Latest Updates
-
வாஸ்து செடிகள்: 42°C வெயிலிலும் வீட்டை ஜில்லுனு வச்சுக்கணுமா? இந்த செடிகள் இருந்தா போதும்! -
5 லட்சம் ஆண்டுகளுக்கு ஆதி மனிதர்கள் இந்தியாவில் வாழ்ந்த 5 இடங்கள் - தமிழ்நாட்டின் ஒரு இடமும் இதில் இருக்காம் -
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த வாஸ்து ரகசியங்கள் தெரியுமா? வீட்டை குளிர்ச்சியாக வைத்து அதிர்ஷ்டத்தை அள்ளுங்கள்! -
நார்த் இந்தியன் ஸ்டைல் தக்காளி சிக்கன் கிரேவி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க, வேற லெவலில் இருக்கும் -
வார ராசிபலன் (26 April 2026 - 02 May 2026) - இந்த வாரம் இந்த 4 ராசிகளுக்கு மனஅழுத்தம் நிறைந்த வாரமாக இருக்கும் -
இன்றைய ராசிபலன் 26 ஏப்ரல் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு ஜாலியான நாளாக இருக்குமாம் -
மே மாதத்தில் நடக்கும் கிரக பெயர்ச்சிகளால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
வெயில் கொடுமை! திருமணத்தை மாற்ற முடியாமல் தவிக்கிறீர்களா? இந்த 5 டிப்ஸ் உங்கள் விழாவை காப்பாற்றும்! -
1/4 கப் தனியா இருந்தா இந்த வித்தியாசமான சட்னியை அரைங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமாக இருக்கும் -
வட இந்தியத் திருமணங்கள்: சுட்டெரிக்கும் வெயிலில் சிக்கித் தவிக்கும் கொண்டாட்டங்கள் - இதோ சில அதிரடி மாற்றங்கள்!
ரத்த அழுத்தம் சரியாக பராமரிக்க இது மிகவும் அவசியம்!
பயோட்டின் அதிகமிருக்கும் உணவுகள் எடுத்துக் கொள்வதினால் என்னென்ன நன்மைகள், எந்த உணவுகளில் எல்லாம் பயோட்டின் அதிகமாக இருக்கிறது
செல்களின் வளர்ச்சிக்கும் அவற்றின் சீரான செயல்பாட்டிற்கும் மிகவும் அவசியமான ஒரு சத்து என்றால் அது பயோட்டின் தான். இது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும். அதோடு தேவையான அளவிலிருந்து மிகவும் சொற்ப அளவில் உற்பத்தியாகக்கூடிய ஃபேட்டி அமிலத்தையும் இது உற்பத்தி செய்திடும்.
பயோட்டின் உங்கள் உடலில் குறைந்தால் சருமம் பாதிப்படையும், தலைமுடி அதிகமாக கொட்டும், நகங்கள் அடிக்கடி உடையும் அதனை வைத்தே உங்கள் உடலில் பயோட்டின் குறைந்து விட்டிருக்கிறது என்பதை கண்டுபிடிக்கலாம். அதே போல எப்போதும் சோர்வாகவே உணர்வீர்கள் நாள் முழுவதும் தூக்க கலக்கத்தில் இருப்பது போலவே தோன்றிடும்.

நன்மைகள் :
70 ஆண்டுகளுக்கு முன்பு தான் பயோட்டின் என்ற ஒரு சத்து உடலில் இருப்பதும் அதன் அவசியம் குறித்தும் ஆய்வாளர்கள் கண்டறிந்தார்கள். தலைமுடி,சருமம் மட்டுமல்லாது கல்லீரல், நரம்புகள், கண்கள் ஆகியவற்றுக்கு பயோட்டின் அவசியமாகிறது.
இது உடலுக்கு எனர்ஜியை கொடுப்பதோடு மட்டுமின்றி கொழுப்பையும் கார்ப்ஸையும் உடைத்து அதனை குளுக்கோஸாக மாற்றுகிறது. அது தவிர தேவையான அமினோ அமிலங்கள் உற்பத்தியாக வழிவகுக்கிறது.

