Latest Updates
-
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்! -
இந்த 5 உணவுகள் உங்கள் உடலில் துர்நாற்றத்தை ஏற்படுத்தி சங்கடமாக உணர வைக்குமாம் - பார்த்து சாப்பிடுங்க -
வாஸ்து செடிகள்: கோடை வெயிலில் வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுவது எப்படி? -
சிக்கன் பிரியாணியை விட சூப்பரா இருக்கும் ஆம்பூர் ஸ்டைல் சோயா பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
சனிபகவானின் வக்ர பெயர்ச்சியால் 138 நாட்களுக்கு ஜெயிக்கிற குதிரையா மாறப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
சீதா நவமி: உங்கள் வீட்டில் இந்த மாற்றங்களைச் செய்தா பணமழை கொட்டுமா? அதிர்ஷ்டம் தரும் வாஸ்து ரகசியம்! -
கோடையில் இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடல் எடையும் குறையும், உடல் சூடும் தணியும்..
நம் முன்னோர்கள் கெட்ட கொழுப்பைக் கரைக்க பயன்படுத்திய கொடம்புளி...
இங்கே மலபார் புளி என்று அழைக்கப்படுகிற கொடம்புளியைப் பற்றியும் அதன் மருத்துவ குணங்கள் பற்றியும்தான் பார்க்கப் போகிறோம்.
கர்சினியா கம்போஜியா என்ற தாவரத்தின் அனைத்து பாகங்களும் மிகச்சிறந்த நன்மைகளை அள்ளித் தருகிறது.

இதன் மருத்துவ குணத்தால் நிறைய உடல் உபாதைகளை போக்க உதவுகிறது. அந்த வகையில் பார்த்தால் இது உடல் எடையை குறைக்க உதவும் அற்புத புளி என்று கூறலாம்.

கர்சினியா கம்போஜியா
இந்த தாவரம் கர்சினியா கம்மி குட்டா என்றும் அழைக்கப்படுகிறது. இந்த தாவரத்தின் பழங்கள் உணவுப் பொருட்களில் ப்ளேவரிங் ஏஜெண்ட்டாக, பதப்படுத்தும் பொருளாக, உணவு பல்கி ஏஜெண்ட்டாக பயன்படுகிறது. ஏன் இதை நீங்கள் சட்னி, குழம்பு மற்றும் சூப் போன்ற உணவுகளின் கெட்டியான பதத்திற்கும் ருசிக்கும் கூட பயன்படுத்தி கொள்ளலாம். இதன் பழங்கள் 5 செமீ விட்டளவும் ஆரஞ்சு பழம் போன்று 6-8 வரையிலான செலைகளையும் கொண்டுள்ளது.
பழுக்காத இந்த பழம் பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் இருக்கும். பழுத்த வுடன் மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில் இந்த பழம் மாறிவிடும். தோற்றத்தை வைத்து சொன்னால் பார்ப்பதற்கு சின்ன பூசணிக்காய் போன்று காட்சியளிக்கும். லேசான இனிப்பு சுவையுடன் புளிப்பு சுவையையும் கொண்டு இருப்பது அற்புதமான ருசியாக இருக்கும்.

பயன்கள்
ஆயுர்வேத முறைப்படி பார்த்தால் இந்த குடம்புளி சீரண சக்தியை மேம்படுத்த உதவும் ஜூஸ் என்கின்றனர். மேலும் ஆராய்ச்சி முறைப்படி இதில் அதிகளவில் ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் உள்ளது.

உடல் எடை குறைப்பு
இதிலுள்ள ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் நமது உடலில் லிப்போஜெனீசிஸ் என்ற விளைவை தடுத்து கார்போஹைட்ரேட் பொருட்கள் கொழுப்பாக மாறுவதை தடுக்கிறது. இந்த மாற்றம் தடுக்கப்படுவதால் கார்போஹைட்ரேட் ஆக்ஸிடையாகி கிளைகோஜெனாக உடலில் சேமிக்கப்படுகிறது. இந்த மாற்றத்தின் விளைவால் பசி குறைந்து இயல்பாகவே உடல் எடை குறைய ஆரம்பித்து விடும். மேலும் இந்த ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலம் மூளையில் உள்ள செரோடோனின் ஹார்மோனை சுரப்பை அதிகரித்து பசியை குறைக்கவும் செய்து விடுகிறது. செரோடோனின் ஒரு இயற்கையான முறையில் பசியை குறைக்க பயன்படுகிறது. இதனால் எளிதாக உங்கள் உடல் எடையை குறைத்து விடலாம்.

