For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  குங்குமப்பூ பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள்

  |

  குங்குமப்பூ என்பது உலகப்புகழ் பெற்ற ஒரு பொருளாகும். இதனை பற்றி கேள்விப்படாதவர்கள் மிகவும் குறைவே, பெண் கருவுற்றிருக்கும் போது குங்குமப்பூவை உணவில் சேர்த்து கொண்டால் பிறக்கும் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் நிலவிவருகிறது. இது உண்மையா பொய்யா என்று கூட யோசிக்காமல் பெண்கள் கற்பமானவுடனேயே குங்குமப்பூ கொடுப்பது நம் சமூகத்தில் இன்றும் நடந்து கொண்டிருக்கும் ஒன்று.

  How to buy good saffron?

  குங்குமப்பூ சாப்பிட்டால் குழந்தை சிவப்பாக பிறக்கும் என்பது கட்டுக்கதை என அறிவியல் பூர்வமாக நிரூபிக்க பட்டுவிட்டது. இது ஒருவேளை உண்மையென்றால் உலகில் கருப்பு என்னும் நிறமே இப்போது இருந்திருக்காது. ஆனால் அதற்காக குங்குமப்பூ சாப்பிடக்கூடாது என்று அர்த்தமல்ல. நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு இது எண்ணற்ற ஆரோக்கிய பலன்களை வழங்கக்கூடியது. ஆனால் இதில் பல பக்கவிளைவுகளும் உள்ளது. குங்குமப்பூவின் நன்மை மற்றும் தீமைகளை இங்கு பார்க்கலாம்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
  குங்குமப்பூ

  குங்குமப்பூ

  குங்குமபூவோட மலரிலிருக்கும் மகரந்தத்தை தான் நாம் குங்குமப்பூ என்று சாப்பிட்டு கொண்டிருக்கிறோம். இந்த பூ பெரும்பாலும் ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களில்தான் அதிகமா பூக்கும். இரண்டு இலட்சம் மலர்களில் இருந்து 1 கிலோ குங்குமப்பூ மட்டும்தான் தயாரிக்க முடியும். தரமான குங்குமப்பூ தயாரிக்க அதிக காலம் தேவைப்படும், அதனால் இதன் விலையும் மிக அதிகம். உலகத்தில் விலையுயர்ந்த மசாலா பொருட்களில் குங்குமப்பூ இருப்பதில் ஆச்சரியமில்லை. ஒருவேளை உங்களுக்கு விலை குறைவா குங்குமப்பூ கிடைச்சா நிச்சயம் அது தரமான குங்குமப்பூவா இருக்காது.

  வகைகள்

  வகைகள்

  குங்குமப்பூ இந்தியாவில் காஷ்மீரில் மட்டும்தான் விளைகிறது. அதைத்தவிர ஸ்பெயின், கிரீஸ் போன்ற நாடுகளில் அதிகளவு விளைகிறது. பண்டைய காலத்தில் படைவீரர்கள் தரமான குங்குமப்பூவை வாங்குவதற்காக ஆபத்தான பயணங்களில் ஈடுபட்டதாக வரலாறு கூறுகிறது. உலகப்புகழ் பெற்ற அழகி கிளியோபாட்ரா கூட அதிகளவு குங்குமப்பூ உபயோகித்ததாக வரலாறு உள்ளது. உலகளவில் ஸ்பெயின் நாட்டு குங்குமப்பூவிற்கு அதிக வரவேற்பு உள்ளது. குங்குமப்பூவில் பல வகைகள் உள்ளது, அவற்றில் சில முக்கியமான வகைகள் பத்மகாதி, பராசிகா, மதுகந்தி, பாதிகா, சர்கோல்.

