For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொழுப்பு உணவுகளை பார்த்தாலே ஒமட்டல் வருகிறதா? இதுவும் காரணமா இருக்கலாம்!

கணையத்தில் நோய் தாக்குதல் ஏற்பட்டால் வெளிப்படுகிற அறிகுறிகளும் கணையத்திற்கு ஆரோக்கியம் கொடுக்கும் உணவுகளும்

|

உணவு செரிமானத்திற்கு கணையம் மிகவும் முக்கியமான பங்கு வகிக்கிறது. இதனுடைய செயல்பாடு இல்லாது நீங்கள் சாப்பிடுகிற எந்த உணவிலிருந்து சத்தினை தனியாக பிரித்தெடுக்க முடியாது. இயல்பாகவே கணையத்தில் ஏராளமான என்சைம்கள் இருக்கின்றன. இவை வயிற்றில் அமில சுரப்பினை துரிதப்படுத்தும். அதைவிட கணையத்தில் தான் இன்ஸுலின் சுரப்பு இருக்கிறது.

உடலுக்கு எனர்ஜியை கொடுக்கும் ஆற்றலும் அதனிடம் தான் இருக்கிறது. கணையத்தில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டாலே அது உடலில் பல பிரச்சனைகளை ஏற்படுத்திடும். அதனால் கணையத்தினை மிகவும் கவனிக்க வேண்டியது அவசியமாகும்.பலருக்கும் கணையம் குறித்தோ அதன் செயல்பாடுகள் குறித்தோ எந்த விதமான விழிப்புணர்வு இல்லாமல் தான் இருக்கிறார்கள்.

Disease In Pancreas Symptoms and Best Foods

அதனால் அதில் ஏற்படுகிற பாதிப்புகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற முடியாமல் நோய் முற்றிய நிலையில் அவதிப்படுகிறார்கள்.

உங்களுடைய கணையம் பாதிக்கப்பட்டிருக்கிறது என்பதை இந்த ஐந்து அறிகுறிகளை வைத்தே நீங்கள் கண்டுபிடிக்கலாம். மேலும் கணையத்தின் ஆரோக்கியத்திற்கு என்னென்ன உணவுகளை நீங்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் இந்த கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழிவுகள் :

கழிவுகள் :

உடலிலிருந்து வெளியேறும் கழிவுகள் நிறமாறியோ அல்லது வழக்கத்திற்கு மாறாகவோ இருந்தால் கணையத்தில் ஏதேனும் பிரச்சனை இருக்கிறது என்று அர்த்தம். கணையத்தில் இருக்கக்கூடிய என்சைம்கள் உணவில் இருந்து பெறக்கூடிய கொழுப்பினை கரைக்கிரது. அதே நேரத்தில் உடலுக்கு அத்தியாவசியமான சில சத்துக்களையும் கிரகத்துக் கொள்கிறது.

இதில் ஏதேனும் மாற்றங்கள் நிகழும் போது கழிவில் மாற்றங்கள் தெரியும்.

வயிற்று வலி :

வயிற்று வலி :

கடுமையான வயிற்று வலி இருக்கும். கணையத்தில் ஏற்படுகிற புற்றுநோயின் ஆரம்பக் கால அறிகுறியாகவும் இந்த வயிற்று வலி இருக்கும். அந்த நோயின் தாக்கம் பொறுத்து சிலருக்கு கடுமையாகவும், சிலருக்கு மெலிதாகவும் வயிற்று வலி தோன்றிடலாம்.

வயிற்று வலியுடன் சேர்த்து முதுகு குறிப்பாக கீழ் முதுகில் வலி இரண்டு நாட்களுக்கும் மேல் தொடர்ந்தால் உடனடியாக மருத்துவரிடம் சென்று காண்பித்திடுங்கள். பொதுவாக இந்த கணைப்பிரச்சனையினால் ஏற்படுகிற வலியும், செரிமானக்கோளாறினால் ஏற்படுகிற வலியும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கும் என்பதால் பல நேரங்களில் இது சாதரண செரிமானக்கோளாறு என்றே எடுத்துக் கொள்வார்கள்.

