For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலில் புற்றுநோய் செல்களைப் பரவாமல் தடுத்து அழிக்கும் அற்புத உணவுகள்!

இங்கு புற்றுநோய் தாக்கத்தைத் தடுக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

Recommended Video

புற்றுநோய் செல்களை தடுத்து அழிக்கும் அற்புத உணவுகள் | Cancer Prevention Through Natural Foods

உலகில் இதய நோய்க்கு அடுத்தப்படியாக மக்கள் அவஸ்தைப்படும் ஒரு நோய் தான் புற்றுநோய். இத்தகைய புற்றுநோயில் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு வகை புற்றுநோயும் ஒவ்வொரு விதமான அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகள் அனைத்தும் சாதாரணமாக நாம் சந்திக்கும் பொதுவான பிரச்சனைகள் போன்று தான் இருக்கும். அதை ஆரம்பத்திலேயே கவனித்து, முறையாக சிகிச்சை பெற்று வந்தால், புற்றுநோயினால் ஏற்படும் மரணத்தைத் தவிர்க்கலாம்.

ஆனால் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து ஒருசில உணவுகள் நம்மைப் பாதுகாக்கும் என்பது தெரியுமா? ஆம், நாம் உண்ணும் சில உணவுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தடுத்து, ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும். உங்களுக்கு அந்த உணவுகள் எவையென்று தெரிந்து கொள்ள ஆசையா? அப்படியெனில் தொடர்ந்து படியுங்கள்.

இக்கட்டுரையில் புற்றுநோயின் தாக்கத்தில் இருந்து உடலைப் பாதுகாக்கும் உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன. அதைப் படித்து அவற்றை உங்கள் அன்றாட உணவில் சேர்த்து பலன் பெறுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கேல்

கேல்

கேல் என்பது ஒருவகை கீரை. இந்த கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால், அது புற்றுநோயைக் கட்டுப்படுத்துவதோடு, தடுக்கவும் செய்யும். இது முட்டைக்கோஸ் குடும்பத்தை சேர்ந்தது. இதில் ஏராளமான அளவில் சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் உள்ள சல்போராஃபேன் மார்பக புற்றுநோயை எதிர்த்துப் போராடும். இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட் தான், புற்றுநோயை சரிசெய்யும் உணவுகளுள் சிறப்பானதாக கருத வைக்கிறது. அதிலும் ப்ராக்கோலி ஸ்புரூட்ஸ் புற்றுநோயை எதிர்த்துப் போராடுவதில் மிகச்சிறப்பானது.

க்ரீன் டீ

க்ரீன் டீ

க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள், கருப்பை, கணையம் மற்றும் வயிற்றுப் புற்றுநோயைத் தடுப்பதாக பல ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே தினமும் ஒரு கப் க்ரீன் டீயை குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

கடுகு

கடுகு

தாளிக்கப் பயன்படுத்தும் கடுகு, புற்றுநேயைத் தடுக்கும். சமீபத்திய ஆய்வில் கடுகில் பித்தப்பை புற்றுநேரயத் தடுக்கும் திறன் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதற்கு கடுகில் உள்ள டீசோதியோசையனேட்டுகள் தான் முக்கிய காரணமாகவும் சொல்லப்படுகிறது.

எலுமிச்சை

எலுமிச்சை

எலுமிச்சையில் உள்ள பெக்டின் மற்றும் லெமோனாய்டுகள் புற்றுநோய் செல்களை அழிக்கும் சத்துக்களாகும். எனவே தினமும் எலுமிச்சை ஜூஸ் குடிக்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் வாய், தொண்டை, வயிற்று புற்றுநோயின் அபாயம் குறைவதாக ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

பூண்டு

பூண்டு

பூண்டு பல்வேறு உணவுகளில் சேர்த்து சாப்பிடக்கூடிய ஒரு அற்புதமான உணவுப் பொருள். அதுமட்டுமின்றி, இதில் உள்ள மருத்துவ குணங்களால் புற்றுநோயில் இருந்து கூட விடுபட முடியும். எனவே தினமும் ஒரு பல் பூண்டு சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். தொடர்ந்து 2 வாரம் இப்படி சாப்பிட்டால், நுரையீரல் புற்றுநோயின் அபாயம் குறையும்.

