For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்க எப்பவும் ஒருவித டென்சன்-ல இருக்கீங்களா? அதிலிருந்து விடுபட இத செய்யுங்க...

இங்கு மனதை அமைதியாக்கும் சில அற்புத உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

இன்று ஏராளமானோர் அதிகப்படியான வேலைப்பளு மற்றும் குடும்பத்தில் உள்ள சிறு சிறு பிரச்சனைகளால் எந்நேரமும் ஒருவித மன அழுத்தம் மற்றும் டென்சனுடனேயே இருக்கிறார்கள். இதனால் சந்தோஷம் இழந்து, எப்போதும் எதையோ யோசித்து மன பாரத்துடன் வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கையில் கஷ்டங்கள் வரத் தான் செய்யும். கஷ்டங்கள் இல்லாத வாழ்வை இவ்வுலகில் எவரும் வாழ்ந்ததில்லை.

Top 12 Mind Relaxing Foods

ஆனால் என்ன தான் மன கஷ்டங்கள் வந்தாலும், அதை சமாளிக்க தெரிந்து வைத்திருக்க வேண்டும். அதற்கு மனதை அமைதியாக்கும் வழிகளைத் தெரிந்து பின்பற்றினால் போதும். மன அழுத்தம் நிறைந்த வாழ்க்கை முறையில் இருந்து விடுதலை கிடைக்க வேண்டுமானால், அதற்கு குறிப்பிட்ட சில உடற்பயிற்சிகளும், அதே சமயம் சில உணவுகளும் பெரிதும் உதவியாக இருக்கும். இவற்றால் உடலில் எண்டோர்பின்களின் அளவு மேம்பட்டு, மன அழுத்தம் குறைந்து ஒருவித ரிலாக்ஸ் கிடைப்பதை நன்கு உணர முடியும்.

இந்த கட்டுரையில் ஒருவரது மன அழுத்தம் மற்றும் டென்சனைக் குறைத்து, ரிலாக்ஸாக்கும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அவற்றைப் படித்து அந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வந்தால், டென்சன் இல்லாத வாழ்க்கையை வாழலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தேன்

தேன்

பலருக்கும் தேன் மருத்துவ குணம் நிறைந்த பொருள் என்பது தெரியும். இந்த தேனை பலர் அன்றாடம் பயன்படுத்தவும் செய்வார்கள். ஆனால் தேன் உடல் மற்றும் மனதை ரிலாக்ஸாக்கும் என்று பலருக்கும் தெரியாது. தேனில் ட்ரிப்டோஃபேன் என்னும் பொருள் அதிகம் உள்ளது. இது மன பதற்றத்தைக் குறைக்கும் மற்றும் நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். மேலும் தேனில் உள்ள அதிகளவிலான பொட்டாசியம், உடல் மற்றும் மூளைக்கு கொடுக்கப்படும் ஒருவித அழுத்தத்தில் இருந்து நிவாரணம் அளிக்கும். பொட்டாசியம் மன அழுத்த ஹார்மோன்களை எதிர்த்தப் போராட உதவும் மற்றும் இதில் உள்ள அமிலம் நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸாக்கும்.

வெஜிடேபிள் சூப்

வெஜிடேபிள் சூப்

நரம்புகளை ரிலாக்ஸ் அடைய செய்யும் உணவுகளுள் சிறப்பான ஒன்று சூப். ஒருவர் அதிக டென்சன் மற்றும் மன அழுத்தத்தில் இருக்கும் போது சூப் குடித்தால், அது உடலில் இருந்து தொற்றுக்களை உண்டாக்கும் கிருமிகள் மற்றும் ஒட்டுண்ணிகளை வெளியேற்ற உதவும். அதிலும் தக்காளி, பச்சை மிளகாய், கேரட், பூண்டு, பசலைக்கீரை, தைம் மற்றும் இதர மசாலாப் பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்பட்ட சூப்பைக் குடிக்க வேண்டும். இதனால் ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியம் மற்றும் மன ஆரோக்கியம் மேம்படும்.

பால்

பால்

உங்கள் டென்சன் மற்றும் மன பதற்றத்தை உடனே குறைக்க வேண்டுமானால், ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பால் குடியுங்கள். வெதுவெதுப்பான பாலில் ட்ரிப்டோஃபேன் என்னும் உட்பொருள் உள்ளது. இது செரடோனின் உற்பத்திக்கு உதவும். செரடோனின் என்பது மனதை சந்தோஷமாகவும், ரிலாக்ஸாகவும் வைத்துக் கொள்ளும் பொருள். வேண்டுமானால் குளிர்ந்த பாலைக் கூட குடிக்கலாம். இதனால் மன அமைதி அதிகரித்து, தேவையில்லாத டென்சனில் இருந்து விடுபடலாம்.

