For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இத்துனூண்டு ஜவ்வரிசிக்குள்ள இவ்வளவு விஷயம் இருக்கா?... அடிக்கடி பாயசம் வச்சி குடிங்கப்பா...

ஐவ்வரிசி இதை பொதுவாக சமையலில் பயன்படுத்துவார்கள். இதை பொதுவாக சென்டோல் (ஐஸ் ஸ்வீட் டிசர்ட்), பாயாசம், உணவிற்கு கெட்டிப் பதத்தை தர பயன்படுத்துகின்றனர். இது சுவையில் மட்டும்மல்ல இதன் ஆரோக்கிய நன்மைகளும்

By Suganthi Rajalingam
|

ஐவ்வரிசி இதை பொதுவாக சமையலில் பயன்படுத்துவார்கள். இதை பொதுவாக சென்டோல் (ஐஸ் ஸ்வீட் டிசர்ட்), பாயாசம், உணவிற்கு கெட்டிப் பதத்தை தர பயன்படுத்துகின்றனர். இது சுவையில் மட்டும்மல்ல இதன் ஆரோக்கிய நன்மைகளும் சாலச் சிறந்தது. உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், வயிற்று போக்கு தடுத்தல், எலும்பு வலிமை, ஆற்றல், சீரான உடல் மெட்டா பாலிசம் போன்ற எண்ணற்ற நன்மைகளை அள்ளித் தருகிறது.

what are the health benefits of sago

பனை மரத்தில் இருந்து பெறப்படும் பதநீர் (நீரா) பானம் கண்டிப்பாக எல்லாருக்கும் பிடித்தமான ஒன்றாகும். இந்த வெயில் காலத்தில் ஏற்படும் தாகத்தை தணிக்க எல்லாரும் இதை விரும்பி அருந்துகின்றனர். இதிலிருந்து தான் பனை வெல்லம் தயாரிக்கப்படுகிறது. இந்த பனை மரத்தின் ஒட்டுமொத்த பாகங்களும் நமக்கு நன்மை அளிக்கிறது. இதிலிருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு போன்றவை நமக்கு நிறைய நன்மைகளை அள்ளித் தருகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பயன்கள்

பயன்கள்

இந்த பதநீரைத் தான் வொயினாக (கள்ளு) மாற்றுகின்றனர். இந்த பனைமரத்தின் பழம் மற்றும் ஜூஸ் நிறைய பானங்களில் பயன்படுத்தப்படுகிறது. அதே நேரத்தில் இதன் தண்டுப் பகுதியிலிருந்தும் நிறைய சுத்திகரிப்பு செயல்கள் செய்து ஸ்டார்ச் மாவு அதாவது ஐவ்வரிசி தயாரிக்கின்றனர். ஐவ்வரிசி இதை பொதுவாக சமையலில் பயன்படுத்துவார்கள். இதை பொதுவாக சென்டோல் (ஐஸ் ஸ்வீட் டிசர்ட்), பாயாசம், உணவிற்கு கெட்டிப் பதத்தை தர பயன்படுத்துகின்றனர். இது சுவையில் மட்டும்மல்ல இதன் ஆரோக்கிய நன்மைகளும் சாலச் சிறந்தது.

தயாரிக்கும் முறை

தயாரிக்கும் முறை

அரிசி மாவு, பசையுள்ள மாவு மற்றும் கோதுமை மாவு போன்றவற்றை அவற்றின் மூலப் பொருட்களிலிருந்தே தயாரிக்கின்றனர். ஆனால் ஐவ்வரிசியை தயாரிக்க ஏராளமான செயல்முறைகளை செய்ய வேண்டியிருக்கிறது.

15 வயதை அடைந்த பனைமரத்தின் தண்டு தேவைப்படும் அல்லது ஒரே ஒரு முறை பூத்த பனைத் தண்டு தேவைப்படும். தண்டின் கடினமான தோலை நீக்க வேண்டும். இப்பொழுது அதை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அரைக்கும் மிஷினில் செலுத்த வேண்டும்.

வரிசையாக அதில் அடுக்கி வைத்து அனுப்பும் போது அது மரத்தூளாக வெளியே வரும். இப்பொழுது அதன் மேல் தண்ணீர் சேர்த்து நார்ச்சத்து மற்றும் ஸ்டார்ச் இரண்டையும் தனியாக பிரிப்பார்கள். பிளாஸ்டிக்கை பயன்படுத்தி ஸ்டார்ச்சை மட்டும் தனியாக வடிகட்டி விடுவார்கள். நன்றாக 2-3 முறை கசடுகளை வடிகட்டி ஸ்டார்ச்சை சுத்தப்படுத்தி எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு உலர வைத்து பொடியாக மாற்றி எடுத்து கொள்ளுங்கள். இந்த ஸ்டார்ச் மாவு உணவுகளை கெட்டியான பதத்திற்கு கொண்டு வர, பாயாசம் போன்றவற்றில் கூட பயன்படுத்தப்படுகிறது. ஆனால் நம்முடைய தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், இந்த ஜவ்வரிசியானது மிக எளிதாக, மரவள்ளிக்கிழங்கில் இருந்து தயாரிக்கப்படுகிறது. பனையை விட இதில் ஸ்டார்ச் அதிகம்.

MOST READ: இந்த செடி வெறும் அழகுக்காக மட்டுமில்ல... இதுல இவ்ளோ மருத்துவ சக்தி இருக்கு... விட்றாதீங்க...

ஊட்டச்சத்துக்கள்

ஊட்டச்சத்துக்கள்

புரோட்டீன்

கார்போஹைட்ரேட்

கால்சியம்

பாஸ்பர்

இரும்புச் சத்து

விட்டமின் ஏ

விட்டமின் சி

குறைவான கொழுப்புச் சத்து உள்ளது.

