For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெல்லத்தை சாப்பிடுவது எவ்வளவு ஆபத்துனு தெரியுமா..? என்னென்ன பக்க விளைவுகள் வரும்னு தெரியுமா..?

|

நாம் உண்ணும் ஒவ்வொரு உணவு வகையிலும் பல்வேறு வித குணாதிசயங்கள் உள்ளன. அது சிறிய கடுகு முதல் பெரிய பலாப்பழம் வரை பொருந்தும். சாப்பிட கூடிய உணவு, முதலில் உடலுக்கு ஏற்றதா என்பதை அறிந்து உண்ண வேண்டும். ஒவ்வொரு உணவிலும் தனிப்பட்ட தன்மை இருக்கும். அவற்றை நாம் எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் தான் அதன் தன்மை உள்ளது. அந்த வகையில் நாம் இந்த வெல்லமும் அடங்கும்.

9 Side Effects Of Eating Jaggery

வெல்லத்தை சாப்பிடுவதால் பல வகையான பக்க விளைவுகள் ஏற்படும் என்று ஆராய்ச்சியாளர்கள் சொல்கின்றனர். அத்துடன் வெல்லம் எத்தகைய ஆபத்தை உடலில் ஏற்படுத்தும் என்பதையும் இந்த பதிவில் முழுமையாக அறிந்து கொள்வோம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வெல்லம் எப்படி பாதிப்பாகும்..?

வெல்லம் எப்படி பாதிப்பாகும்..?

வெல்லம் மிகவும் இனிப்பான உணவாகும். ஆயுர்வேத மருத்துவத்திலும் இதனை பயன்படுத்துவர். இது உடலின் ஆற்றலை அதிகரிக்க பெரும்பாலும் பயன்படும். இருப்பினும் மற்ற உணவுகளை போன்றே இதிலும் ஒரு சில முக்கிய பக்க விளைவுகள் உள்ளன. அதுவும் அவற்றின் தூய்மையையும், சாப்பிடுவோரின் உடல் நலத்தையும் பொறுத்தே தீர்மானிக்க படுகிறது.

உடல் எடை கூடுமா..?

உடல் எடை கூடுமா..?

ஒவ்வொரு 10gm வெல்லத்திலும் 38.3 அளவுடைய கலோரிகள் இருக்குமாம். எனவே, உடல் பருமனால் அவதிப்படுவோர் வெல்லத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இவை அதிக கலோரிகளை கொண்ட உணவாகும். மேலும், இதில் அதிக படியான கார்போஹைட்ரெட்களும் உள்ளன.

சர்க்கரை அளவை அதிகரிக்கும்

சர்க்கரை அளவை அதிகரிக்கும்

வெல்லம் அதிக இனிப்புள்ள பொருள். அதற்கேற்றார் போல இதில் அதிக அளவில் சர்க்கரை உள்ளது. எனவே, அதிகமான வெல்லத்தை சேர்த்து கொண்டால் அது உடலில் சர்க்கரையின் அளவை உயர்த்தும். குறிப்பாக நீரிழிவு நோயாளிகள் வெல்லத்தை எடுத்து கொள்ள கூடாது.

ஜீரண கோளாறுகள்

ஜீரண கோளாறுகள்

நீங்கள் உண்ணும் உணவில் அதிக அளவில் வெல்லத்தை சேர்த்து கொண்டால், அது ஜீரண கோளாறை ஏற்படுத்தும். வெல்லம் சாப்பிடுவோருக்கு மல சிக்கல், செரிமான பிரச்சினை போன்றவை வருமாம். அத்துடன், ரொம்ப நாட்கள் ஆன வெல்லத்தை உணவில் சேர்த்து கொள்ளாமல் இருப்பது சிறந்தது.

MOST READ: ஆண்கள் பேரிச்சம் பழம் சாப்பிடுவதால் பெறும் நன்மைகள்!!!

