For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எந்நேரமும் ரொம்ப களைப்பா இருக்கா? இந்த உணவுகளை சாப்பிடுங்க சரியாயிடும்...

இங்கு எந்நேரமும் சந்திக்கும் உடல் களைப்பைப் போக்கும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

சிலர் எந்நேரமும் மிகுதியான களைப்பை உணர்வார்கள். இப்படி எப்போதும் களைப்பை உணர்வதற்கு பல்வேறு வாழ்க்கை முறை காரணிகள், மருத்துவ நிலைகள் அல்லது மனநிலை பிரச்சனைகள் காரணங்களாக இருக்கலாம். அதில் வாழ்க்கை முறை காரணிகளான அதிகளவு மதுபானம், காப்ஃபைன் அதிகம் குடிப்பது, அதிகளவு உடற்பயிற்சியில் ஈடுபடுவது, மோசமான தூக்கம் மற்றும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கங்கள் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

அமெரிக்காவில் ஐந்தில் ஒருவர் மிகுதியான களைப்பால் அன்றாட செயல்களைக் கூட செய்ய முடியாமல் அவஸ்தைப்படுவதாக அமெரிக்காவில் உள்ள தேசிய சுகாதார நிறுவனம் கூறுகிறது. குறிப்பாக ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக களைப்பால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதோடு களைப்பு உணர்வானது மனநல பிரச்சனைகளான மன இறுக்கம், மன அழுத்தம், பதற்றம் போன்றவற்றாலும் ஏற்படும்.

Top 10 Superfoods to Fight Fatigue

மேலும் குறிப்பிட்ட மருத்துவ நிலைகளான கல்லீரல் செயலிழப்பு, இரத்த சோகை, புற்றுநோய், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், தைராய்டு கோளாறுகள், உடல் பருமன், குறட்டை மற்றும் சர்க்கரை நோய் போன்றவற்றாலும் ஒருவர் மிகுதியான களைப்பை உணரக்கூடும். சரி, இத்தகைய மிகுதியான களைப்பை எப்படி போக்குவது என்று நீங்கள் கேட்கலாம்.

இக்கட்டுரையில் எந்நேரமும் சந்திக்கும் உடல் களைப்பைப் போக்கும் சில உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து உட்கொண்டு, உடல் களைப்பைப் போக்குங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழைப்பழம்

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இந்த பொட்டாசியம் உடலில் உள்ள சர்க்கரையை ஆற்றலாக மாற்றும். வாழைப்பழத்தில் உள்ள பல முக்கிய ஊட்டச்சத்துக்களான பி வைட்டமின்கள், வைட்டமின் சி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் கார்போஹைட்ரேட் போன்றவை களைப்பைப் போக்குவதோடு, உடல் வறட்சியைத் தடுத்துவிடும். ஆகவே தினமும் 1-2 வாழைப்பழத்தை தவறாமல் சாப்பிடுங்கள்.

க்ரீன் டீ

க்ரீன் டீ

ஒரு கப் க்ரீன் டீ, களைப்பை எதிர்க்க உதவுவதோடு, மன அழுத்தம் மற்றும் வேலை சம்பந்தமான களைப்பைப் போக்கும். க்ரீன் டீயில் உள்ள பாலிஃபீனால்கள் மன அழுத்தத்தைக் குறைத்து, உடலில் ஆற்றலை ஊக்குவிக்கும். எனவே நீங்கள் மிகுதியான களைப்பை உணர்வது போல் இருந்தால், தினமும் 2-3 முறை க்ரீன் டீயைக் குடியுங்கள்.

பூசணி விதைகள்

பூசணி விதைகள்

பூசணி விதைகள் களைப்பை எதிர்க்க உதவும். இதில் உயர் தரமான புரோட்டீன், ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின்களான பி1, பி2, பி5 மற்றும் பி6 போன்றவற்றுடன், கனிமச்சத்துக்களான மாங்கனீசு, மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து மற்றும் காப்பர் போன்றவை அதிகம் உள்ளது. இந்த அனைத்து ஊட்டச்சத்துக்களும் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்தி, ஆற்றலை அதிகரித்து, களைப்பிற்கான அறிகுறிகளைப் போக்கும். ஆகவே தினமும் ஒரு கையளவு பூசணி விதைகளை சாப்பிடுங்கள். இதனால் உடலின் ஆற்றல் உடனடியாக அதிகரிக்கும்.

ஓட்ஸ்

ஓட்ஸ்

ஓட்ஸ் கூட ஒருவரது உடல் களைப்பைப் போக்கும். இதில் உள்ள தரமான கார்போஹைட்ரேட்டுகள் உடலில் க்ளைகோஜனாக சேகரிக்கப்படும் மற்றும் இது நாள்முழுவதும் தசைகள் மற்றும் மூளைக்கு எரிபொருளை வழங்கும். மேலும் இதில் உள்ள முக்கிய சத்துக்களான புரோட்டீன், மக்னீசியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் பி1 உடலின் ஆற்றலை மேம்படுத்த உதவும். ஆகவே உடல் களைப்பைப் போக்க காலையில் ஒரு பௌல் ஓட்ஸ் சாப்பிடுங்கள்.

