Just In
- 3 hrs ago
கட்டுக்கடங்காமல் ஓடும் குதிரையை கட்டுப்படுத்த இந்த இளைஞர் செய்யும் வேலையை நீங்களே பாருங்களேன்…!
- 3 hrs ago
அகோரிகள் ஏன் மனித உடல்களை சாப்பிடுகிறார்கள் தெரியுமா? ஷாக் ஆகாம படிங்க...!
- 8 hrs ago
இன்னைக்கு இந்த மூன்று ராசிக்காரங்களுக்கு பெரிய ஆபத்து காத்திருக்கு... உங்க ராசியும் இதுல இருக்கா?
- 21 hrs ago
2019ஆம் ஆண்டு ட்விட்டரை தெறிக்கவிட்ட ஹேஷ்டேக்குள்… பிகிலுக்கு எத்தனையாவது இடம் தெரியுமா?
Don't Miss
- Movies
நடிப்புக்கு கொஞ்சம் ரெஸ்ட்... இப்போ ஃபுல்லா பாட்டுல இறங்கிட்டேன்... பா. விஜய்
- News
பிரதமர் மோடிதான் மன்னிப்பு கேட்க வேண்டும்... பிளேட்டை திருப்பி போட்ட ராகுல்
- Technology
விவோ Z1 ப்ரோ மாடலுக்கு மீண்டும் விலைகுறைப்பு.!
- Sports
எங்க போனாலும் விட மாட்டேன்.. கோலியை துரத்தும் வெ.இண்டீஸ் வீரர்.. ஐபிஎல் அணியின் மாஸ்டர் பிளான்!
- Finance
ஆர்பிஐ எச்சரிக்கை.. வரவிருக்கும் பிரச்சனைகளை சமாளிக்க தயாராகுங்கள்.. வங்கிகளுக்கு வேண்டுகோள்..!
- Automobiles
சொன்னா நம்ப மாட்டீங்க படத்துல இருக்க காரைவிட நம்பர் பிளேட் விலை அதிகம்... எவ்வளவு தெரியுமா..?
- Education
IBPS SO 2019: ஐபிபிஎஸ் தேர்வுக்கான ஹால் டிக்கட் வெளியீடு!
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
உடல் எடையை சட்டென குறைக்கணுமா..? அதற்கு மாயன்கள் கூறும் சியா விதைகளே போதும்..!
ஒவ்வொரு பழங்கள் மற்றும் காய்கறிகளில் உள்ள விதைகள் பல வித நன்மைகளை நமக்கு தருகின்றது. பொதுவாகவே எல்லா வகையான விதைகளிலும் ஏதோ ஒரு மருத்துவ குணமோ அல்லது சமையல் பயன்பாடோ இருக்கத்தான் செய்யும். பல விதைகளின் பயன்களை அறிந்திராமலே நாம் அவற்றை பயன்படுத்தி வருகின்றோம். குறிப்பாக இந்த சியா விதைகளை அந்த பட்டியலில் சேர்த்து கொள்ளலாம்.
சியா விதைகள் எண்ணற்ற நலன்களை கொண்டதாக ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். இந்த சியா விதைகள் உடல் பருமன் முதல் சர்க்கரை நோய் வரை அனைத்திற்கும் உதவுகிறது. இவற்றின் முழு பயன்பாட்டையும் பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

மாயன்களின் சியா..!
பழமையான வரலாற்றில் இடம்பெற்றுள்ள இந்த சியா விதைகளின் பெருமையை நம்மில் பலர் அறிந்திருக்க மாட்டோம். சியா விதையை மாயன் காலத்தில் இருந்தே பயன்படுத்தி வருகின்றனர். மாயன்களின் மொழியில் சியா என்பதற்கு "பலம்" என்று அர்த்தமாம். பல வகையான ஊட்டச்சத்துக்களை இந்த சியா விதைகள் கொண்டுள்ளது.

சியா எப்படி நமக்கு நல்லது..?
சியா விதைகள் புதினா குடும்பத்தை சார்ந்ததாம். இவை பார்ப்பதற்கு சிறியதாக இருந்தாலும், இவற்றின் நன்மைகள் பெரியதாக இருக்கிறதாம். 28 கிராம் விதைகளில் உள்ள ஊட்டசத்துக்கள் இதோ...
புரதம் 4.4 g
கால்சியம் 17 mg
பொட்டாசியம் 44.8mg
சோடியம் 5.3mg
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் 4915mg
ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள் 1620mg
பாஸ்பரஸ் 265mg

சர்க்கரை நோயை தடுக்கும் சியா..!
சியா விதைகளை சாப்பிட்டு வந்தால் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்து கொள்ளலாமாம். அமெரிக்கா வேளாண்மை ஆராய்ச்சியில் சர்க்கரை நோயின் மருத்துவத்தில் இந்த சியா விதைகள் முக்கிய இடம் பிடிக்கிறதாம். மேலும், நல்ல பசியை தூண்டி மலச்சிக்கலை தடுக்குமாம்.

