Latest Updates
-
ராகுவின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி இதுல இருக்கா? -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த செட்டிநாடு கொரடா சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு சூப்பரா இருக்கும் -
உங்க அக்குள் கருப்பா இருக்கா? அப்ப இந்த 5 வழிகளை ட்ரை பண்ணிப் பாருங்க... -
இந்த 3 ராசிக்காரங்க கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்ட அதிர்ஷ்ட ஆன்மாக்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
காய்ந்த பட்டாணி இருந்தா.. இந்த பக்குவத்துல குருமா செய்யுங்க.. சப்பாத்திக்கு வேற லெவல்-ல இருக்கும்.. -
பெண்களின் உடல் பற்றிய ஆச்சரியப்பட வைக்கும் உண்மைகள் - இவ்வளவு ரகசியம் ஒளிஞ்சிருக்கா? -
ஒரே நாளில் நடக்கும் சூரிய-சுக்கிர பெயர்ச்சி: இந்த 3 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
புதன் கடக ராசியில் வக்ர பெயர்ச்சி அடைவதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சளி, இருமலுக்கு இப்படி கொங்குநாடு ஸ்டைலில் ரசம் வெச்சு சாப்பிடுங்க.. டக்குன்னு சரியாகும்.. -
ஐயங்கார் ஸ்டைல் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும்
சுண்டைக்காய் பிடிக்காதா? இத படிச்சா தினமும் வேணும்னு கேட்க ஆரம்பிச்சிடுவீங்க...
சுண்டைக்காயினால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இங்கு கொடுக்கப்பட்டுள்ளது. படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
சுண்டக்காய் வத்தக்குழம்பு என்று சொன்னால் யாருக்குத் தான் நாக்கில் எச்சில் ஊறாது. ஆனால் குழம்பில் இருக்கும் சுண்டைக்காயைத் தான் முதலில் வெளியே எடுத்து தூக்கி எறிவோம்.

ஆனால் அந்த சுண்டைக்காய்க்கு உள்ளே எவ்வளவு சத்துக்கள் இருக்கின்றன என்பது உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் தினமும் சுண்டைக்காய் கேட்டு வாங்கி சாப்பிடுவீர்கள்.

ஊட்டச்சத்துக்கள்
சுண்டைக்காயில் மிக அதிக அளவில் வைட்டமின் பி, வைட்டமின் சி ஆகியவை அதிகம் உள்ளது. 100 கிராம் சுண்டைக்காயில் கிட்டதட்ட 22.5 கிராம் அளவுக்கு இரும்புச்சத்தும் 390 மில்லி கிராம் அளவுக்கு கால்சியமும் 180 மில்லி கிராம் பாஸ்பரசும் நிறைந்திருக்கிறது.

வயிற்றுக் கோளாறு
சுண்டைக்காய் வயிற்றில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. மூலத்தின் மூலம் ஏற்படுகிற வலி, கடுப்பு, மூலச்சூடு மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் தன்மை கொண்டது.

காய்ச்சல்
காய்ச்சல் இருக்கும் பொழுது சுண்டைக்காய் சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. காய்ச்சல் நேரத்தில் சுண்டைக்காயைச் சேர்த்துக் கொள்வதன் மூலமாக ரத்த வெள்ளை அணுக்களை அதிகரிக்கச் செய்யும். உடலில் உண்டாகிற காயங்களையும் புண்களையும் ஆற்றுகின்ற குணமும் இந்த சுண்டைக்காய்க்கு உண்டு. வாய்வுப் பிடிப்பு உள்ளவர்கள் அடிக்கடி இந்த சுண்டைக்காயை சேர்த்துக் கொள்வது நல்லது.

குழந்தைகளுக்கு
குழந்தைகளுக்கு பொதுவாக இருக்கும் பிரச்னை என்றால், அது ஊட்டச்சத்து குறைபாடு பிரச்சினை தான். சிறு வயதிலிருந்தே குழந்தைகளுக்கு உணவில் சுண்டைக்காயைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். சுண்டைக்காயை மாதத்துக்கு இரண்டு முறையாவது குழந்தைகளுக்குக் கொடுத்து வந்தால், வயிற்றுப்புழுக்கள் போன்ற பிரச்னைகள் எதுவும் இருக்காது.

ஆஸ்துமா
ஆஸ்துமா, வறட்டுஇருமல், நாள்பட்ட நெஞ்சு சலி, போன்ற தொந்தரவுகள் இருக்கின்றவர்கள் தினமும் 20 சுண்டைக்காய் வற்றலை நல்லெண்ணெயில் வறுத்து சாப்பிட்டு வர வேண்டும். இதை சில வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தாலே போதும். தீராத ஆஸ்துமாவும் கட்டுக்குள் வந்துவிடும்.

மூலம்
மூலம்இடுப்பவர்களுக்கு கடுப்பு ஏற்படும். மூலச்சூடு மற்றும் வயிற்றுக் கோளாறுகளுக்கு சுண்டைக்காய் சிறந்த மருந்தாகப் பயன்படும். மூல நோய் இருப்பவர்கள் வாரத்துக்கு மூன்று நாட்கள் சுண்டைக்காயை நெய்யில் வதக்கிச் சாப்பிட்டால், கடுப்பு நீங்கும். மூலத்தால் உண்டாகும் ரத்தக்கசிவு நின்று போகும். புளித்த ஏப்பம், உடல் சோர்வு ஆகியவையும் பறந்து போய்விடும்.

கல்லீரல்
சுண்டைக்காய் வற்றல் சூரணம் என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். அதை ஒரு டீஸ்பூன் அளவுக்கு எடுத்து தினமும் மோரில் கலந்து குடித்து வந்தால் வயிறு சம்பந்தப்பட்ட அத்தனை பிரச்சினைகளும் தீர்ந்து போகும். சிறுநீரைப் பெருக்கும் ஆற்றல் கொண்டது. கல்லீரல் மற்றும் மண்ணீரல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்க்கும்.

ரத்த சர்க்கரை
சுண்டைக்காயில் கசப்புத் தன்மை அதிகமாக இருப்பதால் ரத்தம் சுத்திகரிக்கப் படுவதோடு, உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்துகிறது. ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும்.



Click it and Unblock the Notifications