ஒட்டுண்ணி தொற்றுகள்

ஒட்டுண்ணி தொற்றுகள்

வெல்லம் தயாரிக்கும் முறை மிகவும் இன்றியமையாததாகும். தயாரிக்கும் போது இதில் பல வகையான அசுத்தங்கள் கலந்து உள்ளன. இதனை அப்படியே சாப்பிட்டால் குடலில் ஏராளமான ஒட்டுண்ணி தொற்றுகள் உருவாகி விடும். எனவே, வயிற்று சம்மந்தமான பல வித பிரச்சினைகளும் இதனால் ஏற்படும்.

மூக்கில் ரத்தம் வடிதல்

மூக்கில் ரத்தம் வடிதல்

வெல்லத்தை சாப்பிடுவதால் சில சமயங்களில் மூக்கில் இருந்து இரத்தம் வடிய தொடங்குமாம். குறிப்பாக வெயில் காலங்களில் வெல்லத்தை சாப்பிட்டு வந்தால் அவை மூக்கில் அதிக ரத்த போக்கை ஏற்படுத்தும். எனவே, வெல்லத்தை வெயில் காலங்களில் முக்கியமாக தவிர்த்து விடுங்கள்.

அல்சர் உண்டா..?

அல்சர் உண்டா..?

உங்களுக்கு அல்சர் இருந்தால் நீங்கள் வெல்லத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இவை குடலில் கிருமிகளை உண்டாக்கி அதனால் மிக பெரிய விளைவை கூட ஏற்படுத்த கூடும். வயிற்று புண் பிரச்சினை உள்ளவர்கள் வெல்லத்தை சாப்பிடாமல் இருங்கள்.

ஒவ்வாமைகள்

ஒவ்வாமைகள்

வெல்லத்தை சாப்பிடுவதால் உடலின் செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். பெரும்பானாலும் இவை உடலில் ஒவ்வாமையை ஏற்படுத்தி விடுமாம். மேலும், அரிப்புகள், சிரங்குகள், போன்றவற்றையும் இது ஏற்படுத்தும். எனவே, வெல்லத்தை அதிகமாக எடுத்து கொள்ளாதீர்கள்.

MOST READ: சிறுநீரக கோளாறு உள்ளவரா நீங்கள்..? உங்களின் சாவை தள்ளி போடுகிறது காஃபி..!

குழந்தைகள் நலன்...

குழந்தைகள் நலன்...

உணவில் வெல்லத்தை தொடர்ந்து சேர்த்து கொண்டு வந்தால் அவை பல வித பக்க விளைவுகளை ஏற்படுத்தும். குறிப்பாக காய்ச்சல், சளி, இரும்பல், வாந்தி, தலைவலி, மயக்கம் போன்றவை ஏற்படலாம். குறிப்பாக குழந்தைகளுக்கு இதனை சாப்பிட கொடுக்க வேண்டாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

வீக்கம், தடிப்புகள்

வீக்கம், தடிப்புகள்

ஆயுர்வேதத்தில் கூட வெல்லத்தை அதிக அளவில் சேர்த்து கொள்வதால் உடலில் வீக்கம் ஏற்படும் என சொல்கிறது. குறிப்பாக மூட்டில் வீக்கத்தை இது தரும். எனவே, மூட்டு வலியால் அவதிப்படுவோர் மற்றும் சர்க்கரை நோயாளிகள் வெல்லத்தை தவிர்க்க வேண்டும். வெல்லத்தை உணவில் சேர்த்து கொள்ளும் முன் அதன் தூய்மையையும், சேர்க்கப்படும் அளவை நன்கு அறிந்திருக்க வேண்டும்.

இது போன்ற பயனுள்ள புதிய குறிப்புகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள். அத்துடன் இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து, அவர்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

9 Side Effects Of Eating Jaggery

Just like everything else, jaggery also has its own disadvantages. These depend on the quality of jaggery, your health history and many more factors.
Desktop Bottom Promotion