For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தக்காளி என்பது ஒரு பழ வகையா அல்லது காய்கறி வகையா? தெரிஞ்சா அதிர்ச்சியாவீங்க... வாங்க பார்க்கலாம்...

தக்காளி என்பது காய்கறியில் ஒன்றா அல்லது பழ வகையா? தாவரவியல் ஆய்வுகள் என்ன சொல்கின்றன என்பது பற்றி இங்கே விளக்கப்பட்டுள்ளது.

|

தக்காளி பொதுவாக எல்லா உணவுகளிலும் முக்கியமாக பயன்படுத்தப்படும் பொருளாகும். அதுவும் கோடை காலங்களில் தான் இந்த தக்காளி அதிகளவில் உற்பத்தி செய்யப்படுகிறது.

is tomato a fruit or veggie - botanical classification

தக்காளி என்றாலே இதை ஒரு காய்கறி வகையாகத் மாடு நாம் கருதுவோம். ஆனால் நிறைய தகவல்கள் இதை ஒரு பழம் என்கின்றனர். இந்த சந்தேகம் குறித்த விளக்கத்தை கூறுவது தான் இந்த கட்டுரையின் சிறப்பே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பழத்திற்கும் காய்கறிகளுக்கும் என்ன வித்தியாசம்?

பழத்திற்கும் காய்கறிகளுக்கும் என்ன வித்தியாசம்?

ஊட்டச்சத்துக்களை பொருத்த வரையில் இரண்டிலும் நிறைய விட்டமின்கள், தாதுக்கள் மற்றும் நார்ச்சத்துகள் உள்ளன. ஆனால் ஒரு காய்கறி வகைக்கும் பழத்திற்கும் சிறிய வித்தியாசங்கள் இருக்கின்றன.

MOST READ: 13 வயது ஆண்களுக்கு உடலுறவு பயிற்சி கொடுக்கும் பழங்குடியின பெண்கள்

தாவரவியல் வகைப்பாடு

தாவரவியல் வகைப்பாடு

தாவரவியல் வகைப்பாடு என்பது காய்கறிகள் மற்றும் பழங்களின் வடிவம், செயல்பாடு இவற்றை கொண்டு பிரிக்கப்படுகிறது. அதன்படி பார்த்தால் பூக்கள் பழங்களை உருவாக்கவும், பழங்களின் விதைகள் மறுபடியும் ஒரு தாவரத்தை உருவாக்கவும் உதவுகிறது.

இதுவே காய்கறிகளை எடுத்து கொண்டால் ஒரு தாவரத்தின் வேர், தண்டு, இலைகள் மற்ற தாவர பாகங்களும் காய்கறிகளை உருவாக்குகின்றன. காரட், பீட்ரூட், கீரைகள் போன்றவை காய்கறிகளாகும்.

சமையல் வகைப்பாடு

சமையல் வகைப்பாடு

சமையலை பொருத்த வரை காய்கறிகளும் பழங்களும் அதன் தன்மை பொருத்து பயன்படுத்துகின்றனர். பழங்கள் இனிப்பு மற்றும் புளிப்பு சுவை கொண்டு காணப்படுவதால் டிசர்ட், பாஸ்ட்ரி, ஸ்மூத்தி, ஜாம் ஏன் ஸ்நாக்ஸ் ஆக கூட பயன்படுத்தி கொள்கின்றனர்.

காய்கறிகள் அதன் பசுமையான தன்மை, கசப்பு சுவை காரணத்தாலும் பழங்களை மாதிரி மென்மையாக இல்லாமல் கடினமாக இருப்பதாலும் சமைத்தோ அல்லது பச்சையாகவோ நாம் இதை சமையலில் பயன்படுத்தி வருகிறோம். சாலட், காய்கறி பொரியல் போன்று செய்கின்றோம்.