பாதாம் :
பயோட்டின் அதிகமிருக்கும் உணவுகளில் முதன்மையானது பாதாம். இதில் பயோட்டினைத் தவிர விட்டமின் இ மற்றும் ப்ரோட்டீன் ஆகியவை இருக்கிறது. இது சருமத்தை பாதுக்காக்க உதவிடும்.
ஸ்நாக்ஸுக்கு பதிலாக பாதாம் எடுத்துக் கொள்ளலாம். மேலும் இதில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் கால்சியம் ஆகியவை இருக்கிறது. இது சாப்பிடுவதால் கலோரி அதிகம் என்பதால் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

கேரட் :
இதில் பயோட்டீன் மட்டுமல்லாது பீட்டா கரோட்டினும் அதிகமாக இருக்கிறது. பொதுவாக காரட் சாப்பிட்டால் கண்களுக்கு மிகவும் நல்லது என்று சொல்வது இதனால் தான்.
கேரட் ஜூஸ் எடுத்து குடிக்காமல் பச்சையாக அப்படியே சாப்பிடுங்கள். அது மிகவும் நல்லது.

மீன் :
மீன் வகைகளை நிறைய சாப்பிடுங்கள். இவற்றில் ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் இருக்கிறது. இது எடுத்துக் கொள்வதினால் நம் ரத்த நாளங்களில் கொழுப்பு படிவது தடுக்கப்படும். இதனால் ரத்த ஓட்டம் சீராக இருக்கும்.
எண்ணெயில் பொறித்த மீன்களை சாப்பிட வேண்டாம், இது உடலுக்கு தீங்கினை ஏற்படுத்தும்.

வால்நட் :
நட்ஸ் வகைகளில் ஒன்றான வால்நட் சாப்பிடுவதால் தலைமுடி உதிர்வு தவிர்க்கப்படும். இதிலும் ஃபேட்டி அமிலம் அதிகமாக இருக்கிறது. அதனால் குறிப்பிட்டு அளவு எடுத்துக் கொண்டாலே போதுமானது. அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொண்டால் உடல் நலனுக்கு பிரச்சனை தான்.
இதிலிருந்து உங்களுக்கு ஆண்ட்டிஆக்ஸிடண்ட், ஜிங்க், பொட்டாசியம், இரும்புச்சத்து, கால்சியம் மற்றும் ப்ரோட்டீன் ஆகியவை கிடைத்திடும். முக்கியமாக உடலில் இருக்கும் செல்கள் எல்லாம் சுறுசுறுப்பாக இயங்க வைத்திடும்.

கீரை வகைகள் :
நட்ஸ் சாப்பிட முடியவில்லை அதே நேரத்தில் அசைவ உணவுகளும் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் உங்களது பெஸ்ட் சாய்ஸ் கீரை வகைகள் தான்.
கீரைகளில் ப்ரோட்டீன் மற்றும் பயோட்டீன் அதிகளவு கிடைத்திடும். தினம் ஒரு கீரை வகையை சமைத்து சாப்பிடலாம்.

தயிர் :
தயிரில் ப்ரோட்டீன் மற்றும் பயோட்டின் இருக்கிறது. அதிகம் புளிப்பாக இல்லாது ஃபிரஷ்ஷாக சாப்பிடுவது நல்லது. இதை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதினால் உணவு செரிமானம் ஆவதுடன் தலைமுடி மற்றும் நகங்களின் வளர்ச்சி வேகமாக இருக்கும்.
அசைவ உணவு சாப்பிடுபவர்கள் சிக்கன் சாப்பிடலாம்.