சர்க்கரை நோய் :

சர்க்கரை நோய் :

உடலில் உற்பத்தியாகிற இன்ஸுலினை கட்டுப்படுத்தக்கூடியது இந்த கணையம் தான். கணையத்தில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அவை உங்களுக்கு சர்க்கரை நோயை அதிகரித்திடும். சர்க்கரை நோய் பிரச்சனை ஏதும் இல்லாத உங்களது எடை தொடர்ந்து குறைந்தாலும் கணையத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்பு காரணமாக இருக்கலாம்.

வாந்தி :

வாந்தி :

கொழுப்பு நிறைந்த உணவுகளை பார்த்தாலே அல்லது முகர்ந்தாலே ஒமட்டல் மற்றும் வாந்தி தோன்றிடும். ஏனென்றால் கணையத்தில் இருக்கக்கூடிய என்சைம் தான் நம் உடலில் உணவிலிருந்து பெறக்கூடிய கொழுப்பினை கரைக்கிறது. கணையத்தில் ஏதேனும் பாதிப்பு உண்டானால் கொழுப்பினை கரைப்பதிலும் பிரச்சனை உண்டாகும். அதனால் கொழுப்பு உணவுகளை பார்க்கையில் ஒமட்டல் ஏற்படுகிறது.

இப்போது கணையத்திற்கு நன்மை தருகிற உணவுகளை என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.

பெர்ரீ :

பெர்ரீ :

பெர்ரீ பழங்களான ப்ளூ பெர்ரீ,பிளாக் பெர்ரீ ஸ்ட்ராபெர்ரீ போன்ற பழங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். இதில் அதிகப்படியான ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் உள்ளன. இவை கணையத்தில் செயல்பாடுகளை அதிகரிக்கச் செய்திடும். கணையத்தின் செயல்பாடுகளை துரிதப்படுத்தவும் இது உதவிடுகிறது.

செர்ரீ :

செர்ரீ :

இவற்றுடன் செர்ரீ பழங்களும் கணையத்திற்கு மிகவும் நல்லது.செர்ரீ என்பது உணவு அலங்காரத்திற்கு பயன்படுத்தக்கூடிய ஒரு பொருள் என்று நினைத்துக் கொள்கிறார்கள். அதையும் தாண்டி செர்ரீயில் ஏரளமான மருத்துவ குணங்கள் நிரம்பியிருக்கிறது. இவை கணையத்திற்கு மிகவும் நல்லது.

இதில் பெரிலில் என்ற ஒரு சத்து இருக்கிறது இவை கணையத்தில் புற்றுநோய் வராமல் தடுத்திடும்.

பூண்டு :

பூண்டு :

பூண்டில் ஏரளமான ஆண்ட்டிசெப்டிக் துகள்கள் இருக்கிறது. இதனை எடுத்துக் கொள்வதினால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.அதோடு இவை கணையத்தின் செயல்பாடுகளுக்கும் துணை புரிந்திடும். இவற்றில் அதிகப்படியான சல்ஃபர்,செலினியம், அர்கைன்,ஃப்ளேவனாய்டு ஆகியவை இருக்கிறது. இவற்றை தொடர்ந்து உங்கள் உணவுப் பட்டியலில் சேர்த்து வர கணையத்திற்கு மிகவும் நல்லது

கீரை :

கீரை :

கீரைகளில் அதிகப்படியான விட்டமின் பி மற்றும் இரும்புச் சத்து ஆகியவை இருக்கிறது. இவை கணையத்தின் செயல்பாடுகளுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். கணையத்திற்கு அத்தியாவசியமான உணவுகளில் முதன்மையானதாக கீரையைச் சொல்லலாம்.