புற்றுநோய்க்கு எப்படி..?
இந்த சியா விதையில் alpha-linoleic acid என்கிற அமிலங்கள் உள்ளது. இவை மார்பக புற்றுநோய் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டதாம். சியா விதைகளில் இருந்து தயாரிக்கப்படுகிற எண்ணெய் புற்றுநோய் செல்களின் உற்பத்தியை தடை செய்ய பயன்படுகிறது.
MOST READ: எவ்வளவு சாப்பிட்டாலும் உடல் எடை கூடாமல் இருக்க இவற்றை சாப்பிட்டாலே போதும்...!

குண்டு உடல் இளைக்க...
இந்த சியா விதைகளை மிக முக்கியமாக உடல் பருமன் இருப்பவர்கள் பயன்படுத்துவர். உடல் எடையை குறைக்க மற்றவற்றை காட்டிலும் இந்த சிறிய சியா விதைகள் உதவும் என ஆராய்ச்சிகள் சொல்கிறது. தினமும் 25 to 38g சியா விதைகளை சாப்பிட்டு வந்தால் அவை பல கிலோக்களை உங்களின் உடலில் இருந்து குறைத்து விடுமாம்.

எதிர்ப்பு சக்தியை இரட்டிப்பாக்க...
எதிர்ப்பு உடலில் குறைவாக இருப்பதால் அடிக்கடி உடல்நலம் பாதிக்கபடுகிறதா..? இந்த கவலையை சரி செய்ய சியா விதைகள் போதுமே. இவற்றில் எண்ணற்ற ஆன்டி ஆக்ஸிடண்ஸ் உள்ளதாம். எனவே, உடலின் செல்களை புத்துணர்வூட்டிநோய் கிருமிகளை எதிர்த்து போராட வைக்கும்.

கொலஸ்டரோலை கச்சிதமாக வைக்க...
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இந்த சியா விதைகளில் அதிகம் உள்ளன. இவை ரத்தத்தில் உள்ள கொலெஸ்ட்ரோலில் அளவை குறைக்க பெரிதும் உதவுகிறது. இதனால், இதய நோய்களில் இருந்து நீங்கள் எளிதாக தப்பித்து கொள்ளலாம்.

சுறுசுறுப்பான உடலிற்கு...
நீங்கள் சிறிது வேலை செய்தவுடன் சோர்வாக உள்ளீர்களா..? இனி இந்த சோர்வையெல்லாம் தூக்கி போட்டுவிடும் இந்த விதைகள். மெக்னீசியம், ஜின்க், இரும்பு சத்து, வைட்டமின் பி போன்றவை அதிகம் இதில் இருப்பதால் உடலை சுறுசுறுப்பாக வைத்து கொள்ளும். இதற்கு இந்த விதைகளை மில்க்ஷேக்குகளில் கலந்து குடித்தாலே போதும்.
MOST READ: குருபெயர்ச்சியின் தாக்கத்தால் கொஞ்சம் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய ராசிக்காரர் யார்

நீண்ட இளமைக்கு...
ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் இவற்றில் அதிகம் உள்ளதால் ரத்த ஓட்டத்தை சீராக வைத்து கொள்கிறது. மேலும், சருமத்தில் உள்ள வறட்சி தன்மையை இவை போக்குகிறதாம். குறிப்பாக இவை சூரியனிடம் இருந்து வரும் புற ஊதா கதிர்களிடம் இருந்து நம்மை காக்கும். மேலும், முகத்தில் உள்ள சுருக்கங்கள், வீக்கங்கள் ஆகியவற்றை குணப்படுத்தும்.

ஹார்மோன்களை சீர்செய்யும் சியா..!
ஒரு நாளைக்கு 20g முதல் 40g அளவு சியா விதையை எடுத்து கொண்டாலே ஹார்மோன் பிரச்சினைகள் தீர்ந்து விடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.குறிப்பாக இவை serotonin மற்றும் melatonin என்கிற இரு முக்கிய ஹார்மோன்களை சுரக்க செய்து நிம்மதியான தூக்கத்தை தருகிறதாம்.

பற்களின் உறுதிக்கு...
சியா விதைகளில் அதிக அளவில் கால்சியம் இருப்பதால் இவை பற்களின் வலிமையை அதிகரிக்க உதவும். அத்துடன் எலும்புகளின் பலத்தையும் இவை கூட்டும். மூட்டு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளோர்க்கு இந்த சியா விதைகள் நல்ல பலனை தரும்.
இது போன்ற பயனுள்ள புதிய தகவல்களை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.