For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நமக்கு தெரியாத காளானை பற்றிய அதிர்ச்சி உண்மைகள்

|

இன்றைய தலைமுறையின் முக்கிய உணவுளில் ஒன்று காளான். இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் இந்த காளான் மற்ற பொருட்களை காட்டிலும் அதிகளவு புரோட்டின், மற்றும் குறைந்த கலோரிகள் உடையதாகும். எனவே இது சுவையான உணவாக மட்டுமில்லாமல் சத்தான உணவாகவும் இருக்கிறது. எளிதில் ஜீரணமாக கூடிய காளான் எலும்புகளை வலுப்படுவது, எடை குறைப்பில் உதவுவதுனு ஏகப்பட்ட நன்மைகளை வழங்கக்கூடியது.

Mushroom

இத்தனை நன்மைகளை வழங்கக்கூடிய காளான் சில கெடுதல்களையும் ஏற்படுத்தக்கூடியது. அலர்ஜியில் தொடங்கி உயிரிழப்பு வரைகூட ஏற்படுத்த கூடியது காளான். இதனை சரியாக பயன்படுத்தினால் அருமருந்து அதுவே தவறாக பயன்படுத்தினால் கொடிய விஷம். எப்படிப்பட்ட காளானை சாப்பிடக்கூடாது, யாரெல்லாம் காளான் சாப்பிடக்கூடாது என்பதை இங்கே பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சுத்தப்படுத்துதல்

சுத்தப்படுத்துதல்

காளான் சுவையான உணவாக இருந்தாலும் அதோட சுவை என்னவோ அதை சுத்தப்படுத்தும் முறையிலதான் இருக்கு. காளானை சரியாக சுத்தப்படுத்தவில்லையெனில் அது கசப்பு சுவையத்தான் தரும். எனவே காளானை சுத்தப்படுத்தும் முன்பு அதனை சுத்தப்படுத்தும் நீரில் சிறிது எலுமிச்சை சாறை கலக்கவும். ஏனெனில் காளான் வெளிப்புறத்தில் உள்ள ஆக்சிஜனுடன் இணைந்து விரைவில் கருப்பு நிறமாக மாறிவிடும். எனவே எலுமிச்சைச்சாறில் உள்ள சிட்ரிக் அமிலம் காளான் கருப்பாவதை தடுக்கிறது. பின்னர் காளானை ஒரு துணியில் பரப்பி அதிலுள்ள ஈரம் காய்ந்தவுடன் சமைக்கவும்.

எத்தனை நாட்கள்

எத்தனை நாட்கள்

காளானை கடையிலிருந்து வாங்கி வந்த பின் ஃப்ரிட்ஜில் வைத்து மூன்று நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் ப்ரீஸரில்(Freezer) வைத்து உபயோகிக்கக்கூடாது. அவ்வாறு வைக்கும்போது காளான் சவ்வு போல மாற வாய்ப்புகள் அதிகம். ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலும் சில காளான்கள் பிசுபிசுப்பா மாறிடும், அதுபோன்ற காளான்களை சமைக்கக்கூடாது. ஏனெனில் அவை அஜீரணம், வாந்தி போன்ற வயிற்று உபாதைகளை ஏற்படுத்தும்.

அம்மாக்கள் காளான்கள் சாப்பிடக்கூடாது

அம்மாக்கள் காளான்கள் சாப்பிடக்கூடாது

புதிதாய் குழந்தை பெற்ற பெண்கள் காளான் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் காளான் உங்கள் தாய்ப்பாலை வற்ற வைக்கக்கூடிய தன்மையுடையது. எனவே காளான் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்தை மட்டுமின்றி உங்கள் குழந்தையின் ஆரோக்கியத்தையும் பாதிக்கும்.

அலர்ஜி உள்ளவர்கள்

அலர்ஜி உள்ளவர்கள்

காளான் சத்தான பொருளாக இருந்தாலும் அதனை அனைவரும் சாப்பிட்டு விட முடியாது. சிலருக்கு சரும அலர்ஜி பிரச்சினைகள் இருக்கும், அப்படிப்பட்டவர்கள் காளானை சாப்பிடாமல் இருப்பது நல்லது. இதனால் அரிப்பு, சருமத்தில் தடிப்புகள் போன்றவை ஏற்படலாம்.

