For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காரசார உணவுகளை அதிகம் சாப்பிட்டால் பீமனை போன்று பலம் பெறலாமாம்..!

|

மகாபாரதத்தில் பீமனின் பலத்தை பலரும் வியந்து கேட்டிருப்பீர்கள். பீமன் அவ்வளவு பலசாலியாக இருக்க அவர் அப்படி என்ன செய்திருப்பார் என யோசித்தது உண்டா..? அதற்கு பல காரணங்கள் உண்டு. அவற்றில் அவர் எடுத்து கொண்ட காரசாரமான உணவுகளும் ஒரு காரணமாகும்.

பீமன் இவ்வளவு பலசாலியாக இருப்பதற்கு இது தான் காரணமோ..!

பொதுவாகவே உணவின் தன்மையை பொருத்தே நமது உடல் பலம் நிர்ணயிக்கப்படுகிறது. அப்படி என்னதான் இந்த காரசார உணவுகளில் இருக்குதுனு உங்களுக்கு கேள்வி உள்ளதா..? அப்போ அதற்கான பதிலை இங்கு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரலாறு முக்கியம் அமைச்சரே..!

வரலாறு முக்கியம் அமைச்சரே..!

நாம் இன்று கடைபிடித்து வரும் பலவித பழக்க வழக்கங்களும் இன்று நேற்று வந்தவை அல்ல. இவை அனைத்துமே எண்ணற்ற வரலாறுகளை கடந்து இன்று ஆணித்தரமாக நிற்கிறது. இதில் பல திரிக்கப்பட்ட கதைகளும் உண்டு. பண்டைய காலத்தில் பயன்படுத்திய அதே வகையான உணவுகளை சிறிது மாற்றத்துடன் இன்றும் நாம் அதிகம் சாப்பிட்டு வருகின்றோம்.

அப்படி என்ன இருக்குது..?

அப்படி என்ன இருக்குது..?

உண்மையில் காரசார உணவில் பலவித அற்புத பலன்கள் ஒளிந்து கொண்டுள்ளன. குறிப்பாக இந்த வகை உணவுகள் நமது மெட்டபாலிசத்தை பல மடங்கு உயர்த்தி பலசாலியாக மாற்றுகிறது. அத்துடன் பீமனை போன்று பலம் பெற செய்ய இவை நன்கு உதவும்.

சிவப்பு மிளகாய்

சிவப்பு மிளகாய்

நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு சிவப்பு மிளகாயின் காரத்தில் பல்வேறு வித நன்மைகள் அடங்கியுள்ளது. உங்களின் உணவில் தினமும் சேர்த்து கொண்டால் 25 சதவீதம் மெட்டபாலிசம் அதிகமாகும். உடல் வலி, ரத்த ஓட்டம் சார்ந்த கோளாறுகளுக்கு இந்த சிவப்பு மிளகாய் அருமையான தீர்வை தரும்.

கடுகு

கடுகு

"கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது" என்பார்கள். காரம் மட்டுமில்லாமல் அத்துடன் சேர்த்தே பலமும் குறையாது. மனதையும், உடலையும் சீரான நிலையில் வைத்து கொள்ள கடுகு பெரிதும் உதவும். மேலும், கொழுப்புகள் மற்றும் கலோரிகளை உடலில் குறைக்கவும் இவை தேவைப்படுகிறது.

MOST READ: தேன்+தேங்காய் எண்ணெய் சேர்த்து சாப்பிட்டால் உடலில் என்னென்ன மாற்றங்கள் நடக்கும்னு தெரியுமா..?

இலவங்கப்பட்டை

இலவங்கப்பட்டை

சர்க்கரை அளவை குறைப்பதற்கு இந்த இலவங்கப்பட்டை வழி செய்கிறது. தினமும் காலையில் உங்களின் காபி அல்லது காலை உணவில் சிறிது இலவங்கம் சேர்த்து கொண்டால் அந்த நாளில் உடலில் சேரக்கூடிய கொழுப்புக்களை கரைத்து சுறுசுறுப்புடன் வைத்து கொள்ளும்.