தயிர் :

தயிர் :

சாப்பிட்ட உணவு ஜீரணமாக்க அதிகமாக தயிர் பயன்படுத்தப்படுகிறது. இவை கணையத்திற்கும் மிகவும் நல்லதாகும். இவை ஆரோக்கியமான என்சைம்ஸை அதிகரிக்கச் செய்திடும். இதனால் கணையத்திற்கு இது அவசியமாகும். சந்தையில் கொழுப்பு குறைவான தயிர் கிடைக்கிறது அவற்றை வாங்கி நீங்கள் பயன்படுத்தலாம்.

காளான்:

காளான்:

காளானில் அதிகப்படியான செலினியம், ஃபைபர்,பொட்டாசியம் மற்றும் விட்டமின் டி ஆகியவை இருக்கின்றன . அதோடு இதில் கலோரியும் குறைவு. இதனை உங்கள் உணவுகளில் தொடர்ந்து சேர்ப்பதினால் கணையத்தில் ஏற்படுகிற புற்றுநோயை தடுக்க இது உதவிடும். கணையத்தில் ஏற்பட்டிருக்கக்கூடிய பாக்டீரியா தொற்று போன்றவற்றை நீக்கவும் காளான் உதவிடுகிறது.

ப்ரோக்கோலி :

ப்ரோக்கோலி :

பச்சை நிறக் காய்கறிகள் எல்லாமே கணையத்திற்கு நல்லது ஆகும். அவற்றில் கீரைகள் மற்றும் ப்ரோக்கோலி ஆகியவை முக்கியப் பங்காற்றுகிறது. இதில் அப்பிஜெனின் எனப்படுகிற ஃபேலவனாய்டு இருக்கிறது. இவை கணையத்தில் இருக்கிற திசுக்களுக்கு எல்லாம் வலுவூட்டும்.

 சிகப்பு திராட்சை :

சிகப்பு திராட்சை :

கருப்பு மற்றும் பச்சை நிறத்திலான திராட்சையை விட சிகப்பு திராட்சை கணையத்திற்கு மிகவும் நல்லது. கணையத்திற்கு தேவையான சத்துக்கள் என்பதையும் தாண்டி அதில் ஏரளமான விட்டமின்ஸ்,மினரல்ஸ் உட்பட எக்கச்சக்கமான சத்துக்கள் நிறைந்திருக்கிறது. இவை உங்கள் உடலுக்கு மிகவும் நல்லது. இவை கணையத்தின் செயல்பாட்டினை துரிதமாக்கும்.

இதில் ரிசவரட்ரோல் என்ற ஒரு தாது இருக்கிறது. இது ஒரு வகை ஆண்ட்டி ஆக்ஸிடண்ட். இவை கணையச் சுரப்பிகளுக்கு வலுவூட்டும். அதோடு கணையத்தில் புற்றுநோய் ஏற்படாமல் தடுத்திடும்.

 சர்க்கரை வள்ளிக்கிழங்கு :

சர்க்கரை வள்ளிக்கிழங்கு :

கணையத்தில் ஏதேனும் பிரச்சனை இருப்பதாக தெரிந்தால் நீங்கள் உடனடியாக சாப்பிட வேண்டியது சர்க்கரை வள்ளிக்கிழங்கு. இது அதன் தாக்கத்தை சட்டென கட்டுப்படுத்தும். இதைத் தவிர பீட்டா கரோட்டின் அதிகமிருக்கக்கூடிய உணவுகளான ஆரஞ்சு,கார்ன் எல்லாம் எடுத்துக் கொள்ளலாம்.

தக்காளி :

தக்காளி :

தக்காளியில் அதிகப்படியான விட்டமின் சி மற்றும் ஐகொஅபென் இருக்கிறது. அடிக்கடி தக்காளி சூப் குடிக்கலாம். இதிலிருக்கும் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட், மற்றும் நியூட்ரிசியன்கள் கணையத்திற்கு மிகவும் நல்லது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Disease In Pancreas Symptoms and Best Foods

Disease In Pancreas Symptoms and Best Foods
Story first published: Saturday, May 5, 2018, 9:27 [IST]
Desktop Bottom Promotion