For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாழைப்பழம் சாப்பிடுவதால் தீமைகளும் உண்டாகுமாம்! எப்படி தெரியுமா?

ஆரோக்கியத்திற்கு நல்லது என்றாலும் அதிகப்படியான வாழைப்பழம் சாப்பிடுவது உடல்நலத்திற்கு தீங்கையே ஏற்படுத்தும்.

|

உலகிலேயே முதன் முதலாக அறுவடை செய்யப்பட்ட பழம் வாழைப்பழம் தான். தொல்லியல் அறிஞர்கள் கி.மு.,8000 வருடங்களுக்கு முன்பே வாழை சாகுபடி செய்ததை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஆரோக்கியமான டயட்டிற்கு வாழைப்பழத்தை பரிந்துரைப்பார்கள். இதில் அதிகப்படியான பொட்டாசியம், ஃபைபர் இருக்கிறது அத்துடன் குறைந்த கலோரிகளே இருப்பதால் குழந்தைகள் முதல் வயாதனவர்கள் வரையில் சாப்பிடலாம். ஆனால், எதையும் அளவுக்கு மீறி எடுத்தால் நஞ்சாகும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம் இந்த வாழைப்பழம்.

பல்வேறு மருத்துவ குணங்கள் நிரம்பியுள்ள வாழைப்பழத்தை அளவுக்கு மீறி சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
எடை கூடும் :

எடை கூடும் :

வாழைப்பழத்தில் குறைந்த அளவு கலோரிகள் இருப்பது உண்மை தான் ஆனால் அதனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளும் போது, எடை அதிகரிக்கச் செய்யும். மீடியம் சைஸ் வாழைப்பழத்தில் குறைந்தது 105 கலோரிகள் இருக்கும். அதே போல ஒரு ஆரஞ்சு பழத்தில் 62 கலோரிகளும் ஒரு கப் தர்பூசணிப்பழத்தில் 45 கலோரிகளும் இருக்கும். ஆகையால் குறைந்த கலோரிகளுக்க பழத்தை சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் வாழைப்பழத்தை தவிர மற்ற பழங்களை எடுத்துக்கொள்ளலாம்.

ஒற்றைத்தலைவலி :

ஒற்றைத்தலைவலி :

மைக்ரேன் என்று சொல்லப்படும் ஒற்றைத்தலைவலிக்கு உடலில் சுரக்கும் தைரமின் என்னும் சுரப்பி தான் காரணம் . இவை அதிகப்படியான வாழைப்பழம் சாப்பிட்டால் சுரக்கும். வாழைப்பழத்தை தவிர சீஸ்,பால் போன்றவை அதிகமாக எடுத்துக்கொண்டாலும் டியாரமைன் சுரக்கும்.

ஹைப்பர்கலேமியா :

ஹைப்பர்கலேமியா :

இது நம் ரத்தத்தில் அதிகப்படியான பொட்டாசியம் இருந்தால் இந்த பாதிப்பு ஏற்படும். படபடப்பு, பிரசர், வயிறு உப்புதல் போன்ற அறிகுறிகள் தென்படும். இதனை கண்டுகொள்ளாமல் விட்டால் மாரடைப்பு வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு.

பற்சொத்தை :

பற்சொத்தை :

வாழைப்பழத்தில் அதிகப்படியான ஸ்டார்ச் இருப்பதால் பற்சொத்தை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உண்டு. உணவுப்பொருளை மெல்லும் போது ஸ்டார்ச்சுகள் பல் இடுக்குகள் போய் தங்கிவிடுகிறது. சரியாக சுத்தம் செய்யாத போது பல் இடுக்கில் இருக்கும் ஸ்டார்ச்சுகளிலிருந்து பாக்டீரியா பரவி பல் வலி, பற்சொத்தை போன்றவை ஏற்படும்.

சோம்பல் :

சோம்பல் :

வாழைப்பழத்தில் அதிகப்படியான ட்ரிப்டோபான் மற்றும் அமினோ ஆசிட் இருக்கிறது. இவை மூளையின் செயல்பாடுகளை மழுங்கச் செய்து தூக்கம் கொள்ள வைக்கும். அதனால் காலை நேரங்களில் வாழைப்பழத்தை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.

நரம்பு பாதிப்பு :

நரம்பு பாதிப்பு :

வாழைப்பழத்தில் விட்டமின் பி6 அதிகப்படியாக இருக்கிறது மருத்துவர்களின் அறிவுரையின்றி அளவுக்கு மீறி விட்டமின் பி6 எடுத்துக்கொண்டால் அது நரம்புகளை பாதிக்கும்.

அலர்ஜி :

அலர்ஜி :

தொடர்ந்து வாழைப்பழம் எடுப்பவர்களுக்கு, லேட்டக்‌ஸ் அலர்ஜி ஏற்படும். இதனால் ஆஸ்துமா, கண் எரிச்சல், தொண்டை கரகரப்பு போன்றவை ஏற்படும்.

வயிற்று வலி :

வயிற்று வலி :

தொடர்ந்து அதிகப்படியான வாழைப்பழம் எடுப்பவர்களுக்கு வயிற்று வலி உண்டாகும். இதில் இருக்கும் ஸ்டார்ச்சுகள் ஜீரணமாக தாமதமாகும். மேலும் மேலும் தொடர்ந்து அதே உணவை எடுத்துக் கொள்வதாலும் மற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதாலும் ஜீரணப்பதில் சிக்கல் ஏற்ப்பட்ட வயிற்று வலி உண்டாகும்.

வாயுத்தொல்லை :

வாயுத்தொல்லை :

வாழைப்பழத்தில் இருக்கும் கரையும் தன்மையுள்ள ஃபைபர் மற்றும் ஃப்ரூக்டோஸ் என்னும் இரண்டு வேதிப்பொருளும் உடலில் வாயுத்தொல்லையை ஏற்படுத்தக்கூடியது.

டைப் 2 டயாப்பட்டீஸ் :

டைப் 2 டயாப்பட்டீஸ் :

வாழைப்பழம் மீடியம் லெவல் க்லைகமிக் உணவுகள் பட்டியலில் இருக்கிறது. இதனைச் சாப்பிட்டால் நம் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்கும். அதனை தொடர்ந்து எடுத்துக் கொண்டால் டைப் 2 டயாப்பட்டீஸ் வருவதற்கு வாய்ப்புகள் அதிகம்.

சிறுநீரகம் :

சிறுநீரகம் :

சிறுநீரகத்தின் செயல்பாடுகள் சரியாக இல்லை என்றோலோ அல்லது சிறுநீரகத்தொற்று போன்ற பாதிப்புகள் இருந்தால் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும். வாழைப்பழத்தில் இருக்கும் அதிகப்படியான பொட்டாசியம் சிறுநீரகத்திற்கு வேலைப்பளுவை அதிகரிக்கும்.

கவனம் :

கவனம் :

வாழைப்பழத்தை வாங்கி வைத்து இரண்டு நாட்களில் சாப்பிட்டுவிட வேண்டும். வாழைப்பழைத்த தோலுரித்து அதிக நேரம் வைத்திருக்க கூடாது. இருமல், தொண்டை கரகரப்பு, மூக்கடைப்பு போன்ற அறிகுறிகள் இருந்தால் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்த்திட வேண்டும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Side effects of eating banana

side effects of consuming more banana
Story first published: Wednesday, August 2, 2017, 11:25 [IST]
Desktop Bottom Promotion