  சத்துக்கள்

  சத்துக்கள்

  குங்குமப்பூ 90 க்கும் மேற்பட்ட நோய்களை குணப்படுத்தக்கூடியது. இதிலுள்ள ஆன்டி ஆக்சிடன்ட்களும், கரோட்டினும் அதிக நன்மைகளை தரக்கூடியது. இதில் வைட்டமின் சி மற்றும் மங்கனீசு எலும்புகளை பலப்படுத்தவும், திசுக்களை சரிசெய்யவும், செக்ஸ் ஹார்மோன்களை தூண்டவும் பயன்படுகிறது. நிறத்தை அதிகரிக்க இது உதவாவிட்டாலும் இதன் மற்ற நன்மைகளுக்காக கர்ப்பிணி பெண்களுக்கு கொடுக்கலாம். கர்ப்பிணி பெண்கள் குங்குமப்பூ கலந்த பாலை குடிப்பதன் மூலம் குழந்தைகளின் வளர்ச்சி முழுமையடையும். மற்றவர்களும் இதனை தாராளமாக குடிக்கலாம். இது ஏராளாமான நன்மைகளை தரவல்லது.

  பார்வைத்திறன்

  பார்வைத்திறன்

  ஸ்பெயின் நாட்டு பல்கலைக்கழகம் குங்குமப்பூ பார்வைத்திறனை பாதுகாப்பதோடு விழித்திரையை சீரமைக்கவும் உதவும். குங்குமப்பூவில் இருக்கும் சத்துக்கள் கருவிழி தசைகளை வலுவடைய செய்யும். அதுமட்டுமன்றி வெளிப்புற தூண்டுதலால் விழித்திரை சேதமடைவதையும் தடுக்கிறது. வயதானவர்களின் பார்க்கும் திறனை அதிகரிப்பதில் குங்குமப்பூ முக்கியப்பங்கு வகிக்கிறது. வயதானவர்களிடம் மேற்கொண்ட ஆராய்ச்சியில் குங்கும மாத்திரைகளை தொடர்ந்து சாப்பிட்ட பின் தங்கள் பார்வைத்திறன் அதிகரித்துள்ளதாக தெரிவித்தனர்.

  ஆஸ்துமா

  ஆஸ்துமா

  பழங்காலம் முதலே குங்குமப்பூ ஆஸ்துமா சிகிச்சையில் முக்கியப்பங்கு வகிப்பதாக வரலாறு கூறுகிறது. இதிலுள்ள மாங்கனீசு ஆஸ்துமாவை குணப்படுத்துவதற்கு முக்கியமான தேவையாகும். பாரம்பரிய மருத்துவத்திலும் ஆஸ்துமா மருந்தில் குங்குமப்பூ சேர்க்கப்படுகிறது.

  செரிமானம்

  செரிமானம்

  குங்குமப்பூவானது அதிலுள்ள அதிகளவு ஆன்டிஆக்சிடன்ட்களாலும், அழற்சி பண்புகளாலும் செரிமானத்தை ஊக்குவிக்கிறது. அதுமட்டுமின்றி நுரையீரல் சிகிச்சைகளிலும், வயிற்று புண் சிகிச்சைகளிலும் பயன்படுகிறது.

  காயங்களை குணப்படுத்துதல்

  காயங்களை குணப்படுத்துதல்

  குங்குமப்பூ காயங்களை குணப்படுத்த உதவுகிறது, குறிப்பாக தீக்காயங்களுக்கு இது சிறந்த மருந்தாகும். அதுமட்டுமின்றி காயம்பட்ட இடம் பழைய நிலைக்கு திரும்பவும் உதவுகிறது.

  பாலுணர்வு

  பாலுணர்வு

  குங்குமப்பூ பாலுணர்வை தூண்டக்கூடியது, அதுவும் பக்கவிளைவுகள் இன்றி. விறைப்புத்தன்மை தொடர்பான பிரச்சினை உள்ளவர்களுக்கு குங்குமப்பூ எந்தவித பக்கவிளைவுகளும் இன்றி அதிக பலன் தரக்கூடியது. அதுமட்டுமின்றி இது ஆணின் இனப்பெருக்க மண்டலத்திற்கும் உதவக்கூடியது. இதிலுள்ள க்ரோசின் வழக்கமான செயல்முறையை விட அதிகளவு படுக்கையில் செயல்பட வைக்கக்கூடியது என நிரூபிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகளவு நிகோடின் பயன்பாட்டால் ஏற்பட்ட ஆண்மைக்குறைவை சரிசெய்யும்.