இஞ்சி

இஞ்சி

பழங்காலம் முதலாக இஞ்சி பல நோய்களைக் குணப்படுத்த பயன்படுத்தப்படுகிறது. இஞ்சியையும் தேனையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட்டால், புற்றுநோய் வருவது தடுக்கப்படும். முக்கியமாக இஞ்சி ஆண்களைத் தாக்கும் புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்க்க உதவும்.

மஞ்சள்

மஞ்சள்

மசாலாப் பொருட்களுள் ஒன்றான மஞ்சளும் புற்றுநோயைத் தடுக்க உதவும். இதற்கு மஞ்சளில் உள்ள குர்குமின் என்னும் உட்பொருள் தான் முக்கிய காரணம். சில ஆய்வுகளில் மஞ்சளில் உள்ள சக்தி வாய்ந்த புற்றுநோயை எதிர்க்கும் பண்புகள் இருப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

தக்காளி

தக்காளி

தக்காளியில் இருக்கும் சக்தி வாய்ந்த லைகோபைன் என்னும் ஆன்டி-ஆக்ஸிடன்ட், நுரையீரல் மற்றும் புரோஸ்டேட் புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்க உதவும். அதிலும் தக்காளியை சோயா பொருட்களுடன் சேர்த்து எடுத்துக் கொண்டால், அது புற்றுநோயை இன்னும் சிறப்பாக எதிர்த்துப் போராடும்.

காலிஃப்ளவர்

காலிஃப்ளவர்

அன்றாட உணவில் காலிஃப்ளவரை சேர்த்து வந்தால், நிச்சயம் புற்றுநோயின் தாக்கத்தைத் தடுக்கலாம். மேலும் காலிஃப்ளவரில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. ஆகவே இதனை சேர்த்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியம் மேம்படும்.

அத்திப்பழம்

அத்திப்பழம்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளது. அதோடு இதில் உள்ள கனிமச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் இதர ஊட்டச்சத்துக்கள் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும். எனவே அத்திப்பழம் கிடைத்தால், அதை மறக்காமல் வாங்கி சாப்பிடுங்கள்.

அவகேடோ

அவகேடோ

அவகேடோவில் உள்ள அதிகளவிலான ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோயை எதிர்த்துப் போராட உதவும். அதிலும் அவகேடோவில் உள்ள கரோட்டினாய்டு புரோஸ்டேட் புற்றுநோயை எதிர்க்கும்.

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸ்

பிரேசில் நட்ஸில் செலினியம் அதிகம் உள்ளது. இது புற்றுநோய் செல்களை தற்கொலை செய்து கொள்ளத் தூண்டும் மற்றும் டி.என்.ஏ-வை சரிசெய்யவும் உதவும். ஹாவார்டு ஆய்வு ஒன்றில் புரோஸ்டேட் புற்றுநோய் கொண்ட 1,000-க்கும் அதிகமான ஆண்களின் உடலில் செலினியத்தின் அளவு அதிகம் இருந்தால், 48% புற்றுநோய் முற்றுவது தடுக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே பிரேசில் நட்ஸை ஸ்நாக்ஸ் வேளையில் தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

கிவி

கிவி

சிறிய கிவி பழத்தில் புற்றுநோயை எதிர்க்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் சி, வைட்டமின் ஈ, லுடீன் மற்றும் காப்பர் அதிகம் உள்ளது. எனவே புற்றுநோயின் அபாயத்தைக் குறைக்க நினைத்தால், கிவிப் பழத்தை அன்றாடம் ஒன்று சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ஆப்பிள்

ஆப்பிள்

ஆப்பிளில் உள்ள நார்ச்சத்து, வயிற்றில் புற்றுநோய் செல்களின் உருவாக்கத்தை எதிர்த்துப் போராடும் கெமிக்கலை உற்பத்தி செய்வதாக ஜெர்மன் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மற்றொரு ஆய்வில் ஆப்பிளில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், புற்றுநோய் செல்களை இறக்கத் தூண்டுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Cancer Prevention Through Natural Foods

Add some of these healthy foods to your diet to help prevent cancer and keep other diseases at bay.
Story first published: Wednesday, January 3, 2018, 10:38 [IST]
Desktop Bottom Promotion