For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீ என்ன பெரிய பிஸ்தாவான்னு ஏன் கேட்கறாங்க தெரியுமா?... இதனாலதான்...

உண்மையில் பிஸ்தா கொட்டை (அ) பருப்பு என்பது உலர்ந்த பிஸ்தா பழத்தின். இதில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன.

By Ashok Raj R
|

உண்மையில் பிஸ்தா கொட்டை (அ) பருப்பு என்பது உலர்ந்த பிஸ்தா பழத்தின். இதில் நல்ல கொழுப்பு, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் ஆகியவை நிறைய உள்ளதால் சுமார் 9௦௦௦ வருடங்களுக்கு மேலாக இதனை மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள்.

health

இத்தனை வருடங்களுக்கு மேலாக இதனை பயன்படுத்தி வருவதற்கு மேலும் பல காரணங்கள் இருக்கின்றன. அவற்றைப் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. ஊட்டச்சத்துக்கள்

1. ஊட்டச்சத்துக்கள்

பிஸ்தா பருப்பு மிகுந்த ஊட்டச்சத்து கொண்டது. உதாரணமாக சுமார் 28 கிராம் பருப்பில் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து, புரதம், பொட்டாசியம், துத்தநாகம், பாஸ்பரஸ், வைட்டமின் B6 மற்றும் மாங்கனீஸ் அதிக அளவு உள்ளன. மற்ற எல்லா பருப்பு வகைகளைக் காட்டிலும் பிஸ்தா பருப்பில் மிக அதிகமாக ஆன்டி-அக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இவை எல்லாமே மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு பல வழிகளில் நன்மை தரும். அதனால் தான் நீ என்ன பெரிய பிஸ்தாவா என்று கேட்கிறார்கள் போல...

2. நன்மைகள்

2. நன்மைகள்

பிஸ்தா பருப்பு இருதயத்தின் ஆரோக்கியதிற்க்கு உதவுகிறது

ஆராய்ச்சி முடிவுகள், பிஸ்தா பருப்பு இதயத்திற்கு நன்மை தரும் கொழுப்பை கொண்டிருப்பதால் பல்வேறு இதய வியாதிகளை தடுக்கும் தன்மை கொண்டது. மேலும் இது கெட்ட கொழுப்பை குறைத்து இதய நோய்கள் வருவதை 12% வரை குறைக்கும்.

மன அழுத்தத்தினால் வரும் இரத்தக் கொதிப்பை பிஸ்தா பருப்பு நல்ல வகையில் கட்டுப்படுத்தும். இதய நோய் வருவதற்கு காரணமான லிப்போபுரதங்களின் அளவை குறைத்து பல இதய நோய்கள் வருவதை தடுக்கும் தன்மை கொண்டது. இதில் உள்ள அமினோஅமிலங்கள் மற்றும் L-அர்ஜினைன் என்ற வேதிப்பொருள், இரத்த குழாய்களை விரிவடைய செய்து, நல்ல இரத்த ஓட்டத்தை உண்டாக்கி இரத்த அழுத்தத்தை குறைக்கிறது

3. நீரிழிவு நோய்

3. நீரிழிவு நோய்

பிஸ்தா சாப்பிட்டபிறகு உடலில் க்ளுகோஸ் மற்றும் இன்சுலின் அளவு குறைவாக இருப்பதை பல ஆய்வுகள் உறுதிப்படுத்தி உள்ளது. இது பெப்டைட் 1 என்னும் ஹார்மோன் அளவை அதிகரித்து உடலின் க்ளுகோஸ் அளவை சீராக வைக்கிறது. பிஸ்தா உட்கொள்ளுவதால் உடலில் கிளைசெமிக், இரத்த அழுத்தம், நோய் தொற்று மற்றும் பருமன் ஆகியவை நீரிழிவு நோயாளிகளுக்கு கட்டுக்குள் வைக்கப்படுகிறது என்பது ஈரானியர்களின் ஆராய்ச்சி கண்டுபிடிப்பாகும்.

4. குடல்நலம்

4. குடல்நலம்

பிஸ்தாவில் உள்ள நார்ச்சத்து உணவு செரிமானத்தை சீர் செய்து மலச்சிக்கலை தடுக்கிறது மற்றும் இந்த நார்ச்சத்து குடலில் நல்ல பாக்டீரியா வளர்ச்சிக்கு உதவுகிறது. குடலில் உள்ள பாக்டீரியா இந்த நார்ச்சத்தை நொதிக்கச்செய்து மற்றும் பல நன்மைகளை கொண்ட குறுகிய சங்கிலி கொழுப்பு அமிலங்களை உற்பத்தி செய்கிறது.