டைப் - 2 டயாபெட்டீஸ்
இந்த குடம்புளி டைப் 2 டயாபெட்டீஸ் நோய்க்கு சிறந்தது. இந்த குடம்புளி இன்சுலின் சுரப்பை கட்டுப்படுத்தி இன்சுலின் சென்ஸ்டிவிட்டியை மேம்படுத்துகிறது. இதனால் குளுக்கோஸ் (சர்க்கரை சத்து) செல்கள், தசைகள் போன்றவற்றிற்கு கடத்தப்பட்டு அதிகப்படியான சர்க்கரை சத்து இரத்தத்தில் கலப்பது தடுக்கப்படுகிறது. அதிக குளுக்கோஸ் அளவான (ஹைப்பர் கிளைசெமியா) அல்லது ஹைபிளாஸ்மா குளுக்கோஸ் போன்ற பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்கிறது.
சில ஆராய்ச்சி தகவல்கள் என்ன கூறுகிறது என்றால் கர்சினியா கம்போஜியா பிளாஸ்மா குளுக்கோஸ் அளவில் எதிர்மறை விளைவை ஏற்படுத்துகிறது. 3.3% கர்சினியா கம்போஜியா சாறு குளுக்கோஸ் மெட்டா பாலிசத்தை மேம்படுத்தி செல்கள் குளுக்கோஸை எடுத்துக் கொள்ளும் திறனை அதிகரிக்கிறது.

அதிக கொலஸ்ட்ரால்
நம் உடலில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு அளவை குறைக்க இது உதவுகிறது. மேலும் இது அடினைன் ட்ரை பாஸ்பேட் நொதி (ஆற்றல்) செயல்பாட்டை தடுத்து கொலஸ்ட்ரால் உருவாக்கத்தை தடுக்கிறது. இதனால் இயல்பாகவே உடலில் உள்ள அதிக கொலஸ்ட்ரால் மற்றும் ட்ரைகிளிசரைடு குறைந்து விடுகிறது.

அழற்சி எதிர்ப்பு பொருள்
பொதுவாக நம் உடலில் நிறைய நோய்கள் வர அழற்சி தான் முக்கிய காரணமாக அமைகிறது. எனவே இது ஒரு அழற்சி எதிர்ப்பு பொருளாக செயல்பட்டு அழற்சியை எதிர்த்து போரிடுகிறது.குடல் அழற்சி நோய் (IBD), இரைப்பை குடல் வளர்ச்சியில் வீக்கம் போன்றவற்றை குணப்படுத்துகிறது.

கல்லீரல் பாதிப்பு
கர்சினியா கம்போஜியா கல்லீரலில் நச்சுத்தன்மையை உருவாக்க கூடியது. ஆராய்ச்சி படி பார்த்தால் இது கல்லீரலில் கொலாஜனை சேமித்து TNF - £(ட்யூமர் நெகுரோஸிஸ் காரணி) என்ற அழற்சியை ஏற்படுத்தி விடுகிறது. கொலாஜன் சேமிப்பால் கல்லீரலின் செயல்திறன் பாதிப்படைகிறது. இதனால் என்சைம் இரத்தத்தில் கலந்து கல்லீரல் பாதிப்பு ஏற்படுகிறது.

சரும அரிப்பு
முயல்களில் மேற்கொண்ட ஆராய்ச்சி கருத்துப்படி பார்த்தால் 500 மில்லி கிராம் அளவு ஹைட்ரோக்சிசிட்ரிக் அமிலத்தை முயல்களில் கொடுத்த பொழுது அவைகள் சரும பாதிப்பை சந்தித்தனர். மேலும் இது சரும நிறத்தை மஞ்சள் நிறமாக மாற்றி விட்டது.



Click it and Unblock the Notifications