Latest Updates
-
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்!
இதெல்லாம் சாப்பிட்டா கல்லீரல் எப்பவும் பத்திரமா இருக்கும்!
உடல் உறுப்புகள் சீராக இயங்குவதற்கு கல்லீரல் ஒரு முக்கிய காரணியாக இருக்கிறது. கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுகள் என்னென்ன என்று தெரிந்து கொள்ளலாம்.
மனித உடலிலேயே கல்லீரல் தான் மிகப்பெரிய உறுப்பு.உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கு பல்வேறு முக்கியமான செயல்பாடுகளில் ஈடுபடுவதும் இதுவே. அதில் உடலில் சேரும் டாக்ஸின்களை வெளியேற்றுவது மற்றும் செரிமானத்திற்கு தேவையான பித்த நீரை சுரப்பது குறிப்பிடத்தக்கது.எனவே கல்லீரலில் சிறு பிரச்சனை என்றாலும், அதனால் உடலின் பல்வேறு செயல்பாடுகள் பாதிக்கப்படும். அதிலும் கல்லீரலில் உள்ள பிரச்சனை முற்றினால், உயிரைக் கூட இழக்க நேரிடும்.
சில நேரங்களில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதை தெரிந்து கொள்வது என்பது மிகவும் கடினம். ஏனெனில் கல்லீரல் பாதிக்கப்பட்டிருந்தால், அதற்கு சில அறிகுறிகள் உள்ளன. ஆனால் அந்த அறிகுறிகள் சாதாரணமாக உடலில் அவ்வப்போது வரும் என்பதால், சரியாக அதனை கவனிக்காமல் விட்டுவிடுவார்கள். கல்லீரல் பாதிக்கப்படாமல் இருக்க என்ன உணவுகளை சாப்பிட வேண்டும் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர்
ஒவ்வொரு சாப்பாட்டிற்கு முன்னரும் இந்த ஆப்பிள் சீடர் வினிகரை எடுத்துக் கொள்வது கல்லீரலுக்கு மிகவும் நல்லது. ஒரு டம்ளர் நீரில் ஒரு ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகரைக் கலந்து, அத்துடன் ஒரு ஸ்பூன் தேனையும் கலந்து குடிக்கலாம். தினமும் 3 முறை இதைக் குடித்து வந்தால் கல்லீரல் சுத்தமாகும்.

டான்டேலியன் ரூட் தேநீர்
டான்டேலியன் வேரில் தயாரிக்கப்பட்ட டீயை தினமும் இரு முறை குடித்து வந்தால், கல்லீரல் செயல்பாடுகள் அதிகரிக்கும். கொதிக்கும் நீரில் இந்த வேர்களைச் சிறிது சேர்த்து, அந்த நீரை அருந்துவதும் நல்லது.

நெல்லிக்காய்
வைட்டமின் சி அதிகமுள்ள நெல்லிக்காயைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், கல்லீரலின் செயல்பாடுகள் நன்றாக இருக்கும். அதிலும் ஒரு நாளுக்கு 5 நெல்லிக்காய்கள் வரை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் வலுவடையும். வேண்டுமானால் தயிர், உப்பு ஆகியவற்றுடன் நெல்லிக்காயைச் சேர்த்து பச்சடியாகவும் சாப்பிடலாம்.

அதிமதுரம்
சில கல்லீரல் நோய்களுக்கு அருமையான ஆயுர்வேத மருந்தாக விளங்குகிறது அதிமதுரம். இந்த அதிமதுரத்தின் வேரை நன்றாகப் பொடித்து, அதை டீத்தூளுடன் கொதிக்கும் நீரில் போட வேண்டும். சிறிது நேரம் கழித்து, அதை வடிகட்டி குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரு முறை குடிப்பது உசிதம்.

மஞ்சள்
தினமும் மஞ்சளை உணவில் சேர்த்துக் கொள்வதால் நம் உடலுக்குப் பலப்பல நன்மைகள் கிடைக்கும். குறிப்பாக, ஹெப்பாடிட்டிஸ் பி மற்றும் சி ஆகியவற்றுக்குக் காரணமான வைரஸ்கள் பரவுவதை மஞ்சள் தடுக்கிறது. அதற்கு தினமும் பாலுடன் அல்லது ஒரு ஸ்பூன் தேனுடன் அரை ஸ்பூன் மஞ்சளைக் கலந்து குடிக்கலாம்.