இவை பெருங்குடல் புற்றுநோயை தடுக்கவும் மற்றும் ஒட்டுமொத்த செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. ப்யூட்ரேட் போன்ற ஒரு சில பயனுள்ள சிறு-சங்கிலி கொழுப்பு அமிலங்கள் குடலில் நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது.

5. அழற்சி நோய்

5. அழற்சி நோய்

அர்த்ரைடிஸ் ஃபவுண்டேஷன் கூற்றின்படி பிஸ்தா பருப்பில் மோனோ-அன்-சாச்சுரட்டே கொழுப்பு மற்றும் புரதம் நிறைந்துள்ளதால், மோனோ-அன்-சாச்சுரட்டே கொழுப்புப் அழற்சி நோய்களுக்கு நல்ல தீர்வை தருவதோடு புரதம் உடலிற்கு தேவையான சக்தியை கொடுக்கும் (6). ஆய்வு முடிவுகளின் படி பிஸ்தா பருப்பின் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உடல் நலன் சம்பந்தமான சிகிச்சைகளுக்கு நன்கு உதவும்.

6. உடல் எடை

6. உடல் எடை

பிஸ்தா பருப்பில் உள்ள நார்ச்சத்துக்கள் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக் கொள்வதால் அவை உங்கள் பசியைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமான உடல் எடை குறைவை உண்டாக்கும். அது போலவே இதில் உள்ள ஊட்டச்சத்து மிக்க புரதம் உடலிற்கு தேவையான சக்தியை கொடுத்து மற்றும் பசியை குறைத்து நீண்ட நேரம் புத்துணர்ச்சி கொடுக்கும். பிஸ்தா பருப்பை தொடர்ச்சியாக சாப்பிடும்போது காலப்போக்கில் உங்கள் எடை குறைவது பல ஆராய்ச்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதில் உள்ள ட்ரை கிளிசரைட்களிலும் பல நன்மைகள் உண்டு. பிஸ்தாவை ஒரு சிற்றுண்டியாக உட்கொள்ளுவதன் மூலம் நல்ல வழியில் உடல் எடைய குறைக்க முடியும் இதன் மூலம் நாம் கொழுப்பு நிறைந்த உணவை சாப்பிடுகிறோமே என்பது பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

7. கண் பார்வை

7. கண் பார்வை

பிஸ்தா பருப்பில் அளவுக்கு அதிகமான லியுடின் (lutein) மற்றும் ஜாக்சாந்தின் (zeaxanthin) உள்ளது. இவை மனித விழித்திரையில் காணப்படும் முக்கிய பொருளாகும். பிஸ்தா பருப்பை தேவையான அளவு சாப்பிடும்போது அது வயது தொடர்பான கண் தேய்மானங்களையும் மற்றும் கண்புரை போன்ற பதிப்புகளையும் சரியாக்கும். மேலும் இதில் உள்ள கொழுப்பு அமிலங்கள் கண்ணின் ஆரோகியத்தை காக்க வல்லது எனினும் இது இன்னும் ஆராய்ச்சி மூலம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். பிஸ்தா பருப்பில் உள்ள மற்றொரு முக்கியமான கனிமம் துத்தநாகம், இது கண்களுக்கு ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும்.

8. மூளைக்கு ஆற்றல்

8. மூளைக்கு ஆற்றல்

பெரும்பாலான கொட்டைகள் போன்றே பிஸ்தா பருப்பிலும், வைட்டமின் ஈ செறிவாக உள்ளது. இது வயது முதிர்வு தொடர்பான தளர்ச்சியைத் தடுக்கிறது.

மற்ற கொட்டைகளை விட பிஸ்தாவானது மூளை அதிர்வுகளைத் தூண்ட வல்லது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. இது அறிவாற்றல் சார்ந்த செயல்திறன், கற்றல், தகவல்களைத் தக்கவைத்தல் மற்றும் தூக்கத்தின் போது விரைவான கண் பார்வை இயக்கத்தை மேம்படுத்துவதில் முக்கியப் பங்களிக்கும்.

