For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சிறுநீர் கழிக்கும் போது வலியோ எரிச்சலோ ஏற்பட்டால் இதை சாப்பிடுங்க!

உடலில் உற்பத்தியாகக்கூடிய யூரிக் அமிலத்தை தானாக குறைக்க நீங்கள் சாப்பிட வேண்டிய சில மருந்துகளைப் பற்றிய அறிமுகம்.

|

யூரிக் அமிலம் நம் உடலில் உற்பத்தியாகிற தேவையற்றப் பொருளாகும். உடலில் ப்யூரின்ஸ் உடையும் போது இந்த யூரிக் அமிலம் உற்பத்தி ஆகிறது. பெரும்பாலும் நம்முடைய சிறுநீர் வழியாக இந்த ப்யூரின் எல்லாம் வெளியேறிவிடும்.

ஆனால் சிலருக்கு ப்யூரின்ஸ் முழுவதும் வெளியேறாது, அவர்களுக்கு உடலின் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும். இதைத்தவிர மதுப்பழக்கம் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள், கிட்னி தொடர்பான பிரச்சனை இருப்பவர்கள்,கீமோதெரபி சிகிச்சை எடுத்துக் கொள்கிறவர்கள் ஆகியோருக்கும் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு அதிகரிக்கும்.

Home Remedies To Reduce Uric Acid Naturally

உடலில் யூரிக் அமிலம் அதிகரித்தால் அது பல்வேறு உடல் பிரச்சனைகளை ஏற்படுத்திடும். இதனை தவிர்க்க,யூரிக் அமிலம் குறைக்கக்கூடிய உணவுகளை தேடிச் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள் :

ஆப்பிள் :

யூரிக் அமிலம் அதிகமாக இருப்பவர்களுக்கு ஆப்பிள் மிகச் சிறந்த தேர்வாக இருக்கும். ஆப்பிளில் மாலிக் அமிலம் மற்றும் ஃபைபர் இருக்கிறது. இது நம் உடலில் தேவையற்ற யூரிக் அமிலத்தின் அளவைக் குறைத்திடும்.

செர்ரீ :

செர்ரீ :

யூரிக் அமிலத்தை குறைக்கும் ஆற்றல் செர்ரீ பழத்திற்கும் உண்டு. ஒரு நாளைக்கு அரை பவுண்டு அளவு செர்ரீயை நீங்கள் சாப்பிடலாம். இதில் ஆன்தோசியானின் என்ற சத்து இருக்கிறது. இது நம் எலும்புகளில் குறிப்பாக எலும்பு மூட்டுகளில் தங்கியிருக்கக்கூடிய யூரிக் ஆசிட்டை எல்லாம் நீக்கும்.

நீங்கள் ஸ்ட்ராபெர்ரீ மற்றும் ப்ளூ பெர்ரீ ஆகியவற்றையும் சாப்பிடலாம்.

ஆப்பிள் சிடர் வினிகர் :

ஆப்பிள் சிடர் வினிகர் :

அதிக யூரிக் அமிலத்தை குறைக்க ஆப்பிள் சிடர் வினிகரும் பயன்படுகிறது. ஒரு கிளாஸ் தண்ணீரில் மூன்று ஸ்பூன் ஆப்பிள் சிடர் வினிகரைக் கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு நாளைக்கு இரண்டு முறை வீதம் நீங்கள் குடிக்க வேண்டும்.

வெங்காயச் சாறு :'

வெங்காயச் சாறு :'

பச்சையான வெங்காயச்சாறு குடித்தால் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். மருத்துவ முறையாகவும் இது பரிந்துரைக்கப்படுகிறது. சுவையை காரணம் காட்டி பலரும் வெங்காயச் சாறு அருந்துவதில்லை. ஆனால் அவ்வளவு சக்தி வாய்ந்தது. இது உடலுக்கு நல்லது என்று நினைத்து நீங்கள் குடித்துவிட வேண்டும்.

வெள்ளரிச் சாறு :

வெள்ளரிச் சாறு :

உடலில் தங்கியிருக்கும் யூரிக் அமிலத்தை குறைக்க அத்தியவசியமாய் நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டியது. வெள்ளரி. வெயில் காலங்களில் அதிகம் கிடைக்கூடிய வெள்ளரியை நீங்கள் அடிக்கடி சாப்பிட வேண்டும்.

குறிப்பாக மதிய உணவு சாப்பிட ஒரு மணி நேரத்திற்கு முன்பாக வெள்ளரி ஜூஸ் குடிக்கலாம்.

பீன்ஸ் :

பீன்ஸ் :

உடலில் யூரிக் அமிலத்தின் உற்பத்தியை குறைக்கும் ஆற்றல் பீன்ஸில் இருக்கிறது. இதனை நீங்கள் அடிக்கடி உணவுகளில் சேர்த்துக் கொள்ளலாம். பீன்ஸில் இருக்கிற ஃபோலிக் அமிலம் நம் உடலுக்கு மிகவும் நல்லது அதோடு யூரிக் அமிலத்தின் உற்பத்தியையும் குறைக்கிறது.