செலரி

செலரி

செலரி கீரை நரம்புகளில் உள்ள டென்சனில் இருந்து விடுவிக்கும். ஊட்டச்சத்து நிபுணர்கள், டென்சனால் ஏற்படும் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க அடிக்கடி செலரி கீரை சாப்பிட சொல்வார்கள். ஏனெனில் இந்த செலரி கீரை இரத்த அழுத்தத்தைக் குறைத்து, உடலுக்கு நல்ல ரிலாக்ஸை வழங்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஆரோக்கியமான உணவுப் பொருளாக கருதப்படும் ஓட்ஸ், பல்வேறு காரணங்களால் உடலுக்கு ரிலாக்ஸை வழங்கும். இதில் உள்ள காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் ட்ரிப்டோஃபேன் உறிஞ்சுவதை மேம்படுத்தி, மூளையில் சுரக்கும் கெமிக்கலான செரடோனின் உற்பத்திக்கு உதவி உடலை ரிலாக்ஸ் அடைய உதவும். மேலும் ஓட்ஸில் உள்ள வைட்டமின் பி6, மன அழுத்தத்தை எதிர்க்கும் வைட்டமின் மற்றும் இந்த வைட்டமின் மெலடோனின் என்னும் ஹார்மோன் உடலுக்கு ரிலாக்ஸ் வழங்கி நல்ல தூக்கத்தைக் கிடைக்க ஆதரவாக இருக்கும்.

மீன்கள்

மீன்கள்

கானாங்கெளுத்தி, சூரை, சால்மன், மத்தி, மற்றும் ஹெர்ரிங் போன்ற மீன்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் ஏராளமாக உள்ளது. இந்த ஒமேகா-3 சேரடோனின் அளவை மேம்படுத்தி, மன அழுத்த ஹார்மோன்களான கார்டிசோல் மற்றும் அட்ரினலைன் என்னும் ஹார்மோன்களின் உற்பத்தியைத் தடுக்கும். அதோடு ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக ஆய்வுகளும் கூறுகின்றன.

வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் உள்ளது. இவை தசைகளை ரிலாக்ஸ் அடையச் செய்யும். ஒருவரது உடலில் தசைகள் ரிலாக்ஸாக இருந்தால், அது உடலை ரிலாக்ஸாக இருக்க ஊக்குவிக்கும். எனவே தான் உடற்பயிற்சி செய்பவர்கள் வாழைப்பழத்தை தினமும் சாப்பிடுவார்கள். மேலும் வாழைப்பழத்தில் ட்ரிப்டோஃபோன் உள்ளது. இது மூளையில் செரடோனினை அதிகம் வெளியிடச் செய்து, மனதை ரிலாக்ஸாக வைக்கும்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் மூளையில் மன அழுத்த அளவைக் குறைக்க உதவும். ஏனெனில் இது மூளையில் செரடோனின், என்டோர்பின் மற்றும் டோபமைன் போன்ற மனதை ரிலாக்ஸாக வைத்திருக்கும் ஹார்மோன்களின் அளவை அதிகம் வெளியிடச் செய்யும். எனவே உங்களுக்கு டென்சன் அதிகம் இருந்தால், அப்போது டார்க் சாக்லேட்டை சுவையுங்கள்.

நட்ஸ் மற்றும் விதைகள்

நட்ஸ் மற்றும் விதைகள்

நட்ஸ்களில் மக்னீசியம், செலினியம், ஜிங்ன், வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் போன்றவை ஏராளமாக உள்ளது. நட்ஸ்களை ஒருவர் அன்றாடம் ஒரு கையளவு சாப்பிட்டு வந்தால், அது மூளையை ரிலாக்ஸாக செயல்படச் செய்து, டென்சன் அளவைக் குறைக்கும். அதிலும் வேர்க்கடலை மற்றும் பூசணிக்காய் விதைகளில் மக்னீசியம் அதிகம் உள்ளது. ஆனால் வேர்க்கடலையில் சோடியத்தின் அளவு அதிகம் உள்ளதால், வேர்க்கடலையை அதிகமாக சாப்பிடுவதைத் தவிர்ப்பதே நல்லது.

முட்டை

முட்டை

பாலைப் போன்றே முட்டையிலும் அமினோ அமிலங்கள் ஏராளமான அளவில் உள்ளது. அதுவும் இதில் உள்ள அமினோ அமிலங்கள் மூளையில் செரடோனின் என்னும் கெமிக்கலை வெளியிடச் செய்து, மனதை ரிலாக்ஸாக இருக்கச் செய்யும். ஆகவே நீங்கள் அதிகம் டென்சனாக கூடாது என்று நினைத்தால், அன்றாடம் ஒரு முட்டையை சாப்பிடுங்கள்.

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்கள்

பெர்ரிப் பழங்களான ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்றவற்றில், மன அழுத்தம் மற்றும் டென்சனைக் குறைக்கும் உட்பொருட்கள் உள்ளது. ஆய்வு ஒன்றில், பெர்ரிப் பழங்களில், அதுவும் ஜோஜி பெர்ரியை சாப்பிட்டால், அது ஒருவரது மனச்சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்க உதவுவதாக தெரிய வந்துள்ளது. ஆகவே பெர்ரிப் பழங்களை அடிக்கடி சாப்பிட்டு, உங்கள் மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலை

கொண்டைக்கடலையில் 71 சதவீதம் அன்றாடம் எடுக்க வேண்டிய ஃபோலேட் அளவு உள்ளது. ஃபோலேட் என்பது வைட்டமின் பி. இது மன அழுத்த ஹார்மோன்களைக் குறைக்க உதவும். ஃபோலேட் செரடோனின் மற்றும் டோபமைன் என்னும் மனநிலையை சிறப்பாக வைக்கும் கெமிக்கலை உற்பத்தி செய்ய உதவும். ஆகவே அடிக்கடி கொண்டைக்கடலையை சமைத்து சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 12 Mind Relaxing Foods

In this article, we are going to talk about 12 foods that relax your nerves and calm your mind.
Story first published: Friday, March 16, 2018, 11:20 [IST]
Desktop Bottom Promotion