பிஸ்தா எண்ணெய்யும் பருப்பை போலவே, மூளை வீக்கத்தை எதிர்த்துப் போராடவும் மற்றும் மூளையில் உள்ள அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்களைப் பாதுகாக்கவும் உதவுகிறது. மேலும், இது கேன்சர் மருந்துகளின் பக்க விளைவால் ஏற்படும் நினைவாற்றல் சம்பந்தமான பதிப்புகளில் இருந்தும் பாதுகாக்க உதவும்.

9. நோய் எதிப்புத்திறன்

9. நோய் எதிப்புத்திறன்

பிஸ்தா பருப்பில் உள்ள துத்தநாகம் உடலின் நோயெதிர்ப்புத் தன்மையை உயர்த்துவதாக அறியப்படுகிறது. மேலும் இதில் உள்ள வைட்டமின் B6-ம் இதற்கு பயன்படுகிறது. அது உடலில் நோய் எதிர்ப்புத் திறனை அதிகரிக்கச் செய்யும்.

10. ஆண்மை பலம்

10. ஆண்மை பலம்

பிஸ்தா பருப்பு கருவுறுதலை ஊக்குவிப்பதாக கருதப்படுகிறது இருப்பினும், இது இன்னும் ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட வேண்டும். ஆய்வறிக்கைகள் பிஸ்தா கொட்டைகள் பாலுணர்வைத் தூண்டும் செயல்திறன் கொண்டது என்று சொல்கின்றன. ஒரு கை நிறைய பிஸ்தா பருப்பை தினமும் மூன்று வாரங்கள் சாப்பிடுவதால் ஆண்களின் பாலுணர்வு மேம்படுவதாக ஆராய்சிகள் கூறுகின்றன. மற்றும் பிஸ்தா கொட்டைகளில் உள்ள அர்ஜினைன், பைட்டோஸ்டெரால் மற்றும் ஆண்டி-அக்ஸ்சிடன்ட் ஆகியவை ஆண்களின் விறைப்பு செயலிழப்பு நோய்க்கு சிகிச்சையளிக்க உதவுகிறது

11. ஈஸ்ட்ரோஜன் அளவு

11. ஈஸ்ட்ரோஜன் அளவு

மற்ற கொட்டைகளை விட, பிஸ்தா பருப்பில் பைத்தோ-ஈஸ்ட்ரஜன்கள் அதிக அளவு உள்ளது இது பெண்களின் ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகரிக்கச் செய்து மாதவிடாய் சுழற்சியையும், இரண்டாம் நிலை பாலினக் காரணிகளையும் சீர்படுத்தும்

12. தாய்ப்பால் அதிகரிக்க

12. தாய்ப்பால் அதிகரிக்க

பிஸ்தா பருப்பு கர்ப்ப காலத்தில் உடலுக்குத் தேவையான மற்றும் முக்கியமான பல ஊட்டச்சத்துக்களைக் கொடுக்கிறது. பிஸ்தா பருப்பு கொண்ட சிற்றுண்டிகளை மிக எளிதாக மற்றும் குறைந்த நேரத்தில் தயாரிக்க முடிவதால் தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மிக அதிகமாகப் பயன்படுவதோடு, தாய்மார்களுக்கு அளவிட முடியாத ஊட்டச்சத்துக்களை அள்ளி வழங்குகிறது

13. இளமையாக வைத்திருக்க

13. இளமையாக வைத்திருக்க

பிஸ்தா கொட்டைகளில் உள்ள வைட்டமின் ஈ, புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் தோல் சேதத்திலுருந்துப் பாதுகாக்கிறது மற்றும் முதுமையை தாமதப்படுத்தும். பிஸ்தாவில் உள்ள தாமிரம், எலஸ்டின் உற்பத்திக்கு உதவுகிறது பிஸ்தா உதவுகிறது. இது தோல் சுருக்கம் மற்றும் தளர்ச்சியைத் தடுக்கும். மற்றும் இதில் உள்ள வைட்டமின் B6, ஒட்டுமொத்த தோல் மற்றும் முடியின் ஆரோகியத்தைப் பாதுகாக்கும்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

12 Benefits Of Pistachio Nuts You Should Know Today

Technically fruits, pistachios are seeds of the pistachio tree and contain healthy fats, fiber, protein, and antioxidants.
Story first published: Wednesday, April 25, 2018, 15:42 [IST]
Desktop Bottom Promotion