இதைத் தவிர சத்தான காய்கறிகளை நீங்கள் அடிக்கடி உணவுகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

விட்டமின் சி :

விட்டமின் சி :

யூரிக் அமிலத்தின் உற்பத்தியை கட்டுப்படுத்த விட்டமின் சி நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காலை எழுந்து சூடான தண்ணீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் கலந்து குடிப்பது செரிமானத்திற்கு மட்டுமல்ல உடலில் யூரிக் அமிலம் உற்பத்தியையும் குறைக்க உதவிடுகிறது.

விட்டமின் சி நிறைந்த பழங்கள் நம் உடலில் யூரிக் அமிலத்தின் அளவு சீரான அளவில் பராமரிக்க உதவிடும். அதோடு யூரிக் அமிலத்தை வெளியேற்றவும் உதவிடும்.

ஒமேகா 3 :

ஒமேகா 3 :

ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் கொண்டிருக்கும் மீன் வகைகளான சால்மன், மாக்கிரல்,மற்றும் வால்நட்,ஆளி விதைகள் ஆகியவை யூரிக் அமிலத்தை குறைக்க பெரிதும் உதவிடுகிறது. இவற்றையெல்லாம் உங்கள் உணவுப் பட்டியலில் அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள்.

க்ரீன் டீ :

க்ரீன் டீ :

தினமும் க்ரீன் குடிப்பது உங்கள் உடலில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட்டை அதிகரிக்கு,. இதனால் உங்கள் உடலில் யூரிக் அமிலம் தங்குவது தடுக்கப்படும். இதைத் தவிர செலரி விதைகளையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

நார்ச்சத்து :

நார்ச்சத்து :

நார்ச்சத்து அதிகமுள்ள உணவுப் பொருட்களை எடுத்துக் கொள்ள முன்னுரிமை கொடுங்கள். இது உங்கள் செரிமானத்திற்கு உதவுவது மட்டுமின்றி உடலில் அதிகப்படியாக சேர்ந்திருக்கும் யூரிக் அமிலத்தையும் குறைக்க உதவிடும்.

குறிப்பாக கரையக்கூடிய ஃபைபர் நம் ரத்தத்தில் கலந்திருக்கக்கூடிய யூரிக் அமிலத்தை உறியக்கூடிய ஆற்றல் கொண்டது.

தக்காளி :

தக்காளி :

நம்முடைய அன்றாட சமையலுக்கு பயன்படுத்தக்கூடிய தக்காளி யூரிக் அமிலத்தை குறைக்கும் குணம் உண்டு. இதைத் தவிர ப்ரோக்கோலியையும் நீங்கள் சாப்பிடலாம்.

இவற்றில் இயற்கையாகவே அல்கலைன் இருக்கிறது. இவை ரத்தத்தில் யூரிக் அமிலத்தை குறைக்க உதவிடும்.

 தண்ணீர் :

தண்ணீர் :

மிக எளிமையானது அதே சமயம் மிக அத்தியாவசியமானதும் கூட. ப்யூரின் உடைவதால் தானே யூரிக் அமிலமே உற்பத்தியாகிறது. அந்த ப்யூரினே இல்லாமல் ஆக்கிவிட்டால். ப்யூரினை நீக்க வேண்டுமென்றால் ஒரே வழி அதனை சிறுநீர் வழியாக மட்டுமே நாம் குறைக்க முடியும்.

அதனால் அதிகளவு நீராகரங்களை குடித்திடுங்கள். எப்போதும் ஹைட்ரேட்டடாக வைத்திருப்பது உடலில் இருக்கிற செல்கள் எல்லாம் சீராக வேலை செய்ய உதவிடுகிறது.

வாழைப்பழம் :

வாழைப்பழம் :

யூரிக் அமிலத்தை குறைக்க வாழைப்பழம் பெரிதும் உதவிடும். இதனை நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளலாம். இதைத் தவிர கொழுப்பு குறைவான உணவுகளையும் நீங்கள் எடுத்துக் கொள்வதால் உங்கள் உடலிலிருந்து யூரிக் அமிலத்தை குறைக்க முடியும்.

ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயில் :

ஆலிவ் ஆயிலில் ஆண்ட்டி இன்ஃப்லமேட்டரி மற்றும் ஆண்ட்டி ஆக்ஸிடேட்டிவ் துகள்கள் நிறையவே இருக்கிறது. இவை உங்கள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

இது உடலில் இருக்கக்கூடிய அதிகளவு யூரிக் அமிலத்தை குறைக்க பெரிதும் உதவிடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Home Remedies To Reduce Uric Acid Naturally

Home Remedies To Reduce Uric Acid Naturally
Story first published: Monday, April 23, 2018, 11:30 [IST]
Desktop Bottom Promotion