For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுதந்திர இந்தியாவின் பாரம்பரிய உணவு பொருட்களும் அவற்றின் எண்ணற்ற பயன்களும்..!

இந்தியர்களை ஆரோக்கியமாக வைத்த பாரம்பரிய உணவு வகைகள் மற்றும் அவற்றின் எண்ணற்ற பயன்கள்.

By Haripriya
|

மனித நாகரிகம் பிறந்த நாள் முதல் எண்ணற்ற பரிணாம வளர்ச்சி நாம் அடைந்துள்ளோம். மனிதனின் அத்தியாவசிய பொருட்களான உணவு, உடை, உறைவிடம் போன்றவையும் பல வகையிலும் மாற்றம் பெற்றே வந்துள்ளது. குறிப்பாக உணவு என்பது மிகவும் முக்கியமான ஒன்றாக என்றுமே கருதப்படுகிறது. ஆனால், இன்று நாம் உண்ணும் இந்த உணவுகளில் எத்தகைய சத்துக்கள் இருக்கிறது என்பதே அதி முக்கியமானது. உண்ணும் உணவில் சத்துக்கள் இல்லையென்றால் அதற்கு மதிப்பே இல்லாமல் போகும்.

Traditional Food Items Of Independence India

ஒருவரின் உடல் ஆரோக்கியமும், வாழ் நாட்களும் அவர் உண்ணும் உணவை அடிப்படையாக வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இத்தகைய பெருமைமிக்க உணவு இன்று ஒரு மிக பெரிய வியாபாரமாக மாறி உள்ளது. ஆனால் நம் முன்னோர்கள் வாழ்ந்த காலத்தில் இப்படிப்பட்ட வியாபார தன்மை இல்லை. அவர்கள் நீண்ட ஆரோக்கியத்துடன் வாழ அவர்களின் உணவே பெரும் பங்கு வகித்தது. அப்படி என்னதான் நம் முன்னோர்கள் தங்களது உணவாக உண்டார்கள் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாரம்பரியமே ஆரோக்கியமானது..!

பாரம்பரியமே ஆரோக்கியமானது..!

நம் முன்னோர்களின் உணவு முறை மிகவும் பாரம்பரியமானது. "உணவே மருந்து" என்றுதான் நாம் அன்று வாழ்ந்தோம். ஆனால் இன்று அந்த நிலை முற்றிலும் மாறுபட்டுள்ளது. கிட்டத்தட்ட "மருந்தே உணவு" என்ற நிலைக்கு நாம் தள்ளப்பட்டு விட்டோம். இத்தகைய நிலை மாற வேண்டுமென்றால் நாம் கட்டாயம் இயற்கை விவசாயத்தை மேற்கொள்ள வேண்டும். இதுதான் இந்த சுதந்திர தினத்தில் நாம் எடுத்து கொள்ளும் முதல் தீர்மானமாக இருக்க வேண்டும்.

ரத்தசோகையின்றி வாழ சாமை...!

ரத்தசோகையின்றி வாழ சாமை...!

நம் முன்னோர்கள் சர்க்கரை நோயின் வாசனை கூட தெரியாமால் வாழ்ந்தார்கள். ஆனால் இன்று நம்மில் முக்கால் வாசி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு இதை சாப்பிட கூடாது, அதை சாப்பிட கூடாது என்ற மிக கடினமான கோட்டுக்குள் வாழ்கிறோம். நம் பாரம்பரிய இந்திய மக்கள் சாமை அரிசியை பெரிதும் பயன்படுத்தினர். இதில் உள்ள நார்சத்துங்கள் சர்க்கரை அளவை சீராக வைக்கும். அத்துடன் நல்ல செரிமானத்தையும் தரும்.

இதயத்திற்கு திணை...!

இதயத்திற்கு திணை...!

வைட்டமின் ஏ, வைட்டமின் பி, புரதம், நார்ச்சத்து, மாவுச்சத்து, பாஸ்பரஸ், போன்ற ஊட்டசத்துக்கள் அதிகம் உள்ள தினை அரிசிதான் அன்று நம் தாத்தா பாட்டியை மிகவும் ஆரோக்கியமான இதயத்துடன் நீண்ட நாள் உயிர் வாழ செய்தது. இன்று நாம் கண்ணாடிகளை 5 வயது முதலே பயன்படுத்த தொடக்கி விடுகின்றோம். ஆனால் அன்று நம் முன்னோர்களை கண்ணாடி என்ற ஒன்றை சற்றும் எட்டி பார்த்ததில்லை. இந்த திணை அரிசி கண் பார்வைக்கு பலம் சேர்க்கும். அத்துடன் தாய்ப்பால் நன்கு சுரக்க, இதனை தாய்மார்களுக்கு கொடுப்பார்கள்.

சிவப்பே சிறப்பு..!

சிவப்பே சிறப்பு..!

