For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நீங்கள் சாப்பிடும் இந்த உணவுகளில் எல்லாம் மோசமான ரசாயனங்கள் கலந்துள்ளது!! எச்சரிக்கை!!

நாம் உண்ணும் உணவுகள் குறித்து அவசியம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய தகவல்கள்

|

மருந்துகளை தனியாக உட்கொண்ட காலம் போய் இப்போது உணவே மருந்து என்று பலரும் பார்த்து பார்த்து சாப்பிட துவங்கிவிட்டார்கள். சந்தைகளில் கிடைக்கும் இயற்கையான பொருட்களை தேடிப் பிடித்து வாங்கி சமைத்தாலும் அதில் கலந்திருக்கும் ரசாயனங்களால் உயிருக்கு கேடு தான் ஏற்படுகிறது.

How to identify organic and healthy food

நாம் அன்றாடம் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் கூட ரசாயனம் கலந்திருக்கிறது அவை பற்றிய சில விழிப்புணர்வு தகவல்களை தெரிந்து கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஆப்பிள்:

ஆப்பிள்:

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் அந்த ஆப்பிளின் விதையை சேர்த்து சாப்பிட்டால், வாழ்நாளின் எண்ணிக்கை தான் குறையும்.

ஏனெனில் ஆப்பிளின் விதையில் சையனைடு என்னும் ஆபத்தான விஷம் உள்ளது.

 தக்காளி:

தக்காளி:

தக்காளியில் க்ளைகோ அல்கலாய்டு என்னும் விஷமிக்க கெமிக்கல் நிறைந்துள்ளது. அதுவும் இது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும். ஒருவேளை அதன் தண்டு அல்லது இலையை சாப்பிட்டால், அது நரம்புத்தளர்ச்சியை உருவாக்குவதோடு, வயிற்று உப்புசத்தை அதிகரிக்கும்.

செர்ரி:

செர்ரி:

செர்ரிப் பழங்களில் இலை மற்றும் கொட்டைகளில் விஷத்தன்மை உள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த முறை ப்ளம்ஸ், ஆப்ரிக்காட் மற்றும் பீச் போன்றவற்றை சாப்பிடும் போது, அதன் விதையை வாயில் போட்டு மெல்லாதீர்கள்.

பாதாம்:

பாதாம்:

கசப்பு தன்மை கொண்ட பாதாமை சாப்பிட்டால், அதில் சையனைடு உள்ளது என்று அர்த்தம். ஆகவே பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, அதனை ஊற வைத்து அல்லது வறுத்து சாப்பிடுவது தான் சிறந்தது. இதனால் அதில் உள்ள விஷம் வெளியேறிவிடும்.

இறைச்சி :

இறைச்சி :

இறைச்சிக்காக வளர்க்கப்படும் கோழிகளுக்கும் கறவை மாடுகளுக்கும் ஆன்டிபயாடிக் நிறைய கொடுப்பார்கள். இந்த ஆன்டிபயாடிக் நம் உடலுக்குள் வந்தால், நம்முடைய நல்ல பாக்டீரியாக்கள் அழிந்து, உடலுக்குத் தீமை செய்யும் பாக்டீரியாக்கள் அதிகமாகும். இதனால் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்.

ரசாயன மாற்றங்கள் :

ரசாயன மாற்றங்கள் :

நம் உடலுக்குள் தேவையற்ற ரசாயனங்கள் செல்வதால் ‘மெட்டாபாலிக் ஸ்ட்ரெஸ்' என்கிற தேவையற்ற அழுத்தத்தை நம் உடலின் உள்ளுறுப்புகள் சந்திக்கின்றன. ரசாயன உணவுகள் இறுதியில் அமிலமாக மாற்றமடைவதால், நம் உடலின் அமில காரத்தன்மை சமன் குலைந்து நோய்கள் உருவாகும்.

ஆர்கானிக்! :

ஆர்கானிக்! :

பேக்கிங் செய்யப்பட்ட ஆர்கானிக் பொருட்களின் மேல், அதன் தரத்தை உறுதிப்படுத்து வதற்காக Organic Farming Association of India அமைப்பின் OFAI என்ற லேபிள் ஒட்டப்பட்டிருக்கும். இது அமெரிக்காவில் USDA என்றும், ஜப்பானில் JAS என்றும் நாடுகளுக்குத் தகுந்தாற்போல மாறுபடும்.

3 ஆண்டுகளுக்கு மேல் இயற்கை விவசாயம் செய்கிற நிலத்திலிருந்து விளைவிக்கப்படுகிற பொருட்களுக்குத்தான் 100% ஆர்கானிக் என்று லேபிள் ஒட்டுவார்கள். 90%, 95% என்று குறிப்பிடுவதெல்லாம் நம்பகத்தன்மை கொண்டவை அல்ல!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

How to identify organic and healthy food

How to identify organic and healthy food
Story first published: Monday, September 25, 2017, 11:10 [IST]
Desktop Bottom Promotion