சீரகம்

சீரகம்

உடலில் பலவித மாற்றங்களை இந்த சீரகம் கொண்டு வரும். சீரகத்தை கொண்டு செய்யப்பட்ட பல ஆய்வுகளில் இதன் மகத்துவம் நிரூபணம் ஆகியுள்ளது. கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து, உடலை பலமடங்கு பலம் கொண்டவராக மாற்ற இது ஒன்றே போதும்.

ஆராய்ச்சியின் முடிவு..!

ஆராய்ச்சியின் முடிவு..!

சீரகத்தை பற்றிய ஆராய்ச்சியில் இந்த உண்மை தெரிய வந்துள்ளது. அதாவது 2 ஸ்பூன் யோகர்டுடன் 1 ஸ்பூன் சீரகத்தை சேர்த்து தொடர்ந்து 3 மாதங்கள் சாப்பிட்டு வந்தால் பலவித மகிமைகள் நமது உடலில் நடக்குமாம். குறிப்பாக உடல் எடையை மிக வேகமாக குறைக்க இது பயன்படும் என ஆய்வின் முடிவுகள் சொல்கிறது.

கிராம்பு

கிராம்பு

Eugenol என்கிற முக்கிய மூல பொருள் கிராம்பில் உள்ளதால் இவற்றை நாம் நிச்சயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். இந்த மூல பொருள் நோய் எதிர்ப்பு சக்தியை பல மடங்காக உயர்த்துகிறது. மேலும், இன்சுலின் சுரத்தலை சமமாக வைத்து கொள்கிறது.

MOST READ: இளம்பெண்கள், குழந்தைகள் தாய்லாந்தில் படும் அவஸ்தை - Photos

ஜாதிக்காய்

ஜாதிக்காய்

பலவித மூலிகை சக்தி இந்த ஜாதிக்காயில் நிறைந்துள்ளது என பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே கூறியுள்ளனர். சர்க்கரை நோய் முதல் சரும பிரச்சினைகள் வரை அனைத்திற்கும் இது தீர்வை தருகிறது. உடலுக்கு தேவையான சக்தியை தருவதற்கான வாய்ப்புகளை இது உருவாக்குகிறது.

மஞ்சள்

மஞ்சள்

"மகிமை மிகுந்த மஞ்சள்" என்றே நாம் இதனை அழைக்க வேண்டும். ஏனெனில் எண்ணில் அடங்காத பலன்கள் இதில் உள்ளன. உணவில் மஞ்சளை சேர்த்து கொள்வதால் கொழுப்பு குறைதல், இரத்தத்தில் சர்க்கரை அளவு குறைதல், வயிற்றில் உள்ள கிருமிகள் அழிவு போன்ற பல நன்மைகள் இதனால் ஏற்படும்.

இஞ்சி

இஞ்சி

மூலிகையாகவும், மசாலா பொருளாகும் இதனை நாம் பயன்படுத்தி வருகின்றோம். தினமும் காலையில் சிறு துண்டு இஞ்சியை நசுக்கி வெந்நீரில் எலுமிச்சை சாறு அல்லது தேனுடன் கலந்து குடித்தால் இதன் மகிமை நாள் முழுக்க இருக்கும்.

பலசாலியாக நீங்களும் ஆகலாம்..!

பலசாலியாக நீங்களும் ஆகலாம்..!

யாராக இருந்தாலும், பலசாலியாக வேண்டுமென்றால் அதற்கேற்ற உணவுகள் மிக அவசியம். நீங்கள் தினமும் சாப்பிட கூடிய உணவுகளும் பயிற்சிகளும் தான் உங்களை பலசாலியாக மாற்றும். மேற்சொன்ன உணவு பொருட்களை அன்றாடம் உணவில் சேர்த்து கொண்டாலே நல்ல பலன் கிடைக்கும்.

MOST READ: நீங்கள் சாப்பிட்டுறது எல்லாமே விஷம்னு தெரிஞ்சா என்ன பண்ணுவீங்க..!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

10 Spices That Boost Your Metabolism

Here we listed some vital spices that will boost your metabolism.
Desktop Bottom Promotion