For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொலஸ்ட்ராலை குறைத்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஒரு வித்தியாச தேநீர்!

உடலை ஸ்லிம்மாக, நோய் நொடியின்றி இளமையாக வைக்க உதவும் ஓர் டீ - நீங்கள் அறியாத தேநீர் குறித்து இங்கு படித்தறியுங்கள்..!

By Soundarya S
|

நமது ஊரில், நம்முடைய வீட்டில் பெரும்பாலும் பயன்படுத்தப்படும் பானங்களாக இருப்பது காபி, டீ, பால் போன்றவை தான். காபி மற்றும் டீயில் எக்கச்சக்க வகைகள் உள்ளன; ஆனால் அத்துணை வகைகளை பற்றியும் நாம் அறிந்திருப்பதில்லை. அப்படி அறியாமல் இருப்பதால் தானோ என்னவோ நம் உடலுக்கு நலம் தரக்கூடிய, உடல் உபாதைகளை சரி செய்யக்கூடிய அற்புத தேநீர் மற்றும் காபி வகைகளை விடுத்து, அலோபதி மாத்திரை மருந்துகளின் பின்னால் சென்று கொண்டிருக்கிறோம்.

Top 10 health benefits of oolong tea

தற்பொழுது உடல் எடை குறைப்பு என்றாலே, கிரீன் டீ தான் என்று குதிரைக்கு கடிவாளம் போட்டது போல், அதையே பின்பற்றி கொண்டிருக்கிறோம். ஆனால், கிரீன் டீயை விட மிக விரைவாக உடலின் கெட்ட கொலஸ்ட்ராலை நீக்கி, உடல் எடையை குறைத்து, பல்வேறு நோய்களையும் குணப்படுத்த உதவும் ஓர் அருமையான தேநீர் குறித்து இன்னமும் நாம் அறியாமல் இருக்கிறோம்.

இத்துணை பயன்கள் அளிக்கும் அந்த தேநீர் எது? ஒரு நாளைக்கு எத்தனை முறை பருகுவது? இதன் மருத்துவ பயன்கள் என்னென்ன என்பன பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
அற்புத தேநீர் எது?

அற்புத தேநீர் எது?

உடலின் தலை முதல் பாதம் வரை அனைத்து பாகங்களுக்கும் நன்மை அளிக்கக்கூடிய அந்த அற்புத தேநீர் - ஊலாங் தேநீர். இது ஒரு சைனா டீ மற்றும் இது கேமில்லியா சினென்சிஸ் எனும் தாவரத்திலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த தாவரத்தில் இருந்து தான் கிரீன் மற்றும் பிளாக் டீக்களும் தயாரிக்கப்படுகின்றன. இதை பெரும்பாலும் சைனா மற்றும் தைவானில் வாழும் மக்கள் பயன்படுத்துகின்றனர். இது உலகின் அணைத்து நாடுகளிலும் கிடைக்கக்கூடியதே!

உடலுக்கு நல்லதா?

உடலுக்கு நல்லதா?

ஊலாங் டீ, க்ரீன் மற்றும் பிளாக் டீக்களின் குணாதிசியங்கள் ஒன்றாய் கலந்த கலவை. ஊலாங் டீயில், பிளவோனோய்ட்ஸ், காபின் (மிகக் குறைந்த அளவு), ஃப்ளுரைட், தியானின் போன்றவை உள்ளன. இந்த டீயை தொடர்ந்து பருகுவதால், இதய நோய்கள், புற்றுநோய், உடல் பருமன், சர்க்கரை நோய், மனஅழுத்தம் போன்ற நோய்களை தடுத்துவிடுகிறது.

எத்தனை முறை பருகலாம்?

எத்தனை முறை பருகலாம்?

இந்த ஊலாங் டீயை ஒரு நாளைக்கு 2-3 முறை பருகலாம்; புதிதாக இந்த டீயை பருக தொடங்குபவர்கள் ஒருமுறை உங்கள் உடல் தன்மைக்கு இந்த டீ பொருந்துமா என மருத்துவரிடம் ஆலோசித்து விட்டு பருகலாம்.

10 மருத்துவ குணங்கள்

10 மருத்துவ குணங்கள்

ஊலாங் டீயை பருகுவதால், ஏற்படும் நன்மைகள், இந்த தேநீர் குணப்படுத்தும் - தடுக்கும் நோய்கள் என்னென்ன என்று இப்பொழுது பார்க்கலாம்.

1. இதய நோய்கள்,

2. உடல் பருமன்

3. புற்றுநோய்,

4. நீரிழிவு நோய்

5. வீக்கம்

6. மூளை ஆரோக்கியம்

7. எலும்புகளின் பலம்

8. தோல் ஆரோக்கியம்

9. செரிமானம்

10. கூந்தல் ஆரோக்கியம்

இதய நோய்கள்

இதய நோய்கள்

சைனா மருத்துவியலாளர்கள் ஒரு வாரத்திற்கு 10 அவுண்ஸ்கள் ஊலாங் தேநீர் பருகுவது கொலஸ்ட்ராலை குறைத்து, இதய ஆரோக்கியத்தை பாதுகாப்பதாக கண்டறிந்துள்ளனர். இதை தொடர்ந்து பருகுபவர்களுக்கு, கொலஸ்ட்ரால் தொல்லை இல்லாது இருப்பதாய் காணலாம். இந்த டீயிலுள்ள மூலக்கூறுகள் உடற்செயலிய மாற்றத்திற்கு பெரிதும் உதவி, உடலை நோய்களிடம் இருந்து தூரமாக வைக்கிறது.

