நம்ம முன்னோர்கள் சாப்பிட்ட சோளம் இப்ப எங்க போச்சு? இத நாம ஏன் சாப்பிடணும்?

சோளம் என்னும் பாரம்பரிய தானியத்தில் என்னென்ன ஊட்டச்சத்துக்கள் உள்ளன என்பது பற்றி இங்கு விளக்கமாக விளக்கியுள்ளோம்.

By Vivek Sivanandam

இந்தியா முழுவதும் பரவலாக பயன்படுத்தப்படும் சோளம், ஜவாரி, ஜோவர், ஜோலா மற்றும் ஜோன்தலா என பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுகிறது மற்றும் இதனை பயன்படுத்தி ரொட்டி, தோசை போன்ற பல உணவு வகைகளும் தயாரிக்கப்படுகிறது.

Health Benefits of jowar

Image Courtesy

ஆங்கிலத்தில் சொர்ஃகம் (Sorghum) என அழைக்கப்படும் இது, சொர்ஃகம் வல்கரே எனும் தாவர குடும்பத்தை சேர்ந்தது. ஆசியா மற்றும் ஆப்ரிக்காவில் அதிகளவில் உற்பத்தி செய்யப்படும் இதன் மூலம், அந்த பகுதிகளில் நிலையான புரதச்சத்து கிடைக்க வழிவகுக்கிறது மற்றும் இது வளர்வதற்கு தனி கவனம் எடுக்க வேண்டியதுமில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சோளம்

சோளம்

ஏறக்குறைய 30 வகையான சோளம் இருக்கும் நிலையில், அதில் ஒரே ஒரு வகை மட்டுமே மனிதர்கள் உட்கொள்ள ஏதுவாக உள்ளது. இது உலகின் 5வது மிக முக்கிய தானியம் ஆகும். நகரமயமாக்கல், தொழில்மயமாக்கல் மற்றும் சுத்தகரிக்கப்பட்ட/பொட்டலங்களில் அடைக்கப்பட்ட உணவுகளின் மீது அதீதமாக சார்ந்திருப்பதும், சோளத்தில் உள்ள பிரதான புரதச்சத்தை தொலைத்து விட்டோம். அத்தகைய நமது பாரம்பரிய உணவு முறைகளை மீண்டும் கடைபிடித்து, அதை அன்றாட உணவில் சேர்த்து புரத சத்துக்களை பெறுவது மிகமுக்கியமானது.

100கிராம் சோளத்தில் உள்ள சத்துகள்

100கிராம் சோளத்தில் உள்ள சத்துகள்

Image Courtesy

ஆற்றல் - 334.13 கி.கலோரி

சி.எச்.ஓ - 67.68கிராம்

புரோட்டின் - 9.97கிராம்

கொழுப்பு -1.73கிராம்

பைபர் -10.22கிராம்

தியாமின்- 0.35மில்லிகிராம்

ரிபோப்ளாவின் -0.14மில்லிகிராம்

நியாசின்-2.1மில்லிகிராம்

போலேட்- 39.42மில்லிகிராம்

குளூடின் இல்லாதது

குளூடின் இல்லாதது

Image Courtesy

கோதுமை, பார்லி, கம்பு போன்ற தானியங்களில் குளூடின் என்ற புரதம் கண்டறியப்பட்டுள்ளது. இது செலியாக் நோய் கொண்ட நபர்களின் உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கக்கூடியது. ஆனால் சோளத்தில் இந்த குளூடின் கிடையாது மற்றும் ஐபிஎஸ் உள்ள நபர்களுக்கு இது நன்கு பலனளிக்கக்கூடியது. கோதுமைக்கு பதிலாக சோளத்தை பயன்படுத்தும் போது வீக்கம், வயிற்றுப்போக்கு, மலச்சிக்கல், சோர்வு, தலைவலி போன்றவற்றின் அறிகுறிகள் குறைவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த நோய்கள் உங்களுக்கு இல்லையென்றாலும், ஏதேனும் ஒரு தானியத்திற்கு பதில் சோளம் அல்லது சிறு தானியத்தை பயன்படுத்துவது சிறந்தது. இதன் முக்கிய காரணமே நல்ல உணவை எடுத்துக்கொள்வதும், ஜீரண மண்டலத்திற்கு சற்று வித்தியாசமாக செய்வதும், ஆரோக்கியமாக இருப்பது தான்.

