For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் சாப்பிட்டுறது எல்லாமே விஷம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..!

|

"இயற்கை விவசாயம் VS மரபணு மாற்றப்பட்ட விதைகள்"- இத கேட்டாலே நம்ம எல்லோருக்கும் நம்மாழ்வார் தான் ஞாபகத்துக்கு வருவார். இயற்கை முறையிலான விவசாயத்தை உலகம் முழுவதும் பரப்ப அரும்பாடுபட்டவர் நம்மாழ்வார். இவரை போன்றே இவரின் மாணவரான நெல் ஜெயராமனும் இதற்காக பல விடாமுயற்சிகளை செய்துள்ளனர்.

நெல் ஜெயராமன் இத்தனை நாள் பாடுபட்ட மரபணு மாற்றப்பட்ட விதைகளால் இவ்வளவு பாதிப்பா..!

இந்த உலகமே மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு மாற துடித்து கொண்டிருக்கும் போது, இவர்கள் மட்டும் ஏன் இயற்கை விவசாயத்தை பற்றி பேச வேண்டும். இவர்கள் போராடிய காரணம் உண்மையில் அவ்வளவு ஆபத்தானதா..? மனித குலத்தையே சாவின் விளிம்பில் தள்ள கூடிய ஆற்றல் உண்மையில் இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளுக்கு உள்ளதா..? இப்படி பல கேள்விகளுக்கு விடையே இந்த பதிவு. வாங்க, தெரிஞ்சிக்கலாம்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கர்ஜிக்கும் உலகம்..!

கர்ஜிக்கும் உலகம்..!

இயற்கை தாயின் சுயத்தை காக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் போராடிய மிக சிலரில் குறிப்பிட்டு சொல்ல கூடியவர்கள் நம்மாழ்வாரும், அவரின் மாணவருமான நெல் ஜெயராமனும் தான்.

இந்த உலகமே மூளை முடுக்கெங்கும் "மரபணு மாற்றப்பட்ட விதைகள்" என கர்ஜிக்க, இவர்கள் இருவர் மட்டும் "இயற்கை முறை விவசாயம்" என முழங்கினர்.

எதற்கிந்த போராட்டம்..!

எதற்கிந்த போராட்டம்..!

தங்களது வாழ்வையே இயற்கைக்காகவும், மக்களுக்காகவும் இவர்கள் இருவரும் அர்பணித்ததற்கு காரணம், மரபணு மாற்றப்பட்ட விதைகளை நமது பாரம்பரிய இயற்கை விவசாயத்தில் கார்ப்பரேட்டுகள் புகுத்தவிட கூடாது என்பதற்காகவே.

இந்த வகை செயற்கை விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக நம் உயிரை குடித்து அடுத்த தலைமுறையையே நோயுடன் வாழ வைக்கும் என்கிற உண்மை உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்..!?

உங்கள் சாப்பாட்டில் என்ன உள்ளது..?

உங்கள் சாப்பாட்டில் என்ன உள்ளது..?

இந்த பதிவை படிக்கும் ஒவ்வொருவருக்கும் இப்போது ஒரு கேள்வி வந்திருக்கும். நாம்ம சாப்பிடுறது இயற்கை உணவா..? இல்ல மரபணு மாற்றப்பட்டதா..? உண்மை என்னவெனில், நாம் இன்று பயன்படுத்தும் பல உணவு பொருட்களில் மரபணு மாற்றம் பெற்ற காய்கறிகளும், பழங்களும் உள்ளன என ஆராய்ச்சிகள் சொல்கிறது.

இதில் கூடவா..?

இதில் கூடவா..?

மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களால் கொள்ளை லாபம் பெற முடியும் என்பதற்காகவே கார்ப்பரேட்டுகள் சந்தையில் இவற்றை விற்கின்றனர். குறிப்பாக நெல், சோளம் போன்ற தானிய வகைகளிலும், உருளைக்கிழங்கு, தக்காளி,பீட்ரூட், ஆரஞ்சு, பப்பாளி, ஆப்பிள் போன்ற பல காய்கனிகளிலும் பெரும்பாலும் மரபணு மாற்றப்பட்டுள்ளதாம்.

MOST READ: தூங்கும்போது வெங்காயத்த இப்படி பக்கத்துல வச்சிட்டு தூங்குங்க.. அப்பறம் பாருங்க என்ன நடக்குதுன்னு...!

செய்வதற்கு காரணம்..?

செய்வதற்கு காரணம்..?

இது போன்ற மரபணு மாற்றப்பட்ட விதைகளால் மிக குறைந்த நன்மைகளே உள்ளன. அதாவது, இவற்றை விவசாயம் செய்வதால் பூச்சிகள் இதனை அண்டாது என்பதாலும், எல்லா கால சூழலிலும் இந்த பயிர்கள் உறுதியாக இருக்கும் என்பதாலும், அதிக உற்பத்தியை பெற முடியும் என்பதாலுமே இவ்வாறு செய்கின்றனர்.

