For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தினமும் முட்டை சாப்பிடலாமா?... சாப்பிட்டா என்ன ஆகும்?

|

தினமும் ஒரு முட்டை சாப்பிட்டா இதய நோயை ஓட ஓட விரட்டலாம்னு ஆய்வு சொல்லுதுங்க. ஒவ்வொரு நாளும் முட்டை சாப்பிடுவது ஆரோக்கியமானதா?

health benefits of egg

தினமும் ஒரு முட்டை சாப்பிடுவதால் இதய நோய் மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தைக் குறைக்கலாம் என்று ஒரு புதிய ஆய்வு தெரிவித்துள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆராய்ச்சி

ஆராய்ச்சி

சீனாவில் பீகிங் யுனிவர்சிட்டி ஹெல்த் சயின்ஸ் மையத்தால் இந்த ஆய்வு செய்யப்பட்டது, அங்கு அவர்கள் 416,213 முட்டை உண்ணும் பங்கேற்பாளர்களின் உணவுப் பழக்கங்களை ஆராய்ந்தனர்.

இதய நோய்

இதய நோய்

முட்டைகளால் இதய நோய் அபாயத்தைக் குறைக்க முடியுமா? அந்த ஆராய்ச்சியின் முடிவை அவிழ்க்கலாம் வாருங்கள்,

முட்டை எல்லோருக்கும் பிடித்த ஒரு உணவாகவும், குறிப்பாக காலை உணவுக்காகவும், பெரும்பாலான உணவுகளின் ஒரு பகுதியாகவும் விளங்குகிறது. ஆனால், அதன் உயர்ந்த கொழுப்பின் அளவு காரணமாக சிலர் முட்டைகளைத் தவிர்க்கிறார்கள்.

MOST READ: இவ்ளோ நாள் இந்த பூவ நாம கண்டுக்கவே இல்ல... ஆனா இதுக்குள்ள என்னென்ன அற்புதமெல்லாம் இருக்கு தெரியுமா?

எத்தனை முட்டை

எத்தனை முட்டை

ஒரு பெரிய முட்டை சுமார் 185 மி.கி. கொழுப்பை கொண்டிருப்பது உங்களுக்குத் தெரியுமா? அமெரிக்கன் ஹார்ட் அசோசியேஷன் அதிகபட்சமாக 300 மி.கி. கொலஸ்ட்ரால் உணவை ஒரு நாளைக்கு சாப்பிடலாம் என பரிந்துரைக்கிறது. எனவே, இரண்டு முட்டை என்பது ஒரு நாளின் சரியான அளவாக இருக்கும்.

கொழுப்பு என்பது இதய நோயுடன் நேரடியாக தொடர்புபடுத்தப்படுகிறது. எனவே பெரும்பாலான மக்கள் முட்டை சாப்பிடுவது ஆபத்தானது என்று நம்புகிறார்கள் . ஆனால் உண்மை என்னவென்றால், முட்டை உடம்புக்கு எந்த விதத்திலும் தீங்கு செய்யாது.

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால்

கொலஸ்ட்ரால் ​​உங்கள் செல்கள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது, மேலும் வைட்டமின் D, ஹார்மோன்கள் மற்றும் பித்தத்தை உருவாக்குவதற்கு இவை அவசியம் தேவைப்படுகிறது. ஆனால் , இவை அளவுக்கு அதிகமாகும் போது பல சமயம் உங்கள் இரத்தத்தில் தமனிகளின் சுவர்களில் குவிந்து, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்தை அதிகரிக்கிறது.

ஆனால், ஒரு விஷயம் உள்ளது, புதிய மற்றும் முழு உணவுகளில் உள்ள கொழுப்பு உங்கள் இரத்தத்தில் உள்ள கொழுப்பின் மீது மிகச்சிறிய விளைவையே ஏற்படுத்துகிறது. அதாவது, 100 கிராம் வேகவைத்த முட்டையில் 3.3 கிராம் நிறைந்த கொழுப்பு உள்ளது. இது மிகவும் குறைவு மற்றும் எந்தவித பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது.

பிற உணவுகள்

பிற உணவுகள்

மறுபுறத்தில், இறைச்சி மற்றும் தேங்காய் எண்ணெய் அல்லது பாமாயில் உணவுகளின் நிறைந்த கொழுப்பு இரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை அதிகரிக்கும் ஆற்றல் கொண்டவை.

ரத்த அழுத்தம்

ரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் லிபோப்ரோடைன் (ஹெச்டிஎல்) மற்றும் குறைந்த அடர்த்தி லிபோப்ரோடைன் (எல்டிஎல்) என்று இரண்டு வகையான கொழுப்புகள் உள்ளன. ஹெ.டி.எல் நல்ல கொழுப்பு என்று கருதப்படுகிறது. இது அதிக கொழுப்புகளைக் கல்லீரலுக்கு அனுப்புகிறது. கல்லீரல் தேவையற்ற கொழுப்புகளை உடலிலிருந்து வெளியேற்றும் வேலையைச் செய்கிறது. எல்டிஎல் கெட்ட கொலஸ்ட்ரால் ஆகும், இது உங்கள் தமனி சுவர்களில் படிந்து இரத்தக் கொதிப்பு ஏற்படும் வாய்ப்புகளை உருவாக்குகிறது.

