொருவருக்கும் பரிமாறப்படும் உணவு வகைகளின் எண்ணிக்கை அவர்களின் பதவியை பொறுத்தது. அவர்கள் குடிக்கும் பானங்களை குளிர்விக்க இமயமலைகளில் இருந்து ஐஸ்கட்டிகள் வரவழைக்கப்படும். முகலாயர்கள் உணவு மீது அளவற்ற ஆசை வைத்திருந்தனர். அவர்கள் மூலமே பல உணவுகள் இந்தியா முழுவதும் பரவியது. குறிப்பாக பிரியாணி இந்தியா முழுவதும் பரவ காரணம் முகலாயர்கள்தான்.

அக்பர்

அக்பர்

அக்பர் இந்திய சமையலறையில் பல மாறுதல்களை கொண்டு வந்தார். அதற்கு காரணம் அவர் இந்தியர்களுடன் கொண்டிருந்த திருமண உறவுதான். அவர் வாரத்தின் மூன்று நாட்களில் சைவ உணவுகளை சாப்பிட்டு வந்தார், அவருக்கென இருந்த ப்ரத்யேக சமையலறையில் பன்னீர்தான் முக்கிய பொருளாக இருந்தது. பின்னாளில் அவர் 24 மணி நேரத்திற்கு ஒருமுறைதான் சாப்பிட்டு வந்தார், சைவ உணவிற்கு மாறிய பிறகு அவர் மது அருந்துவதையும் நிறுத்திவிட்டார். மேலும் அவர் கங்கை நீரைத்தான் குடித்தார், இது அனைத்து நோய்களையும் குணமாக்கும் என அவர் நம்பினார்.

ஷாஜகான்

ஷாஜகான்

ஷாஜகான் மசாலாப்பொருட்களை அதிகம் விரும்புபவர், அதேசமயம் யமுனை ஆற்றின் நீரை அதிகம் குடிக்க விரும்பினார், அவருக்காக சமைக்கப்படும் உணவுகள் கூட யமுனை ஆற்றின் நீரில்தான் சமைக்க வேண்டும் என்று கட்டளை இட்டிருந்தார். இவர் அடிக்கடி மது அருந்துபவராகவும் இருந்தார். பழங்கள் சாப்பிடுவதை அதிகம் விரும்பிய ஷாஜகானுக்கு மாம்பழம் என்றால் மிகவும் இஷ்டமாம்.

MOST READ: மரணப்படுக்கையில் இருந்த துரியோதனின் உயிரை பிரியவிடாமல் தடுத்த அந்த மூன்று கேள்விகள்

ஒளரங்கசீப்

ஒளரங்கசீப்

முகலாயர்களில் கடைசி மிகப்பெரிய மன்னனாக விளங்கியவர் ஒளரங்கசீப். கிட்டதட்ட இந்தியா முழுவதையும் ஆண்ட ஒளரங்கசீப் வாழ்நாளில் பெரும்பகுதியை சைவ உணவை உட்கொண்டே வாழ்ந்தார். ருகட்- ஈ-அலமகிரி என்னும் புத்தகம் ஒளரங்கசீப் அவர் மகனுக்கு எழுதிய புத்தகமாகும். அதில் அவர் அரிசி உணவை அதிகம் விரும்பியதாகவும் அதுவும் பெங்காலி அரிசியில் பாதாம் மற்றும் துளசி கொண்டு தயாரிக்கப்பட்ட பிரியாணியை அதிகம் விரும்பியதாக எழுதியுள்ளார்.

ஹுமாயூன்

ஹுமாயூன்

பாபரின் மகனும் அக்பரின் அப்பாவுமான ஹுமாயூன் தன் வாழ்நாளின் பெரும்பகுதியை ஈரானிலேயே கழித்துவிட்டார். அதனால் ஈரானிய உணவுகள் அவரின் சுவைமொட்டுகளில் ஆதிக்கம் செலுத்தியது. அதனால் அவர் இந்தியாவிற்கு ஈரான் உணவுகளை மட்டும் கொண்டுவரவில்லை பெர்சியாவின் உணவுப்பழக்கங்களையும் கொண்டுவந்தார்.

ஜஹாங்கீர்

ஜஹாங்கீர்

ஜஹாங்கீர் மதுஅருந்துவதை அதிகம் விரும்பினார், தினமும் சில டம்ளர் திராட்சை ரசம் குடிப்பார் அதேசமயம் ஒப்பியத்தையும் அதிகம் விரும்பினார். அவர் உணவுகளில் அதிக ஆர்வம் செலுத்தவில்லை. இருப்பினும் யமுனா நதியின் நீரை அதிகம் விரும்பினார். அவர் உண்ணும் உணவுகூட யமுனை ஆற்றின் நீரிலிருந்துதான் தயாரிக்கப்பட்டது.

பாபர்

பாபர்

பாபர் பர்கானா மற்றும் சமர்கண்டின் உணவுகளை தவறவிட்டுவிட்டார் ஆனால் பழங்கள் மற்றும் காய்கறிகளை அங்கிருந்து கொண்டுவர செய்தார். அவர் ஆண்ட இடத்தில குளிர்ந்த நீரோ, நல்ல உணவோ, தூய்மையான காற்றோ இல்லாமல் இருந்தது. அவருக்கு இந்திய உணவுகளில் அதிகம் பிடித்தது இந்திய நதிகளின் மீன்தான். பாபர் திங்கள், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மது அருந்தாமல் இருந்தார்.

MOST READ: பார்ன் உலகில் கேமராவுக்கு பின் நடக்கும் வக்கிரங்கள் - பார்ன் நடிகர் கூறும் பகீர் உண்மைகள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

unique food habits of Mughal emperors

The Mughals loved their food and drinks and introduced some amazing traditions and delicacies to our country.
Desktop Bottom Promotion