தயிர்

தயிர்

தயிரில் உள்ள புரோட்டீன், கார்போஹைட்ரேட் மற்றும் புரோபயோடிக்குகள், களைப்பிற்கான அறிகுறிகளைப் போக்க உதவும். ஏனெனில் உடல் மற்ற திட உணவுகளை விட தயிரை எளிதில் செயல்முறைப்படுத்தி, உடலுக்கு விரைவில் ஆற்றலைக் கிடைக்கச் செய்கிறது. முக்கியமாக தயிரில் உள்ள புரோபயோடிக்குகள் நாள்பட்ட களைப்பிற்கான அறிகுறிகளைப் போக்க உதவும். எனவே நாள் முழுவதும் சுறுசுறுப்புடன் செயல்பட நினைத்தால், தினமும் ஒரு கப் தயிரை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

தர்பூசணி

தர்பூசணி

வெயில் காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறைய ஆரம்பிக்கும். உடலில் நீர்ச்சத்து குறைந்தால், ஆற்றல் குறைவாக இருக்கும். இதன் விளைவாக மிகுதியான களைப்பை உணரக்கூடும். இந்நிலையில் தர்பூசணியை ஒரு துண்டு சாப்பிட்டால், அதில் உள்ள நீர்ச்சத்து மற்றும் எலக்ட்ரோலைட்டுகள், உடல் வறட்சியைத் தடுத்து, ஆற்றலை அதிகரிக்கும். எனவே உங்கள் உடலின் ஆற்றலை உடனடியாக அதிகரிக்க நினைத்தால், தர்பூசணியை ஒரு பௌல் சாப்பிடுங்கள். இல்லாவிட்டால் ஒரு டம்ளர் தர்பூசணி ஜூஸ் குடியுங்கள்.

வால்நட்ஸ்

வால்நட்ஸ்

வால்நட்ஸ் களைப்பைப் போக்கும் பிரபலமான ஓர் உணவுப் பொருள். இதில் உள்ள ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், களைப்பிற்கான அறிகுறிகளை எளிதில் போக்கும். மேலும் இது மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்க உதவும். மேலும் வால்நட்ஸில் புரோட்டீன் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடலின் ஆற்றலை அதிகரிக்கும். அதோடு இந்த நட்ஸில் மாங்கனீசு, மக்னீசியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, காப்பர் மற்றும் வைட்டமின்கள் போன்றவையும் அதிகம் உள்ளது. ஆகவே தினமும் ஒரு கையளவு வால்நட்ஸை சாப்பிடுங்கள்.

பீன்ஸ்

பீன்ஸ்

பீன்ஸில் நார்ச்சத்து, காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் மற்றும் புரோட்டீன்கள் சரியான விகிதத்தில் உள்ளது. அதோடு, இதில் பொட்டாசியம், மக்னீசியம், பாஸ்பரஸ், காப்பர் மற்றும் இரும்புச்சத்து போன்றவைகளும் உள்ளது. இவ்வளவு சத்துக்கள் அடங்கிய பீன்ஸை சாப்பிட்டால், உடலில் ஆற்றல் அதிகரிப்பதோடு, உடல் களைப்பும் தடுக்கப்படும்.

குடைமிளகாய்

குடைமிளகாய்

குடைமிளகாயில் வைட்டமின் சி ஏராளமாக உள்ளது. இந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் நோயெதிர்ப்பு மண்டலத்தை மேம்படுத்த உதவுவதோடு மட்டுமின்றி, மன அழுத்த ஹார்மோனான கார்டிசோவைக் குறைக்க உதவி, களைப்பைப் போக்கும். அட்ரீனல் சுரப்பியின் ஆரோக்கியத்திற்கு வைட்டமின் சி அத்தியாவசியமானது. ஒருவரது உடலில் வைட்டமின் சி குறைவாக இருந்தால், அவர்கள் மிகுதியான களைப்பை உணர்வார்கள். ஆகவே நீங்கள் மிகுந்த களைப்பை உணர்ந்தால், சில நாட்கள் தொடர்ந்து ஒரு கப் குடைமிளகாயை சாப்பிடுங்கள். அதுவும் சிவப்பு நிற குடைமிளகாயை சாப்பிடுவது தான் மிகவும் நல்லது.

பசலைக்கீரை

பசலைக்கீரை

பசலைக்கீரை மற்றொரு அற்புதமான உடல் களைப்பை எதிர்த்துப் போராட உதவும் உணவுப் பொருளாகும். பசலைக்கீரையில் இரும்புச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. எனவே இதை உட்கொண்டால், அது உடல் செல்களில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும். ஒருவரது உடலில் இரத்த ஒட்டம் சிறப்பாக இருந்தால், அது உடலில் ஆற்றலை சிறப்பாக வைத்துக் கொள்ளும். மேலும் பசலைக்கீரையில் மக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் சி, வைட்டமின் பி போன்றவை ஏராளமாக நிரம்பியுள்ளது.

ஆகவே இத்தகைய பசலைக்கீரையை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வந்தால், உடலுக்கு போதுமான இரும்புச்சத்து கிடைத்து, உடலியக்கம் சிறப்பாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 Superfoods to Fight Fatigue

Fatigue, also known as tiredness, exhaustion, weariness, lethargy and listlessness, is a term used to describe the general feeling of being tired and weak. Here are some superfoods to fight fatigue. Read on...
Desktop Bottom Promotion