For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

30 களில் என்ன மாற்றம் உங்களுக்கு நேரும்? நீங்கள் செய்ய வேண்டியவை என்ன?

30 வயதுகளில் உங்கள் உடலுக்குள் ஏற்படும் மாற்றங்கள் மற்றும் நோய்களை தடுக்க நீங்கள் கடைபிடிக்க வேண்டிய விஷயங்கள் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.

|

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு மாற்றங்கள் நம் உடலுக்குள் நிகழும். குழந்தை பருவத்தில் கல்லீரல், மற்றும் மூளை வளர்ச்சி அதிகரிக்கும். அதனால்தான் அந்த காலக்கட்டங்களில் நன்றாக சாப்பிட வேண்டும். நல்லதை விதைக்க வேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதன் அர்த்தம்.

Healthy diet tips to follow when you are in 30s

செல்களின் அதிவேக வளர்ச்சி பதின்ம வயதுகளில் இருக்கும். இதற்கு தேவையான புரதச் சத்து தரும்போது உடல் எலும்புகள் பலம் பெறும். உடல் நன்கு வடிவம் பெறும். அதுபோல் 30 வயதுகளில் உங்கள் செல்வளர்ச்சி மெதுவாக குறைய ஆரம்பிக்கும். கல்லீரல் செயல்பாடும் குறையும். எலும்புகளில் கால்சியம் சேர்க்கை குறையும் .

இவ்வாறு அஜீரணம், முதற்கொண்டு இதய நோய்கள் வரை பல உபாதைகள் வரும். இந்த காலக்கட்டங்களில் நமது உணவு முறையால் செல் வளர்ச்சியை அதிகரிக்க முடியும். எப்படி என பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
டிப்ஸ் - 1 :

டிப்ஸ் - 1 :

அதிகப்படியாக காபி குடிக்கக் கூடாது. இவை எலும்புகளை பலவீனமாக்கும். அது எனர்ஜி கொடுத்தாலும், அதோடு செல்வளர்ச்சியை இன்னும் வேகமாக குறையச் செய்யும்.

டிப்ஸ்- 2 :

டிப்ஸ்- 2 :

30 வயதுகளில் அதிகம் வாழைப்பழம் சாப்பிட வேண்டும். இவை இதய நோய்கள் வரவிடாமல் தடுக்கும். குறிப்பாக நார்சத்தை கொடுப்பதால் செல்கள் உற்பத்தி அதிகமாகிறது.

டிப்ஸ்-3 :

டிப்ஸ்-3 :

இந்த வயதினில் அதிக கீரை உணவுகளை சாப்பிட வேண்டும். அதில் உள்ள கால்சியம் மற்றும் ஃபோலிக் அமிலம் 30 வயதுகளில் மிக முக்கிய தேவை.

டிப்ஸ்- 4 :

டிப்ஸ்- 4 :

அதிகமாக மோர், யோகார்ட், பால் ஆகிய்வற்றை சாப்பிட தொடங்குங்கள். இவை உடலை கால்சியம் தருவதோடு உடல் உஷ்ணத்தால் உண்டாகும் நோய்களையும் தடுக்கும்.

 டிப்ஸ்-5 :

டிப்ஸ்-5 :

இந்த வயதில் உணவுகளை தவிர்த்தால் உங்கள் வளர்சிதை மாற்றம் குறைய வாய்ப்புகள் இருக்கிறது. இதனால் பின்னாளில் அஜீரணம், அசிடிட்டி என பிரச்சனைகள் வர வாய்ப்புகள் உண்டு.

டிப்ஸ் - 6 :

டிப்ஸ் - 6 :

அதிகமாக தேங்காய், அவகாடோ மற்றும் நல்லெண்ணெய் உபயோகப்படுத்துவதால் மூட்டு தேய்மானம், மூட்டு வலி ஆகியவை வராமல் தடுக்க முடியும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Healthy diet tips to follow when you are in 30s

Healthy diet tips to follow when you are in 30s
Story first published: Thursday, February 23, 2017, 14:02 [IST]
Desktop Bottom Promotion