Latest Updates
-
வாஸ்து படி உங்க வீட்டில் துடைப்பம் இந்த இடத்தில் இருந்தால் உங்கள் வீட்டுக்கு அதிர்ஷ்டம் எப்பவுமே வராதாம் -
வெயில் கொடுமையா? கோடை கால திருமணத்தை ஜில்லுனு மாத்த இந்த 5 ஐடியாக்கள் போதும்! -
Labour Day Wishes:தொழிலாளர் தினத்தில் உங்களுக்கு தெரிஞ்ச உழைப்பாளிகளுக்கு இந்த வாழ்த்தை சொல்ல மறந்துராதீங்க -
1 கப் மைதா இருந்தா இந்த சூப்பரான மங்களூர் பன்-யை ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் சூப்பரா இருக்கும் -
சஞ்சய் கபூர் சொத்து விவகாரம்: கரிஷ்மா கபூர் குழந்தைகளின் உரிமையை மீட்டெடுத்த நீதிமன்றம்! -
இந்த 4 எழுத்துக்களில் பெயர் தொடங்குபவர்கள் ராஜவாழ்க்கை வாழ பிறந்தவர்களாம் - உங்க பெயரின் முதல் எழுத்து என்ன? -
கர்நாடகா ஸ்டைல் கசப்பே இல்லாத பாவக்காய் புளிக்குழம்பு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க -
வீட்டில் இந்த செடிகள் இருந்தா போதும்… காற்று சுத்தமாகும், பணமும் அதிர்ஷ்டமும் தானாக வரும்! -
பணத்தின் வரலாறு: பணம் கண்டுபிடிப்பதற்கு முன் எதை வைத்து மக்கள் பொருட்களை வாங்கினார்கள் தெரியுமா? -
சம்பளம் வந்ததும் மணி பிளாண்ட் வாங்குறீங்களா? பணத்தை அள்ளிக் கொடுக்கும் அந்த ரகசிய திசை இதுதான்!
நீங்க சைவம்னு நெனச்சு சாப்பிடற இந்த 10 பொருளும் அசைவமாம்... சர்க்கரையும் சேர்த்துதான்
இங்கே போலியான வெஜிடேரியன் உணவுகள் பற்றியும் அதன் உருவாக்க முறை பற்றியும் இங்கே விளக்கியுள்ளோம்.
இப்பொழுது நீங்கள் எங்கு பார்த்தாலும் கலப்படம் இல்லாத ஒரு உணவை உண்பது என்பது கடினமான விஷயம். ஏனெனில் நாம் சமையலுக்கு பயன்படுத்துகிற உப்பிலிருந்து நாம் உண்ணும் அரிசி வரை இந்த கலப்படம் தொடர்கிறது.
உண்மையில் நீங்கள் சைவம் என்று குடிக்கும் ஆரஞ்சு ஜூஸ் முதலில் அசைவம் என்று தெரியுமா? முதலில் நீங்கள் சைவம் என்று நினைத்து உண்டு வரும் பெரும்பாலான உணவுகள் இயற்கையில் அசைவம் என்பதே நமக்கு தெரியாது. அப்படிப்பட்ட சில உணவுகளை பற்றித் தான் நாம் இப்பொழுது பார்க்க போகிறோம்.

நாண்
சைவப்பிரியர்கள் எப்பொழுது ஹோட்டலுக்கு போனாலும் இதை விரும்பி சாப்பிடுவார்கள். ஆனால் இந்த நாண் உண்மையில் சைவம் இல்லை. நாண் போன்ற ரெசிபி களுக்கு மாவை தயாரிக்க அதில் முட்டையை கலந்து தான் பிசையவே செய்கின்றனர். அப்பொழுது தான் மாவு ரெம்ப மென்மையாகவும் இழுக்கின்ற தன்மையுடனும் கிடைக்கும். எனவே இனி நீங்கள் ஹோட்டலுக்கு போனால் இது குறித்து உங்கள் செஃபிடம் உரையாடிக் கொண்டு ஆர்டர் செய்யுங்கள்.