முட்டை :
ஹேர் பேக் போடும்போது பல நேரங்களில் அதில் முட்டை சேர்க்க சொல்லியிருப்பார்கள் அதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா? அதில் அதிகப்படியான பயோட்டீன் இருப்பது தான். தலைமுடி வளர்ச்சிக்கு பயோட்டின் மிகவும் அத்தியாவசியமான ஒன்று. அதைத் தவிரவும் அதில் ஏராளமான சத்துக்கள் அடங்கியிருக்கிறது என்பதால் முட்டையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆஃப்பாயிலாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பால் மற்றும் பால் சார்ந்த பொருட்கள் :
பாலில் கால்சியம் மட்டுமல்ல பயோட்டினும் அதிகமாகவே இருக்கிறது. பால், தயிர், மோர், வெண்ணெய், சீஸ் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.
இதில் சில உடலில் கொழுப்பு அதிகரித்திடும் என்பதால் அவற்றை பயன்படுத்தும் போது கவனமாக இருக்கவும்.

சோயாபீன்ஸ் :
பத்து கிராம் அளவு சோயாபீன்ஸ் சாப்பிடுவதினால் உங்களுக்கு 60 மில்லி கிராம் அளவு பயோட்டின் கிடைத்திடும். இது பெண்களுக்கு மிகவும் நல்லது இது உடலில் ஏற்படுகிற புற்றுநோய் தாக்கத்தினை குறைத்திடும்.
கெட்ட கொழுப்பை குறைக்க உதவிடும் என்பதால் இதயம் சார்ந்த பிரச்சனைகளை தவிர்க்க உதவிடுகிறது.

பெர்ரீஸ் :
ஸ்ட்ராபெர்ரீ உள்ளிட்ட பெர்ரீ பழங்களை அடிக்கடி சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் அதிகம் இருக்கிறது இவை ஒட்டுமொத்த தலைமுடி வளர்ச்சிக்கு பெரிதும் துணை நிற்கிறது.
அதைத் தவிர இவை உடலின் சர்க்கரை அளவை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

காளாண் :
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது.இதில் பயோட்டீன் மட்டுமல்லாது மினரல்ஸ் மற்றும் ஏராளமான நியூட்ரிசியன்கள் இருக்கிறது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதினால் உடல்நலம் மட்டுமல்லது உங்களது தலைமுடி மற்றும் நகங்கள் ஆரோக்கியமாக வளரும்.
மஸ்ரூம் ஃப்ரையாக எடுத்துக் கொள்ள வேண்டாம்.

காலிஃப்ளவர் :
காய்கறி மற்றும் பழங்களை அதிகமாக எடுத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக காலிஃப்ளவர் சாப்பிடலாம். இது நம் உடலில் இருக்கிற டாக்சின்களை சீர்படுத்தும். கல்லீரலுக்கு வலுவூட்டும். கர்ப்பம் வளர உறுதுணையாய் இருக்கிறது. இதில் பயோட்டீனை தவிர காப்பர், நியாசின்,ஜிங்க், மக்னீஸ், கால்சியம்,பொட்டாசியம், சோடியம், விட்டமின்கள் கே, சி, இ மற்றும் ஏ ஆகியவை அடங்கியிருப்பதால் நீங்கள் தாராளமாக சாப்பிடலாம்.

வாழைப்பழம் :
வாழைப்பழம் அடிக்கடி எடுத்துக் கொண்டால் அது உடல் நலனுக்கு நன்மை ஏற்படுவதுடன் உங்களது மனதுக்கும் உற்சாகம் அளிக்கிறது. இதயம் சார்ந்த பிரச்சனைகளிலிருந்து தப்பிக்க இது உதவிடுகிறது.
ரத்த அழுத்தம் சரியான அளவில் பராமரிக்க இது உதவிடுகிறது. மேலும் இது சாப்பிடுவதால் உணவு செரிப்பதுடன் எனர்ஜியை கொடுத்திடும்.



Click it and Unblock the Notifications