உயிரை குடிக்கும் விதைகள்..!

உயிரை குடிக்கும் விதைகள்..!

அமெரிக்கா போன்ற நாடுகளில் பெரும்பாலும் இந்த மரபணு மாற்றப்பட்ட விதைகளை கொண்டே உணவு உற்பத்தி செய்கின்றனர். ஆனால், இதனால் வரும் விளைவை ஏன் எண்ணி பார்க்க மறுக்கின்றனர். இந்த விதைகள் உணவின் முழு தன்மையையும் முற்றிலுமாக மாற்றம் அடைய செய்து விடும்.

புற்றுநோய் அபாயம்..!

புற்றுநோய் அபாயம்..!

2013 ஆம் ஆண்டு நடத்திய ஆய்வின்படி, மரபணு மாற்றப்பட்ட விதைகளால் புற்றுநோய் ஏற்பட்டு முன்கூட்டியே இறக்க கூடும் என்பதை கண்டறிந்துள்ளனர். மரபணு மாற்றப்பட்ட சோளத்தை எலிகளுக்கு கொடுத்த ஆய்வு செய்த சோதனையில் இது வெட்ட வெளிச்சமாகி உள்ளது.

தோல் வியாதிகள் பல..!

தோல் வியாதிகள் பல..!

பிரபலமான ஹார்வர்ட் பல்கலைக்கழம் செய்த ஆராய்ச்சியில் மரபணு மாற்றப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் தோல் வியாதிகள் வரும் என கூறியுள்ளது.

மேலும் இதன் தாக்கமும், பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

MOST READ: இந்த நாட்களில் துளசி செடியை தொடுவது உங்களுக்கு மரணத்தை உண்டாக்கும்

விதை என்னும் எமன்..!

விதை என்னும் எமன்..!

நீங்கள் தொடர்ந்து இது போன்ற மரபணு மாற்றப்பட்ட உணவுகளை சாப்பிட்டு வந்தால், உங்களின் உடலில் இதன் வீரியம் கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து, பின்னாளில் உயிர் இழப்பை ஏற்படுத்தும். கிட்டத்தட்ட ஒரு ஸ்லோ பாய்சனை போன்றே இது நம் உயிரை உறிஞ்சி கொண்டு இருக்கும்.

Hybrid Vs GMO..!

Hybrid Vs GMO..!

பொதுவாக இரு வகை விதைகள் உண்டு. ஒன்று Hybrid என்கிற கலப்பின விதை. இன்னொன்று GMO(genetically modified organisms) என்கிற மரபணு மாற்றப்பட்ட விதைகள். இவை இரண்டிற்கும் வேறுபாடு உண்டு. கலப்பின விதைகள் எல்லாமே பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால், மரபணு மாற்றப்பட்ட விதைகள் அனைத்துமே அபாயத்தை ஏற்படுத்தும்.

கண்டறிவது கடினம்..!

கண்டறிவது கடினம்..!

மற்ற உணவுகளை போன்றே இந்த மரபணு மாற்றப்பட்ட உணவு பொருட்களும் இருப்பதால் இவற்றை கண்டறிவது மிக கடினமானதாகும். ஆதலால் தான், பலரும் எது இயற்கை உணவுகள், அது மரபணு மாற்றப்பட்ட உணவுகள் என்பதை உணராமலே சாப்பிட்டு வருகின்றனர்.

வியாபார தந்திரம்..!

வியாபார தந்திரம்..!

இன்று ஆர்கானிக் உணவுகள் என்கிற பெயரில் பலர் மக்களை நன்கு ஏமார்த்தி வருகின்றனர். சிலர் இயற்கை என்கிற பெயரில் அதனிலும் கலப்படத்தை சேர்த்தோ (அ) விலையை உயர்த்தியோ வருகின்றனர்.

ஏனெனில், இன்று நாம் இயற்கை உணவை தேட ஆரம்பித்ததால் இவற்றை தவறான முறையிலும் ஒருசிலர் கையில் எடுத்துள்ளனர்.

MOST READ: தினமும் 2 வாழைப்பழங்கள் சாப்பிடுவதால், உடலில் எப்படிப்பட்ட மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா...?

மாற்றம் என்ன..?

மாற்றம் என்ன..?

நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்றோர் எதற்காக பாடுபட்டார்களோ அது நிறைவேற வேண்டுமென்றால், இயற்கை விவசாயத்தை எல்லா விவசாயிகளும் கையில் எடுக்க வேண்டும். நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை பாதுகாக்க அரசாங்கமும், முக்கிய செயல்திட்டங்களை உடனே நடைமுறை படுத்த வேண்டும்.

படிக்கும் மாணவர்களுக்கு விவசாயத்தை தொழிற்கல்வியாக கற்கும் திட்டத்தை அமல் படுத்த வேண்டும்.

இயற்கை விவசாயத்தை காப்போம்..! பூமி தாயை மகிழ்விப்போம்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side Effects Of GMO Foods

Here are some side effects of genetically modified food items.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more