சீஸ்
இப்பொழுது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் பீட்சா, பர்கர் எல்லாவற்றிலும் சீஸ் தான் முக்கிய பொருளாக சேர்க்கப்படுகிறது. இந்த சீஸ் வகைகளில் ரென்னட் என்ற என்சைம் பயன்படுத்தப்படுகிறது. இந்த என்சைம் விலங்குகளின் குடலில் இருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

சாலட்
சாலட்டை விரும்பாத சைவப்பிரியர்கள் இருக்க மாட்டார்கள் என்றே கூறலாம். ஆனால் அதில் பயன்படுத்தும் ட்ரஸ்ஸிங் செயல் அசைவம் என உங்களுக்கு தெரியுமா. ஆமாங்க அதில் முட்டையை பயன்படுத்தி தான் ட்ரஸ்ஸிங் செய்கின்றனர்.

வொயிட் சுகர்
நாம் தினசரி பயன்படுத்தும் வொயிட் சுகர் உண்மையில் வெஜிட்டேரியன் கிடையாது. இயற்கையாகவே சர்க்கரை வெள்ளை நிறத்தில் இருப்பதில்லை. அதை சுத்திகரித்து பாலிஷ் செய்ய எலும்புக் கரியை பயன்படுத்துகின்றனர். ஏன் ப்ரவுன் சுகர் கூட இயற்கை கார்பன் கொண்டு பாலிஷ் செய்யப்படுகிறது.

சிவப்பு நிற மிட்டாய்கள்
சிவப்பு நிறத்தில் அலங்கரிக்கப்பட்ட உணவு என்றால் எல்லாருக்கும் பசிக்க ஆரம்பித்து விடும். ஆனால் உணவில் சேர்க்கப்படும் மற்ற நிறங்கள் சாயங்களை பயன்படுத்தி எளிதாக பெறப்படுகிறது. ஆனால் இந்த சிவப்பு நிற சாயம் மட்டும் பெண் டாக்டிலோபியஸ் கோக்கஸ் கோஸ்டா அல்லது கோச்சினல் பூச்சியிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது.

ஆரஞ்சு ஜூஸ் பேக்
நாம் விரும்பி குடிக்கும் ஆரஞ்சு ஜீஸ் ஆரோக்கியமான உணவு என்று தெரியும். ஆனால் இந்த ஆரஞ்சு ஜூஸ் ஒரு சைவமே கிடையாது. ஏனென்றால் இந்த ஆரஞ்சு ஜூஸில் ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் சேர்க்கப்படுகிறது. இது ஒரு மீன் எண்ணெய். இருந்தாலும் இது எல்லா வகை பேக்கிடு ஆரஞ்சு ஜூஸிற்கும் பொருந்தாது.

டோனட்
உங்கள் சைவ நண்பர்கள் எல்லாருக்கும் டோனட் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் இந்த கலர்புல் டோனட்டில் எல் என்ற என்சைம் சேர்க்கப்படுகிறது. சிஸ்டைன் இதன் மாவு பதத்திற்கு பயன்படுகிறது. மேலும் இதில் சேர்க்கப்படும் கண்டிஷனிங் ஏஜெண்ட் வாத்தின் இறகு மற்றும் பன்றிகளின் இறைச்சியிலிருந்து எடுக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சாக்லெட்
சாக்லெட்டில் அந்த அளவிற்கு அசைவ கலப்படம் இல்லை. ஆனால் சில சாக்லெட் வகைகளில் ரென்னட் என்ற என்சைம் பயன்படுத்தப்படுகிறது. இந்த என்சைம் விலங்குகளின் குடலிருந்து பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வீங்கம்
நாம் அனைவரும் விரும்பி அசைபோடும் ஸ்வீங்கத்தில் ஜெலட்டின் என்ற பொருள் சேர்க்கப்படுகிறது. இந்த ஜெலட்டின் பெரும்பாலும் பன்றிகள் மற்றும் மாட்டிறைச்சிகளின் தோல், தசை நார்கள், எலும்பிலிருந்து பெறப்படுகிறது.

கேக்
சைவ கேக் விரும்பிகளுக்கென்றே தயாரிக்கப்படும் கேக் தான் இந்த எக்லஸ் கேக். ஆனால் இந்த கேக்கின் மாவு பதத்திற்காக முட்டை இல்லாமல் பன்றிகளின் கொழுப்பு போன்றவை சேர்க்கப்படுகிறது. இது தான் மாவிற்கு நல்ல நிறத்தையும் பதத்தையும் கொடுக்கிறது.
எனவே சைவப்பிரியர்களே இனி உங்கள் உணவை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.



Click it and Unblock the Notifications