For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள்!

இங்கு நீண்ட நாட்கள் ஆரோக்கியமாக இருக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகள் பட்டியலிடப்பட்டுள்ளன.

|

ஒருவரது உடலும், மனமும் ஆரோக்கியமாகவும், வலிமையுடனும், ஆற்றலுடனும் இருக்க உணவுகள் பெரிதும் உதவியாக இருக்கும். ஆனால் வயது அதிகரிக்கும் போது, உடலில் முதுமை செயல்முறை நடைபெற ஆரம்பிப்பதால், உடலின் ஆற்றல், ஆரோக்கியம் மற்றும் வலிமை குறைய ஆரம்பிக்கும். இவற்றை குறிப்பிட்ட சில உணவுகள் சரிசெய்ய உதவும்.

ஒருவரது உடல் ஆரோக்கியமாக இருக்க உணவுகள் அவசியம் என்பதால், வயது அதிகரிக்கும் போது உடலின் ஆற்றலையும் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தவும் பராமரிக்கவும் குறிப்பிட்ட சில உணவுகளை சற்று அதிகமாக சாப்பிட வேண்டும். அதே சமயம் ஒருவரது வயது அதிகரிக்கும் போது, இளம் பருவத்தில் சாப்பிட முடிந்த அளவு உணவுகளை சாப்பிட முடியாது. உணவுகள் செரிமானமாவதற்கு நீண்ட நேரம் ஆகும்.

10 Best Foods To Eat As You Age

வயது அதிகமாகும் போது போதுமான நீரைக் குடிக்க முடியாமல் போகலாம். ஏனெனில் தாகம் அதிகம் எடுக்காமல் இருக்கலாம். சில உணவுகள் உங்களுக்கு சுவையில்லாதது போன்று இருக்கலாம். இதனால் உண்ணும் உணவின் அளவு குறையலாம். சிலருக்கு உணவை மெல்லுவதற்கு கஷ்டமாக இருக்கலாம்.

எனவே தமிழ் போல்ட் ஸ்கை ஒருவரது வயது அதிகரிக்கும் போது உடல் ஆரோக்கியமாக இருக்க அவசியம் சாப்பிட வேண்டிய உணவுகளைப் பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை அன்றாடம் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி

ப்ளூபெர்ரி பழங்களில் பல்வேறு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. அதிலும் வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் சி என்னும் ஆன்டி-ஆன்ஸிடன்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. இவை உடலில் உள்ள செல்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும். ப்ளூபெர்ரியில் உள்ள ஊட்டச்சத்துக்கள், உடலுக்கு மிகவும் அத்தியாவசியமானது. ப்ளூபெர்ரி சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும், புற்றுநோயைத் தடுக்கும் மற்றும் இதய ஆரோக்கியத்தை ஊக்குவிக்கும்.

நார்ச்சத்துள்ள உணவுகள்

நார்ச்சத்துள்ள உணவுகள்

டயட்டரி நார்ச்சத்துக்கள் நிறைந்த காய்கறிகள், முழு தானியங்கள், பழங்கள் மற்றும் பருப்பு வகைகளை வயது அதிகரிக்கும் போது சற்று அதிகமாக சாப்பிட வேண்டும். ஏனெனில் இச்சத்துக்கள் செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கை வகிக்கிறது. டயட்டரி நார்ச்சத்து மலச்சிக்கலைத் தடுக்க உதவுவதோடு, கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தம் மற்றும் உடலினுள் ஏற்படட அழற்சியையும் குறைக்கும்.

கொழுப்பு நிறைந்த மீன்கள்

கொழுப்பு நிறைந்த மீன்கள்

இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொழுப்பு நிறைந்த மீன்களான சால்மன், கானாங்கெளுத்தி, மத்தி போன்றவற்றில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இவை இதய நோய் மற்றும் பக்கவாதம் வருவதைத் தடுக்க உதவும். ஆகுவே வாரத்திற்கு குறைந்தது 2 முறையாவது மீன்களை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஆலிவ் ஆயில்

ஆலிவ் ஆயில்

சமையலில் ஆலிவ் ஆயிலை சேர்த்துக் கொண்டால், அது உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க உதவும் மற்றும் நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்த உதவும். ஆகவே வயது அதிகரிக்கும் போது, சமையலில் கண்ட எண்ணெய்களை சேர்த்துக் கொள்ளாமல், ஆலிவ் ஆயிலை சேர்த்துக் கொள்ளுங்கள்.

