For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

என்னதான் தேய்ச்சு குளிச்சாலும் உடம்புல துர்நாற்றம் வீசுதா?... அப்போ இந்த 5 ம் சாப்பிடாதீங்க...

எப்போதெல்லாம் நம்முடைய உடலில் வெப்பநிலை அதிகரிக்கிறதோ அந்த சமயங்களிலும், மன அழுத்தமும் அதிகரிக்கும். இதனால் வியர்வை சுரப்பிகள் அதிக அளவிலான வியர்வையைச் சுரக்கும்.

|

உங்கள் ஆரோக்கியத்திற்குத் தேவையான நிறைய நல்ல காரியங்களை நீங்கள் எடுத்துக் கொள்ளும் உணவால் செய்ய முடியும். ஆனால் அவைகளில் சில, உங்கள் மூச்சு அல்லது உடலில் துர்நாற்றத்தை உண்டாக்கலாம்.

health

உங்களுக்கு பல சங்கடமான தருணங்களைக் கொடுக்கும் அந்த உணவுப் பொருள்களை கீழே காணலாம் வாருங்கள்,

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் துர்நாற்றம்

உடல் துர்நாற்றம்

எப்போதெல்லாம் நம்முடைய உடலில் வெப்பநிலை அதிகரிக்கிறதோ அந்த சமயங்களிலும், மன அழுத்தமும் அதிகரிக்கும். இதனால் வியர்வை சுரப்பிகள் அதிக அளவிலான வியர்வையைச் சுரக்கும். அmபப்டி சுரப்பதால் தான் நம்முடைய உடலில் அளவுக்கு அதிகமான வியர்வையும் வெளியேறுகிறது. உடல் துர்நாற்றமும் அதிகரிக்கிறது. அதிலும் நார்ச்சத்து மிக்க உணவுகள், காபி, பூண்டு, வெங்காயம் ஆகியவற்றை அதிகமாக உணவில் சேர்த்துக் கொள்வதும் கூட காரணமாக அமைகிறது.

காஃபி

காஃபி

உங்கள் பிரியமான காலை உணவான காபியில் உள்ள காஃபின் உங்கள் மைய நரம்பு மண்டலத்தைத் தூண்டி வியர்வை சுரப்பிகள் நாற்றத்தை வெளிவிடும்படி செய்கிறது. இயல்பில் மிகவும் அமிலத் தன்மை கொண்ட காஃபி உங்கள் வாயை உலர வைக்கிறது. எனவே, உமிழ்நீர் பற்றாக்குறையினால் உங்கள் வாயில் பாக்டீரியா வளர்ச்சியை வேகப்படுத்துகிறது. இந்த பாக்டீரியா வளர்ச்சி, துர்நாற்றம் வீசும் சுவாசத்தை உருவாக்குகிறது. நீங்கள் ஒரு காஃபி குடிப்பாளியாக இருந்தால், இந்த மோசமான நாற்றத்தைத் தடுக்க காபி குடித்துவிட்டு ஒவ்வொரு முறையும் உங்கள் பல்லைத் துலக்க வேண்டும் அல்லது ஒவ்வொரு நாளும் குறைந்தது இரண்டு முறை பல் துலக்க வேண்டும்.

ஃபைபர் நிறைந்த உணவுகள்:

ஃபைபர் நிறைந்த உணவுகள்:

ஃபைபர் நிறைந்த உணவுகள் ஆற்றலை வழங்குவதாகவும் அதை நீண்ட நேரம் நீடிக்கச் செய்வதாகவும் நமக்குச் செல்லப்பட்டுள்ளது. ஆனால், இந்த உணவுப் பொருள்களை அதிகம் உண்ணும் பொது உடலிலிருந்து துர்நாற்றம் வீசும் என்பது தெரியுமா? ஆமாம், உடற்பயிற்சிகளுக்கு முன்னால் எடுத்துக்கொள்ளும் 5 கிராம் ஃபைபர் உங்களில் துர்நாற்றம் வீசும் அதிக வியர்வையை உண்டாக்குகிறது.ஹைட்ரஜன், கார்பன் டை ஆக்சைடு மற்றும் மீத்தேன் போன்ற வாயுக்கள், ஃபைபர் நிறைந்த உணவுகளில் உள்ளன. செரிமானத்தின் போது பெருங்குடல் பகுதியில் இருந்து இந்த வாயுக்கள் வெளியிடப்படுகிறது.

பூண்டு :

பூண்டு :

பூண்டு அலிசினைக் கொண்டுள்ளது. உங்கள் தோலில் துர்நாற்றம் உண்டாக இதுவும் ஒரு காரணம். பூண்டை உண்டவுடன் அலிசின் உடைந்து பாக்டீரியாவை ஏற்படுத்தும் பிற பொருட்களாக மாற்றப்படுகிறது, பின்னர் அது வியர்வையில் கலந்து ஒரு மோசமான வாசனையை வெளியேற்றுகிறது.

க்ருசிபெரஸ் காய்கறிகள் :

க்ருசிபெரஸ் காய்கறிகள் :

சல்பர் நிறைந்த ப்ரோகோலி போன்ற க்ருசிபெரஸ் காய்கறி உணவுகள், ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி- ஆக்ஸிடன்ட்களால் நிரப்பப்பட்டுள்ளன. அவைகள் உங்கள் உடலுக்கு ஆரோக்கியம் வழங்குவதோடுமட்டுமல்லாமல் உங்கள் உடலில் துர்நாற்றத்தையும் ஏற்படுத்த முடியும். இந்த உணவிலுள்ள உயர்ந்த கந்தக உள்ளடக்கம், அழுகிய முட்டையின் மணத்தை உங்கள் உடலில் தூண்டலாம்.

வெங்காயம்

வெங்காயம்

வெங்காயம் இயல்பிலேயே ஒரு தனித்துவமான துர்நாற்ற வாசனையைக் கொண்டுள்ளது. வெங்காய வாசனை மிகவும் வலுவானது. அது செரிமானம் அடைந்தபோதும் கூட, இரத்த ஓட்டத்தின் மூலம் நுரையீரல்களில் புகுந்து, துர்நாற்றம் வீசும் மூச்சை ஏற்படுத்துகிறது. நீங்கள் அந்த வாசனையைக் குறைக்க விரும்பினால், குறைவான அளவில் வெங்காயம் சாப்பிடுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

5 Foods that Can Make you Stink

When your body temperature rises as a result of stress, nervousness, or the smothering heat, it activates your sweat glands
Story first published: Tuesday, July 17, 2018, 16:05 [IST]
Desktop Bottom Promotion