For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலையில பிரேக்ஃபாஸ்ட்டுக்கு பாலும் முட்டையும் சாப்பிடற ஆளா நீங்க... இது உங்களுக்கு தான்...

காலையில் உண்ண சிறந்த பொருள் என்ன? இந்த கேள்விக்கு பதில் ஒரு ஆம்லெட் மற்றும் பால் என்று உடனடியாக மனதில் தோன்றும். இது ஒரு நல்ல ஆரோக்கியமான பழக்கமா, இல்லையா?

|

முட்டை சாப்பிட்ட பிறகு பால் குடிப்பீர்களா? காலையில் உண்ண சிறந்த பொருள் என்ன?

benefits of egg in tamil

இந்த கேள்விக்கு பதில் ஒரு ஆம்லெட் மற்றும் பால் என்று உடனடியாக மனதில் தோன்றும். இது ஒரு நல்ல ஆரோக்கியமான பழக்கமா, இல்லையா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பாலும் முட்டையும்

பாலும் முட்டையும்

இருப்பினும், முட்டை மற்றும் பால் ஒன்றாக சாப்பிட கூடாது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். இதை சேர்த்து உண்ணும்போது உங்கள் உடல் நலத்தைப் பாதிக்கலாம். இது பற்றி மேலும் அறிந்து கொள்ள மேலும் படிக்கவும்!

ஆயுர்வேதம்

ஆயுர்வேதம்

ஆயுர்வேத வீட்டு வைத்தியங்கள் பற்றிய ழுமையான புத்தகம், வசந்த லேடால் எழுதப்பட்டுள்ளது. இதில் முறையற்ற உணவு கலவைகள் பல்வேறு வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை கொடுக்கும் என்று எழுதப்பட்டுள்ளது. முறையற்ற உணவு கலவைகள் அஜீரணம், செரிமானம் மற்றும் வாயு தொல்லை போன்றவற்றை உண்டாக்கலாம். இது போன்ற உணவு கலவை தான் இந்த முட்டை மற்றும் பால்.

பிரச்னைகள்

பிரச்னைகள்

ஊட்டச்சத்து நிபுணர் மெஹர் ராஜ்புட், முட்டையில் புரதச்சத்து, அமினோ அமிலங்கள் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன மற்றும் பாலில் புரதம் மற்றும் கால்சியம் ஆகியவை உள்ளது.

சரியாக சமைக்காத முட்டைகள் சில நேரங்களில் பாக்டீரியா தொற்று, உணவு நச்சு மற்றும் பயோட்டின் குறைபாடு ஆகியவற்றை ஏற்படுத்தும் (முட்டையில் உள்ள புரோட்டீன் பயோட்டின் மூலம் பிணைக்கப்பட்டு, அதன் உறிஞ்சுதலை தடுக்கிறது). சமைக்காத முட்டையில் நுண்உயிரிகள் இல்லாத வரை பாலுடன் சாப்பிடலாம்.

என்ன ஆகும்?

என்ன ஆகும்?

"ஊட்டச்சத்து நிபுணர் மற்றும் ஆலோசகர் டாக்டர் ரூபலி தத்தா சமைத்த முட்டைகள் உடன் பால் எந்த நேரத்திலும் சாப்பிடலாம்" என்று சொல்கிறார். சமைக்காத உணவுகள் சால்மோனெல்லாவை உற்பத்தி செய்வதற்கான ஆபத்து இருப்பதால் நான் வேகவைகாத முட்டைகளை பரிந்துரைக்க மாட்டேன், அவை உணவு விஷத்தை அதிகரிப்பதோடு, மேலும் கடுமையான நோய்களை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

பாடி பில்டர்கள்

பாடி பில்டர்கள்

பாடி பில்டர்கள் தசைகள் வளர பொதுவாக 4-5 முட்டை முட்டைகளை பாலுடன் உண்ணுவதை கண்டுள்ளோம், ஆனால் இந்த உணவு அவர்களுக்கு உதவாது என்று தெரிந்து கொள்ள வேண்டும், முட்டையில் உள்ள அதிக கொழுப்பு இதய பிரச்சினைகளை உண்டாக்கும்.

பாக்டீரியா

பாக்டீரியா

சமைக்கப்பட்ட முட்டை மற்றும் பால் மூலம் நீங்கள் தேவையான புரதத்தின் அளவைப் பெறுவீர்கள், இது நாள் முழுவதும் உங்களுக்கு உற்சாகத்தை உண்டாக்குகிறது, சமைக்கப்பட்ட முட்டைகள் உணவு விஷம் மற்றும் பிற பாக்டீரியா நோய்த் தொற்றுகளின் குறைவான சாத்தியக் கூறுகளைக் கொண்டிருக்கின்றன.

பச்சை பட்டாணி

பச்சை பட்டாணி

மேலும், இந்த முட்டை மற்றும் பால் கலவை உங்கள் வயிறின் நலத்தை பாதிக்கிறது என்று உணர்ந்தால் அதை உடனடியாக நிறுத்தவும். எந்த மாதிரி உணவுகளின் கலவையானது உங்கள் உடலுக்கு பொருத்தமானது என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும். இந்த கலவையைப் பற்றி நீங்கள் இன்னும் சந்தேகித்து இருந்தால், காலையிலிருந்தே பச்சை பட்டாணி சாப்பிடுவதன் மூலம் தேவையான புரதம் கிடைக்கும் அதில் ஒரு முட்டை விட அதிக புரதம் காணப்படுகிறது.

கட்டுக்கதைகள்

கட்டுக்கதைகள்

சமைக்கப்பட்ட முட்டைகள் மற்றும் பால் ஆகியவற்றை ஒன்றாகச் சேர்க்கும் போது எந்த விதமான தீமையும் இல்லை. அனால் சரியாக வேகவைக்கப்படாத முட்டை கண்டிப்பாக நல்லது இல்லை. குறிப்பாக கடுமையான உடல் பயிற்சி மற்றும் கடுமையாக உழைக்கும் மக்கள் பால் மற்றும் வேகவைக்காத முட்டைகளை தவிர்க்க வேண்டும்.

நமது உடல் ஒரு குறிப்பிட்ட அளவு மட்டுமே சத்துகளை ஏற்றுக்கொள்ள முடியும். அதிக புரதம் உட்கொள்ளும் அதிகப்படியான கொழுப்பு உருவாவதற்கு காரணமாகும், இது மற்ற சுகாதார அபாயங்களை ஏற்படுத்தும். இது கெட்ட கொழுப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும். சமைக்கப்பட்ட முட்டையைப் பொறுத்தவரையில், நீங்கள் நிச்சயமாக எந்த விளைவுகளையும் பற்றி கவலைப்படாமல் வேகவைத்த முட்டை மற்றும் பால் ஒரு இதமான காலை உணவாக இருக்க முடியும். இருப்பினும், ஒரு வரம்பில் சாப்பிடுவது எப்போதும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Should You Drink Milk After Eating Eggs? Busting the Myth

What is the best thing to have early in the morning? A nicely done omelette and a glass of milk immediately come to mind.
Desktop Bottom Promotion