தயிர்

தயிர்

ஒருவரது வயது அதிகக்கும் போது, எலும்புகளின் அடர்த்தி குறைய ஆரம்பிக்கும். தயிரில் ஏராளமான அளவில் கால்சியம் உள்ளது. ஆகவே தயிரை அன்றாடம் சேர்த்து வந்தால், எலும்புகளின் அடர்த்தி குறைவதைத் தடுக்கலாம். மேலும் தயிர் உணவை செரிமானம் செய்வதற்கு உதவும் மற்றும் தயிரில் புரோட்டீனும் உள்ளது. ஆகவே தினமும் தயிர் சாதம் சாப்பிடுங்கள்.

தக்காளி

தக்காளி

தக்காளியில் லைகோபைன் அதிகம் உள்ளது. இந்த கெமிக்கல் புரோஸ்டேட் புற்றுநோய் வராமல் தடுக்க உதவும் மற்றும் நுரையீரல் புற்றுநோய் வராமலும் தடுக்கும். அதிலும் தக்காளியை ஜூஸ், பேஸ்ட் வடிவில் எடுப்பதை விட, பச்சையாக அப்படியே சாப்பிடுவது மிகவும் நல்லது. ஆகவே தினமும் ஒரு தக்காளி சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

ரெட் ஒயின்

ரெட் ஒயின்

ரெட் ஒயின் கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க, இரத்தம் உறைவதைத் தடுக்க, இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும். அதிலும் ஒருவர் ரெட் ஒயினை மிதமான அளவில் குடித்து வந்தால், நல்லது. அதில் பெண்களுக்கு ஒரு டம்ளரும், ஆண்களுக்கு 2 டம்ளரும் சிறப்பானதாக கருதப்படுகிறது.

ப்ராக்கோலி

ப்ராக்கோலி

ப்ராக்கோலியில் அனைத்து வகையான வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளது. முக்கியமாக ப்ராக்கோலியில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. ஆகவே இதனை அடிக்கடி சமைத்து சாப்பிட்டால், அது குறிப்பிட்ட வகையான பற்றுநோயைத் தடுக்கும்.

நட்ஸ்

நட்ஸ்

நட்ஸில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், நார்ச்சத்து மற்றும் புரோட்டீன் போன்றவை ஏராளமான அளவில் உள்ளது. இதில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஊட்டச்சத்துக்கள் ஏராளமான அளவில் உள்ளது. ஆகவே நட்ஸ்களான பாதாம், முந்திரி, ஹாசில் நட்ஸ், மகாடாமியா நட்ஸ், வேர்க்கடலை மற்றும் வால்நட்ஸ் போன்றவற்றை ஸ்நாக்ஸாக சாப்பிடுங்கள். வாரத்திற்கு 5 வகையான நட்ஸை தவறாமல் சேர்த்துக் கொள்ளுங்கள்.

பலவண்ண பழங்கள் மற்றும் காய்கறிகள்

பலவண்ண பழங்கள் மற்றும் காய்கறிகள்

சிவப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் வளமான அளவில் நிறைந்துள்ளது. மேலும் இந்த நிற பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின்கள் மற்று ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் ஏராளமாக உள்ளது. ஆகவே ப்ளூபெர்ரி, ராஸ்ப்பெர்ரி, செர்ரி, பசலைக்கீரை, கேல் போன்றவற்றை அடிக்கடி சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Best Foods To Eat As You Age

Eating well helps in keeping your body strong, your mind sharp, and your energy levels up as you age. Read this article to know the best foods to eat as you age.
Story first published: Friday, March 30, 2018, 13:35 [IST]
Desktop Bottom Promotion