For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காலிஃபிளவர் உங்களுக்கு பிடிக்காதா?... அப்போ இத நீங்கதான் மொதல்ல படிக்கணும்?...

காலிஃபிளவரின் மிதமான நறுமணச் சுவை, இதனை மற்ற சத்து குறைவான மற்றும் அதிக-கார்ப் கொண்ட உணவுபொருளுக்கு மாற்றாக பயன்படுத்த வழிவகுக்கிறது. பிரிஸ்கா குடும்பத்தின் உறுப்பினரான இது டன் கணக்கில் நார்ச்சத்து மற

|

யாராவது உங்களிடம் கலர் கலரான வண்ண மயமான எல்லா வித காய்கறிகளையும் தேடித்தேடி சாப்பிடுங்கள் எனக் கூறினால் அவர்கள் சிறந்த ஊட்டச்சத்து மையமான இதனை மறந்துவிட்டார்கள் என்பதே இதன் பொருள்.

health

அப்படி என்ன அந்த அதிசயக் காய் என்று தானே கேட்கிறீர்கள். அதுதான் காலிஃபிளவர். ஆமாங்க. இந்த காலிஃபிளவர்க்குள்ள தான் இவ்வளவு ஆயிரமாயிரம் சத்துக்கள் நிரம்பிக் கிடக்கின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காலிஃபிளவர்

காலிஃபிளவர்

காலிஃபிளவரின் மிதமான நறுமணச் சுவை, இதனை மற்ற சத்து குறைவான மற்றும் அதிக-கார்ப் கொண்ட உணவுபொருளுக்கு மாற்றாக பயன்படுத்த வழிவகுக்கிறது. பிரிஸ்கா குடும்பத்தின் உறுப்பினரான இது டன் கணக்கில் நார்சத்து மற்றும் புற்றுநோய் எதிர்ப்பு சத்துக்கள் கொண்டுள்ளது.

நீங்கள் இதனை உணவிலும், சாதத்தின் வகையிலும் எடுத்துக் கொள்வதற்கான சில காரணங்களை இங்கு பார்ப்போம்.

1 கப் - ஊட்டச்சத்து விவரங்கள்

1 கப் - ஊட்டச்சத்து விவரங்கள்

• 27 கலோரிகள்

• 2.1 கிராம் புரதம்

• 5.3 கிராம் கார்போஹைட்ரேட்

• 2.1 கிராம் ஃபைபர்

• 2 கிராம் சர்க்கரை

• 0 கிராம் கொழுப்பு

• 53 மிகி வைட்டமின் சி

• 15% டிவி ஃபோலேட்

• 18% டி.வி. வைட்டமின் கே

• 15% டி.வி. வைட்டமின் பி 6

ஆரோக்கிய நன்மைகள்

ஆரோக்கிய நன்மைகள்

• வீக்கத்தினால் ஏற்படும் ஆபத்தை குறைகிறது: காலிஃபிளவரில் உள்ள ஆக்ஸிஜனேற்றிகள் நாட்பட்ட நோய்க்கு வழிவகுக்கும் செல்கள் சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன.

• இரத்த அழுத்தத்தை சிறந்த முறையில் கட்டுப்படுத்துகிறது:

இதன் மெக்னீசியம் உள்ளடக்கம் தசை சுருக்கம் தடுத்தல் மற்றும் அறிவாற்றல் ஆகியவற்றிற்கும் உதவுகிறது.

• நரம்பு மண்டலத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது:

காலிஃபிளவரில் உள்ள ஃபோலேட் மற்றும் வைட்டமின் B6 ஆகியவையே இதற்க்கு முக்கிய காரணம்.

• எலும்புகளை பாதுகாக்கிறது. வைட்டமின் கே எலும்பு-கனிம அடர்த்தி மற்றும் இரத்த உறைதல் ஆகியவற்றிற்கு மிக அவசியம்.

நீங்கள் இன்னும் உறுதியாக நம்பவில்லையா? இதோ காலிஃபிளவர் பற்றி ஊட்டசத்துவியலாளர்கள் பதிலளித்த சில வினாக்களும் விடையும்

"வெள்ளை உணவுகள்" நல்லா?

வெண்ணெய் ரொட்டி, வெள்ளை அரிசி, மற்றும் அவைகளிலிருந்து தயாரிக்கப்படும் சில உயர்ந்த பதப்படுத்தப்பட்ட கார்ப்ஸ், மற்ற விருப்பங்களைவிட குறைவான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. மறுபுறம், ஒரு கப் காலிஃபிளவர் 27 கலோரி உள்ளது மற்றும் அது ஆக்ஸிஜனேற்ற மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட சிறந்த ஆற்றல் மூலமாகும்.