வாதம்

வாதம்

வாத பிரச்சினை உள்ளவர்கள் காளான் சாப்பிடுவதை அறவே தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் உள்ள சில அமிலங்கள் சிலருக்கு வாதத்தை ஏற்படுத்தலாம். எனவே வாத பிரச்சினை உள்ளவர்கள் இதை சாப்பிடும்போது அது அவர்களின் பிரச்சினையை இரட்டிப்பாக்க கூடும். அதேசமயம் காளானை நன்கு சமைக்கப்பட்ட பின்னர்தான் சாப்பிட வேண்டும், அப்து வெந்த காளான்களையோ அல்லது பச்சை காளான்களையோ சாப்பிடுவது மிகவும் ஆபத்தானது.

விஷக்காளான்கள்

விஷக்காளான்கள்

காளான்களில் பல வகைகள் உள்ளன. சில காளான்கள் மட்டுமே சாப்பிட ஏற்றவை. சிலர் காடுகளில் கிடைக்கும் காளான்களை நல்ல காலங்கள் என நினைத்து சமைத்து சாப்பிட்டு பரிதாபமாக உயிர் விட்ட சம்பவம் பலவற்றை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். எனவே கடைகளில் கிடைக்கும் காளான்களை மட்டும் வாங்கி சமைக்கவும். விஷக்காளான்களை கண்டறிவது மிகவும் எளிது, விஷக்காளான்கள் மற்ற காளான்களை விட பளீர் நிறத்தில் இருக்கும், அதேசமயம் அதிக துர்நாற்றமும் வீசும்.

சிகிச்சைமுறை

சிகிச்சைமுறை

ஒருவேளை நீங்கள் விஷக்காளான்களை சாப்பிட்டுவிட்டால் உடனே சிறிது சோம்பை எடுத்து சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து குடித்தால் விஷம் உடலில் பரவுவது தடுக்கப்படும். எந்தவித விஷமாய் இருந்தாலும் அதனை கட்டுப்படுத்தும் ஆற்றல் சோம்பிடம் உள்ளது.

போதை காளான்கள்

போதை காளான்கள்

சிலவகை காளான்கள் மூளையில் போதை போன்ற உணர்ச்சியை ஏற்படுத்தக்கூடும். அப்படிபட்ட காளானை போதைக்காக சாப்பிடும் பழக்கம் இப்போது பலரிடம் அதிகரித்துள்ளது. இதுவும் உடலுக்கு கேடுவிளைவிக்க கூடியதுதான். இதனால் மனஅளவில் பாதிக்கப்படுவதோடு மனநிலை பாதிக்கும் அபாயமும் உள்ளது. விஷ காளான்களை போலவே போதை காளான்களுக்கும் சோம்பை உடனடி மருந்தாக பயன்படுத்தலாம்.

சாலையோர காளான்

சாலையோர காளான்

இது நாம் தினமும் பார்க்கும் ஒன்று. சாலையோர கடைகளில் காளான் என ஒன்றை விற்றுக்கொண்டிருப்பார்கள். உங்கள் நண்பர்களில் கூட பலரும் அதனை விரும்பி உண்ணலாம். அவர்களிடம் சொல்லுங்கள், அவர்கள் சாப்பிடுவது காளான் அல்ல விஷம் என்று. ஆம், முட்டைகோஸை மைதா மாவுடன் சேர்த்து அதனுடன் உப்பு மற்றும் கேசரி பவுடர் சேர்த்து எண்ணெயில் பொரித்து அதனை காளான் என விற்பனை செய்கின்றனர். உடலுக்கு கேடுவிளைவிக்கும் பல சாஸ் வகைகள் இதனுடன் சேர்க்கப்படுகின்றன. இப்படிப்பட்ட உணவை தினமும் சாப்பிடும்போது அது வயிறு உபாதைகள், வயிற்றுபோக்கிலிருந்து புற்றுநோய் வரை ஏற்படுத்தக்கூடும்.

விளைவுகள்

விளைவுகள்

தரமான காளானை சரியான முறையில் சமைத்து அளவோடு சாப்பிட்டால் அதிக ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும். அதேசமயம் தரமற்ற காளான்களையோ அல்லது சரியாக சமைக்கப்படாத காளான்களையோ சாப்பிடும்போது அது பல பக்கவிளைவுகளை ஏற்படுத்தும். "அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு" என்பது போல அதிகளவு காளான்கள் சாப்பிடுவது தலைவலி, வாந்தி, மயக்கம் போன்றவற்றை ஏற்படுத்தும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

how to find harmful mushrooms?

Mushroom is rich in proteins and low in calories so it is used to protect our heart, weight loss, etc., But if we eat the wrong one it will lead us to serious illness
Story first published: Friday, July 27, 2018, 15:40 [IST]
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more