MOST READ: பிள்ளையார் தான் பிரம்மச்சாரியா? ஒரு பிரம்மச்சாரி பெண் தெய்வமும் இருக்கு பாருங்க... (படங்கள் உள்ளே)

நல்ல கொழுப்பு - கெட்ட கொழுப்பு

நல்ல கொழுப்பு - கெட்ட கொழுப்பு

முட்டையின் நலன்கள் எச்.டி.எல் மற்றும் எல்டிஎல் கொழுப்பு அளவுகளை எவ்வித மாற்றத்தை உருவாக்குகிறது? கனெக்டிகட் பல்கலைக் கழகத்தின் இதைப்பற்றிய ஒரு ஆய்வு , ஒரு மாதத்திற்கு மூன்று முட்டைகள் வீதம் தினமும் உண்ணும் பொழுது அது உடலின் கொழுப்பு அளவுகளை எந்த விதத்திலும் மாற்றாததையும், மேலும் இதய ஆரோக்கியத்தை பாதிக்கவில்லை எனவும் கண்டறிந்துள்ளது.

எவ்வளவு

எவ்வளவு

சுகாதார நிபுணர்கள் மற்றும் மருத்துவர்கள் தினசரி உணவின் ஒரு பகுதியாக முட்டைகளைச் சாப்பிடுவதை பரிந்துரைக்கின்றனர். ஊட்டச்சத்து நிறைந்த உணவாக இருப்பதுடன், புரதம், வைட்டமின் A, வைட்டமின் B, வைட்டமின் D மற்றும் வைட்டமின் B12, லுடீன் மற்றும் ஜியாக்சந்தின்(zeaxanthin) ஆகியவை முட்டையில் அதிக அளவில் உள்ளன.

நாளொன்றுக்கு ஒன்று அல்லது இரண்டு முட்டை முற்றிலும் ஆரோக்கியமானது. பல முட்டைகள் சாப்பிடுவதற்கும் மக்கள் பயப்படத்தேவையில்லையென சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

• பரிந்துரைக்கப்பட்ட 63% வைட்டமின் D (பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் கிடைக்காத இடங்களின் உபயோகத்திற்கு).

• நரம்பு மண்டலம் , ரத்த அணுக்கள் மற்றும் டி.என்.ஏவை உருவாக்க அவசியமான 108% தினசரி பரிந்துரைக்கப்பட்ட வைட்டமின் பி 12.

• வளர்ச்சி மற்றும் உடல் ரீதியான பராமரிப்புக்கு தேவைப்படும் 36% வைட்டமின் பி 2.

• வளர்சிதை, நரம்பு, இதய மற்றும் செரிமான செயல்பாடுகளுக்குத் தேவைப்படும் 39% பயோட்டின்.

• கல்லீரலின் வளர்ச்சிக்கும், மூளையின் முறையான செயல்பாட்டுக்கும் தினசரி பரிந்துரைக்கப்படும் 71% கோலைன்.

வாரத்திற்கு எத்தனை

வாரத்திற்கு எத்தனை

ஒரு வாரத்தில் மதிய உணவில் இரண்டு அல்லது மூன்று முறை முட்டைகளைச் சேர்க்கலாமென சுகாதார நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். முட்டையிலுள்ள ஐயோடின் மற்றும் செலினியம் கர்ப்பிணிப் பெண்களுக்கு சிறந்தது. ஏனெனில் இது அவர்களின் குழந்தையின் IQ உடன் தொடர்புடையது.

MOST READ: நீரிழிவு நோயாளிகளுக்கான சிறந்த பழங்கள்!!!

இதய நோயைத் தடுக்க

இதய நோயைத் தடுக்க

பல சத்துக்களுள்ள முட்டைகளை சமைக்க மிகவும் எளிய வழி கொதிக்க வைத்தல் அல்லது பௌச்சிங்(Poaching). கொழுப்பு சத்து மற்றும் அதிகரித்த கொழுப்பு உட்கொள்ளல் காரணமாக முட்டையை வறுத்துப்பயன்படுத்துவதை டயட்டீஷியன்ஸ் பரிந்துரைப்பதில்லை. வறுத்த முட்டை சாப்பிட விரும்பினால் சிறிய அளவிலான தாவர எண்ணெயுடன் சேர்த்து சாப்பிட வேண்டும். ஆனால், முட்டைகளை உண்ண ஆரோக்கியமான வழி ஸ்கிரேம்பளிங்,கொதிக்க வைத்தல், பேக்கிங் அல்லது பௌச்சிங்(Poaching) முறைகளேயாகும். ஒரு வேகவைத்த முட்டை சிற்றுண்டியை பூர்த்தி செய்யும் நல்ல உணவாக அமைகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eating An Egg A Day Can Lower The Risk Of Heart Disease, Says Study

Eggs all along have been a favourite food and they have been a part of every meal.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more