  கர்ப்பிணிகள்

  கர்ப்பிணிகள்

  கர்ப்பமாயுள்ள பெண்களுக்கு 5 மாதம் முதல் 9 மாதம் வரை குங்குமப்பூவை கொடுக்கலாம். இது அவர்கள் இரத்த ஓட்டத்தை அதிகரிப்பதுடன் இரத்ததை சுத்திகரிக்கவும் செய்யும். குழந்தை பிறந்த பிறகும் குங்குமப்பூ சாப்பிட்டால் இரத்த சோகை ஏற்படுவது குறையும், பசியை நன்கு தூண்டும். மேலும் தொடர்ந்து குங்குமப்பூவை சேர்த்துக்கொண்டால் சளி, இருமல் தாக்கக்கூடிய வாய்ப்புகளும் குறையும்.

  அழகு

  அழகு

  குங்குமப்பூ உங்கள் சருமத்தை பொலிவடைய செய்யக்கூடும். சிறிது சந்தனம், சிறிதளவு குங்குமப்பூ மற்றும் இரண்டு ஸ்பூன் பாலை எடுத்துக்கொள்ளுங்கள். நன்றாக முகத்தை கழுவிய பின் இவை மூன்றையும் கலக்கி முகத்தில் நன்கு பூசுங்கள். நன்கு மசாஜ் செய்து 20 நிமிடம் வரை காய விடுங்கள். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்துவந்தால் உங்கள் சருமம் பொலிவுடன் காட்சியளிக்கும்.

  உணவு

  உணவு

  அடிப்படையிலேயே குங்குமப்பூவானது ஒரு மசாலா பொருளாகும். எனவே இது உணவில் சேர்க்கப்படும்போது அதன் சுவையும், மணமும் வித்தியாசமாய் இருக்கும். சமைத்து முடித்தபின் அதன்மீது சிறிதளவு குங்குமப்பூ தூவினால் உணவின் சுவை அதிகரிக்கும்.

  தரமான குங்குமப்பூ

  தரமான குங்குமப்பூ

  முன்னரே கூறியதுபோல குங்குமப்பூ மிகவும் விலை உயர்ந்த பொருளாகும். ஒருவேளை நீங்கள் விலைகுறைந்த குங்குமப்பூவை வாங்கினால் அது கலப்படம் செய்யப்பட்டதாகத்தான் இருக்கும். தரமான குங்குமப்பூ குங்குமப்பூவென்றால் அதில் 80 சதவீதம் சிவப்பாகவும் 20 சதவீதம் மஞ்சளாகவும் இருக்கும், தரமற்றது எனில் 20 சதவீதம் மட்டுமே சிவப்பாக இருக்கும்.

  கலப்படம்

  கலப்படம்

  விலைக்குறைவாய் குங்குமப்பூ விற்கும் வியாபாரிகள் குங்குமப்பூவுடன் தேங்காய் துருவல் மற்றும் மெல்லிய நூலிற்கு சாயம் பூசி கலந்துவிடுவார்கள். இது பார்க்க வித்தியாசமாய் இல்லாவிட்டாலும் உண்ணும்போது வலிப்பு போன்ற பக்கவிளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

  சோதிக்கும் முறை

  சோதிக்கும் முறை

  நாம் வாங்குவது தரமான குங்குமப்பூவா இல்லையா என்பதை கண்டுபிடிக்க சிறிது சுடுதண்ணீரில் சில குங்குமப்பூவை போட வேண்டும். அது தரமான குங்குமப்பூவாய் இருந்தால் தண்ணீர் தங்க நிறமாக மாறும், அதுமட்டுமின்றி நல்ல வாசனையும் வரும் மேலும் ஒரு நாளுக்கும் மேலாக அதிலிருந்து வண்ணம் வந்துகொண்டே இருக்கும். தரமற்ற குங்குமப்பூ எனில் தண்ணீர் சிவப்பு நிறமாய் மாறுவதோடு வண்ணம் வெளிவருவது சிறிது நேரத்திலியே நின்றுவிடும்.

  பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

  English summary

  How to buy good saffron?

  The most popular spice, which offers everything nice that’s saffron. But not all us are aware of saffron benefits, and also we are not aware of the quality of a saffron. If we put saffron in warm water, it should turn into gold colour.
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more