ஆளி விதைகள்
இரத்தத்தில் உள்ள சில ஹார்மோன்கள் கல்லீரலை சில சமயம் சேதப்படுத்துகின்றன. இதைத் தவிர்க்க, ஆளி விதைகளை நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பப்பாளிப் பழம்
கல்லீரல் நோய்க்கு பப்பாளிப்பழம் ஒரு அருமையான மருந்தாகும். தினமும் ஒரு ஸ்பூன் எலுமிச்சைச் சாற்றுடன் 2 ஸ்பூன் பப்பாளிப்பழச் சாற்றைத் தொடர்ந்து 4 வாரங்கள் சாப்பிட்டு வருவது பலன் கொடுக்கும்.

கேரட் ஜூஸ்
அரை டம்ளர் கீரை ஜூஸ் மற்றும் அரை டம்ளர் கேரட் ஜூஸ் ஆகியவற்றைத் தினமும் 3 மணிநேரத்திற்கு ஒரு முறை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் நோய் ஓடிப் போகும்.

வேண்டாம் :
மது அருந்துவது கல்லீரலுக்கு மிகவும் கேடானது. எனவே, கல்லீரல் நன்றாக இருக்க வேண்டும் என்றால் மது அருந்துவதை உடனே நிறுத்த வேண்டும். அதேப்போல் சிகரெட் புகைப்பதையும் கண்டிப்பாக நிறுத்த வேண்டும்.

நட்ஸ் :
கல்லீரல் நோய்கள் எதுவும் வராமல் இருக்க இந்த இரண்டையும் தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. இதனால் அவற்றில் உள்ள க்ளுடாதியோன், கல்லீரலில் தங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும்

காய்கறிகள்
கல்லீரலைக் காப்பாற்ற பசுமையான காய்கறிகளையும், ஆப்பிளையும் நம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் காய்கறிகள் பித்தநீரை சீராக சுரக்க உதவுவதுடன், ஆப்பிளில் உள்ள பெக்டின் செரிமான பாதையில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும்.

க்ரீன் டீ
இதில் நிறைய கேட்டச்சின்கள் இருப்பதால் கல்லீரலுக்கு மிகவும் நல்லது. தினமும் 3 முதல் 4 கப் க்ரீன் டீயைக் குடித்து வந்தால், கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நிவாரணம் கிடைக்கும்.

உடற்பயிற்சி
தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்து வந்தால், நன்றாக செரிமானம் ஆகும்; நிறைய வியர்க்கவும் செய்யும். இவ்விரண்டும் கல்லீரல் பாதிப்படைவதை வெகுவாகத் தவிர்க்கும். மேலும் வாரத்திற்கு 5 முறையாவது உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

பூண்டு :
கல்லீரல் தொற்றை சீராக்குவதில் முக்கிய் இடம் வகிப்பது பூண்டு. இது கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவிடும். இதில் இருக்கும் allicin மற்றும் selenium கல்லீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

திராட்சை :
திராட்சையில் glutathione எனப்படும் வீரியமிக்க ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் இருக்கிறது. இது கல்லீரலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றச் செய்திடும். தினமும் காலையில் திராட்சை ஜூஸ் குடிக்கலாம்.

பீட்ரூட் :
பீட்ரூட் அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். இதில் அதிகப்படியான ஃப்ளேவனாய்ட்,பீட்டா கரோட்டீன் இருக்கிறது. இது கல்லீரலின் செயல்பாடுகளுக்கு பெரிதும் உதவிடும்.
அதோடு பீட்ரூட் இயற்கையாகவே ரத்தத்தை சுத்தப்படுத்தும் ஆற்றல் கொண்டது

எலுமிச்சை :
எலுமிச்சையில் இருக்கும் D-Limonene என்ற ஆண்ட்டி ஆக்ஸிடண்ட் கல்லீரல் செயல்பாட்டிற்கு பெரிதும் உதவிடும். ஆரோக்கியமான என்சைம்களை அதிகரிக்கச் செய்து உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுக்களை வெளியேற்றிடும்.
நீங்கள் தினமும் குடிக்கப் பயன்படுத்தும் தண்ணீரில் ஒரு துண்டு எலுமிச்சையை போட்டு விடுங்கள். அந்த தண்ணீரையே நாள் முழுவதும் குடிக்கலாம்.



Click it and Unblock the Notifications