For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத படிச்சீங்கன்னா தினமும் வாழைத்தண்டு சாப்பிடணும்னு அடம்பிடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...

வாழைத்தண்டினால் உண்டாகும் ஆரோக்கிய நன்மைகள் பற்றியும் அசிடிட்டியை போக்கும் முறை பற்றியும் இங்கே விளக்கப்பட்டுள்ளது.

By
|

வாழைத்தண்டு ஆரோக்கியம் நிறைந்த உணவுப்பொருள் (காய்கறி வகைகளுள் ஒன்று) என்பது நமக்கு நன்கு தெரியும். ஆனாலும் இதில் என்னென்ன மருத்துவ குணங்கள் உள்ளன என்பது நம்மில் நிறைய பேருக்கு தெரியாது.

amazing health benefits of banana stem for acidity

ஆரோக்கியம் என்று தெரிந்தாலும் கூட, வாழைத்தண்டு அதிகமாகத் துவர்க்கும் தன்மை கொண்டதால், நாம் அதை சாப்பிடுவதில்லை. ஆனால் துவர்ப்பை கொஞ்சம் பொறுத்துக் கொண்டு, வாழைத்தண்டு சாறினைக் குடித்தால் என்னென்ன அற்புதமான நன்மைகள் இருக்கின்றன என்று தெரிந்தால், தினமும் குடிக்க ஆரம்பிச்சிடுவீங்க...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கழிவுகள் வெளியேறும்

கழிவுகள் வெளியேறும்

வாழைத்தண்டு சாறினையோ அல்லது பொரியலாகவோ கூட்டாகவோ உணவில் தொடர்ந்து ஏதேனும் ஒரு வடிவில் எடுத்துக் கொண்டே வந்தீர்கள் என்றால், உங்கள் உடலில் உள்ள தேவையில்லாத நச்சுக் கழிவுகள் வெளியேறும். உடல் புத்துணர்ச்சியாகவும் லேசாகவும் மாறிவிடும்.

சிறுநீரக கற்கள்

சிறுநீரக கற்கள்

வாழைத்தண்டு சாறினை காலையில் வெறும் வயிற்றில் தினமும் குடித்து வந்தால், விரைவில் சிறுநீரகக் கற்கள் கரைந்து விடும் அல்லது சிறுநீரின் வழியே வெளியேறிவிடும் என்பது நமக்குத் தெரியும். சிலர் துவர்ப்பு அதிகம் இருப்பதால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்வார்கள். அப்படி குடிக்கும் வாழைத்தண்டு ஜூஸில் இரண்டு பச்சை ஏலக்காயை தட்டிப் போட்டுக் கொள்ள வேண்டும். இப்படி குடிக்கும்போது கற்கள் உள்ளிருக்கும்போதும், வெளியேறும்போது ஏற்படுகின்ற வலி கட்டுப்படும்.

இதேபோல், வாழைத்தண்டு ஜூஸில் சிறிது லெமன் ஜூஸ் சேர்த்து குடித்து வந்தால் சிறுநீர் கற்கள் தோன்றவே தோன்றாது. எப்படியென்று தெரியுமா? வாழைத்தண்டில் உள்ள பொட்டாசியம் மற்றும் எலுமிச்சையில் உள்ள சிட்ரிக் அமிலம் இரண்டும் சேர்ந்து, பொட்டாசியம் சிட்ரேட்டாக மாறிவிடும். இது கிட்னியில் கற்கள் உருவாகாமல் பாதுகாக்கும்.

MOST READ: திருமணமான ஆண், பெண் செய்யக் கூடாத 16 விஷயங்கள்!

எடையை குறைக்க

எடையை குறைக்க

உடல் எடையைக் குறைக்க பலருமு் பல்வேறு வழிகளைப் பின்பற்றுவார்கள். ஆனால் வாழைத்தண்டு சாறு குடிப்பதன் மூலமும் உடல் எடையைக் குறைக்க முடியும். வேகமாக உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இது மிகவும் நல்ல பலன்களைத் தரும்.

பசியின்மை

பசியின்மை

வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், சாறாகவோ அல்லது மற்ற விதங்களில் உணவாக சமைத்தோ சாப்பிட்டு வந்தால், அதிகமாகப் பசி எடுக்காது. அதனா்ல கண்ட நேரங்களில் நொறுக்குத் தீனி சாப்பிடுவது குறையும்.

தொப்பை குறைய

தொப்பை குறைய

வாழைத்தண்டில் அதிக அளவில் நார்ச்சத்து கொழுப்பைக் குறைக்கும் ஆற்றல் கொண்டது. குறிப்பாக அடிவயிற்றுப் பகுதியில் இருக்கும் அதிகப்படியான கொழுப்பை வேகமாகக் கரைக்கும். வாழைத்தண்டுடன் இஞ்சி சாறினையும் சேர்த்து வாரத்துக்கு இரண்டு முறை வந்தால், நல்ல பலன் கிடைக்கப் பெறலாம்.

அசிடிட்டி

அசிடிட்டி

சிலருக்கு லேசான உணவுகள் சாப்பிட்டாலும், சிலருக்கோ என்ன சாப்பிட்டாலும் ஜீரணமே ஆவதில்லை. அடிக்கடி ஜீரணக் கோனாறால் அவதிப்படுகிறவர்கள் வாழைத்தண்டினை சமைத்தோ சாறாகவோ சாப்பிட்டு வர, விரைவில் பலன் உண்டாகும். உடலில் உள்ள கழிவுகள் வெளியேறுவதால், உணவு ஜீரணாவதற்கான அமிலங்கள் சரியான முறையில் உற்பத்தியாகும். அஜீரணக் கோளாறுகள் நீங்கும். உணவு செரிமானச் சக்தி அதிகரிக்கும்.

MOST READ: இந்த பொருட்களை வீட்டில் வைத்திருந்தால், நஷ்டம், சண்டை, வறுமை வரும் தெரியுமா?

சர்க்கரை நோய்

சர்க்கரை நோய்

வாழைத்தண்டு சர்க்கரை நோய்களுக்கு மிகச்சிறந்த தீர்வாக இருக்கும். நம்முடைய உடலில் சுரக்கின்ற இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதிலுள்ள சுவர்ப்பு சுவை தான் சர்கு்கரை நோய்க்கான இயற்கை மருந்துாக அமைகிறது. சிறுநீரகம் பழுதடையாமல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால், முதலில் நம்முடைய உடலின் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

ரத்தசோகை

ரத்தசோகை

கீரை, பேரிச்சம்பழம், முருங்கை போன்ற இரும்புச்சத்துடைய உணவுகள் நிறைய இருந்தாலும், சிலருக்கு ரத்தசோகை வந்துவிடுவதுண்டு. வாழைத்தண்டில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதோடு, வைட்டமின் பி6 ம் அதிக அளவில் இருக்கிறது. அதனால் ரத்தத்தில் ஹீமாகுளோபின் அளவினை அதிகரிக்கச் செய்து ரத்த சோகையை குணமாக்குகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

amazing health benefits of banana stem for acidity

here we are giving a list of amazing health benefits of banana stem for acidity.
Desktop Bottom Promotion