உடல் பருமன்

உடல் பருமன்

இந்த தேநீரை தொடர்ந்து பருகி வருதல், உடலின் கெட்ட கொழுப்புகளை குறைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது. இத்தேநீரை தொடர்ந்து 6 வாரம் பருகுவது நல்ல பலனை அளிக்கும். உங்கள் உடலை ஸ்லிம்மாக, ஆரோக்கிய அழகு தேகமாக மாற்ற இந்த டீ உதவுகிறது.

புற்றுநோய்

புற்றுநோய்

ஊலாங் தேநீரினை தொடர்ந்து பருகுவது தோல் புற்றுநோயை தடுக்கவும், மற்ற புற்றுநோய் செல்களை அளிக்கவும் பயன்படுகிறது. புற்றுநோய் செல்கள் உடலில் உருவாகாமல் தடுத்து, உடலை ஆரோக்கியமாக வைக்க இது உதவுகிறது. மேலும் எல்லாவித புற்றுநோய் வகைகளையும் இது தடுத்து நிறுத்த பயன்படுகிறது.

நீரிழிவு நோய்

நீரிழிவு நோய்

ஊலாங் டீயை 30 நாட்கள் தொடர்ந்து பருகினால், உடலின் சர்க்கரை அளவை நிலைப்படுத்தி, கட்டுக்குள் வைத்து, சர்க்கரை நோயை குணப்படுத்த உதவுகிறது.

 வீக்கம்

வீக்கம்

உடலில் ஏற்படும் வீக்கம், தடுப்புகள், அரிப்பு போன்றவற்றை குணப்படுத்த உதவுகிறது. உடலில் ஏற்படும் தோல் நோய்களான தேமல், தொழுநோய், நாள்பட்ட அரிப்பு போன்றவற்றால் ஏற்படும் தடுப்புகளை போக்க இது உதவுகிறது. உடலில் கொழுப்பால் ஏற்படும் வீக்கங்களை போக்கி, உடலை வனப்புடன் வைக்க இது பயன்படுகிறது.

மூளையின் ஆரோக்கியம்

மூளையின் ஆரோக்கியம்

ஊலாங் டீயை தொடர்ந்து பருகுவது மூளையை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது; மேலும் மூளை புத்துணர்வு பெற்று நன்கு செயல்பட உதவுகிறது. மூளையின் நரம்பு மண்டல செல்களை சிறப்புடன் செயலாற்ற உதவி, நம்மை சுறுசுறுப்பாக வைக்க உதவுகிறது.

எலும்புகளின் பலம்

எலும்புகளின் பலம்

ஊலாங் டீயை தொடர்ந்து பருகி வருதல், உடலிலுள்ள எலும்புகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும். மேலும் எலும்பு சம்பந்தப்பட்ட நோய்களான ஆர்த்ரிடிஸ், ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நோய்களை குணப்படுத்த உதவுகிறது.

எலும்பின் தாதுக்கள் அடர்ந்து வளரவும், எலும்பு பலமடையவும் இந்த தேநீர் உதவுகிறது.

தோல் ஆரோக்கியம்

தோல் ஆரோக்கியம்

வறண்ட சருமம் கொண்டவர்களின் சருமத்தினை ஈரப்பதம் கொண்டதாக மாற்றி, தோலை மினுமினுப்புடன் வைக்க இந்த டீ உதவுகிறது. மேலும் உடலின் சருமத்தினை என்றும் இளமையாக வைத்திருக்க இந்த டீ உதவுகிறது. இதை 6 மாதங்கள் தொடர்ந்து பருகி வந்தால், மேனியில் நல்ல மாற்றத்தை காணலாம். எக்சிமா நோயால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இது ஒரு அருமருந்து.

தோல் சுருக்கம், தோல் தளர்தல் போன்றவற்றை தவிர்த்து, முதுமையை தடுத்து என்றும் பதினாறாக நீங்கள் காட்சி அளிக்க உதவுகிறது.

செரிமானம்..

செரிமானம்..

இந்த ஊலாங் தேநீர் குடல் மற்றும் வயிற்று பகுதி தசைகளை ஆரோக்கியமாக்கி, செரிமானத்தை எளிதாக்குகிறது. இது வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் அருமருந்தாக விளங்குகிறது. உடலில் ஏற்படும் வாயு, மலச்சிக்கல் போன்ற அனைத்து குறைபாடுகளையும் போக்க இது பெரிதும் உதவுகிறது.

கூந்தல் ஆரோக்கியம்

கூந்தல் ஆரோக்கியம்

இந்த தேநீரை தொடர்ந்து பருகுதல் முடியின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு உதவுகிறது; மேலும் இது முடி கொட்டுவதையும் தடுக்க பயன்படுகிறது. கூந்தலை புதுப்பொலிவுடன் மினுமினுப்பாக வளர வைக்க பேருதவி புரிகிறது. தலையில் ஏற்படும் பொடுகு, முடி உதிர்வு போன்றவற்றை போக்கவும் இந்த ஊலாங் தேநீர் உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Top 10 health benefits of oolong tea

Top 10 health benefits of Oolong tea
Desktop Bottom Promotion