வயிற்று போக்கு

வயிற்று போக்கு

வயிற்று போக்கு பொதுவாக கெட்ட பாக்டீரியாவால் உண்டாகிறது. நமது உணவு சரிவர செரிக்காமல் தொடர்ந்து வெளியேறி கொண்டே இருக்கும். இதற்கு ஐவ்வரிசி பெரிதும் பயன்படுகிறது.

பயன்படுத்தும் முறை

பயன்படுத்தும் முறை

பெரியவர்களுக்கு 2 டேபிள் ஸ்பூன் ஐவ்வரிசியை ஒரு கிளாஸ் சூடான நீரில் கலந்து குடிக்க வேண்டும். இதுவே குழந்தைக்கு என்றால் பாதியளவு எடுத்து கொள்ளுங்கள். இந்த ஐவ்வரிசி மாவு குடலில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை ஒழித்து சீரண சக்தியை அதிகரிக்கிறது.

அல்சர்

அல்சர்

குடலில் அல்சர் ஏற்பட்டு விட்டால் அந்த வேதனையை நம்மால் தாங்க இயலாது. ஆனால் இந்த ஐவ்வரிசி அந்த வேதனையிலிருந்து நமக்கு நிவாரணம் அளிக்கிறது. இதன் மென்மையான குளு குளு தன்மை வலியை குறைக்கிறது.

ஆற்றல்

ஆற்றல்

இதில் அதிகப்படியான புரோட்டீன் மற்றும் கார்போஹைட்ரேட் உள்ளது. இவை இரண்டும் நமது உடலுக்கு ஆற்றலை அளிக்க கூடிய முக்கியமான பொருளாகும். எனவே இதை அரிசிற்கு பதிலாக பயன்படுத்தி நல்ல ஆற்றலை பெறலாம். தேங்காய் தண்ணீரும் உங்களுக்கு நல்ல ஆற்றலை கொடுக்கும்.

MOST READ: வெண்டைக்காயை இப்படி தேய்ச்சிங்கன்னா எவ்ளோ கருப்பான ஆளும் சும்மா தங்கமா ஜொலிப்பீங்க...

உடல் பருமன்

உடல் பருமன்

இதில் குறைந்த அளவு கொழுப்புச் சத்து இருப்பதால் எடை அதிகரிக்குமே என்ற பயம் தேவையில்லை.

இதய ஆரோக்கியம்

இதய ஆரோக்கியம்

இதன் புரோட்டீன் மற்றும் குறைந்த கொழுப்பு சத்து இதயத்தை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. கொழுப்புச் சத்து அளவை சரியாக பராமரிப்பதால் இதயம் ஆரோக்கியமாக இருக்க உதவுகிறது.

இரத்த சர்க்கரை அளவு

இரத்த சர்க்கரை அளவு

இது ஒரு கார்போஹைட்ரேட் உணவு என்பதால் உங்கள் இரத்த சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்தது.

அனிமியா

அனிமியா

ஐவ்வரிசியில் அதிகளவு இரும்புச் சத்து இருப்பதால் இரத்த சிவப்பணுக்கள் உற்பத்திக்கு உதவுகிறது. எனவே அனிமியா போன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கிறது.

ஆஸ்ட்ரோ போரோசிஸ்

ஆஸ்ட்ரோ போரோசிஸ்

இதில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் சத்து இருப்பதால் எலும்புகளின் வலிமையை அதிகரிக்கிறது. எனவே ஆஸ்ட்ரோபோரோசிஸ் போன்ற எலும்பு நோய்கள் வராமல் தடுக்கிறது.

MOST READ: உங்கள் படுக்கை அறையில் உள்ள இந்த பொருட்கள் புற்றுநோயை உண்டாக்குமாம்..! அதிர்ச்சி தகவல்..!

பற்களின் ஆரோக்கியம்

பற்களின் ஆரோக்கியம்

கால்சியம் எலும்புகளுக்கு மட்டுமில்லாமல் உங்கள் பற்களின் ஆரோக்கியத்திற்கும் உதவுகிறது. பல் வலி மற்றும் பற்சொத்தை போன்றவற்றில் இருந்து நிவாரணம் அளிக்கிறது.

நோய் எதிர்ப்பு சக்தி

நோய் எதிர்ப்பு சக்தி

இதில் விட்டமின் ஏ மற்றும் சி சத்து இருப்பதால் உடலின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இதர நன்மைகள்

ஆரோக்கியமான உடல் நலம்

மன அழுத்தத்தில் இருந்து விடுதலை

சீரான உடல் மெட்டா பாலிசம்

வலுவான தசைகள்

சீரான மூளை செயல்பாடு

ஆன்டி ஆக்ஸிடன்ட்கள்

சரும ஆரோக்கியம் மேம்படுதல்

கூந்தல் பராமரிப்பு மேம்படுதல்

ஆரோக்கியமான கண்கள்

சீரான வளர்ச்சி செயல்பாடுகள்

இப்படி எண்ணற்ற ஆரோக்கிய நன்மைகளைத் தரும் ஐவ்வரிசியை இனிமேலாவது உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளாலாமே.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

20 Unbelievable Health Benefits of Sago for Body

You must be familiar that not only rice flour, wheat flour, and other types of fours are used a lot in the households, including the sago that is famous in the culinary world. The making process of cendol, meatballs and other chewy foods uses sago in it. Not only it makes them tastes chewy, it also makes the stomach full and give great health benefits
Desktop Bottom Promotion