அந்த காலத்தில் மக்கள் உடல் ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் உயிர் வாழ்ந்தனர். மாறாக இன்று மிக குறுகிய காலத்திலேயே இறந்து விடுகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்கள் சொல்லலாம். குறிப்பாக, அதிகம் நாம் உண்ணும் அரிசியில் பலவித மாறுபாடுகள் உள்ளது. ஏனெனில் இன்று நாம் உண்ணும் "வெள்ளை அரிசி" உமி, தவிடுகளை முற்றிலுமாக நீக்கி செயற்கை முறையில் தயாரிக்க படுகிறது. ஆனால் அன்றோ, நம் முன்னோர்கள் "கைக்குத்தல் சிவப்பு அரிசியையே" உண்டு மகிழ்ந்தனர். இதில் அதிக ஆன்டி ஆக்ஸிடண்ம்ட்ஸ், இரும்பு சத்து, நார்சத்து, கால்சியம், ஜின்க், மெக்னீசியம் போன்றவை நிறைந்திருந்தது. இதுவே நம் பாரம்பரிய இந்தியர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு சான்று.

தானியங்களின் முதன்மையானவன்...!

தானியங்களின் முதன்மையானவன்...!

மற்ற உணவு வகைகளை காட்டிலும் வரகில் அதிக ஊட்டச்சத்துக்கள் உள்ளது. மக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், கால்சியம், வைட்டமின் பி, காப்பர், இரும்புச்சத்து போன்றவை இதில் அதிகம் உள்ளது. உடல் எடையை சீராக வைக்கவும், சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தவும், ஜீரண பிரச்சினைகளை தீர்க்கவும் இது உதவும். அத்துடன் ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்களுக்கு இது பொருத்தமான உணவு. மாதவிடாய் கோளாறுகள் உள்ள பெண்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

உடல் வலிமைக்கு கம்பு...!

உடல் வலிமைக்கு கம்பு...!

அன்று நம் முன்னோர்கள் அதிக வலிமையுடன் இருந்ததால்தான் பல போராட்டங்களில் கலந்து கொண்டு நமக்கு சுதந்திரம் பெற்று தந்தனர். பல வயதானவர்கள் கூட அதி பலமாக அன்று இருந்தார்கள். ஆனால் இன்று பல இளைஞர்கள் மற்றும் இளைஞிகள் சிறு வயதிலே வலிமையற்று இருக்கின்றனர். இந்த கம்பு அதிக பலனை தர கூடியது. கம்பங்கூழ் உடலின் செயல்பாடுகளை செம்மையாக வைத்து, உடல் உஷ்ணத்தை குறைகிறது. அத்துடன் ரத்தத்தை சுத்தம் செய்யவும் இது உதவும்.

ஊட்டசத்துக்கள் நிறைந்த கேழ்வரகு...

ஊட்டசத்துக்கள் நிறைந்த கேழ்வரகு...

கேழ்வரகு பல நன்மைகளை தனக்குள் கொண்டுள்ளது. ரத்தசோகை, இதய நோய், எலும்புத் தேய்மானம், மலச்சிக்கல், சர்க்கரைநோய் போன்ற நோய்களுக்கு இது ஒரு நல்ல தீர்வாக இருக்கும். நம் முன்னோர்கள் இத்தகைய உணவுகளை சாப்பிட்டதால்தான் எந்த நோய் நொடியும் இல்லாமல் இருந்தார்கள். கேழ்வரகு களி அதிக சத்து கொண்டது. தினமும் காலை உணவாக இதை அந்த காலத்தில் உண்டு மகிழ்ந்தனர்.

ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் கொண்ட குதிரைவாலி...

ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் கொண்ட குதிரைவாலி...

உடலில் ஏற்படும் சிறு சிறு கோளாறுகளை ஏற்படாமல் இது காக்கும். இதில் உள்ள அதிக ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் வெள்ளை ரத்த அணுக்களுக்கு அதிக ஆற்றலை தந்து நோய்களில் இருந்து காப்பாற்றும். இதனால்தான் நம் முன்னோர்கள் அதிக காலம் நோயின்றி வாழ்ந்தார்கள். அத்துடன் வயிற்றுக் கடுப்பு, காய்ச்சல், இடுப்புவலி போன்றவற்றிற்கு குதிரைவாலி கஞ்சி, குதிரைவாலி களி சிறந்த உணவாகவும் மருந்தவும் செயல்படும்.

எது நம் பாதை..?

எது நம் பாதை..?

தற்போது நாம் உண்ணும் எந்தவித உணவிலும் முன்பு இருந்தது போன்று அதிக சத்துக்கள் இருப்பது இல்லை. இதனை சரி செய்யும் கடமை நம் ஒவ்வொருவரின் கைகளிலும்தான் இருக்கிறது. விவசாயத்தை இயற்கையான முறையில் செய்தாலே இவற்றை நாம் மறுபடியும் பெற்று விடலாம். வெளிநாட்டு பொருட்களை தவிர்த்து இயற்கை முறைக்கு என்று நாம் மாறுகிறமோ அன்றுதான் நம்முடைய ஒவ்வொருவருக்கும் உண்மையான சுதந்திர தினமாகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Traditional Food Items Of Independence India

Traditional Indian gastronomy is predominantly a melange of spices and flavours. Akin to its cultural and linguistic diversity, culinary style in India varies from place to place.
Story first published: Tuesday, August 14, 2018, 19:11 [IST]
Desktop Bottom Promotion