நார்ச்சத்து

நார்ச்சத்து

சோளத்தில் உள்ள அதிக நார்ச்சத்து காரணமாக குடல் நன்கு இயங்குவதால், மலச்சிக்கல் பிரச்சினை ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் இது கெட்ட கொழுப்புகள் சேராமல் தடுப்பதால் இதய நாளங்கள் தொடர்பான பிரச்சனைகளை தடுக்கிறது. அதிக நார்ச்சத்து உள்ள உணவுகளை உண்பதால், வயிறு விரைவில் காலியாவதை தடுத்து தொடர்ந்து இரத்தத்திற்கு கார்போஹைட்ரேட் செல்ல வழிவகுக்கிறது. எடையை கட்டுக்கோப்பாக வைக்க வேண்டும் என விரும்புபவர்கள் தங்களின் உணவில் சோளத்தை சேர்த்துக்கொள்ளலாம்.

அதிக ஆண்டி ஆக்ஸிடென்ட்

அதிக ஆண்டி ஆக்ஸிடென்ட்

சோளத்தில் டேன்னிஸ், பீனோலிக் அமிலங்கள், ஆந்தோசியானின்ஸ், பைட்டோஸ்ரால்ஸ் மற்றும் போலிகோசானோல் போன்ற பல்வேறு பைட்டோகெமிக்கல் உள்ளன. இந்த ஆண்டி ஆக்ஸிடென்ட் உடல்வீக்கத்தை கட்டுப்படுத்த கடுமையாக போராடவல்லன. நாள்பட்ட வீக்கம் தான் உடலில் புற்றுநோய் உள்பட பல்வேறு ஆரோக்கிய குறைபாடுகள் ஏற்பட முக்கிய காரணியாக விளங்குகிறது. கருப்பு, சிவப்பு மற்றும் பழுப்பு நிற சோளத்தில் மற்ற தானியங்களில் உள்ளதை காட்டிலும் 3 முதல் 4 மடங்கு அதிக ஆந்தோசியானின்ஸ் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

நீரழிவு கட்டுப்பாடு

நீரழிவு கட்டுப்பாடு

சோளத்தில் குறைந்த கிளைசாமிக் குறியீடு இருப்பதால் இது நீரழிவு நோய்க்கு சிறப்பாக செயல்படுவதாலும், தினசரி உணவில் அடிக்கடி சேர்த்துக்கொள்ள வேண்டும். அதிக நார்ச்சத்து மற்றும் அதிக புரதம் உள்ள தானியங்களை சேரத்துக்கொள்வது நீரழிவு நோய்க்கு சிறந்த உணவாகும். நார்ச்சத்து மற்றும் புரதம் இரண்டும் இரத்தத்தில் சர்க்கரை வெளியீட்டை மட்டுப்படுத்தி, ஏற்ற இறக்கங்கள் ஏற்படாதவண்ணம் உதவுகிறது. இது நீரழிவை மட்டும் கட்டுப்படுத்தாமல், திருப்பியான ஒரு உணர்வை தருகிறது.

வைட்டமின்கள்

வைட்டமின்கள்

இவை மட்டுமின்றி, இந்த தானியத்தில் உடல் ஆரோக்கியத்திற்கு முக்கிய சத்தான வைட்டமின் பி மற்றும் போலேட் அதிகளவில் உள்ளது. சோளமானது பழப்பு, அடர் சிவப்பு மற்றும் நீல வண்ணங்களில் கிடைக்கிறது. இது முழுதாகவும், மாவாகவும், ரவை போன்ற வடிவிலும் கிடைப்பதால் விதவிதமான உணவு வகைகளும் செய்யலாம். சோளத்தை பயன்படுத்தும் போது சில மணிநேரம் நீரில் ஊறவைப்பது நல்லது. மற்ற தானியங்களை போலவே இதையும் குளிரான இருட்டான இடத்தில், நன்கு மூடப்பட்ட பாத்திரத்தில் சேமிக்க வேண்டும். தினமும் சோளத்தை உங்கள் உணவில் சேரத்து அதன் அபரிமிதமான பலன்களை பெற்றிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Thursday, August 23, 2018, 16:20 [IST]
Desktop Bottom Promotion