பாரம்பரிய கார்ப்ஸ் நீக்கி விட்டு அதற்க்கு மாற்றாக காலிஃபிளவர் பயன்படுத்துவதால் அதன் சுவை மாறாமலும் மற்றும் அதிக கார்போஹைட்ரெட் சேர்க்கை இல்லாமலும் செய்யும். இது நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு அல்லது எடை இழக்க விரும்புவர்களுக்கு ஒரு நல்ல உணவாகும்.

பிஸ்ஸா:

பிஸ்ஸா:

மேல்புறத்தை உண்டாக்குவதற்கு காலிஃபிளவர் பயன்படுத்தவும் அல்லது ஒரு முன்மாதிரி ஒன்றை வாங்கவும். இது உங்களுடைய பிஸ்ஸா துண்டில் நார்ச்சத்து அதிகமாகவும் சோடியம் குறைவாகவும் இருக்க உதவும்.

மசித்த"உருளைக்கிழங்கு": காலிஃபிளவரை வேகவைத்து அதை கிரேக்க தயிர் அல்லது கிரீம் சீஸ் சேர்த்து நன்றாக கலக்குங்கள். இதனை மசித்த உருளைக்கிழங்குக்கு மாற்றாக பயன்படுத்துங்கள்.

காலிஃபிளவர் சாதம் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

காலிஃபிளவர் சாதம் பற்றி என்ன கூறுகிறீர்கள்?

காலிஃபிளவர் சாதம் நல்லது மட்டுமல்ல, ஒரு பழக்கமான (வெள்ளை அரிசி) உணவான சாதத்தை காய்கறிகளுடன் அறிமுகப்படுத்துதல் ஒரு சிறந்த வழியாகும். பாதிக்கு பாதி காய்கறிகளை சேர்க்கும்போது நிறைய காய்கறிகளுடன் குழந்தைகள் விருப்பப்படும் சுவையையும் பெறலாம்.

காலிஃபிளவர் சாதத்தினை எளிதாக வீட்டிலேயே செய்யலாம்.

அதிக கார்ப்ஸ் உள்ளதா?

அதிக கார்ப்ஸ் உள்ளதா?

இல்லை! காலிஃபிளவர் என்பது அனைத்து காய்கறிகளையும் போல ஒரு கார்போஹைட்ரேட் ஆகும். இருப்பினும், இது நார்ச்சத்து மற்றும் குறைவான சர்க்கரை அளவே கொண்டுள்ளது. ஒரு கப் காலிஃபிளவரில் அளவில் சமைத்த பாஸ்தா அல்லது சாதத்தில் உள்ள கார்போஹய்ட்ரேட் ஆறில் ஒரு பங்கே உள்ளது. எனவே இது நீரிழிவு நோயாளிகளுக்கு அல்லது அவர்களின் இரத்த சர்க்கரையை சீராக பராமரிக்க ஒரு சிறந்த வழி செய்யும்.

எப்படி இதை சமைக்க வேண்டும்?

எப்படி இதை சமைக்க வேண்டும்?

கொதிக்க வைத்தல் தவிர மற்ற சமையல் முறைகள் அனைத்தும் காலிஃபிளவரில் உள்ள அனைத்து சத்துக்களையும் இழக்காமல் இருக்க உதவும். வறுத்தல், உணவின் அளவை குறைத்தாலும் சுவைக்க ருசியாக இருக்குமென்பதால் இம்முறையை அதிகம் விரும்புகின்றனர்.

புற்றுநோயை தடுக்க உதவுமா?

புற்றுநோயை தடுக்க உதவுமா?

ஒற்றை உணவுக்கு புற்றுநோய்க் கட்டியை வராமல் தடுக்கவோ அல்லது தீர்க்கவோ இயலாது இருந்தாலும் காலிஃபிளவர் சல்ஃபோபரான் என்ற வேதிசேர்மம் இருப்பதால், இது அசாதாரண செல் வளர்ச்சியை தடுக்க உதவும்.

பொதுவாகவே க்ரூஸிபிரோஸ் (குறுக்குவெட்டு) காய்கறிகள் அதிகம் சாப்பிடுவதால் எல்லா வகையான நாள்பட்ட நோய்களுக்குமான ஆபத்தை குறைக்கலாம்! இக்குடும்பத்தில் ப்ரோக்கோலி, முட்டைக்கோசு, போக் சோய், காலிஃபிளவர், பிரஸ்ஸல்ஸ் முளைப்புகள், மற்றும் காலே ஆகியவை பலரின் விருப்ப தேர்வாக உள்ளது. நீங்களும் முயற்சித்து பாருங்கள்..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

It's Official: Cauliflower Is Just as Good for You as Colorful Veggies

Cauliflower’s mild flavor makes it a versatile swap for other less nutritious, high-carb foods. packs tons of fiber and cancer-fighting nutrients.
Desktop Bottom Promotion