Latest Updates
-
ஏப்ரல் மாத இறுதியில் நடக்கும் புதன் பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்.. -
உங்கள் கால் விரலின் நீளம் எவ்வளவு இருக்குனு சொல்லுங்க? உங்களை பற்றிய ரகசியத்தை நாங்க சொல்றோம் -
Vastu Tips: வாஸ்துப்படி, ஆந்தை சிலையை வீட்டின் இந்த இடத்துல வையுங்க.. வீட்டில் பண வரவு அதிகரிக்கும்.. -
தித்திக்கும் கேரளாவின் மாம்பழ பாயாசம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
திருமண வாழ்க்கையில் சிக்கலா? AI சாட்பாட்களிடம் ஆலோசனை கேட்கும் இந்திய தம்பதிகள் - இது ஆபத்தா? -
3 முட்டை, 2 வெங்காயம், 1/2 மூடி தேங்காய் இருந்தா.. சப்பாத்திக்கு இந்த சைடு டிஷ் பண்ணுங்க.. தாறுமாறா இருக்கும். -
டேட்டிங் ஆப் பயன்படுத்துறீங்களா? டெல்லி-NCR-ல் உங்களை குறிவைக்கும் 'ஹனி ட்ராப்' கும்பல் - உஷார்! -
வாஸ்து படி இந்த தவறுகள் உங்கள் வீட்டில் இருந்தால் ராகுவின் சாபம் உங்களை பாடாய்படுத்துமாம் - ஜாக்கிரதை -
உங்க கழுத்து கருப்பா இருக்கா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க... -
பட்டாணி மசாலா சாதம் ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, பிரியாணி மாதிரியே இருக்கும்
பழச்சாறுகள் பற்றி இதுவரை நாம் நம்பிக் கொண்டிருந்த சில பொய்கள் இவைதான்
பழச்சாறுகள் (ஜூஸ்கள்) பற்றி நாம் தவறாகப் புரிந்து வைத்திருக்கும் சில விஷயங்கள் பற்றி இங்கே படித்து தெளிவாகத் தெரிந்து கொள்ளுங்கள்.
நாம் எதிர்கொள்ளும் பல பிரச்சினைகளை ஜூஸ் டயட் பின்பற்றுவதால் தவிர்க்க முடியும். பிரபலங்கள் பல பேரால் கடைப்பிடிக்கப்படும் இந்த பழக்கம், நிறைய நன்மைகள் கொண்டுள்ளது. அதே சமயம் இதை முறையாக கடைபிடிக்காவிட்டால் பல கோளாறுகளும் ஏற்படும்.

நீங்கள் " ஃபேட் சிக் அன்ட் நியர்லி டெட்" பார்த்து இருந்தால் வெறும் ஜூஸ் குடிப்பதால் மட்டுமே உடல் நல குறைகளை சரிசெய்யும் அதிசயத்தை உணர்ந்து இருப்பீர்கள். ஆனால் இந்த ஜூஸ் டயட்டை சரியான முறையில் செய்ய வேண்டும். இந்த ஜீஸ் டயட்டை பற்றிய தெளிவான புரிதலுக்கு தொடர்ந்து படியுங்கள்.

எடை குறைக்கலாம்
ஜூஸ் டயட் பின்பற்றுவதால் நன்றாக எடை குறைக்க முடியும். நீங்கள் ஏற்கனவே ஒல்லியாக இருந்தால் இது ஆபத்தாக மாறிவிடும். எடை குறைப்பதற்காக மட்டும் நீங்கள் ஜூஸ் டயட் மேற்கொண்டால் உங்களுக்கு ஒரு கெட்ட செய்தி. நீங்கள் திரவ உணவு மட்டுமே உண்டு குறைந்த எடை நீங்கள் திட உணவு பொருட்கள் திரும்ப சாப்பிட ஆரம்பிக்கும் போது ஏறிவிடும். உடலின் மெட்டாபோலிக் அளவில் இது மாற்றங்களை ஏற்படுத்தி விடும். இதனால் உடலுக்கு ஒரு நிலையான எடை கிடைக்காது.

என்ன செய்யலாம்?
நீங்கள் நல்ல ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் திரவ டயட் பின்பற்றும் போது உங்களுக்கு பாதிப்புகள் ஏற்படாது. ஆனால் நீங்கள் அதை முறையற்ற முறையில் குறிப்பிட்ட கால அளவையும் தாண்டி செய்யும் போது அது தவறான விளைவுகளை ஏற்படுத்தி விடும். நீங்கள் இந்த திரவ டயட்டை ஏதேனும் ஒரு நோய்க்கு மருந்தாகவோ அல்லது ஆரோக்கியம் அதிகமாக பின்பற்றினால் அதனுடன் பதப்படுத்தப்படாத உடலுக்கு ஏற்ற உணவு வகைகளையும் சேர்த்து கொள்வது சிறந்தது. அல்லது திட உணவுகளுடன் ஊட்டச்சத்து நிறைந்த ஜூஸ்களையும் சேர்த்து கொள்ளவும்.

