For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உடலின் மூலை முடுக்குகளில் உள்ள கொழுப்புக்களைக் கரைக்கணுமா? இந்த கஞ்சி குடிங்க!

உடலில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைக்க உதவும் ஸ்பெஷல் அரிசி பால் காஞ்சி.

|

இந்திய முறைகளில் மட்டுமல்ல, பண்டைய காலத்து கிரேக்க முறைகளிலும் கூட கஞ்சி ஒரு மிக முக்கியமான உணவு பொருளாக இருந்துள்ளது. விவசாயிகளின் ஆரோக்கியத்தின் ஆணிவேர் கஞ்சி. கஞ்சிக்குடித்து ஏர்கலப்பை பிடித்து உழுதவன் யாரும் டிரெட்மில் கண்டதில்லை.

ஒருவரின் உடல் ஆரோக்கியத்திற்கு கஞ்சி மிக முக்கியமான பானம் ஆகும். இது உடலை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவும் பெருமளவு உதவுகிறது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கம்மங்கஞ்சி!

கம்மங்கஞ்சி!

இரண்டு நாட்கள் உணவு உண்ணாமல் இருந்தவன் கூட ஒரு டம்ளர் கம்மங்கஞ்சி குடித்தால் சுறுசுறுப்பாகி விடுவான்.

உளுத்தங்கஞ்சி!

உளுத்தங்கஞ்சி!

பருவமடைந்த பெண்களுக்கு உளுத்தங்கஞ்சி கொடுக்க வேண்டும். இது அவர்களது மாதவிடாய் சுழற்சியை சீராக்கும்.

கஞ்சி!

கஞ்சி!

காய்ச்சல் வந்தால் வெறும் கஞ்சி கொடுத்தால் போதும்' உடல் தானாக சுறுசுறுப்பாகிவிடும். தாய் பால் ஊட்ட முடியாத பெண்கள் இதை குழந்தைகளுக்கு கொடுத்தால் சத்து பெறும்.

நொய்க்கஞ்சி!

நொய்க்கஞ்சி!

வயதானவர்கள், நோய் வாய்ப்பட்டவர்களுக்கு அரிசி அல்லது நொய்க்கஞ்சி கொடுப்பது நமது வழக்கமாக இருந்து வந்தது. கஞ்சி வெறும் உணவல்ல மருந்தும் கூட.

நார்ச்சத்து!

நார்ச்சத்து!

கஞ்சியில் உள்ள நார்ச்சத்து மலமிளக்க பிரச்சனைகளை தீர்க்கும். செரிமான மண்டலத்தை வலுவாக்கும். மலச்சிக்கல் இல்லாமல் நிம்மதியை காலைக்கடன் கழிக்க உதவும்.

வயிற்றுப்போக்கு!

வயிற்றுப்போக்கு!

வயிற்றுபோக்கு உள்ளவர்களுக்கு சிறந்த மருந்து கஞ்சித்தண்ணி தான். இதை மருத்துவர்களே பரிந்துரை செய்கின்றனர்.

உடலில் கொழுப்பை குறைக்க உதவும் அரிசி பால் கஞ்சி!

உடலில் கொழுப்பை குறைக்க உதவும் அரிசி பால் கஞ்சி!

தேவையான பொருட்கள்:

  • கைக்குத்தல் அரிசி - ஒரு கப்
  • தண்ணீரி - எட்டு கப்
  • சூரியகாந்தி எண்ணெய் - இரண்டு டேபிள்ஸ்பூன்
  • தேன் நாள் - ஸ்பூன்
  • செய்முறை:

    • நீரை கொதிக்க வைக்க வேண்டும். அதனுடன் அரிசியை சேர்த்து மேலும், நன்கு கொதிக்க விட வேண்டும்.
    • நீர் நன்கு கொதித்த பிறகு நெருப்பின் அளவை குறைத்து கொள்ள வேண்டும். பிறகு ஒரு தட்டு கொண்டு மூடி 15 நிமிடங்கள் வேகவைக்க வேண்டும். அரிசி நன்கு வெந்த பிறகு குளிர செய்ய வேண்டும்.
    • பிறகு ஒரு பிளென்டரை எடுத்தி, அதில் வெந்த சாதத்தை ச்மூதியாக அரைத்துக் கொள்ள வேண்டும். அத்துடன் சூரிய காந்தி எண்ணெய் மற்றும் தேன் சேர்த்து மேலும் அரைக்க வேண்டும்.
    • தேவைபட்டால் கொஞ்சம் பட்டைத்தூள் சேர்த்துக் கொள்ளலாம். பிறகு அனைத்தையும் நன்கு கலக்கி எடுத்தால் அரிசி பால் கஞ்சி தயாராகிவிடும்.
    • உட்கொள்ளும் முறை!

      உட்கொள்ளும் முறை!

      காலை மாலை என இரண்டு வேலை இந்த அரிசி பால் கஞ்சி குடிக்க வேண்டும். மேலும், இதை காற்றுப்புகா வண்ணம் கண்ணாடி பாத்திரத்தில் அடைத்து வைக்க வேண்டும். இதை மூன்று நாட்கள் குடித்த வர நல்ல முன்னேற்றம் காண முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Special Rice Milk Porridge to Reduce the cholesterol Level in Body!

Special Rice Milk Porridge to Reduce the cholesterol Level in Body!
Story first published: Friday, June 2, 2017, 15:20 [IST]
Desktop Bottom Promotion