MOST READ: செவ்வாயின் அனுகிரகத்தால் இன்று அதிர்ஷ்டக் காத்து வீசப்போகிற ராசிக்காரர்கள் யார் யார்?

தக்காளி பழமா?

தக்காளி பழமா?

எல்லா பழங்களும் ஒரு விதை கொண்டோ அல்லது ஏகப்பட்ட விதைகள் கொண்டோ இருக்கும். பழம் என்பது தாவரத்தின் பூக்களிலிருந்து உருவாகிறது.

அதன்படி பார்த்தால் தக்காளி மஞ்சள் நிற பூக்களிலிருந்து உருவாகி நிறைய விதைகளை தன்னுள் கொண்டுள்ளது. விவசாய தொழில் நுட்பம் வளர்ந்த இந்த நவீன காலத்தில் ஏன் விதைகளே இல்லாத தக்காளி பழமும் உற்பத்தி செய்யப்படுகிறது. இருப்பினும் தாவரவியல் வகைப்பாடு படி தக்காளி ஒரு பழம் என கருதப்படுகிறது.

ஆய்வு

ஆய்வு

தக்காளி பழமா? காயா என்ற குழப்பம் அதன் பயன்பாட்டிலிருந்து எழும்புகிறது.

அப்படி பார்க்கையில் தக்காளி பெரும்பாலும் காய்கறிகளுடன் சேர்ந்து சமையலில் பயன்படுத்தப்படுகிறது. இதன் காரணமாகவே அது விஞ்ஞான ரீதியாக பழமாக இருந்தால் கூ ட பயன்பாட்டின் கீழ் காய்கறி என்ற பெயரை பெற்றிருக்கிறது.

1893 ஆம் ஆண்டு அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் தக்காளி இறக்குமதியாளர்கள் தக்காளி மீதான காய்கறி கட்டண உயர்வை தவிர்ப்பதற்காக அதை பழ வகையாக கருத வேண்டும் என வாதிட்டனர்.

ஆனால் இந்த வழக்கில், தக்காளி ஒரு பழம் என அதன் தாவரவியல் வகைப்படுத்தலுக்கு பதிலாக அதன் சமையல் பயன்பாடுகள் அடிப்படையில் அது ஒரு காய்கறி என வகைப்படுத்தப்படும் என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

தக்காளி மட்டும் இந்த மாதிரியான குழப்பங்களை சந்திக்கவில்லை.

MOST READ: கர்ப்பிணிகள் சுடுதண்ணீரில் குளித்தால் கருச்சிதைவு ஏற்படுமாம்... இது உண்மையா? பொய்யா?

பழ வகை சேர்ந்த காய்கறிகள்

பழ வகை சேர்ந்த காய்கறிகள்

நாம் பயன்படுத்தும் நிறைய காய்கறிகள் உண்மையில் பழ வகையைச் சார்ந்தவை. உதாரணமாக,

வெள்ளரிக்காய்

பூசணிக்காய், சுரைக்காய் போன்ற நீர்ச்சத்து காய்கள்

பட்டாணி வகைகள்

மிளகாய்

கத்தரிக்காய்

வெண்டைக்காய்

போன்றவை உண்மையில் பழங்கள். ஆனால் சமையலில் காய்கறிகளாக பயன்படுத்தப்படுகிறது.

இதே மாதிரி காய்கறிகள் பழங்களாக பயன்படுகிறது. உதாரணமாக ருபார்ப் என்ற காய்கறி செடி வகை ஸ்வீட், டிசர்ட் போன்றவை களில் பயன்படுகிறது. ஏன் கேரட் கூட கேரட் கேக், கேரட் அல்வா போன்ற டிசர்ட் களில் பயன்படுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

is tomato a fruit or veggie - botanical classification

this article explores whether tomatoes are fruits or vegetables and why they’re sometimes confused for one or the other.
Story first published: Tuesday, October 23, 2018, 13:17 [IST]
Desktop Bottom Promotion