நச்சுகளை வெளியேற்றும்
பலபேர் ஜூஸ் டயட் பின்பற்றுவதால் உடலில் உள்ள நச்சுகள் வெளியேறும் என்று தவறாக நினைத்து கொண்டு இருக்கிறார்கள். உடலில் உள்ள கிட்னி, கல்லீரல் மற்றும் குடல் இந்த வேலையை சிறப்பாக தானாகவே செய்யும். சரிவிகித ஆரோக்கியமான உணவு பழக்கம், அதிக தண்ணீர் குடிப்பது மற்றும் போதுமான உடற்பயிற்சி செய்வதால் இந்த உறுப்புகளை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும்.

ஜூஸ்களில் இனிப்பு அதிகமாக உள்ளது
உங்களுடைய திரவ டயட்டில் 80% காய்கறிகள் மற்றும் 20% பழங்கள் இருந்தால் நீங்கள் பின்பற்றுவது மிகச்சிறந்த ஒரு டயட். யு. எஸ். டி. ஏ அமைப்பால் இந்த திரவ டயட் பின்பற்றுவதற்கான அட்டவணையே தயாரிக்கப்பட்டுள்ளது. அதனால் உடலுக்கு தேவையான அனைத்து சத்துகளும் போதுமான அளவில் உடலுக்கு கிடைக்கிறதா என உறுதிபடுத்தி கொள்ள முடியும்.

திரவ டயட்டால் அதிக ஊட்டச்சத்து கிடைக்கும்.
சரிவிகித உணவுகளை விட திரவ டயட் பின்பற்றுவதால் அதிகமான ஊட்டச்சத்து கிடைக்கும் என பல மக்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளார்கள். இது முற்றிலும் தவறானது. திரவ டயட் பின்பற்றுவதால் கார்போஹைட்ரேட் சத்துகள் உடலுக்கு போதுமான அளவில் கிடைப்பதில்லை.
இந்த தவறான நம்பிக்கைக்கான காரணம் என்னவென்றால் நம்மில் பல பேர் போதிய காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்துக் கொள்வதில்லை. நிறைய பேர் இதை ஒரு வியாபாரமாக மாற்றி விட்டார்கள். ஆனால் நிஜம் என்னவெனில் நாம் அன்றாட உணவுடன் பழம் மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஜூஸ் குடிப்பதால் உடலுக்கு எல்லா சத்துகள் கிடைத்து நமது உடல் ஆரோக்கியமாக இருக்கும்.

திரவ டயட் இரைப்பைக்கு ஓய்வு தரும்
இது முற்றிலும் தவறானது. நமது இரைப்பைக்கு ஓய்வே தேவையில்லை. ஜார்ஜ் வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் குடல் வல்லுநரான டாக்டர் ஆன்டோனிட்டி சட்லர் திரவ டயட்டை எடுத்துக் கொள்ளும் போது இரைப்பைக்கு வேலை குறைவது உண்மை தான் ஆனால் இது தேவையில்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜூஸ் டயட்டில் இயற்கையான இனிப்பு உள்ளது.
இந்த கால வாழ்க்கை மற்றும் உணவு பழக்கத்தால் அமெரிக்காவில் சுமார் 79 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 2013 ம் ஆண்டில் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் அதிக இனிப்புள்ள பழ
ஜூஸ் அதிகமாக குடிப்பதால் நீரிழிவு நோய் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம் என்று தெரிகிறது. நார்ச்சத்து குறைந்து இந்த பழங்களில் உள்ள இனிப்பு உடலில் அதிகமாகி இன்சுலின் அதிகமாக சுரப்பதால் இது ஏற்படுகிறது. இதனால் தெரிய வந்தது என்னவென்றால் அதிகமாக ஜூஸ் குடிப்பதால் டைப் 2 டயாபட்டிஸ் வருவதற்கு 21% வாய்ப்புகள் உள்ளது. அதிக இனிப்புள்ள ஜூஸ் வகைகளை தவிர்த்து கொண்டால் இந்த பாதிப்பு 7% குறைய வாய்ப்பு உள்ளதாம்.

யார் வேண்டுமானாலும் திரவ டயட் பின்பற்றலாம்
இதுவும் தவறான தகவல். உங்களுக்கு ஏதேனும் உடல் நல கோளாறு இருந்ததால் உதாரணத்திற்கு தைராய்டு அல்லது சிறுநீரக பாதிப்பு உள்ளவர்கள் கண்டிப்பாக இந்த டயட் மேற்கொள்ளும் முன்னர் மருத்துவரிடம் கலந்தாலோசிக்க வேண்டும். பொட்டாசியம் நிறைந்த பழம் மற்றும் காய்கறிகளால் தயாரிக்கப்பட்ட ஜூஸ் குடிப்பதால் கல்லீரல் பிரச்சினை உள்ளவர்களுக்கு பெரிய ஆபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. வார்ஃபரின் போன்ற மருந்து சாப்பிடுபவர்கள் ஸ்பினாச் மற்றும் கேல் ஜூஸ் தவிர்க்க வேண்டும். ஏனென்றால் இதில் விட்டமின் கே அதிகம் இருப்பதால் ஸ்ட்ரோக் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். கேல், கோலார்டு, சோய் மற்றும்
ஸ்பினாச் போன்றவற்றில் குளுக்கோசினோலேட் அதிகம் இருப்பதால் ஹைப்போ - தைராய்டிசம் ஏற்படும் ஆபத்து அதிகம்.



Click it and Unblock the Notifications